வஸிய்யத்: முதலில் எனக்கும் அப்பால் என் உறவுகளுக்கும்.

0

எனக்கும் எனது சகோதரர்கள், உறவுகள் மற்றும் மனைவி மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொல்லுகின்ற வஸிய்யத்துக்களையே உங்களுக்கும் சொல்லுகின்றேன். 

ஆழமான இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கே வாழ்வில் உண்மையான தன்னம்பிக்கை இருக்க parents2முடியும், கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடுமை ஆன்மீக வறுமை.

எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள், ஐவேளையும் தொழுகையை உணர்வு பூர்வமாக நிதானமாக திருப்திகரமாக நிறைவேற்றுங்கள்.

எப்போதாவது திருந்தி வாழ்வோம் என்றெண்ணி பொடுபோக்காக இருந்து விடாதீர்கள், தொழுகை எங்களை திருந்தி வாழச் செய்யும், குறை குற்றங்களுக்கு மன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள்.

இன்றைய பொழுது புலர்ந்திருக்கிறது, நாளைய பொழுது உத்தரவாதமற்றது, சுபஹு தொழாமல் இன்றைய நாளை துவங்கி விடாதீர்கள்.

எமது தொழுகையும், எமது ஒதலும், எமது நற்கருமங்களும், எமது பண்பாடுகளும் எமது மறுமை வாழ்வை மாத்திரமன்றி இன்மை வாழ்வையும் வசந்தமாக்குகின்றன.

அல்லாஹ் அல்லாத எவராலும் எதனாலும் எமது ஈருலக வாழ்வு குறித்த எந்த உத்தரவாதத்தையும் தரவே முடியாது.

அர்ரஹ்மானுடைய அடியார்கள் யாரென்றால்…?

“இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

Quraanஇன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

“எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.
நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்க மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார்.

Thawba1அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)

மேலும் அவர்கள்; “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியிலி) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.

அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.”

(ஸுரத்துல் புர்கான் 25:63-75)

எந்த ஒரு ஆன்மாவும் பரிபூரணமான உயர்நிலையை ஓரே எடுப்பில் அடைந்து விடுவதில்லை, பக்குவமும், முதிர்ச்சியும் காலவோட்டதில் அடையப் பெறுபவை.

தொடர்ந்தேர்ச்சியான முயற்ச்சியும், அன்றாட சுயவிசாரணையும் ஆன்மீக படிநிலைகளில் உண்மை விசுவாசிகளை உயர்வடையச் செய்கிகிறன.

Masjid 2ஆன்மீக பண்பாட்டுப் பயிற்ச்சி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது றப்பிற்கும் இடையே உள்ள அந்தரங்கமான உறவின் வலிமையில் தங்கியுள்ளது.

எமது நாவு நடத்தைகள், எமது உறவுகள், கொடுக்கல் வாங்கல்கள் என்பவற்றில் தாக்கம் செலுத்தாத வணக்க வழிபாடுகளில் கோளாறுகள் நிறையவே இருக்கின்றன.

வாழ்க்கை ஓரு இபாதத் ஆகும், அதனை அல்லாஹ் விரும்பிய படி வாழ நிய்யத் வைத்துக் கொள்வது கடமையாகும்.

அல்லாஹ்வுடனான உறவு அடியார்களுடனான உறவுகளை சீர் செய்கின்றது, அடியார்களுடனான உறவு நெறி தவறுகின்ற பொழுது மனிதன் ஈருலக வாழ்விலும் தோல்வி அடைகின்றான்.

எமது நாவும் நடத்தைகளும் எங்களை ஆளுகின்றன, எம்மிடமிருந்து புறப்படும் சொல் செயல் அங்கீகாரங்கள் எங்களது வாழ்வில் பிரதி விளைவுகளுடன், எதிர் வினைகளுடன் மீண்டு வந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.

எமது வணக்க வழிபாடுகள் தினமும் எங்களை புடம் போட்டு புதுப்பித்து எமது நம்பிக்கைக் கோட்பாடுகளை அமுலாக்கங்களாக, பிரயோகங்களாக வாழ்வில் மிளிரச் செய்கின்றன.

யா அல்லாஹ் எங்கள் பாவங்களை, குற்றம் குறைகளை மன்னித்து உன்னை தொழுது வழிபட்டு நல்லடியார்களாக வாழ எமக்கும் எமது அன்பிற்குரியோர் அனைவருக்கும் அருள் புரிவாயாக.

யா அல்லாஹ், எங்கள் பெற்றார்கள் உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவுகள் அனைவர் பாவங்களையும் மன்னித்து கருணை கொண்டு ஈருலக ஈடேற்றத்தையும் சௌபாக்யங்களையும், சம்பத்துக்களையும் அருள்வாயாக.

உங்கள் பெறுமதியான துஆக்களில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

வாழ்வு : வெற்றியின் இரகசியங்கள், ஒவ்வொரு பொழுதையும் வாழ்வோம்.

படைத்த றப்புடன் நெருக்கமாக இருங்கள். (தொழுகை, குரான், திக்ரு) எங்கிருந்தாலும் எல்லா நிலையிலும் அவனை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்.

ரஸுலுல்லாஹ் (ஸல்) மீது அன்பு காட்டுங்கள் ஸலவாத் சொல்லுங்கள், அஹலுல் பைத்களை ஸஹாபாக்களை நேசியுங்கள், நபி வழி நடவுங்கள்.

Masjd 1பெற்றவர்கள் மீது அன்பு காட்டி பணிவிடை செய்யுங்கள், பெற்றார் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தி இருக்கிறது, அவர்களது கோபத்தில் அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது. மனைவி மக்களிற்கு சிறந்தவர்களாக இருங்கள். உறவுகளை உடன் பிறப்புக்களை, அண்டை அயலவரை சேர்ந்து வாழுங்கள். நீண்ட ஆயுளும், இரண விஸ்தீரணமும் கிடைக்கும்.

ஹலால் ஹாராம் பேணி வாழுங்கள், தேவையுடையாருக்கு கை கொடுங்கள், சதகா செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் துணைக்கு இருக்கின்றான்.

உண்மை நீதி நேர்மை அமானிதம் பேணி தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் நடந்து கொள்ளுங்கள்.

உயரிய குணங்கள் பண்பாடுகள், பொறுமை, நிதானம், பெரும் தன்மைகள் எப்பொழுதும் உங்கள் அணிகலன்களாக இருக்கட்டும், பெருமை, பொறாமை, பேராசை, அகங்காரம், கருமித்தனம், கோழைதனம் போன்ற பலவீனங்களில் இருந்து உள்ளத்தை தூய்மையாக வைத்திருங்கள்.

அறிந்தவர் அறியாதார் மீதும் ஸலாம் சொல்லுங்கள். முஸ்லீம் அல்லாதோருக்கும் வாழ்த்து சொல்லுங்கள், மனித நேய உதவிகளை செய்யுங்கள். மலர்ந்த முகத்துடன் அடுத்தவரை சந்தியுங்கள்.

கற்பு நெறி பேணுங்கள், அது பெண்களுக்கு மாத்திரம் உரியதல்ல.

பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது வாய் மூடி இருங்கள். கோல் புறம், கேலி செய்தல் என்பவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள், வாதப் பிரதிவாதங்களை, குதர்க்க வாதங்களை விதண்டா வாதங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்.

நல்லவற்றிற்கு தூண்டுதலாகவும், தீயவற்றை தடுப்பவர்களாகவு இருந்து கொள்ளுங்கள்.

Moralsபெரியவர்களை, உலமாக்களை, ஆசான்களை மதித்து கண்ணியம் செலுத்துங்கள் சிறியோர் மீது அன்பு காட்டுங்கள்.

இயன்றவரை பொதுப் பணிகளில் ஈடுபாடு காட்டுங்கள்.

செல்வம் அதிகாரம் செல்வாக்கு பிரபல்யம் போன்ற போலிக் கவர்ச்சிகளுக்கு பின்னால் அள்ளுண்டு சென்று விடாதீர்கள்.

இனிய மார்க்கம் காட்டித் தரும் அழகிய வாழ்வு நெறி..எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவர்க்கும் கிருபை செய்வானாக..

 

கடுகளவேனும் வேண்டாம் அநீதி இழைக்க..

death5அநீதி கண்டும் கடந்து செல்ல வேண்டாம் காணாதோர் போன்று..

கிளர்ந்தெழுங்ககள் அநீதி காண்பின்..

துணை போக வேண்டாம் ஒரு கணமும் அநீதியிற்கு..

துணை நில்லுங்கள், நீதி கேட்போர் பக்கம்..

நீதிக்காக உரத்து குரல் கொடுங்கள்…

ஆதரவற்றோர், நலிவுற்றோர் துணை நின்று நீதி கேளுங்கள்..

அநீதிக்கு முன் பார்வையாளரும் பங்காளிகளே..

அநீதிக்கு ஆளாவோர் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் திரை இல்லை.

நீதியை நிலை பெறச் செய்வது விதிக்கப் பட்ட கடமையாகும்.

அநீதிக்கு முன்னால் உறவு முறை, பந்தம் பாசம், நட்பு, இனம், மதம், மொழி,  அதிகாரம்,அந்தஸ்து பாகுபாடுகள் பார்க்க வேண்டாம்.

அநீதி இழைப்போர் பூமியில் அக்கிரமக் காரர்கள், அவர்கள் அல்லாஹ் வுடன் போர் தொடுக்கிறார்கள்.

“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.” ( அல்-மாயிதா 5:8)

இதனை பகிர்ந்து இரட்டிப்பு நன்மை பெற்றுக் கொள்ளுங்கள்.

(எனது முகநூல் பதிவுகளில் இருந்து )

About author

No comments

வளங்களை முகாமை செய்ய முடியாது தசாப்தங்களை கடத்தும் சமூகம்!

ஒரு உண்மை தெரியுமா?   இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்த வரை எல்லாத் துறைகளிலும் சமூகத்தில் மிகவும் சிறந்த கல்விமான்களும், புத்தி ஜீவிகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள், ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றார்கள்.   ஆனால் அவர்களுக்கான ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com