Thursday, March 28, 2024

மருந்து போல் உணவின்றேல் விருந்து போல் மூவேளையும் மருந்து தேவைப்படும்.

உணவு மனித வாழ்வில் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகும்.

Foodஉண்ணும் உணவு ஹலாலாக இருத்தல் வேண்டும் என்பதை இஸ்லாம் பெரிதும் வலியுறுத்துகிறது. இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (ஸுராதுல்பகரா 2:172)

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் ஹலாலானதும் சுத்தமானதுமான பண்டங்களையே புசியுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாக இருக்கின்றான். (அல்பகரா:168)

தூதர்களே! பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றேன்.(அல்முஃமினூன்: 51)

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.

Fishநீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.

(ஸுரத்துன் நஹ்ல் 16:13,14)

“அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்;;. அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம். பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெள; வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.” ( ஸுரதுல் அன்ஆம்   6: 99)
நாவிற்கு சுவையானவற்றை மாத்திரம் உண்ணாது உடலிற்குத் தேவையானவற்றை நாம் உண்ணவும் பருகவும் பழகிக் கொள்ள வேண்டும்.
 
Mango (4)இரசாயனப் பசலைகள் உபயோகிக்கப் படாத பழங்கள், கீரை வஸ்துக்கள், தானிய வகைகள், கிழங்கு வகைகள் , காய்கறி வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாகும்.
 
தூய்மையான நீர், அல்லது சுட்டாறிய நீர் முறையாக தேவையான அளவில் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்
.
வெள்ளை சீனி, ஸ்பிரிட் கலந்த பானங்கள், குளிரூட்டப் பட்ட பானங்கள், அதிகம் காப்பி, அதிகம் தேனீர், அதிகம் இனிப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு கேடாகும்.
 
மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள், ப்ராய்லர் கோழி, பதனிடப்பட்ட மாமிச வகைகள், சுவையூட்டிகள், அஜினோ மோட்டோ, ஈஸ்டு, சோசேஜ் வகைகள், சில நூடுல்ஸ் வகைகள்,செயற்கையாக கார்பைட் போன்ற பதார்த்தங்கள் உபயோகித்து பழுக்க வைக்கப் பட்ட பழங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவையாகும்.
 
காலை ஆகாரத்தை தவிர்ப்பது, நேரம் தவறி உணவு உட்கொள்வது போன்ற பழக்கங்களும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன.
 
Fast foodஅவசர உணவுகள், அதிக எண்ணெய், அதிக உப்பு, அதிக சுவையூட்டிகள், அதிக கொழுப்பு, அதிக இனிப்பு அதிக மாப்பொருள் என்பன ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன.
 
மது சிகரட் மற்றும் ஹலால் இல்லாத அத்தனை உணவு பானங்கள் சகலவையும் ஆரோக்கியத்திற்கு கேடானவையே.
 
கொக்கா கோலா, ஸ்பிரய்ட், செவன் அப் மற்றும் இன்னோரன்ன குளிர் பானங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடானவை.
 
இயன்றவரை வீட்டில் சமைத்தவற்றை, அல்லது நீங்களாக தயார் செய்பவற்றை, அல்லது உங்களுக்கு நம்பிக்கையான இடங்களில் தயார் செய்பவற்றை மாத்திரமே உண்ணுங்கள்.
 
பால், தயிர் இளநீர், பழங்கள், பேரீத்தம் பழம், பழச் சாறுகள் என இயற்கையான உள்ளூர் உற்பத்திகளை நுகர்வது உள்ளூர் விவசாயிகளுக்கு மாத்திரமன்றி எமது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
 
இன்று இரைப்பைக் கோளாறுகள், அஜீரணம், காஸ்ட்ராய்டிஸ் என்பவற்றிற்கு அப்பால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், காலஸ்ற்றோல், சிறுநீரக கற்கள், மாரடைப்பு மட்டுமல்லாது புற்று நோய்க் காரணிகளை பெரிதும் எமது உணவுப் பழக்க வழக்கங்கள் ஏற்படுத்துகின்றன.
 
king_coconutஅதே போன்றே போதிய உடற்பயிற்சி இன்மை, நித்திரை இன்மை, ஓய்வு இன்மை, தொழாமல் , ஓதாமல் இருத்தல், தனிமையில் உறவுகளை துண்டித்து வாழுதல் பல்வேறு உடல் உள உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
 
நாம் பூசுகின்ற கிரீம் வகைகள், ஷாம்பூ வகைகள் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் என்பதை சிலர் அறியாமல் இருக்கலாம், இள நரை, முடி உதிருதல், வழுக்கை விழல் என பல கோளாறுகள் ஏற்படலாம், சில சோப்பு, கிரீம் வகைகளில் பன்றிக் கொழுப்பு சேர்க்கப் படுகின்றது.
 
நாங்க எவ்வளோ சொன்னாலும் கேக்க மாட்டாங்க சேர் நீங்க ஒருக்கா சொல்லுங்கோ எண்டு உங்கட ஊட்டாக்கள் சொல்றாங்க.
 
cool-drinkssசரி, இதெல்லாம் பார்த்தா என்னத்த தின்ற, என்னத்த குடிக்கிற, எப்பிடி வாழ்ற.. என்று நீங்க சொல்றதும் விளங்குது, என்றாலும் இயன்றவற்றை இயன்றவரை செய்ய முயற்சிப்போம்.
 
சுவறு இருந்தால் தானே சித்திரம் வரையலாம்.
உங்களதும் அன்பிற்க்குரியவர்களதும் ஆரோக்கியமான நோயற்ற வாழ்விற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
இது ஒரு இயற்கை வளங்கள் நிறைந்த விவசாய நாடு…

Agriஇது ஒரு இயற்கை வளங்கள் நிறைந்த விவசாய நாடு, அவற்றை பாதுகாப்பதும் எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச் செல்தலும் எமது கடமையாகும்.

இயற்கையான பானங்களை பழச்சாறுகளை பருகுங்கள், உள்நாட்டில் விளையும் பழங்களை, காய்கறிகளை கீரை வகைகளை உணவிற்காக கொள்வனவு செய்யுங்கள். குறிப்பாக இரசாயனப் பசலைகள் உபயோகிக்கப் படாத உற்பத்திகளை தேடி அதற்கான கேள்வியை ஏற்படுத்துங்கள், இயன்றவரை நீங்களும் வீட்டுத் தோட்டங்களை செய்கை பண்ணுங்கள்.

அவ்வாறு செய்வதன் மூலம் பல நன்மைகள் இருக்கின்றன:

ஆரோக்கியத்திற்கு உகந்தவை நோய் நொடிகளை குறைத்து இருக்கின்ற நோய்களுக்கு பரிகாரமாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

உள் நாட்டு விவசாயிகளுக்கு எங்களால் முடியுமான ஒத்துழைப்பாக இருக்கும்.

fruitசொந்த வாழ்க்கைச் செலவினம் குறையும்.  நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பங்களிப்பாக இருக்கும்.  வெளிநாட்டுச் செலாவணி மீதமாகும்.

புதிய தலைமுறை விவசாய தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமாளிப்பதாக அமையும்.

பலதேசியக் கம்பனிகளின் சுரண்டல்களில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க ஒவ்வொரு பிரஜையும் பங்களிப்பு செய்தல் வேண்டும்.

நன்மையை ஏவுதலும், தீமையை தடுத்தலும், தான தர்மம், பொருளாதார உதவி ஒத்தாசை புரிவதும், தேசத்தின் வளங்களை பாதுகாப்பதும் விசுவாசிகளின் பண்பாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles