இலங்கையில் மது மற்றும் புகைத்தல் பாவனை – அதிர்ச்சி தரும் தகவல்கள்.

3

O “விசுவாசிகளே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும்,அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே,அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா(அல்-குர்ஆன் 5:90-91)

“போதைப் பொருளற்ற தேசம்” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் “கிராமங்களை கட்டி எழுப்புவோம்” தேசிய நிகழ்வு நேற்று இரத்தினபுரி எம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சர்கள் பாராளுமன்ற மாகாண உள்ளூராட்சி சபைகள் உறுப்பினர்கள் வருகையுடன் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப் பட்டது.

நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றிய ஜானாதிபதி அவர்கள் போதைப் பொருள் பாவனையே இலங்கையில் வறுமை அதிகரித்திருப்பதற்கான பிரதான காரணம் என்றார்.

உதாரணத்திற்காக இரத்தினபுரி மாவட்டத்தில் அரச அனுமதி பெற்ற மதுபாவனை நிலையங்களூடாக பெறப்பட்டுள்ள தகவல்களின் படி மாதம் 3,000,000,000 (300 கோடி ரூபாய்களை) இரத்தினபுரி மாவட்ட மக்கள் மாத்திரம் செலவிடுகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 700 கோடி ரூபாய்களை மாதாந்தம் மக்கள் செலவிடுகின்றனர். இவை உத்தியோக பூர்மான தகவல்கள் மட்டுமே.

இந்த பாரிய நிதியை மாதாந்தம் மாவட்டமொன்றின் அபிவிருத்தியிற்கு எந்தவொரு அரசும் செலவிட்டதில்லை செலவிடவும் முடியாது, இந்த நிதியை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து இந்த மாவட்டத்தின் அடிப்படைத் தேவைகளிற்கு செலவு செய்தால் அரசின் உதவியில்லாமலே இந்த மாவட்டம் அபிவிருத்தியடைந்து விடும், வறுமை ஒளிந்து விடும்.

ஜனாதிபதி அவர்களின் உரையின் ஒரு பகுதியை மாலை நேர செய்தியறிக்கையில் தான் நான் அவதானித்தேன், உண்மையில் எனது புரிதல் தவறாக இருக்குமோ என்று எண்ணி தொடர்ந்து மற்றுமொரு செய்தியறிக்கையை அவதானித்தேன், உண்மையில் அந்த கணக்கு 300 மில்லியன் (30 கோடியாக ) இருந்தாலும் விவகாரம் பயங்கரமானதே.

சரி இன்னும் சற்று தகவல்களை தேடித் பார்ப்போம் என்று இன்டெர் நெட்டில் உலா வருகையில் புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய ஆணையத்தின் கடந்த வருடத்திற்கான புள்ளி விபரங்கள் சில அகப்பட்டன:

The people living in one Grama Niladhari Division of Sri Lanka spend Rs. 200,000 per month on liquor and Rs. 150,000 on cigarettes. Every month a Sri Lankan village (villagers) send money outside from the village and the amount is equal to two Samudhi payments for the entire village. Annually the Government earns only Rs. 143 billion from tobacco and alcohol tax but the total health cost of the damage caused by tobacco and alcohol is Rs 212 billion (Tobacco Rs.71.5 billion and alcohol Rs.141billion).

அதாவது அவர்களது கணிப்பீட்டின் படி சராசரி இலங்கையின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் மக்கள் மதுபவனைக்காக  Rs200,000  இரண்டு இலட்சம் ரூபாய்களையும்  புகைத்தலுக்காக  Rs .150,000  ஒன்றரை இலட்சம் ரூபாய்களையும் செலவிடுகின்றனர். அது வறுமை ஒழிப்பிற்காக வழங்கப்படுகின்ற இரண்டு மாத கொடுப்பனவுகளிற்கு சமனானதாகும்.

மதுபானம், புகையிலை மீதான வரிகளினூடாக இலங்கை அரசிற்கு வருடாந்தம் 143,000 கோடி (143 பில்லியன்) ரூபாய்கள் வருவாய் கிடைக்கின்ற அதேவேளை புகைத்தல் மற்றும் மதுபான பாவனைகளால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் நோய்களால் அரசிற்கு 212,000 கோடி ரூபாய்கள்  (212  பில்லியன் ரூபாய்கள்) செலவாகின்றன. (புகைத்தல் வினைகள் 71.5 பில்லியன்  மது வினைகள் 141 பில்லியன் )

இலங்கை சனத்தொகையில் சுமார் 40%  வீதமானோர் 60 இலட்சம் பேர் மதுபாவனை பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அது தொடர்பான நோய்களால் வருடாந்தம் சுமார் 7500 பேர் இறக்கின்றனர். அந்த வகையில் உலகில் மது பவனில் இலங்கை நான்காவது இடத்தில் இருக்கின்றது. அதேவேளை சனத்தொகையில் சுமார் 30%  மானோர் புகைக்கின்றனர், 40,000 பாடசாலை மாணவர்கள் உற்பட, வருடாந்தம் சுமார் 13100 பேர் புகைத்தல் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.

ஐரோப்பாவில் 95%  மக்கள் மது பாவனை பழக்கமுடையவர்கள் அங்கு தலைக்கு .5 அரை லீட்டரே பாவிக்கின்றனர், இலங்கையில் தலைக்கு 3.3 லீட்டர்கள் பாவிக்கின்றனர்.

Per capita consumption of liquor in Sri Lanka is 3.5 litres and it is only 0.5 liters in Europe. Over 95 percent of people in Europe consume liquor but here in Sri Lanka 80 percent of people do not consume liquor.

கல்குடாவில் அமையும் மதுபானத் தொழிற்சாலைக்கு எதிராக சித்தாண்டி மக்கள் கடந்த வருடம் மார்ச் மாதமளவில் மேற்கொண்டநியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக நான் இட்ட பதிவு ஒன்றில் கீழ் காணும் தகவல்களை தந்திருந்தேன்.

இலங்கையில் மது பாவனையில் யாழ்ப்பான மாவட்டம் முதலாவது இடத்திலும் நுவரெலியா மாவட்டம் இரண்டாவது இடத்திலும் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக நுவரெலியாவில் இடம்பெற்ற மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டமொன்றில் ஜனாதிபதி மைத்ரி தெரிவித்திருந்தார்.

நுவரெலிய மாவட்டத்தில் 1600 கோடி ரூபாய்கள் வருடாந்தம் புகைத்தலுக்ககாகவும், மதுவுக்காகவும் மக்கள் செலவிடுவதாகவும் பெரும்பாலான அந்த மாவட்ட மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.

மண்முனை வடக்கு மகளிர் அமைப்பு களின் சம்மேளனம் தயாரித்துள்ள அறிக்கை ஒன்றின் படி மட்டு மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 41 கோடி 36 இலட்சத்து 99 ஆயிரத்து 680 ரூபாய்கள் மதுவிற்காக செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 54 மதுபான விற்பனை நிலையங்கள் இருந்த போதும் சுற்றுலாத்துறைக்காக சிறு சிறு விடுதிகளில் சுமார் 34 சாலைகள் திறக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புற்று நோய் பாதிப்பில் மட்டு மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக கடந்த காலங்களில் சுட்டிக் காட்டப் பட்டிருந்ததாகவும், 2012 ஆம் ஆண்டு 2575 பேரும் 2013 முதல் ஒன்பது மாதத்தில் 1505 பெரும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதார திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நாட்டில் உத்தியோக பூர்வமற்ற கசிப்பு மற்றும் மதுபான உற்பத்தி செய்யுமிடங்கள் 200,000 இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது.

இஸ்லாம் எத்தகைய தீர்வை சொல்லுகிறது ? இந்த தேசத்தின் பால் எங்கள் மீது விதியாகிற கடமைகள் குறித்து நாம் சிந்திப்பதில்லையா ?

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும்,அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே,அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர்,சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

(ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதைதரும் அனைத்தும் ஹராமாகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறுபெயரைக் கூறிக் கொள்வார்கள்

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) நூல்: புகாரி 6124

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: திர்மிதீ 1788  நஸயீ 5513.    3725

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால்  போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள். இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  முஸ்லிம் (3995)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.

முஸ்லிம் (4071)

மனித குல விமோசனத்திற்கு வழிசொல்லும் அழகிய இஸ்லாமிய வாழ்வு நெறியை நாம் மக்கள் முன் வைக்கத் தவறியுள்ளோம், அரசியல் பொருளாதார, சமூக களை கலாசார பண்பாட்டு சீர்கேடுகளிற்கான தீர்வுகளை இன மத மொழி வேறுபாடுகளிற்கு அப்பால் ஏனைய சமூகங்களிற்கு சொலவ்தற்குரிய நடவடிக்கைகளை நாம் முன்னதேக்கத் தவறியுள்ளோம்.

இன்று இலங்கையிலே சுமார் 60,000 இளம் வயதினர் பயங்கர போத வச்துகளிற்கும் சுமார் 250,000 பேர் கஞ்சாவிற்கும் அடிமையாகியுள்ளனர், பாடசாலை மாணவர்களை சிறார்கள் இலக்கு வைக்கப் படுகின்றனர்.

 

 

 

About author

3 comments

  1. ALM Erzhad 24 February, 2018 at 07:02 Reply

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    காலத்திற்கு ஏற்ற இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பதிவு

    ஜஸாக்கல்லாஹ்

Post a new comment

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழந்து இன்றுடன் 14 வருடங்கள்..!

Post Views: 554 வருடம் ஒவ்வொன்றாய் கழியும் பொழுதே நினைவலைகள் மீட்கப்படுகின்றன, அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் பல அள்ளி வரும் அழிவுப்பேரலையாய் எம்மைக் கடந்து சென்ற ஆழிப் பேரலைக்கு இன்று வயது 13. 2004 டிசம்பர் ...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com