“ஹகீம்” விவகாரம்: உள்ளும் புறமும் ஜாஹிலிய்ய அரசியல் கலாச்சாரம்.

0

(எனது முகநூல் பதிவுகளில் இருந்து)

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹகீமுடைய தனிப்பட்ட விவகாரத்தை ஊடகங்களில் அலசலாமா?  என ஒரு சகோதரர் கேட்டிருந்தார்.

cameraஇலங்கையில் மாத்திரமல்ல, உலகில் எந்த முப்தியிடம் கேட்டாலும் “முடியாது, கூடாது” என்றே சொல்வார்கள், (ஷரீஅத்) சட்டத்தின் முன் நிறுத்துவதென்பது சந்தியில் நிறுத்துவதல்ல.

முறையீடுகள் உரிய தரப்புக்களிடம் மாத்திரமே மேற்கொள்ளப் படல் வேண்டும்.

அவரை கட்சியின் தலைவராக வைத்திருக்கலாமா? என்று கேட்டால் அந்த விடயத்தை கட்சியின் மஜ்லிஸ் அல் ஷூரா மற்றும் உலமா காங்கிரஸ் ஆகியவற்றின் முடிவிற்கு விடப் பட வேண்டும்.

கடந்த காலங்களில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உற்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் மஜ்லிஸு ஷூரா மற்றும் உலமா காங்கிரஸ் மத்திரமல்லாது உயர்பீடங்களும் (இன்று மும்முரமாக முரண்பாட்டிருப்பவர்கள் உற்பட) முடிவு கண்ட ஒரு விடயத்தை மீண்டும் காலம் கடந்து அரசியலாக்குவதில் ஹக்கீமை விடவும் கடந்த காலங்களில் அவர் பின்னால் இருந்து இயக்கிய தரப்புக்களே அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

சுமார் 12 வருடங்கள் கழிந்த பின்னர் விவகாரம் சூடு பிடிப்பதில் மார்க்கம் இல்லை, மாறாக மார்க்கத்தின் பெயரிலான அரசியலே இருக்கிறது என்பது தான் உண்மை.

“ஹக்கீம்” குற்றவாளி என்று ஏற்றுக் கொண்டால் அவரது அந்தரங்க வாழ்வை தத்தமது நிகழ்ச்சி நிரல் மற்றும் இலாப நஷ்டங்களிற்கும் ஏற்ப அரசியல் ஆக்குவோர் அவருக்கு நிகரான குற்றவாளிகளே.

தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் இன்றுவரை முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துள்ள பல அரசியல் தவறுகள் இருக்கின்றன, அவை விசாரணை செய்யப்படவேண்டிய பாரிய சமூகத் துரோகங்களாகும், அவற்றிற்கு ஒருவருடைய தனிப்பட்ட விவகாரங்கள் இலாப நஷ்டங்கள் காரணமாக  இருந்ததென்றால் சமூகத் துரோகங்களின் பங்காளிகள் பலரும் குறுக்கு விசாரணை செய்யப்படல் வேண்டும்.

அவற்றின் பிரதான பங்காளிகள் இன்று மீண்டும் சமூகத்தின் அதிமுக்கிய பிரச்சினைகளுக்காகவா hizbமுரண்பட்டுள்ளார்கள் ? அல்லது தமது சொந்த விருப்பு வெறுப்புக்கள் இலாப நஷ்டங்கள் என்பவற்றை மையப்படுத்திய நிகழ்ச்சி நிரல்களை மையப்படுத்தியா?

ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இருப்பு பாதுகாப்பு அடிப்படை உரிமைகள், சமூக ஐக்கியம் என்பவற்றிற்கு புரட்டிப் பார்க்கப் படாத மார்க்கத் தீர்ப்புகள் பங்காளிச் சண்டைகளுக்காக ஆராயப்படுகின்றமை அதிசயம்.

அருகில் இருந்து ஒரு நண்பனை வழிகேட்டில் செல்லவிட்டு அவற்றை மூடி மறைத்து, நியாயப்படுத்தி அரணாக இருந்தது போதாமல், என்றோ ஒரு நாள் பங்காளிச் சண்டையில் நண்பனை பணயம் வைப்பதற்காக, கப்பம் கேட்டு பயமுறுத்துவதற்காக, திட்டமிட்டு எவரேனும் ஆவனப் படுத்தி இருந்தால் அது மிகப் பெரிய பாவமாகும்.

ஒட்டு மொத்த ஜாஹிலிய்யா அரசியல் கலாசாரமும் நிராகரிக்கப் படுவது போன்று அதன் முகவர்களும் எச்ச சொச்சங்களும் மொத்தமாகவும், சில்லறையாகவும் நிராகரிக்கப் படல் வேண்டும்.

சூரியன் இருக்கும் வரை தான் நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்க முடியும்.

“முஸ்லிம் காங்கிரஸ்” எனும் இயக்கத்தை மக்கள் “நம்மட கட்சி”, நமது வியர்வையாலும் இரத்தத்தாலும் நீரூற்றி வளர்த்த கட்சி என்று மக்கள் உரிமை பாராட்டுகின்றார்கள், கட்சித் தலைமையும் முன்னணி உறுப்பினர்களும் தவறுகள் செய்தாலும் மக்கள் மன்னித்து மறந்து விடுகின்றார்கள்.

“முஸ்லிம் காங்கிரஸ்” எனும் மக்கள் சக்தியை மையத்திலும் பிராந்தியத்திலும் பேரம் பேசும் வலிமையுள்ள சக்தியாக வைத்திருப்பதில் தற்போதைய தலைமையும் முன்னணி உறுப்பினர்களும் பாரிய தவறுகளை இழைத்திருக்கின்றார்கள்.

SLMC (5)கட்சி பல காங்கிரஸ்களாக பிளவு பட்டிருக்கிறது, என்றாலும் ஒரு மறுக்க முடியாத உண்மை இருக்கின்றது அதாவது “முஸ்லிம் காங்கிரஸ்” என்ற மக்கள் இயக்கத்தை உள்ளிருந்து கூட்டிக் கொடுப்பதன் மூலம் அல்லது வெளியிருந்து காட்டிக் கொடுப்பதன் மூலமே உள்ளேயும் வெளியேயும் பல குறுநில மன்னர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

சூரியன் இருக்கும் வரை தான் நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்க முடியும்.

தற்பொழுது பல கூறுகளாக பிளவுபட்டு ஒருவரை ஒருவர் மிகைக்க முயலுகின்ற சமரில் எந்தவொரு காங்கிரஸும் வெற்றியடையப் போவதில்லை, நிச்சயமாக முஸ்லிம் சமூகமே தனது அரசியல் இருப்பை அரசியல் அடையாளத்தை இழந்து தவிக்கப் போகின்றது.

எமது போராட்ட அரசியல் சூதாட்ட அரசியலாக மாறியதால் இன்று பிளவுண்டு சின்னாபின்னப்பட்டு பேரின சக்திகளிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் சரணாகதி அரசியலாக அடகு வைக்கப்பட்டுள்ளமை ஒவ்வொரு போராளியினையும் உறுத்திக் கொண்டிருக்கின்ற உண்மையாகும்.

இந்த மக்கள் இயக்கத்தையும் உரிமைப் போராட்டத்தையும் மீட்டெடுப்பதென்பது புதிய தலைமுறை இளம் தலைவர்களது கரங்களிலேயே தங்கியுள்ளது, எதிர்காலத்தில் அவ்வாறான காட்டிக் கொடுப்புக்களும் கூட்டிக் கொடுப்புக்களும் இடம் பெறா வண்ணம் கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் உள்ள தலைமைத்துவக் கட்டமைப்பையும் யாப்பையும் தயாரித்து கட்சியை தீவிரமான புனரமைப்புக்குள் கொண்டு வருதல் காலத்தின் கட்டாயமாகும்.

அரங்கேற்றி அழகு பார்க்கும் அறியாமைச் சமூகம்:

அரங்கேற்றி அழகுபார்க்கும் அறியாமைச் சமூகமொன்று அரணாக இருக்கும் வரை..

படித்த முட்டாள்கள் எட்ட நின்று பார்வையாளராய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வரை..

இளம் தலைமுறைச் சிங்கங்கள் விழித்துக் கொள்ளாது ஆழ்ந்த துயில் கொள்ளும் வரை..

அசிங்கங்கள் சிங்கங்களென அரங்கில் கொலு வீற்றிருப்பதொன்றும் ஆச்சர்யமில்லை,
அவர்களைச் சொல்லிக் குற்றமுமில்லை,

அபிஷேகம் செய்ய அபிமானிகள் இருக்கும் வரை ஷைத்தான்களின் சாம்ராஜ்யங்கள் சரிவதுமில்லை.

பாவங்களுக்குப் பாவங்களே ஒரு போதும் பரிகாரம் ஆவதுமில்லை,

கடந்த கால மற்றும் நிகழ்கால பார்வையாளர்களும் பங்காளிகளும் பரிகாரிகள் ஆவதுமில்லை.

மாற்றம் வேண்டும்” என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

“எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு அஞ்சிய, கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் (Collective Responsibility, Transparency and Accountability) உள்ள ஒன்றுபட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் மாத்திரமே எமது இருப்பு, பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உத்தரவாதப்படுத்த முடியும்.

tree-3அவ்வாறான அடிப்படைப் பண்புகளை இழந்தமையினாலேயே எமது போராட்ட அரசியல் தனிநபர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அகப்பட்டு சூதாட்ட அரசியலாக பரிணாமம் அடைந்து பங்காளிச் சண்டைகளுக்குப் பலியாகி இன்று தேசிய அரங்கில் கையாலாகாத சரணாகதி அரசியலைச் செய்து கொண்டிருக்கிறது.

பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கையறு நிலையில் முஸ்லிம் சமூகம் மீண்டும் அரசியலில் அனாதையாகி அந்தரப்பட்டு நிற்கின்றது

எமது வங்குரோத்து அரசியல் கலாசாரத்திற்கான மாற்றீடு குறித்து சிந்திப்பதும் செயலாற்றுவதும் சமூகத்தின் ஒவ்வொரு ஆண் பெண் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையாகும்.”

முஸ்லிம் அரசியல் தீவிர மீள்பரிசீலனைக்கு உற்படுத்தப் படுவது வரலாற்றுத் தேவையாகும்.

மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களது மரணத்திற்கு முன்னரும் பின்னருமன முஸ்லிம் அரசியல், கொள்கை கோட்பாட்டு ரீதியாகவும், இஸ்லாமிய விழுமியங்களின் வெளிச்சத்திலும் தீவிர மீள்பரிசீலனைக்கு உற்படுத்தப் படுவது வரலாற்றுத் தேவையாகும்.

உயர் மட்டங்கள் முதல் அடிமட்டங்கள் வரை பாரிய வரலாற்றுத் தவறுகளை நாம் இழைத்துக் கொண்டிருக்கின்றோம், உள்ளிருப்போர் மாத்திரமன்றி வெளியில் இருப்போரும் பங்காளர்காளர்களாகவும், பார்வையாளர்களாகவும் பிழைகளையே தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றோம்.

தற்போதையை நிலையில் வெளியில் உள்ள குழுக்கள் கூட்டணி பற்றிப் பேசுகின்றன.

leadership-and-flowersமுஸ்லிம்கங்கிரஸ் சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் தலைவரிடம் அதிகாரங்களை குவித்துக் கொண்டிருக்கின்றது, இன்னும் நீருபூத்த கங்குகள் மற்றுமொரு பிளவிற்கு சாதகமான தருணம் பார்த்து காத்திருப்பதாகவே உட்கட்சி விட்டாரங்கள் நம்புகின்றன.

இவ்வாறானதொரு இக்கட்டான தருணத்தில் மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் உள்ளும் புறமும் வெவ்வேறு தரப்புக்களிலும் இருக்கின்றார்கள்.

பலர் அணிசேராமல் இருக்கின்றார்கள், எல்லோருமாக ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியலிலும் கோட்பாட்டுரீதியில், விழுமியங்கள் அடிப்படையில், கட்டமைப்புகள் மட்டத்தில் முழுமையான மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

வேற்றுமைகளுக்கு மத்தியில் பொதுவான இலக்குகளில் இவர்களை ஒன்றிணைத்து சமூகம் எதிர்கொண்டுள்ள பிரதான சவால்களிற்கு முகம் கொடுக்கச் செய்வதனை ஆணை வழங்கியுள்ள மக்கள் புறம் இருந்து மாற்றத்திற்கான இளைஞர் செயலணி விரும்புகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ்” தூய்மைப்படுத்தப் பட்டு பாதுகாக்கப் பட வேண்டும்.

முஸ்லிம்களின் கண்ணீரால் செந்நீராலும் கட்டி எழுப்பப் பட்ட “முஸ்லிம் காங்கிரஸ்” தூய்மைப்படுத்தப் பட்டு பாதுகாக்கப் பட வேண்டும்.
ஒரு தனி நபரின் கைகளில் அதிகாரங்கள் குவிக்கப் படுகின்ற மிக ஆபத்தான யாப்பிப்பினை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கொண்டுள்ளதானால் கட்சி சிரேஷ்டர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் அடிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகள் அழுங்குப் பிடிக்குள் அகப்பட்டிருக்கொன்றனர், மக்களாணை மலினப் படுத்தப் பட்டுள்ளது, போராளிகளே போராட்டத்தை தவறான திசையில் கொண்டு செல்கின்றார்கள்.

GOOD GOVகூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புகூறலும், முறையான பங்கு பற்றுதலும் உள்ள தலைமைத்துவ சபைகளை அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை உறுதிப்படுத்துகின்ற, துறை ரீதியிலான சுயாதீன நிபுணத்துவக் குழுக்களைக் கொண்ட புதிய யாப்பு வரைய பட்டு மீண்டும் அவசரமாக பேராளர் மாநாடு நடத்தப் படுத்தல் வேண்டும்.

கட்சி அதிகாரங்களும், அரசியல் அதிகாரங்களும் பகிரப் படுவதற்கு முறையான பொறிமுறைகள் வேண்டும்.

உ+ம்: வேட்பாளர் தெரிவு, தேசியப்பட்டியல் வழங்குதல், அமைச்சு பிரத்தியமைச்சு வழங்குதல், பதவிகள் தொழில் வாய்ப்புகள் வழங்குதல் என சகல வற்றிற்கும் நிலையான கொள்கை மற்றும் பொறிமுறை வேண்டும்.

ஒருவருக்கு ஒருமுறைக்கு மேல் தேசியப் பட்டியல் வழங்காது ஏனைய கட்சி முக்கியஸ்தர்களுக்கு பிரதேசங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

கிழக்கில் மூன்று மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் மூவரும், வடக்கின் பிரதிநிதி ஒருவரும், வடக்கிழக்கிற்கு வெளியே இருவரும் ஒரு ஆலிமுமாக சம அந்தஸ்துடைய உறுப்பினர் களைக் கொண்ட Leadership Council தலைமைத்துவ சபை கட்சியை வழிநடாத்த வேண்டும்.

கட்சியின் பிரதான அதிகாரமிக்க பதவிகள் அந்த உறுப்பினர்களிடம் சம வலுவில் பகிரப் படல் வேண்டும்.

அதி உயர் பீடம், அரசியல் பீடம், செயற்குழு ஆகியன முறையான கட்சிக் கட்டமைப்புகளூடாக வாக்களிப்பின் மூலம் தெரிவாக வேண்டும்.

பாரதூரமான குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளோர் தராதரம் பார்க்கப் படாது இடை நிறுத்தப் பட்டு ஒழுக்காற்று விசாரணைக்கு உற்படுத்தப் படல் வேண்டும்.

இஸ்லாமிய ஷூரா முறை மற்றும் ஒழுக்க விழுமியங்கள் பேணப் படாத அனாச்சாரங்கள் நிறைந்த தலைமைகள் ஒரு பொழுதும் விமோசனம் தருவதில்லை.

இது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.

ஜாஹிலிய்ய  அரசியல் கலாசாரத்திற்கான மாற்றீடு குறித்து சிந்திப்பதும் செயலாற்றுவதும் சமூகத்தின் ஒவ்வொரு ஆண் பெண் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையாகும்.

இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் கட்சியின் பிரதானிகளால் மீறப்படுகின்றமை மிகவும் பாரதூரமான விடயமாகும், அசிங்கங்களை அரங்கேற்றி அலகு பார்ப்பதற்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது, பிழையான முன்மாதிரிகளை ஒரு பொழுதும் இளம் தலைமுறையினர் மத்தியில் நியயப் படுத்தவோ அவற்றிற்கு அங்கீகாரம் கொடுக்கவோ இஸ்லாத்தில் இடமில்லை, தவறுகள், குற்றங்கள், ஒழுக்கக் கேடுகள், அராஜகங்கள் , ஊழல் மோசடிகள் இடம் பெறுவதனை அறிந்தும் அறியாமல் அருகாமை வேண்டி உறவு கொள்ளும் பார்வையாளர்களும் பெரும் பாவங்களின் பங்காளர்களே என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

Unity3ஒருகுழுமச்செயற்பாட்டில் துரோகிகள் அதிருப்தியாளர்களாக அவதாரம் எடுக்கலாம், காட்டியும், கூட்டியும் கொடுக்கலாம், ஆனால், அதிருப்தியாளர்கள் எல்லோரும் துரோகிகளாக இருக்கமாட்டார்கள், உண்மையான  துரோகிகள் குழுமத்தின் உச்சத்தில், அதிகார மையத்தில் அமர்ந்திருப்பார்கள்.

போராட்டங்கள் சூதட்டங்களாக மாறுகின்ற பொழுது கொள்கைக்கும்,தேசத்திற்கும், சமூகத்திற்குமான விசுவாசம் உண்மைப் போராளிகள் உள்ளங்களில் மேலோங்கி நிற்கின்றன, அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் போலிகள் போராட்ட சுலோகங்கள் தாங்கி மக்களின் பாமரத்தனத்தில் சவாரி செய்வார்கள், உண்மைப் போராளிகள் புரியப்படாதவ்ர்களாய்,புறந்தள்ளப்பட்டு சமூகத் தளத்தில் அனாதரவாகி விடுவார்கள்.

உள்ளிருக்கும் துரோகிகளும்,வெளியேறும் துரோகிகளும்  போராட்டங்களை சலுகைகளுக்காய் விலை போவதை சாணக்கியம், சாமர்த்தியம் என்பார்கள், சாதனைகள் என்பார்கள், ஒன்று மட்டும் உண்மை தேசத்தையும், மக்களையும், சமூகத்தையும் ஏமாற்றுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள நீண்ட காலம் எடுக்க மாட்டது.

அமானிதங்கள் பாழ்படுத்தப் படுகின்றன,

கட்சி, அரசியல், தேர்தல், வாக்குரிமை, ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், மக்களது வரிப்பணம், அபிவிருத்தி நிதிகள், தொழில் சார் சலுகைகள், சிறப்புரிமைகள், வசதி வாய்ப்புக்கள், கொடுப்பனவுகள், ஊதியங்கள் என எல்லாமே அமானிதங்கள். கருத்துக்கள், சிந்தனைகள், விமர்சனங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள், ஊடகப்பணிகள், பத்திரிக்கை தர்மங்கள்,முடிவுகள் சகலதும் அமானிதங்களாகும். வாக்குறுதிகள், உடன்பாடுகள், உடன்படிக்கைகள் அமானிதங்கள் ஆகும், சந்தர்ப்பங்கள், சலுகைகள், வசதி வாய்ப்புக்கள், வளங்கள், என சகலதும் அமானிதங்களாகும்.

Solar-Map-உண்மை,நேர்மை, நீதி, நியாயம், நன்மை, சத்தியம், அன்பு, கருணை, மனிதாபிமானம் என எல்லா உயரிய மானுட விழுமியங்களையும் போற்றி நாம் வாழ்வது எவ்வளவுக்கெவ்வளவு பிரதானமானதோ அதைவிடவும் பன்மடங்கு பிரதானமானது அவற்றைப் பேணும் சான்றோர் பக்கம் சார்ந்து நிற்பதும் அவர்களுக்கு தோள் கொடுப்பதும் ஏனெனில் கூட்டு வாழ்வில் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும் சத்தியத்தை மேலோங்கச் செய்வது எங்கள் ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்பட்டுள்ள தலையாயகடமையாகும்.

மேற்படி அம்சங்களை கவனத்திற் கொள்ள முடியாத அளவு ஆன்மீக படித்தரங்களை அடையாது அசத்தியத்தையும் அதன் காவலர்களையும் ஆதரிக்கும் தனி நபர்களும் குழுக்களும் “க்ஹியானத்” எனும் அமானித மோசடிக் காரர்களாகும், உலகில் போலிகளின் கவர்சிகள்கள், அவர்கள் வசமுள்ள செல்வம் செல்வாக்கு அதிகாரங்கள் எம்மை குருடர்களாக, செவிடர்களாக மாற்றிவிடுமாயின் யுக முடிவின் பொழுது “தஜ்ஜால்” சதி வளையில் அசத்தியத்தில் அறிந்து கொண்டே விழுகின்ற துர்பாக்கியசாளிகளாக நாங்கள் ஆகிவிடுவோம்.

அரசியலில் சோரம் போதலை விட ஊடகத்துறையில் சோரம் போதல் கொடிய தீமையாகும், பொதுசன அபிப்பிராயம் மிகப் பெரிய அமானிதமாகும்.”

பதிப்பு, இலத்திரனியல், சமூக வலைதள ஊடகங்கள் என சகல வெகுசன ஊடகங்களிலும் மனச் சாட்சிக்கு விரோதமாக அராஜகங்கள், அநீதிகள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் ஊழல் மோசடிகள், அனாச்சாரங்கள், ஒழுக்கவீனங்கள், தில்லுமுல்லுகள், திருகுதாளங்கள் என எதற்கும் துணை போதல், கூஜா தூக்குதல், தாஜா பண்ணுதல், நியாயப்படுத்துதல், சன்மார்க்க முலாம் பூசுதல் எல்லாமே சொல்லப் பட்ட பாவங்களின் சம பங்காளராக எம்மை மாற்றிவிடும்.

Mediaநிபுணத்துவம் வாய்ந்த நடுநிலை அரசியல் ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள்,
எழுத்தாளர்கள் எமது சமூகத்தில் இல்லையென்றே கூற வேண்டும், திறமையுள்ள இளம் எழுத்தாளர்கள் பலர் அரசியல் வாதிகளால் விலைக்கு வாங்கப் பட்டுள்ளனர், சமூக வலையமைப்புக்கள், வெப்செய்தித் தளங்கள் என எல்லாமே அரசியல் நிகழ்ச்சி நிறல்களுக்குள் விலை போயுள்ளன.

அதிகாரத் துஷ்பிரயோகங்களை விடவும் பாரதூரமான அமானித துஷ்பிரயோகமாக ஊடகங்கள் சோரம் போவதை நான் பார்க்கின்றேன், அது காயவர்களை காப்பற்றும் முயற்சியாகும், மக்களை பிழையாக வழிநடத்தும் தஜ்ஜாலிச முயற்சியாகும்.

 

இளைஞர்களே இனியும் வேண்டாம் தாமதம்,  நாளை அல்ல இன்றே நீங்கள் தலைவர்கள்.

 

 

About author

No comments

புத்தளம்: இரசாயணக் கழிவுகளால் அழியும் அபாயம்!

புத்தளம் மாவட்டத்தில் சீமெந்து தொழிற்சாலை (1967) ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றி பேசப்பட்டது, பின்னர் நுரைச் சோலை அனல் மின்சார உற்பத்தி நிலையம் (2006) ஆரம்பிக்கப் பட்ட பொழுது சுற்றுச் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com