முழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் ?

0

1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் உலக மகாயுத்தம் முடுக்கி விடப்பட்டுள்ள பின்புலத்தில் …

அறபு வசந்தம் காவு கொள்ளப்பட்டதன் பின்னர் மத்திய கிழக்கில் துரிதப் படுத்தப்பட்டுள்ள மேலைத்தேய சியோனிஸ சிலுவை சக்திகளின் கூட்டு மேலாதிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை போகின்ற அறபுலக சுல்தான்களும் சர்வாதிகளும்….

வரலாற்று வைராக்கியங்களை வஞ்சனைகளை தீர்த்துக்கொள்ள நேரடியாகவும் மறை முகமாகவும் வல்லரசுகளின் துணை நாடும் பிராந்திய சக்திகளும் உம்மத்தை அழிவின் விளிம்பிற்கே அழைத்துச் சென்றுள்ள நிலையில்….

பிராந்திய இஸ்லாமிய எழுச்சியின் கர்ச்சிக்கும் சிங்கமாக, ஐரோப்பிய முஸ்லிம்களின் அடையாலச் சின்னமாக, முஸ்லிம் உம்மத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, ஒடுக்கப் பட்ட பலஸ்தீன் மக்களின், ஆக்கிரமிக்கப் பட்டுள்ள லிபிய, சிரிய, இராக் மக்களின் விடுதலைக் குரலாக உலக அரங்கில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும், அர்துகானின் குரல் வலையை நசுக்க எடுக்கப்பட்ட முயற்சியே தோல்வி கண்ட இராணுவ சதிமுயற்சியாகும்.

முழு உலக முஸ்லிம்களும் அதனால் தான் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள்.

இன்று மத்திய கிழக்கின் இஸ்லாமிய எழுச்சிக்கும், துருக்கியின் முன்னோடி முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போடும் உள்வீட்டு சதிகாரர்களும் சிலுவை சியானிஸ சதிகார சக்திகளின் அடிவருடிக் கைக்கூலிகளும் நாளை தமக்காக குரல் கொடுக்க நிச்சயமாக ஒரு ஆர்துகானுக்காக ஏங்கித் தவிப்பார்கள்.

சுற்றிவளைக்கப்படுவது தாம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

About author

No comments

சிவனொளி பாதமலை (ஸ்ரீபாத- சமனல கந்த) முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அல்ல அதற்கு நாம் உரிமை கோரவும் இல்லை.

O சிவனொளி பாதமலை (ஸ்ரீபாத- சமனல கந்த) முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அல்ல அதற்கு நாம் உரிமை கோரவும் இல்லை. முதல் மனிதர் ஆதம் தொடர்பாக எவராவது உரிமை கோருவதானால் அது முழு மனித ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com