நிபுணத்துவம் உள்ளவர்களுக்கு மத்திய கிழக்கில் அதிகரித்த தொழில் வாய்ப்புக்கள்!

0

QL1கடந்த வாரம் (03-04 /05/2015) கொழும்பிற்கு வருகை தந்த கட்டார் தொழில் அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் பணியக அதிகாரிகளுக்கும் இடையே இடம் பெற்ற பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டேன்.

அவற்றிலும் உப துறைகள் உதாரணமாக வைத்தியத் துறை என்றால், எக்ஸ்ரே ஸ்கான் தொழில் நுட்பவியலாளர், கண் பரிசோதனை தொழில் நுட்பவியலாளர், ஏனைய மருத்துவ கருவிகள் இயக்குனர்கள், வைத்திய உதவியாளர், நர்ஸ்மார்கள், பல்மருத்துவர், உதவியாளர் என பல உப துறைகளிலும் வேலை வாய்ப்புக்கள் இருக்கின்றன.

QL14கட்டாரில் ஏற்கனவே உள்ளவர்கள் அவ்வாறான தகைமைகள், நிபுணத்துவங்கள், வேலை வாய்ப்புக்கள் குறித்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுமார் 50,000 வேலை வாய்ப்புக்கள் இலங்கையருக்கு இருக்கின்றன, இலங்கையரை கட்டார் பெரிதும் விரும்புவதாக தெரிகிறது.

ஏதேனும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் தொழிலாளர் முறைப்பாடுகளை மேற்கொள்ள பல இடங்களில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன, அவற்றில் உங்கள் அகாமா இலக்கத்தை பதிவிட்டால் முறையீடுகளை உங்கள் மொழியில் செய்ய முடியும்.

QL5புதிய தொழிலார் சட்டத்தின் படி தொழில் வழங்குனருக்கும் தொழிலாளருக்கும் முரண்பாடுகள் ஏற்படின் பிறிதொரு தொழில் வழங்குனரிடம் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ள மாறுதல் பெற முடியும்.

தனியார் தொழில் முகவர் நிலையங்களூடாக மாத்திரமன்றி  நாவலையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய தகவல் வங்கியில் உங்கள் சுயவிபரக் கோவையை பதிவு செய்து வைத்தால் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

 

About author

No comments

எமது நாவும் நடத்தைகளும் எங்களை ஆளுகின்றன!

எமது சொற்களும் செயல்களும் அங்கீகாரங்களும் எமது வாழ்வில் அனுகூலங்களையும், பிரதிகூலங்களையும் கொண்டுள்ளன.   ஒருவரது சொல்லாயினும், செயலாயினும், அங்கீகாரங்களாயினும் அவரைச் சூழ்ந்து கொள்கின்றன, அவரை பின் தொடர்கின்றன, அரிடம் பிரதி விளைவுகளுடன் மீண்டு வருகின்றன. ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com