சிறுபராய நினைவலைகள்: நானறிந்த மார்க்கம்

0

O குடும்பப் பின்னணி:

ஹபுகஸ்தலாவையில் பிரபலமான பெரிய ஆலிம் சாஹிபு உதுமான் லெப்பை (ரஹ்) அவர்களின் மகன் அதிபர் மஸிஹுத்தீன் (ரஹ்) மற்றும் ஆசிரியை ஆமினா ஆகியோரின் இரண்டாவது புதல்வன் என்ற வகையில் ஒரு சன்மார்க்க மற்றும் கல்விப் பின்னணி குடும்பத்திற்கு இருந்தது.

உம்மாவின் தந்தை காதர் மீரா சாஹிபு (ரஹ்) தெல்தோட்டை ரலிமங்கோடையில் மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்த காதிரிய்யா தர்க்க பின்னணியுடையகுடும்பத்தை சேர்ந்தவர், ஹசன் மொஹிதீன் ஆலிம் சாஹிபு (ரஹ்), யூஸுப் அலீம் சாஹிபு (ரஹ்) ஆகிய இரண்டு ஆலிம்கள் உம்மாவின் இரு மூத்த சகோதரிகளின் கணவன் மார்கள்.

childhoodஹபுகஸ்தலாவை அப்பா காயல் பட்டணத்தில் கிதாபு ஓதியவர், அவரது மூத்த மகன் உபைதுஸ் சத்தார் அல்அஸ்ஹரி (ரஹ்) எகிப்து அல்-அஸ்ஹர் பலகலைக் கழகத்தில் படித்தவர்,  அந்த வகையில் தந்தை வழியிலும் தாய் வழியிலும் சிறந்த மார்க்கப் பின்னணி எங்கள் குடும்பத்திற்கு இருந்தது.

வப்பம்மாவின் குடும்பத்தினரும் மிகவும் மார்க்கப் பற்று உடையவர்கள், நாவலப்பிட்டி புர்ஹனுத்தீன் ஹசரத் அவர்கள் வப்பம்மாவின் சகோதரர் காசிம் அப்பாவின் மகனாவார், வப்பம்மாவின் குடும்ப உறுப்பினர்கள் கூட காதிரிய்யா தரீக்கா பின்புலம் உள்ளவர்கள்.

ஹபுகஸ்தலாவையில் ஜும்மாஹ் மஸ்ஜித் கட்டப்பட்டது முதல் சுமார் நாற்பது வருடங்கள் அப்பா பெரிய ஆலிம் சாஹிபு ஊதியமின்றி குத்பா ஒதிவந்துள்ளார், ஊரில் பதுரியா புருதா கந்தூரி, சுப்ஹான மௌலிது, சிறுமியர் நிய்யத்து, தலை பாத்திஹா, பத்ரு சஹாபாக்கள் தினம் நோன்பு 17 இரவு (ரொட்டியும் இறைச்சியும்) , நோன்பு 27 தினம் என பல விஷேசங்கள் இடம் பெறுவது வழமை.

ஹபுகஸ்தலாவையில் பதுரியாஹ் புருதாக் கந்தூரி என்றால் அந்தக் காலத்தில் மிகவும் கோலாகலமான கொண்டாட்டமாகவே அது இடம் பெறும், உள்ளூர் வெளியூர் உறவுக் காரர்களால் ஊர் கலைகட்டும், மஸ்ஜிதில் “ஒலிபெருக்கி” பொருத்தப் படும் பைத்துகள்,கசீதாக்கள், ராத்திபுகள், மவ்லிதுகள், கசீததுள் புர்தா, கிராத்துகள் என இரண்டு மூன்று நாட்கள் ஊரே விழாக் கோலமாகிவிடும், பாதை ஓரங்களில் நடைபாதை வியாபாரிகள், அத்தர் , தொப்பி வியாபாரிகள், சர்வத் சிற்றுண்டி இனிப்பு பண்டங்களின் வியாபாரிகள் என பெரும் ஆரவாரமாக ஊர் விழாக் காணும். இறுதிநாள் கந்தூரி சாப்பாடு ஓலைப் பெட்டிகளில் வீடுகளுக்கு பங்கீடு செய்யப் படும்.

சிறுபராய மார்க்க கல்வி:

நாம் சிறுவர்களாக இருந்த பொழுது ஹப்புகஸ்தலாவை கிராமத்துக்கு அருகில் உள்ள அஹஸ்வெவ எனும் கிராமத்தில் அல்-காஹிரா வித்தியாலய அதிபர் விடுதியில் இருந்தோம், அங்குதான் நான் கா.பொ.த சாதாரண தரம் வரை கற்றேன், அருகில் உள்ள மண்ணினால் கட்டப்பட்டிருந்த பள்ளியில்  இஸ்ஸதீன் ஹசரத் (ரஹ்) மற்றும் ஜலீல் லெப்பை (ரஹ்) ஆகியோரிடம்  தஃலீமுல் குரான் ஓதினோம்.

periyapalliபின்னர் பாடசாலையில் கபீர் மௌலவி (ரஹ்) மற்றும் மட்டக்களப்பு ஹசரத் (ஷெய்க் ஹபீல் நளீமி அவர்களின் தந்தை) முஹம்மத் மௌலவி (ரஹ்) ஆகியோரிடம் இஸ்லாம் கற்றோம், அந்தக் காலத்தில் தப்லீக் ஜமாஅத் இருக்கவில்லை, ஊரில் பெரும்பாலும் காதிரிய்ய தரீக்கா செல்வாக்கு இருந்தது, தங்கள்மார்கள் வருவார்கள், கோயா தங்கள் பற்றி அறிந்திருக்கின்றேன்.

இனி ஊரில் ஐவேளை தொழுகை நோன்பு என்பவற்றிற்குப் பின்னர் அன்றைய வழக்கில் இருந்த சமய கலாசார விடயங்கள் எமக்குத் தெரிந்த மார்க்கமாகும்,

அல்-ஹம்தெனும் புகழே லில்பாரி நாயனுக்கே..

அல்-பாரி கருணை ஸலவாத்தும் நபி தமக்கே..

என்று ஆரம்பிக்கும் பத்ரு ஸஹாபக்கள் அனைவரது பெயர்களும் இடம் பெறும் பத்ரு மாலை எனும் கவிதை தொகுப்பை எழுதியவர் எமது அப்பா பெரிய ஆலிம் சாஹிபு உதுமான் லெப்பை (ரஹ்)   ஆவார், அதனை ஒவ்வொரு வெள்ளிக் கிழமை கலையிலும் சுபஹுக்குப் பின்னர் பள்ளியில் சிலர் அமர்ந்து பாடுவார்கள். கிச்சடி, பாலும் பழமும் பகிரப்படும், ஓதி முடியும் வரை பொறுமையோடு அவை பங்கிடப் ப்[ஆடும் வரை பார்த்துக் கொண்டிருப்போம்.

ஒவ்வொரு வியாழன் மாலை வெள்ளி இரவும் பள்ளியில் ஹத்தாத் ராத்திபு மஜ்லிஸ் இடம் பெறும் நானும் சம வயது நண்பர்களும் ஆர்வத்தோடு திக்ரு மஜ்லிஸில் கலந்து கொள்வோம், நூறு திக்ரு சொல்லும் பொழுது சிலருக்கு ஜத்பு வந்துவிடும்.

பின்னர் 1970 களில் நாங்கள் ஹபுகஸ்தலாவையில் புதிய வீட்டில் வாழ ஆரம்பித்த காலத்தில் தான் தப்லீக் ஜமாஅத் அறிமுகமானது.

தப்லீக் ஜமாஅத் அறிமுகம்:

தப்லீக் ஜமாஅத் அறிமுகமானதன் பின்னர் வாப்பா, உம்மாவின் இளைய சகோதரர் ஹோரம்பாவ இப்ராஹீம் ஹாஜியார் மாமா ஆகியோர் நாற்பது நாள் ஜமாஅத் சென்றனர், இரண்டாமவர் நான்கு மாதம் பைசல் ஜமாத்தில் மக்காவிற்கும் சென்று வந்தார், உம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அதில் கூடுதலாக ஈடுபாடுகாட்டினர். மௌலவி புர்ஹானுத்தீன் அஹமத் எமது உறவினர் தற்போதைய நாவலப்பிட்டி ஜாமியாஹ் இஸ்லாமியா ஸ்தாபகர் அவர்களும் அன்றைய தப்லீக் ஜமாஅத் பிரபலங்களில் ஒருவராக இருந்தார்.

rabbiநானும் சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு நாற்பது நாள் ஜமாஅத் சென்றேன் என்றாலும் பாதியில் வீட்டுக்கு வந்துவிட்டேன், எனக்கு தப்லீக் பணிகளில் அதிக ஆர்வம் இருந்தது என்னோடு அப்துல்காலிக் (ஹசரத்) அப்துர்ரஹீம் (ஹசரத்) போன்றோர் சமகாலத்தில் ஜமாஅத் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் ஹிப்ளு கிதாப் ஓத சென்றனர், அவர்களின் பிரிவும் என்னை பாதித்து,  நானும் விடாப்பிடியாக மாத்ரஸா செல்ல வேண்டும் என அடம் பிடித்தேன், தப்லீக் தந்த ஆன்மீக பயிற்சியும் ஈடுபாடும் மார்கத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வ மேலீட்டை ஏற்படுத்தியிருந்தது.

வாப்பாவும் உம்மாவும் சாதாரண தரப் பரீட்சை எழுதி விட்டு மதரசா செல்லுமாறு வலியுறுத்தினர், பின்னர் ஜாமியாஹ் நளீமியாஹ் நுழைவுத் தேர்விற்கு வாப்பா 1979 ஆம் ஆண்டு அழைத்துச் சென்றார், தெரிவானேன், என்றாலும் புருஹானுத்தீன் ஹசரத் அவர்கள் என்னை புதுடெல்லியில் உள்ள மார்கஸ் மதரசாவிற்கு அனுப்ப வேண்டும் என ஆர்வம் கட்டியதால் நளீமியாவிற்கு உரிய காலத்தில் செல்ல வில்லை.

ஜாமியாஹ் நளீமியா பிரவேசம்:

தகவல் அறிந்த தற்போதைய கல்விப் பணிப்பாளர் ஷெய்க் ஏ.ஜே.எம் இல்யாஸ் நளீமி அப்போது நளீமியாஹ்வில் அவர் ஐந்தாம் வருடம் கற்பவர் வாப்பாவிடம் வந்து நளீமியாஹ்விற்கு என்னைஅனுப்ப வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க வாப்பா என்னை அங்கு கொண்டு போய் சேர்த்து விட்டார்.

jamiyahஜாமியா நளீமியாஹ்விற்குச் சென்றேன், அங்கு  பல உத்தியோகப் பற்றற்ற ஜமாஅத்  சார்ந்த குழுக்கள் இருந்தன, தப்லீக் ஜமாஅத், இக்வானுல் முஸ்லிமூன், ஜாமாதே இஸ்லாமி போன்றவை இருந்தன, இரண்டு அமைப்புகள் பற்றியும் சிறிய அறிமுகம் அங்கு செல்ல முன்பே இருந்தது, எனது பெரியப்பா உபைதுஸ் சத்தார் அல்- அஸ்ஹரி அவர்களுக்கு எகிப்தில் இருந்து இக்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் மாத இதழ் தஃவா சஞ்சிகை வரும், ஒருமுறை அவர் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும் பிரசுரமாகியிருந்தது. அந்த அமைப்பு பற்றி சொல்லியிருந்தார்.

பாடசாலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது எமக்கு ஆங்கிலம் கற்பிக்க நியமனம் பெற்றுவந்த உலப்பனை ஷரீப் ஆசிரியர் “அல்-ஹசனாத்” இதழை கொண்டுவந்து எமக்கு அறிமுகம் செய்து தந்தார், அந்தக் காலத்தில் எமது பகுதிகளில் “ஜமாத்தே இஸ்லாமி” வழிகேடு என்று பரவலாக அறியப்பட்டது, ஷிர்கு பித்அத் பற்றி அதிகம்  பேசியமையும் தரீக்காக்கள் மற்றும் தப்லீக் செல்வாக்கும் காரணமாக இருக்கலாம்.

ஹபுகஸ்தலாவையில் ஆரிபீன் ஹாஜியாரின் தம்பி இஸ்மாயில் நானா (ஷெய்க் யாஸிர் இஸ்லாஹி அவர்களின் தந்தை) ஊரில் அல்-ஹசனாத் அறிமுகம் செய்து பல எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

அந்த கால கட்டத்தில் தான் மௌலவி மீரான் அவர்கள் எமது ஊரில் ஷிர்கு பித்அத்துக் கெதிராக ubaithதீவிர பிரசாரம் செய்ய ஆரம்பித்தார் அவர் இந்தியாவில் பாகியாதுஸ் சாலிஹாதில் ஓதியவர் இலங்கையில் தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பித்த பொழுது முன்னோடியாக இணைந்து கொண்டவர், ஒருமுறை 1975 இருக்கும் பள்ளியில் ஜும்மாவிற்குப் பின்னர் பத்ரியா புர்தா  கந்தூரி அறிவித்தல் விடுக்கப்பட்ட பொழுது மிம்பருக்கு அருகில் சென்று எதிர்ப்பினை தெரிவித்தார் மஸ்ஜித் போர்களமாகியது, அல்லாஹு அக்பர், ஜிஹாத் என்று அவர் சப்தமிட்டது இன்னும் நினைவிருக்கிறது.

ஒருமுறை ஊரில் புதிதாக அறிமுகமாகிற தப்லீக் ஜமாத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் பற்றி எமது அன்றைய இஸ்லாம் பாட ஆசிரியர் பெரிய பள்ளி பேஷ் இமாம் மௌலவி முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் வகுப்பில் வைத்து கேட்ட பொழுது சிரித்து விட்டு சென்று விட்டார்.

பின்னர் இடை வேளையின் பொழுது என்னை தனியாக அழைத்து இவர்கள் எல்லோரிடமும் உண்மை இருக்கிறது ஆனால் அணுகுமுறைகளில் பாரிய பிழைகள் இருக்கின்றன, அது பற்றி பாடசாலையில் கருத்துச் சொன்னால் உங்கள் வாப்பா கண்டிப்பார், ஜூம்மா மஸ்ஜிதில் கருத்துச் சொன்னால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும், இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் நீர் மார்கத்தை கற்ற ஆலிமாக இறை நேசராக வருவீர் என எனக்கு தெரிகிறது அப்பொழுது உமக்கு போதிய தெளிவுகள் கிடைக்கும் அதுவரை பொறுமையாக படியும். என்று ஆலோசனை சொன்னார்.

ஜாமியா நளீமியாஹ் பிரவேசம் வாழ்வில் ஒரு திருப்புமுணை என்பதனை நான் சொல்லாமலும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள், அங்கு சென்றது முதல் தொடர்ந்தும் தப்லீக் ஜமாஅத் பற்றுதல் இருந்தாலும் பல்வேறு ஜமாஅத்துக்கள் குறித்த தெளிவும் அறிவும் கிடைத்தது, உலகளாவிய இஸ்லாமிய உம்மத்து, உலகளாவிய இஸ்லாமிய எழுச்சி என பல்வேறு பரிமாணங்களில் அறிவும் தெளிவும் கிடைத்தது.

ஷாதுலிய்யா   தரீக்காவை சேர்ந்த பிரதானி நளீம் ஹாஜியார் அவர்கள் ஸ்தாபித்திருந்த ஜாமியாஹ்  நளீமியாஹ்வில் குறிப்பிட்ட எந்தவொரு அமைப்பினதும் கொள்கை கோட்பாடுகள் அணுகுமுறைகள் என எத்தகைய கட்டுக் கோப்புகளும் வரையறைகளும் இருக்கவில்லை, அறபு மொழி இஸ்லாமியக்  கற்கைகளுக்கான மிகவும் முற்போக்கான சுதந்திரமான கல்விச் சூழல் அங்கு காணப்பட்டது, சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் அறிமுகம் கிடைத்தது.

அங்கு கற்ற காலத்திலும் தொடர்ந்து இராண்டு ஆண்டுகள் விரிவுரையாளராக இருந்த காலத்திலும்  நான் எந்தவொரு உள்நாட்டு இஸ்லாமிய அமைப்புக்களிலும் ஈடுபாடுகாட்டவே இல்லை, எனது கற்கைகளை நிறைவு செய்து சமூகத்திற்குச் செல்கின்ற பொழுது பொருத்தமான ஒரு களத்தில் இருந்து பணி செய்வதென்ற முடிவில் மாத்திரமே உறுதியாக இருந்தேன்.

ஊர் ஜமாஅத் :

எமது ஊரைப் பொறுத்தவரையிலும் ஜாமியாஹ் நளீமியாஹ் ஜமாத்தே இஸ்லாமிய  மதரஸா என்ற ஒரு அபிப்பிராயமும் நிலவி வந்தது, தொடர்ந்தும் ஊருக்கு வந்தால் தப்லீக் பணிகளில் ஈடுபட்டாலும் ஒரு ஒவ்வாமை இருப்பதனை உணர்ந்து அதிலிருந்தும் ஓரமாகி இருக்க வேண்டிய நிலை இருந்தது.

பெரிய ஆலிம் சாஹிப் குடும்ப உறுப்பினர் என்ற வகையிலும் சமூக ஆர்வலர் அதிபர் மஸிஹுத்தீன் அவர்களின் புதல்வர் என்பதனாலும் மஸ்ஜிதில் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தலையீடு குறைவு என்பதனாலும் மஸ்ஜிதுகளில் பயான்கள் குத்பாக்கள் என்று செய்வதற்கு பெரிதாக தடைகள் எதுவும் இருக்க வில்லை.

ஊர்ப் பெரியபள்ளி, மின்ஹாஜ் பள்ளி, அஹஸ்வெவ ஜும்மா பள்ளி, கோரகொயா ஜும்மாப் பள்ளி, பொல்வதுரை ஜும்மாப் பள்ளி என ஊர் மற்றும் ஊரைச் சுற்றியுள்ள ஜும்மாப் பள்ளிகளில் குத்பா மற்றும் பயான்களை நிகழ்த்தி வந்தேன்.

periyapalli-1என்றாலும் 1988 இல் என்று நினைக்கின்றேன் மஸ்ஜிதுக்கு அண்மையில் உள்ள சிலரும் மற்றும் சில ஊர் முக்கியஸ்தர்கள் என்று கருதப்பட்ட சிலரும் ஒருவரின் இல்லத்தில் கூடி நோன்பு காலத்தில் நான் நடத்திய குரான் விளக்க வகுப்புகள் குறித்தும் பயான்கள் குறித்தும் சந்தேகங்களை ஏற்படுத்தி  கலந்துரையாடி எனக்கு குத்பா மற்றும் பயான்கள் பண்ண அனுமதி வழங்கக் கூடாது என்று முடிவெடுத்து இருந்தனர், ஒரு பிரதானி ஜூம்மாவிற்குப் பின்னர் மறை முகமாக என்னை தாக்கியும் உரையொன்றை நிகழ்த்தினார்.

அவர்களில் பலர் மரணித்து விட்டார்கள், குறிப்பாக எனக்கெதிராக உரை நிகழ்த்திய பிரதானி அவரது பிள்ளைகளுடன் வீட்டுக்கு வந்து பின்னொரு காலத்தில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு அவரது ஏற்பாட்டில் மஸ்ஜிதில் ஒரு குத்பாவும் ஏற்பாடு செய்து தந்து ஜூம்மாவிற்குப் பின்னர் எழுந்து நின்று என்னைப் பற்றியும் எமது குடும்பப் பின்னணி பற்றியும் பாராட்டியும் பேசினார்.

என்றாலும் இன்று வரை ஒரு ஒவ்வாமை தொடர்கின்றமை கவலைக்குரிய விடயமாகும், ஊர் மஸ்ஜிதுகளில் உரையாற்றிய நாளும் எனக்கு நினைவில் இல்லை. வெளியூர்களில் இருக்கும் ஏனைய ஊர் பிரபலங்கள் மஸ்ஜித் நிகழ்வுகளிற்கு அழைக்கப் பட்டாலும் எங்களை எவரும் கண்டுகொள்வதில்லை என்ற வருத்தமும் இருக்கத் தான் செய்கிறது.

அரசியல் பிரவேசம் :  

ashy

 

தொடரும்…….

About author

No comments

இஸ்லாமிய வாழ்வில் “ஷூரா” வின் முக்கியத்துவம்!

இஸ்லாம் தனி மனித ஆளுமைகளை ஆழமான ஆன்மீக அடித்தளங்களின் மீது கட்டி எழுப்புவதன் மூலம் அன்பும் அற நெறிகளும் பண்பு ஒழுக்கங்களும் நிறைந்த பரஸ்பரம் ஒத்தாசை, புரிந்துணர்வும் கட்டுக் கோப்புமுள்ள ஒரு சமூகத்தை கட்டி ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com