ரணகளமானது நாடாளுமன்றம்: மத்திய வங்கியில் பிணை முறி மோசடி விஷேட விவாதம்!

0

2015- 2016 காலப்பகுதியில் மத்திய வங்கியில் பிணை முறி விற்பனையின் பொழுது இடம் பெற்றதாக கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு அதன்  36 அறிக்கைகள் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்டு விட்டமை அறிந்த விடயமாகும்.

?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கபட்ட அர்ஜுன மகேந்திரன் அவரது மருமகன் அருஜுன் அலோசியஸ் ஆகியோர் நேரடியாகவும் , முன்னாள் நிதியமைச்சர் ரவி கருனானயாக, அமைச்சர்கள் கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்கிரம ஏதோ ஒரு வகையிலும் விவகாரத்துடன் தொடர்பு பட்டிருந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.

சுமார் 11,000 மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இந்த நிலையில் விடுமுறையில் உள்ள பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு ஜே வீ பீ, மற்றும் கூட்டு எதிரணியினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர், பிரதமரும் சபாநாயகரிடம் பாராளுமன்றத்தை கூட்டுமாறும் மஹிந்த அரசில் இடம் பெற்றதாக கூறப்படும் பிணை முறி மற்றும் நிதி மோசடிகள் குறித்தும் விவாதம் இடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

?

அதன்படி நேற்று ஜனவரி மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாகவும், அன்றைய நிகழ்ச்சி நிரலை கட்சித் தலைவர்கள் 09 ஆம் திகதி கூடி ஆராய்வதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்திருந்தார்.

அதன்படி கட்சித் தலைவர்கள் கூடிய பொழுது ஜனாதிபதி விசாரணை அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் அது ஆங்கில மொழியில் இருந்தாலும் இப்போதைக்கு பரவாயில்லை அது குறித்தே விவாதம் இடம் பெற வேண்டும் என தீர்மானித்திருந்தனர்.

தானும் தனது கட்சியைச் சேர்ந்தவர்களும் நேரடியாக குற்றம் சாட்டப் படுவதால் தான் ஒரு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் பிரமர் ரணில் கோரிக்கை விடுக்க அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

?

எதிர்பார்த்தபடி பாராளுமன்றம் கூடிய பொழுது ஜனாதிபதி சட்டமா அதிபர் மற்றும் ஊழல் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு என்பவற்றிக்கு விசாரணை அறிக்கைகளை சமர்பிப்பதொடு பாராளுமன்றத்திற்கும் ஒரு வார காலத்தில் அறிக்கைகளை சமர்பிப்பதாகவும் இன்று அது சமர்பிக்கப்படவில்லை என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

என்றாலும் தனது அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என பிரதமர் ரணில் வேண்டுகோள் விடுக்க சபாநாயகர் அனுமதி வழங்கினார், எதிர்க் கட்சித் தலைவர்கள் அது நியாயமற்றது ஜனாதிபதி விசாரணை அறிக்கைகளை சம்ர்பித்த்பின்னரே பாராளுமன்றம் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் அதற்காகவே பாராளுமன்றம் கூட்டப் பட்டது என்று வாதிட்டதோடு பின்வரிசை உறுப்பினர்கள் சபை மத்திய தாளத்திற்கு வந்து கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

பிரதமர் தனது உரையை தொடரும் பொழுது “ரணில் ஹோரா’ என்ற கோஷமும் ஏக காலத்தில் பிரதமர் உற்பட பலரும் “கவ்த ஹோரா” மஹிந்த ஹோரா என்றும் கோஷம் எழுப்பியதோடு கைகலப்பிலும் ஈடு பட்டனர்.

?

தற்பொழுது இடம் பெற்றுள்ள பிணைமுறி விற்பனை மோசடி பற்றி விவாதிப்பதாயின்/ விசரிப்பதாயின் 2008 ஆம் ஆண்டுமுதல் 2014 வரையிலும்  மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்  காலத்தில் மத்திய வங்கியில்  இடம் பெற்ற நிதி மோசடிகள் குறித்தும் விசாரிக்கப் பட வேண்டும் என்பதே பிரதமரின் பிரதான வாதமாகும்.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மாத்திரமன்றி இலங்கை பொருளாதாரத்தின் உயிர் நாடியான மத்திய வங்கியில் கொள்ளையடித்த முன்னாள் இன்னாள் அரச தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகத்தின் மத்திய நிலையம் மற்றும் சட்டம் இயற்றும் உயர் சபையில் மிகவும் மட்ட ரகமான தமது காடைத் தனங்களை அர்ங்கேற்றியமை முழு தேசத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அவமானமாகும்.

இவ்வாறு ஊழல் மோசடி மூலம் பொதுமக்களது நிதியை அரச சொத்துக்களை சூறையாடும் பணமுதலைகளின் சூதாட்ட அரங்காக பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை தொழிற்படுமாயின் நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகத்தின் மீதுள்ள குறைந்த பட்ச அனம்பிக்கையையும் மக்கள் இழந்து விடுவார்கள், மக்கள் கிளர்ச்சி அல்லது ஒரு இராணுவப் புரட்சி ஒன்றினையே மக்கள் கேட்டு நிற்பார்கள்.

இன்றும் கடந்த காலங்களிலும் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் சகல ஊழல் மோசடிகளை பராபட்சமின்றி விசாரணை செய்து அதற்காக விஷேட நீதிமன்றங்களை அமைத்து சகல திருடர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த ஜனாதிபதி மைத்திரி முன்வர வேண்டும், சூறையாடப்பட்ட மக்களது பணத்தை சொத்துக்களை அவை உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்தாலும் மீளப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை துரிதப்படுதல் வேண்டும்.

பதவிக்காலத்தை ஒரு வருடமல்ல மற்றுமொரு முறை மக்களாணை பெற்று உண்மையான நல்லாட்சியை நிலை நிறுத்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகளால் இன்று ஒவ்வொரு பிரஜையும் தலா நான்கு இலட்சம் ரூபாய்களை கடனாக சுமந்து வரி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு நிகராக சுமார் 80% விகிதம் இந்த நாடு கடன் சுமையில் இருக்கிறது.

About author

No comments

இனாமுல்லாஹ் ஏன் அரசியல் களத்திற்கு மீண்டும் வருவதில்லை ?

எனது எழுத்துக்களில் ஆர்வமுள்ள பல சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் என்னை மீண்டும்  அரசியல் களத்திற்கு வருமாறு அழைக்கின்றார்கள், இன்னும் சிலர் இல்லை சிவில் சமூக செயற்பாடுகள் போதும், நீங்கள் எழுத்துப் பணிகளோடு நின்று விடாது ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com