வரலாறு படைக்கும் மகத்தான பணியில் பார்வையார்கள் அன்றி பங்காளராகுங்கள்.

0

 

Change5முஸ்லிம் சமூக எழுச்சி என்பது பல்வேறு பரிமாணங்கள் கொண்டது, அதில் அரசியல் ரீதியிலான விழிப்புணர்வும் எழுச்சியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது,  ஒரு சமூகத்தின் எழுச்சியில் இளைஞர்களின் வகிபாகம் பிரதானமானது, அந்த வகையில் வெவ்வேறு அரசியல், சன்மார்க்க மற்றும் சிவில் செயற்பாட்டு முகாம்களில் இருந்த பொழுதும் எமது இளைஞர்கள் மத்தியில் சமூக எழுச்சி குறித்த விழிப்புணர்வும் பிரக்ஞையும் ஏற்பட்டிருக்கின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.

என்றாலும் “சமூக மாற்றம், அல்லது எழுச்சி” என்பது ஒரே இரவில் அல்லது பகலில் நடந்து முடிகின்ற ஒரு  ஆர்ப்பாட்டமோ பேரணியோ அல்ல, அது ஒரு வரலாறு படைக்கின்ற குறுகிய இடைக்கால மற்றும் நீண்ட கால மூலோபாயத் திட்டமிடல்களைக் கொண்ட ஒரு சாத்வீகமான போராட்டமாகும்.

இளைஞர்கள் தேசத்தினதும் சமூகத்தினதும் பிரதான வளங்களாகும் அவர்களின் சொந்த வாழ்வின் வசந்த காலமே தேசத்தினதும் சமூகத்தினதும் எழுச்சியை தீர்மானிக்கின்ற பிரதான உந்து சக்தியாகும், வேகமாக சிந்தித்து செயலாற்ற வல்லமையுள்ள அவர்களை விவேகமாக வழி நடத்துகின்ற பணி சமூகத் தலைமைகளினதும், புத்திஜீவிகளினதும் கடமையாகும், அவர்களை முரண்பாட்டு முகாம்களின் பலிக்கடாக்கள் ஆக்கிவிடவும், அவர்களை விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்று  தீவிரவாத மற்றும் வன்முறை கலாசாரத்திற்கு பழியிடவும் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட சக்திகள் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றன.

YESஎனவே, தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் இதய சுத்தியுடன் கூடிய விழிப்புணர்வை மிகவும் பொறுப்புணர்வுடன் கையாண்டு சரியான திசையில் அவர்களை வழிநடத்துவதும், எமது சொந்தக் குழந்தைச் செல்வங்கள் போல் அவர்களை தீய சக்திகளிடமிருந்து பாது காப்பதும், அவர்களுக்குரிய அங்கீகாரங்களை உரிய மட்டங்களில் பெற்றுக் கொடுப்பதும், அவர்களுக்குரிய சரியான தளங்களையும் களங்களையும் அமைத்துக் கொடுப்பதும் இந்த சமூகத்தின் அரசியல் சிவில் மற்றும் சன்மார்கத் தலைமைகளின் கடமையாகும்.

அந்த வகையில் உயரிய இஸ்லாமிய மற்றும் மானுட விழுமியங்களின் வெளிச்சத்தில் “மாற்றத்திற்கான இளைஞர் செயலணி” யினை வழிநடத்துவதற்கு புத்திஜீவிகள் முன்வருதல் வேண்டும். இது கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுபுக் கூறலும் உடைய அமானிதமான வரலாற்றுக் கடமையுமாகும், எமது சொந்த விருப்பு வெறுப்புக்கள், அபிலாஷைகள், இயக்க கட்சி மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் பொதுவான இலக்குகளில் சகலரையும் ஒன்று படுத்துகின்ற வரலாற்று முக்கியத்துமிக்க பணியில் சகலரும் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும்.

போராட்டத்திற்குத் தயாராகும் இளம் போராளிகளுக்கு மிகவும் கண்டிப்பான ஒரு வேண்டுகோள்.

leadership-and-flowersநீங்கள் மேற்கொள்ளப்போவது மற்றுமொரு மாற்று அரசியல் அணியை உருவாக்குகின்ற பணியல்ல மாறாக இருக்கின்ற அரசியல் அணிகளை ஒரு பொதுவான வேலைத் திட்டத்தை நோக்கி நகர்த்துகின்ற முதற்கட்டப் பணியாகும், அந்த நோக்கத்திற்காகவே இந்தப் பொதுவான வேலைத் திட்டத்தில் எந்தவொரு அரசியல் கட்சியினதும் நிறைவேற்றுத் தராதரத்தில் உள்ள பதவி தாங்குனர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் உள்வாங்கப் படுவதில்லை.

குறிப்பாக “முஸ்லிம் காங்கிரஸ்” எனும் மக்கள் பேரியக்கத்தின் தலைமையுடன் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் முரண்பட்டு கட்சிகளாகவும் குழுக்களாகவும் தனியாட்களாகவும் அரசியல் செய்வோரது நிகழ்ச்சி நிரல்களுடன் இணைந்து அல்லது இயைந்து செல்கின்ற குறுகிய இலக்கினைக் கொண்ட பயணமும் அல்ல.

இந்த வேலைத் திட்டத்தில் எல்லா அணிகளையும் தரப்புக்களையும் சேர்ந்த இளைஞர்கள் உள்வாங்கப் படுவதன் மூலமே பக்கச் சார்பற்ற, நடுநிலைமையான சமுதாய வேலைத் திட்டத்தை முன்னெடுக்க முடியும், வேற்றுமைகளுக்கு மத்தியிலும் பொதுவான இலக்குகளின் மீதான சமுதாய ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியும் இன்ஷா அல்லாஹ்.

இது ஒரே நாளில் ஒரே இரவில் கூடிக்களையும் ஒரு ஆர்பாட்டமோ, பேரணியோ அல்ல, இது தெளிவான மூலோபாயத் திட்டமிடல்களுடன் கூடிய உயரிய உடனடி , இடைக்கால மற்றும் நீண்டகால இலக்குகளைக் கொண்ட வரலாறு படைக்கின்ற சாத்வீகமான வரலாற்றுப் பணியாகும்.

எமது இந்தப் பயணத்தில் மேலும் மேலும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை மாறாக வேற்றுமைகளுக்கு மத்தியிலும் உடன்பாடுகளைக் காணுகின்ற ஒற்றுமையை ஐக்கியத்தை ஏற்படுத்துகின்ற மாபெரும் மக்கள் சக்தியை உருவாக்கும் பணியாகும்.

Unity3அவ்வாறான ஒரு பொதுவான வேலைத் திட்டத்தை நோக்கிய பிரகடனம் வெகு விரைவில் வெளியிடப்படல் வேண்டும் இன்ஷா அல்லாஹ், அத்தகைய தெளிவான வேலைத்திட்டத்திற்கு சகல முஸ்லிம் அரசியல் குழுக்களும் உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் இருக்கின்றது, இல்லாத விடத்து அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இளைஞர்கள் சிந்திப்பார்கள்.

இனி, மேற்படி வரலாற்றுப் பணியின் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக நீங்கள் இணைந்து கொண்டு உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் பங்களிப்புக்களையும் வழங்க முன்வருவீர்கள் என்று எண்ணுகின்றேன்.

கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப் படுகின்ற இஸ்லாமிய ஷூரா முறையிலான தலைமைத்துவக் கட்டமைபொன்றை நோக்கிய தலைமைத்துவப் பயிற்சிகளை இளம் தலை முறையினருக்கு பெற்றுக் கொடுக்க தன்னலமற்ற சமூக உணர்வுள்ள புத்தி ஜீவிகள் முன்வரல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இதய சுத்தியடன் கூடிய எங்கள் முயற்சியை அங்கீகரித்து எங்களை சரியான பாதையில் வழி நடாத்துவானாக!

About author

No comments

சமூக ஊடகங்களை ஒரு விசுவாசி எவ்வாறு கையாள்வது.

அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com