மாற்றத்திற்கான இளைஞர் அணி : நாளை அல்ல இன்றே நீங்கள் தலைவர்கள்.

0

இப்படை தோற்பின் எப்படை வெல்லும் ?”

LOBBY FOR CHANGE

“போராட்ட உணர்வுகள் மழுங்கிப் போன இளைஞர்கள் உள்ள வரை சமூகங்கள் எழுச்சி பெறுவதில்லை, காவு கொள்ளப் படுவதோ அவர்களது உலகம்.”

?

?

மேற்படி பதிவை எனது முகநூல் பக்கத்தில் நேற்று எழுதியதும் “நாம் தயாராக இருக்கின்றோம் எங்களை நெறிப்படுத்தி வழி நடத்துங்கள்” என நாட்டிலும் வெளி நாடுகளிலும் உள்ள நண்பர்கள் பின்னூட்டம் செய்தார்கள், பலர் தொடர்புகொண்டு கதைத்தார்கள். அவர்களுடன் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்களை கீழே தருகின்றேன்:

முஸ்லிம் சமூக எழுச்சி என்பது பல்வேறு பரிமாணங்கள் கொண்டது, அதில் அரசியல் ரீதியிலான விழிப்புணர்வும் எழுச்சியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது, அந்த வகையில் எமது சமூகத்தின் அண்மைக்கால அரசியல் வரலாறு மிகவும் கவலைக்குரிய நிலையில் இருக்கின்றமை யாவரும் அறிந்த உண்மையாகும்.

புதிய தலைமுறை இளம் தலைவர்கள் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக இணைந்து  புரட்சிகரமான சீர்திருத்தங்களை நோக்கி எமது அரசியல் தலைமைகளை தள்ள வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர், இன்றேல் காலம் கடந்து கைசேதப்படும் எம்மை  கையாலாகாத ஒரு தலைமுறையினர் என்று எதிர்கால சந்ததிகள் திட்டித் தீர்ப்பார்கள், எமது வரலாறும் அவ்வாறே பதியப் படும் என்பதில் சந்தேகமில்லை.

இனி, யார் எங்கிருந்து எவ்வாறு ஆரம்பிப்பது என்ற கேள்விகளுக்கு நாம் விடை கண்டாக வேண்டும், அவற்றிற்கு விடை தெரியாமல் விரக்தி நிலையிலேயே இன்றைய இளம் தலைமுறையினர் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஒலுவில் வெளிச்ச வீட்டிற்கு அருகாமையில் எதிர்வரும் வெள்ளி மாலை ஒன்று கூடத் தயாராக இருக்கின்றீர்களா ? என்று கேட்ட பொழுது நீங்கள் களத்திற்கு வந்து எங்களை வழி நடாத்தினால் நாம் தயாராக இருக்கின்றோம் எனப் பலரும் கூறினர்.

TEAMஇன்னும் சிலர் முதற்கட்டமாக சமூக வலைதள பிரச்சார யுக்திகளுடன் ஆரம்பித்து பரந்துபட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துதல் சிறந்த முன்னெடுப்பாக இருக்கும் என்று அபிப்பிராயப் பட்டார்கள், அந்த வகையில் ஒரு முகநூல் பக்கம், ஒரு வட்ஸ்அப் குழுமம் உருவாக்கப்படுதல் அவசியம் என பலரும் கருதுகின்றனர், அவ்வாறெனின் 256  உறுப்பினர்களைக் கொண்ட பல குழுமங்கள் ஒரே பெயரில் 1,2,3,4,5,6  என ஏற்படுத்தப் படுத்தல் வேண்டும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

மேற்படி நிகழ்ச்சி நிரல் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்வின் வழிகாட்டலில் நெறிப்படுத்தலில் மாத்திரமே இடம் பெறுதல் வேண்டும், வேறு எந்த கட்சி அரசியல், எழுச்சிக் கோஷங்கள் பின்புலங்கள் இருக்கக் கூடாது எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இளைஞர் ஒன்றுகூடலுக்கு முன்னர் தெளிவான வேலைத்திட்டம் இருப்பதன் அவசியம் குறித்து பலரும் வலியுறுத்தியுள்ளனர், அதேவேளை இன்னும் சிலர் தத்தமது முகாம் சார்ந்த எண்ணங்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு எதிர் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர், சிலர் ஏற்கனவே சில அமைச்சர்களின் தீவிர தொண்டர்களாகவும் செயற்படுபவர்கள்.

உண்மையில் எல்லா முகாம்களையும் சேர்ந்த இளைஞர்களும் எமது சமூக மற்றும் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதோடு கடந்த காலங்களில் நான் மேற்கொண்டுவந்த பக்கச் சார்புகளற்ற நடுநிலைமையான விழிப்புணர்வு பணிகளால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கின்றமையையும் புரிந்து கொள்ள முடிகிறது.

“இளைஞர்கள் என்ற வட்டத்திற்குள் நான் இல்லை இது உங்கள் போராட்டம்” என்பதனை VOICEவலியுறுத்திய பொழுதும் அவர்களுக்கான வழிகாட்டலையும் நெறிப்படுத்தளையும் அவர்கள் எதிர்பார்கின்றார்கள், உண்மையில் கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப் படுகின்ற இஸ்லாமிய ஷூரா முறையிலான தலைமைத்துவக் கட்டமைபொன்றை நோக்கிய தலைமைத்துவப் பயிற்சிகளை இளம் தலை முறையினருக்கு பெற்றுக் கொடுக்க தன்னலமற்ற சமூக உணர்வுள்ள புத்தி ஜீவிகள் முன்வரல் வேண்டும்.

இன்னும் ஐந்த அல்லது பத்து வருடங்களிற்குள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் மிகச் சிறந்த இளம் ஆளுமைகள் தலைவர்களாக களத்தில் இருப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது, அந்த வகையில் கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்து வரும் விழிப்புணர்வு பணிகள், மற்றும் “சுதேச இஸ்லாமிய சிந்தனை பாரம்பரியம் ஒன்றை நோக்கிய எமது சிந்தனைப் பள்ளி” புதிய தலைமுறை இளம் தலைவர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை ஆத்மா திருப்தியைத் தருகின்றது.

இனி போராட்டத்திற்குத் தயாராகும் இளம் போராளிகளுக்கு மிகவும் கண்டிப்பான ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன் :

நாம் மேற்கொள்ளப்போவது மற்றுமொரு அரசியல் கட்சியை உருவாக்குகின்ற பணியல்ல மாறாக இருக்கின்ற அரசியல் அணிகளை ஒரு பொதுவான வேலைத் திட்டத்தை நோக்கி நகர்த்துகின்ற முதற்கட்டப் பணியாகும், எமது இந்தப் பயணத்தில் மேலும் மேலும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை மாறாக வேற்றுமைகளுக்கு மத்தியிலும் உடன்பாடுகளைக் காணுகின்ற ஒற்றுமையை ஐக்கியத்தை ஏற்படுத்துகின்ற மாபெரும் மக்கள் சக்தியை உருவாக்கும் பணியாகும்.

good-leadersஅவ்வாறான ஒரு பொதுவான வேலைத் திட்டத்தை எல்லோருமாக  கலந்தாலோசித்து விவாதித்து  இன்ஷா அல்லாஹ் மாற்றத்திற்கான இளைஞர் படையணியின் பிரகடனமாக வெளியிட வேண்டும், அத்தகைய தெளிவான வேலைத்திட்டத்திற்கு சகல முஸ்லிம் அரசியல் குழுக்களும் உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் இருக்கின்றது, இல்லாத விடத்து அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இளைஞர்கள் சிந்திப்பார்கள்.

இனி மேற்படி வரலாற்றுப் பணியின் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக நீங்கள் இணைந்து கொண்டு உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் பங்களிப்புக்களையும் வழங்க முன்வருவீர்கள் என்று எண்ணுகின்றேன்.

மாணவர் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், முஸ்லிம் மஜ்லிஸ்கள் கல்வி உயர்கல்விச் சமூகங்கள், பல்கலைக் கழக சமூகங்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், பள்ளிவாயல் சம்மேளனங்கள் என சகல் சிவில் மற்றும் சன்மார்கத் தலைமைகள் மேற்படி முன்னெடுப்பிற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழிகாட்டல்களை புதிய தலைமுறைத் தலைவர்களுக்கு இளைஞர்களுக்கு வழங்க முன்வரல் வேண்டும்.

இன்று இன்றேல் இனி என்று ?  

இப்படை தோற்பின் எப்படை வெல்லும்”

இதய சுத்தியுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து களத்தில்இறங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுக் கொள்கின்றோம்.

குறிப்பு:

கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியல் சிவில் மற்றும்சன்மார்கத் தலைமைகளுடன் இணைந்து களப்பணிகளில் ஈடுபட்ட எனது அனுபவங்கள்,அவதானங்கள் நிபுணத்துவங்கள் என்பவற்றை மையமாகக் கொண்டு எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் பணியிலேயே என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன் என்பதனை பலரும் அறிவீர்கள், அந்த வகையில் மேற்படி இளைஞ்ர்களுக்கான வேலைத் திட்டத்தில் ஒரு பதவி  தாங்குனராகவோ அல்லது அரசியல் அணியொன்றில் பதவி தாங்குனராகவோ அல்லது மக்கள் பிரதிநிதியாக மாறுவதோ எனது எண்ணம் அல்ல என்பதனையும் வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

About author

No comments

புனிதமிகு ரமழான் மாதமும் இப்தார் ஏற்பாடுகளும்!

இன்ஷா அல்லாஹ், இன்னும் இரு வாரங்களில் நாம் புனித ரமழான் மாதத்தை அடைந்து கொள்கின்றோம்.   புனித ரமழானை ஹயாத்தாக்குதல் என்ற பெயரில் மஸ்ஜித் நிர்வாகங்கள் செய்கின்ற வழமையான ஏற்பாடுகளிற்கு அப்பால் இயன்றவரை தற்போதைய ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com