சொந்த மண்ணிலும் ஒரு சாத்வீகப் புரட்சி வேண்டும்..!

0

எகிப்து, துருக்கி, லிபிய, டியுனிசிய, சிரிய அரசியலில் நாம் காட்டுகின்ற ஆர்வத்தில், கரிசனையில் 10% மாவது இந்த தேசத்து அரசியலில் காட்ட முடியுமெனில் சொந்த மண்ணில் எமது பணியை திறம்பட செய்தவர்களாவோம்.

துருக்கி அதிபர் அர்ட்டோகான் அங்காரா மாநாகர மேயராகவே உள்ளூராட்சி தேர்தல் ஊடாக அடிமட்டத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

அர்பகானின் (ரஹ்) ரபாஃஹ் கட்சியில் தனது இஸ்லாமிய அரசியல் பயணத்தை ஆரம்பித்து மூலோபாய முரண்பாடுகளுடன் நீதிக்கான கட்சியை நிறுவி, மேலைத்தேய நண்பர் பத்ஹுல்லாஹ் குலானுடன் பாதித் தூரம் பயணித்து..

பல ஹிஜ்ரத்துக்கள், பதுருகள், உஹதுகள், கந்தக்குகள், ஹுதைபியாக்கள் கண்டு வசதிய்யா, மகாசிதிய்யா வழி வந்து உம்மத்தின் விடியல் நட்சத்திரமாய் இலங்குகின்றார்.

சர்வதேச, மத்திய கிழக்கு, ஐரோப்பிய பிராந்திய பூகோல அரசியல் இராணுவ இராஜதந்திர நகர்வுகளை மிக சாணக்கியமாகவும், சாமர்த்தியமாகவும் கையாண்டு தலைமைத்துவம் வழங்குகின்றார்.

சொந்த மண்ணில் இங்கும் பல வசதிய்யாஹ்வின் கர்ளாவிகளும், இஸ்லாமுஸ் ஸியாசியுடைய கன்னோஷிகளும், மகாஸிதுகளின் ரைசூனிகளும், ஆஷூர்களும், அமாராக்களும், மூர்ஸிக்களும்..தேவைப் படுகின்றார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களிலும், மாகாண சபைகளிலும், பாராளுமன்றத்திலும் நீதியின், நேர்மையின், சத்தியத்தின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

அப்போதுதான் நாமும் புறப்பட்டுள்ள சத்தியத்தின் கரவானில் இணைந்து கொள்ள முடியும், உம்மத்தின் போராட்டங்களிற்கு உரிமைகோர முடியும்! இன்ஷா அல்லாஹ்.

புதியதோர் இளம் தலை முறை தலைவர்களே புறப்படுங்கள்…

About author

No comments

உயரிய இலட்சியப் பணியிற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துதல் காலத்தின் தேவை.

உயரிய இலட்சியப் பணியிற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துதல் காலத்தின் தேவை. (கல்வி அபிவிருத்தியிற்கான முஸ்லிம் மாணவர் அமைப்பு (OMSED) கடந்த 22/04/2017 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடாத்திய “ஆக்கபூர்வமான சமூக ஊடக பயன்பாடு” தொடர்பாக  செயலமர்வினை ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com