ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழந்து இன்றுடன் 13 வருடங்கள்.

0

வருடம் ஒவ்வொன்றாய் கழியும் பொழுதே நினைவலைகள் மீட்கப்படுகின்றன, அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் பல அள்ளி வரும் அழிவுப்பேரலையாய் எம்மைக் கடந்து சென்ற ஆழிப் பேரலைக்கு இன்று வயது 13.

tsunami20042004 டிசம்பர் மாதம் 26 அன்று இந்­தோ­னே­சி­யாவின் சுமாத்­தி­ராவில் ஏற்­பட்ட பூக ம்­பத்­தினால் உரு­வான சுனாமிப் பேரலை, இந்­தோ­னேசி­யாவை மாத்­தி­ர­மல்­லாது இல ங்கை, இந்­தியா, தாய்­லாந்து, மாலை­தீவு, பங்­க­ளாதேஷ் என ஏறக்­கு­றைய 12 நாடு­க ளின் கரையோரப் பகு­தி­களை அழித்­தது. சுமார் 1,74,000 உயிர்­களை இந்தச் சுனாமி பேர­லைகள் காவு­கொண்­டன.

சர்­வ­தேச புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி சுனா­மி­யினால் அதி­க­ளவு உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்ட நாடுகள் வரி­சையில் இந்­தோ­னே­சி­யாவே முதலிடத்தில் உள்­ளது. இந்­தோ­னே­சி­யாவில் 1,26,473 பேரையும், இந்­தி­யாவில் 10,749 பேரையும் தாய்­லாந் தில் 5,595 உயிர்­க­ளையும் சுனாமிப் பேர­லைகள் காவு­கொண்­டன. இலங்­கையில் சுனா­மி­யினால் உயிரிழந்­த­வர்கள் மற்றும் காணா­மல் ­போ­னோரின் மொத்த எண்­ணி க்கை 36,594 ஆகும்.

இலங்­கையின் வடக்கு, கிழக்கு தென், மேல், வடமேல் மாகா­ணங்­களின் கரை­யோ ரப் பிர­தே­சங்கள் சுனா­மி­யினால் பல­மா கத் தாக்­கப்­பட்­டன. யாழ்ப்­பாணம், கிளி­நொ ச்சி, முல்­லைத்­தீவு, அம்­பாறை, மட்­டக்­க­ள ப்பு, திரு­கோ­ண­மலை, காலி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை, கம்­பஹா, புத்­தளம், கொழும்பு, களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க ளின் கரை­யோரப் பிர­தேசங்கள் சுனாமிப் பேர­லை­க­ளினால் மிக அதி­க­மாகப் பாதிக்­கப்பட்­டன.

tsunami-7புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி மாவட்ட மட்­ட த்தில் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்­ணிக்­கையைப் பார்க்­கின்­ற­போது தென் மாகா­ணத்தின் காலி மாவட்­டத்தில் 1785 பேரும், அம்­பாந் ­தோட்டை மாவட்­டத்தில் 1102 பேரும், மாத்­தறை மாவட்­டத்தில் 1153 பேரு­ம், வட மாகா­ணத்தின் யாழ். மாவட்­டத்தில் 901 பேரும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 06 பேரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 2652 பேரு­ம் பதிவாகியுள்ளனர்.

சுனாமி பேர­லை­யினால் கிழக்கு மாகா ணம் பாரிய அழிவைச் சந்­தித்­தது. புள்ளி விபரத்திணைக்­க­ளத்தின் தர­வு­க­ளின்­படி, கிழக்கு மாகா­ணத்தில் உயிரிழந்தோர், காணா­மல்­போனோர் எண்­ணிக்­கை­யா­னது அம்­பாறை மாவட்­டத்தில் 4,216 பேரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 1,756 பேரும், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 761 பேரு­மாகும்

சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மாகா­ண ங்­களில் அதி­க­ள­வி­லான இழப்பைச் எதிர் ­கொண்­டவை வடக்கு, கிழக்கு மாக­ணங்­க­ளாகும். வடக்கின் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களும் கிழக்கின் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­ கோ­ண­மலை மாவட்­டங்­களும் சுனா­மி­யி னால் பாதிக்­கப்­பட்­டன. இம்­மா­வட்­டங்­க ளில் அதி­க­ளவு உயிர் மற்றும் சொத்­த­ழி வை எதிர்­கொண்ட மாவட்டம் என்றால் அது அம்­பாறை மாவட்­ட­மாகும்.

Minolta DSC

Minolta DSC

அதிலும் கல்­முனைத் தேர்தல் தொகு­தி யின் கரை­யோரத் தமிழ், முஸ்லிம் மக்களே அதி­க­ளவு பாதிக்­கப்­பட்­டனர். தொகை மதி ப்­பீட்டுப் புள்ளிவிப­ரத்­தி­ணைக்­க­ளத்தின் புள்ளிவிப­ரங்­களின் படி அம்­பாறை மாவட்­டத்தில் சுனாமிப்பேர­லை­யினால் 21,201 வீடுகள் முற்­றா­கவும் பகு­தி­யா­கவும் சேத­ம­டைந்­தன. இதில் அதி­க­ளவு பாதிக்­க­ப்பட்ட வீடு­களைக் கொண்ட பிர­தே­சமும் கல்­மு னைப் பிர­தே­சம்தான்.

இக்­கல்­முனைப் பிர­தே­சத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் கிரா­மங்­களில் சுனா­மி­யி னால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக வீடு கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ணத் ­திற்கு, சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் சுனாமி மீள்குடி­யேற்ற வீட்­டுத்­தொ­குதி, கல்­மு­னைக்­குடி கிறீன்பீல்ட் சுனாமி மீள் குடி­யேற்ற வீட்டுத் தொகுதி மற்றும் பாண்­டி­ருப்பு சுனாமி மீள்குடி­யேற்ற வீட்டுத் தொகுதி என்­ப­வற்றைக் குறிப்­பி­டலாம்.

இந்த வீட்­டுத்­தொ­கு­திகள் தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களின் உத­வி­யுடன் அர­சாங்­கத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. இருப்­பினும் போதிய அடிப்­படை வச­திகள் இல்­லா­மை­யினால் இம்மீள் குடி­யேற்­றத்தில் வாழும் மக்கள் சொல்­லொ ண்ணாத் துய­ரங்­களை கடந்த 10 வருடங்­ க­ளாக எதிர்­நோக்­கு­கின்­றனர். இக்­கு­டி­யேற்­றத்­திட்­டங்­களில் குடி­யி­ருக்கும் சிறார்­களு க்கு நிரந்­தர பாட­சா­லையோ, நூல­கமோ, விளை­யாட்டு மைதா­னமோ முறை­யாக அமைக்­கப்­ப­ட­வில்லை.

tsunamiசாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் வீட்­டுத் ­திட்­டத்தில் 200 குடும்­பங்கள் வாழ்­வ­தற்­கான வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள போதிலும், இவ்­வீட்­டுத்­திட்­டத்தில் அடி ப்­படை வச­திகள் சரி­யாக வழங்­கப்­ப­ட­வி ல்லை. கல்­மு­னைக்­கு­டியில் நிர்­மாணிக்­கப்­பட்­டுள்ள கிறீன் பீல்ட் வீட்­டுத்­தொ­குதி மக்கள் குடி­யி­ருப்­ப­தற்­கு­ரிய வச­தி­க­ளுடன் கொண்­ட­தாக அமைக்­கப்­ப­ட­வில்லை என இம்­மக்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். இவ்­வீட்­டுத்­தொ­கு­தி­யி­லுள்ள சில வீடு­க­ளுக்கு இன்னும் அடிப்­படை வச­திகள் பெற்­றுக் ­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. அவற்றில் சில வீடுகள் மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டாது அல்­லது மக்கள் அதில் வசிக்­காது இருட்­ட­றை­க­ளாகக் காட்­சி­ய­ளிப்­ப­தாக அப்­பி­ர­தேச மக்கள் குறிப்­பி­டு­வதைக் காண­மு­டி­கி­றது.

இவ்­வாறே மரு­த­முனை, பாண்­டி­ருப்பு மற்றும் காரை­தீவு பிர­தே­சங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்­டுத்­தொ­கு­தி­களின் நிலை­மை­களும் உள்­ளன. இவ்­வா­றான நிலைதான் வடக்கு மற்றும் கிழக்கில் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காகக் நிர்­மாணிக்­கப்­பட்ட வீட்­டுத் ­தொ­கு­தி­களின் நிலைமை காணப்­ப­டு­கி­றது. அது­மாத்­தி­ர­மின்றி, வடக்கு மற்றும் கிழக்குப் பிர­தே­சத்தின் சில பிர­தே­tsunami-10சங்­களில் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்னும் நிரந்­தர வீடுகள் இல்­லாமல் தகரக்கொட்­டில்­களில் வாழ்­வ­தையும் காண­மு­டி­கி­றது.

அம்­பாறை மாவட்­டத்தின் கரை­யோர பிர­தே­சங்­களில் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்டு வீடு­களை இழந்த மக்­க­ளுக்­காக அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்­துக்­கு­ரிய நுரைச்­சோ­லையில் சவூதி அர­சாங்­கத்­தினால் 500 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன.

tsunami1“மாறி மாறி வரும் எல்லா அரசிலும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருந்த பொழுதும் இன்று வரை, சவூதி அறேபிய அரசு ஆழிப்பேரலையினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கிய 1500 வீடுகளில் முஸ்லிம்களுக்காக நுரைச்சோழையில் கட்டப்பட்ட 500 வீடுகளும் இன்னும் உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.”

இருப்­பினும் இவ்­வீ­டு­களைப் பகிர்ந்­த­ளிப்­பதில் உள்ளூர் அர­சியல் அதி­கா­ரத் ­த­ரப்­பின­ரி­டையே போட்­டிகள் நில­வின. இப்­போட்­டி­களின் கார­ண­மாக ஏற்­பட்ட இழு­ பறி நிலை­யி­னை­ய­டுத்து, பேரி­ன­வாதம் பாதிக்­க­ப்ப­டாத மக்­க­ளுக்கும் வீடு­களை வழங்க வேண்­டு­மென்று கோஷங்­களை எழும்பி அதில் வெற்­றியும் கண்­டது. இந்த வீட்­டுத்­தொ­கு­தியை பகிர்ந்­த­ளிப்பது தொடர்பில் நீதிமன்றம் வரை சென்ற பேரி­ன­வாதம் நீதிமன்றத் தீர்ப்­பையும் பெற்­றுக் ­கொண்­டது.

About author

No comments

சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்!

(ஷரீஅத் / பிக்ஹு) சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்! இலங்கையில் இதுகால வரை ஷாஃபி மத்ஹபே பின்பற்றப் பட்டு வருகிறது மிகச் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com