கட்டம் கட்டமாக முடிச்சுக்களை அவிழ்த்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

0

O முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹஸனலி மற்றும் தலைவர் ரவூஃப் ஹகீம் ஆகியோருக்கு இடையில் இருந்த முறுகல் நிலை தேசியப் பட்டியல் உத்தரவாதத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

basheer“தான் கட்சியை நீதிமன்றம் வரை கொண்டு செல்வதில்லை, கட்சிக்கு எதிரான தரப்புகளுடன் இணைந்து கட்சியை பிளவு படுத்துவதற்கும் துணை போவதில்லை, தலைவருடன் பேசி சுமுகமான முடிவுக்கு வருவதையே விரும்புகின்றேன், தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்காக நான் கட்சியுடன் முரண் படவில்லை, சூழ்ச்சிகரமான முறையில் தன்னிடமிருந்து பொதுச் செயலாளர் பதவி அல்லது அதற்குரிய அதிகாரங்கள் பறிக்கப் பட்டமையை மாத்திரமே ஆட்சேபிக்கின்றேன்” என தனது நிலைப்பாடுகளை மீண்டும் மீண்டும் சகோதரர் ஹஸனலி வலியுறுத்தி வந்தார்.

இரு தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அவற்றை தவிசாளருக்கும், பொதுச் செயலாளருக்கும் கொடுக்காமல் வேறு பல பிரதேசங்களுக்கு கொடுப்பதற்கு தலைவர் எடுத்த முடிவு மற்றும் அளித்த வாக்குறுதிகள் கட்சிக்குள் இன்னொரு பிளவு ஏற்படுமா என்ற அச்ச நிலையை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக கட்சியின் தவிசாளர் தலைமையில் மற்றுமொரு அதிருப்தியாளர் குழு சகோ ஹஸனலி விவகாரத்தை மிகவும் சூட்சுமமாக கையாண்டு கையெழுத்து வேட்டைகள் நடத்தி தலைவருக்கு நெருக்கடி நிலைமையை தோற்றுவித்தமை நாம் அறிந்த விடயமாகும், பலர் கட்சியை விட்டு இடை நிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது, என்றாலும் முதற்கட்டமாக ஒரு புரிந்துணர்வு உடன்பாடு மூலம் எல்லோரையும் உள்வாங்கி ஹாஸனலி அவர்களை துரும்பாக வைத்து காய் நகர்த்தும் தவிசாளரை தனிமைப் படுத்தும் அடுத்த கட்ட நகர்வுகளை தலைவர் ஹகீம் மேற்கொண்டார்.

அந்த வகையில் சகோ ஹசனலியுடன் பேசி முடிவுக்கு வரும் அதிகாரத்தை உயர்பீடத்திடமிருந்து பெற்று தற்பொழுது இருவருமாக பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகின்றது. அதன்படி ஏற்கனவே முறைகேடாக நியமிக்கப் பட்டுள்ளார் எனக் கருத்தப்பட்ட ஊதியம் பெறும் உயர்பீட செயலாளர் காதர் அவர்களை அதிகார பூர்வமான செயலாளர் ஆக 2017 ஜனவரி 7 திகதி நடக்கவுள்ள பேராளர் மாநாட்டில் ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் பகரமாக தேசியப்பட்டியல் உறுப்புரிமைய மீண்டும் ஒருமுறை சகோ ஹஸனலிக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

hasanaliகட்சியின் ஆரம்பகாலப் போராளி ஹஸனலி மதிக்கப் பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லையென்று கூறும் போராளிகள் தேசியப்பட்டியல் கேட்டு மன்றாடாத, மண்டியிடாத சகோ ஹஸனலி மற்றும் நிந்தவூர் மக்களுக்கு அதனை திணித்து அவர்களது நியாய தர்மத்திற்கான போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தாது அதனை அட்டாலசசேனைக்கோ அல்லது பிரதிநிதித் துவம் ஒன்றை வேண்டி நிற்கும் பொருத்தமான வேறு ஒரு பிரதேசத்திற்கோ வழங்குமாறு போராளிகள் வேண்டி நிற்கின்றனர்.

சகோ ஹஸனலி அவர்களது மகனார் அங்கம் வகிக்கும் கிழக்கின் எழுச்சி முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இது குறித்து அச்சுறுத்தல் விடுத்திருந்தமையும் அது குறித்து உயர் பீடத்தில் பலர் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இனி தவிசாளர் தரப்பினர் மற்றும் கிழக்கின் எழுச்சி குழுவினரின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள பலரும் ஆவலாயுள்ளதாக முகநூல் வட்டாரங்களில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

முடிச்சுக்களை போட்டுக் கொள்வதிலும் சேதாரமில்லாமல் விட்டு கொடுப்புக்கள் செய்து அவற்றை அவிழ்பதிலும் தலைவர் சாணக்கியன் என போராளிகள் பேசிக் கொள்(கொல்)கிறார்கள்.

நீர் வழங்கல் அமைச்சர் அல்லவா..!

About author

No comments

யுகத்திற்கான ஜிஹாத் அறப்பணி அறைகூவல் விடுக்கிறது.

இஸ்லாம் மனித குல விமோசனத்திற்கான மார்க்கம், உலக சமாதானத்த்தித்திற்கும் சமத்துவத்திற்குமான மார்க்கம், ஒவ்வொரு விசுவாசியும் சாந்தி சமாதானத்தை பரவச் செய்யும் அழகிய “ஸலாம்” எனும் வாழ்த்தைக் கொண்டே உறவுகளை தொடர்புகளை உயிர்பிக்குமாறு வேண்டப் பட்டுள்ளனர். ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com