கௌரவமான ஹலாலான உழைப்பு வாழ்வில் பிரதானமானது.

1

சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னர் உள் நாடாயினும், பிற நாடாயினும்,உங்களுக்கு ஆர்வமுள்ள ஒரு துறையில் தொழிற் சந்தை வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு உயர்கல்வியை தொடருங்கள்.

SELFசன்மார்க்கக் கல்வி கற்போரும் தமது எதிர்கால ஹலாலான எவரிலும் தங்கி வாழாத வாழ்வாதாரத்திற்கான கௌரவமான தொழில் நிபுணத்துவக் தகைமை ஒன்றையும் ஏக காலத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்த நாட்டில் யுகத்தின் சவால்களிற்கு முகம் கொடுக்கக் கூடிய சிறந்த கல்விக் கொள்கைகளை வகுக்க திராணியுள்ள நிபுணர்களோ ஆட்சியாளர்களோ இல்லை என்பதே எனது தனிப்பட்ட கருத

இலங்கையில் சாதாரண தரப் பரீட்சையில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைவதில்லை, அவர்களுக்கான தொழில் தொழில் நுட்ப கற்கை வழி காட்டல்களை பெற்றுக் கொடுங்கள்.

ஒவ்வொரு பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் தமது பழைய மாணவர்கள் எவ்வாறான அடைவுகளினை எய்தியுள்ளார் என்ற கணிப்பீடுகளை மேற்கொண்டு கற்கின்ற மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குங்கள். தாங்கள் கற்ற துறைகள் அவர்களுக்கு கை கொடுத்ததா என்பதனை ஆராய்ந்து பாருங்கள்.

நாட்டில் உள்ள வளங்கள், சுய தொழில் வாய்ப்புக்கள், தனியார் துறை கற்கைகள், தொழிற் சந்தை நிலவரங்கள் போன்ற தகவல்களை உயர் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குங்கள்.

பல்கலைக் கழக மாணவர் சமூகத்தின் ஓத்துழைப்புடன் பாடசாலைகளில் பரீட்சை, கல்வி, தொழில் வழிகாட்டல் செயலமர்வுகளினை வழங்குங்கள். பாடசாலைகளை சமூக அபிவிருத்தி மையங்களாக மாற்றுங்கள்.

முஸ்லிம்களைப் பொறுத்த வரை மஸ்ஜிதுகளூடாக காலத்திற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழி காட்டல்களை வழங்க முடியும்.

கற்கின்ற சாதாரண தர, உயர்தர ,உயர்கல்வி மாணவர்கள் தாம் ஒருநாளில் எத்தனை மணித்தியலங்களை இன்டர்நெட்டில், கைபேசிகளில் விரயமாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதனையும், தமது எதிர்காலத்திற்கான பிரதான மூலதனமாக நேரத்தை எவ்வாறு முகாமை செய்கின்றோம் என்பதனை மீள் பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

ஐவேளையும் அழுது தொழுது, தஹஜ்ஜத்திலும் எழுந்து எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் உங்கள் ரிஸ்க்கை விஸ்தீரணப் படுத்துமாறு, உங்கள் கல்வியில், தொழிலில் வாழ்வில் பறக்கத் செய்யுமாறும், சதகா ஸகாத் கொடுக்கும் அளவு வளம் கேட்டும் பிரார்த்தியுங்கள்.

நாம் எங்களை மாற்றிக் கொள்ளாத வரை எங்கள் நிலைய அல்லாஹ் மாற்றுவதில்லை, பெற்றோர்களின், ஆசான்கள், பெரியோர்களின், துஆக்களை பெற்றுக் கொள்ளும் உயரிய பண்பாடுகளை கடைப்பிடியுங்கள்.

students_b2015 ஆம் ஆண்டு மூன்று இலட்சத்து 2434 பேர் க பொ த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றினர், அவர்களில் ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தியடைந்திருந்தனர், மிகுதி 146,884 மாணவர்களில் எத்தனை பேருக்கு வேறு ஏதேனும் தொழில் தொழில் நுட்பக் கல்வி பெறும் சந்தர்பம் நாட்டில் கிடைத்துள்ளது, எத்தனை மாணவர்கள் தனியார் துறைகளில் கற்கின்றார்கள், இன்னும் எத்தனை மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றார்கள் போன்ற புள்ளி விபரங்கள் பெறப்பட்டு பகுப்பாய்வு ஒன்று மேற்கொள்ளப் படல் வேண்டும்.

அவர்களோடு சித்தியடைந்த மாணவர்கள் ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தியடைந்திருந்தனர், அவர்களில் பலகலைக் கழக அனுமதி பெற்ற 27 ஆயிரத்து 603 மாணவர்களைத் தவிர்த்து மிகுதி ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 947 மாணவர்களது , உயர்கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து எத்தகைய கொள்கைகளை அரசு வைத்திருக்கின்றது என்பதனை மக்கள் அறிந்து கொள்ளும் உரிமை இருக்கின்றது.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமலும், சித்தியடைந்தும் இலவச உயர்கல்விக்கான சந்தர்பங்களை இழக்கின்ற மாணவர்கள் தொகை 2 இலட்சத்து 74 ஆயிரத்து 831 மாணவர்களில் எத்தனை பேர்களுக்கு இலங்கையில் தொழில், தொழில் நுட்ப ,உயர் தொழில் நுட்ப கற்கைகளிற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன?

இலங்கையில் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப் படக்கூடாது என்றால் எதிர்காலத்தில் அரசு எவ்வாறான உயர்கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும், உயர்கலவிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பலகலைக் கழகங்களிற்கு மற்றும் உயர் கல்வி  நிறுவனங்களிற்கு இலங்கை மாணவர்கள் செலுத்தும் வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் பொருளாதாரத்தில் கொண்டுள்ள தாக்கங்கள் எவை?

இந்த நாட்டின் முதன்மையான வளமான மனித வள அபிவிருத்தியில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் பொருளாதார, கல்வி, உயர்கல்வி கொள்கைகளில் விடப்பட்ட வரலாற்றுத் தவறுகள் யாவை?

ஏன் வருடாந்தம் தொழில் நிபுனத்துவமில்லாமல் சுமார் 3 இலட்சம் இலங்கையர் மத்திய கிழக்கு தொழில் சந்தைக்குச் செல்கின்றார்கள் போன்ற விடயங்கள் விரிவான ஆய்விற்கு உற்படுத்தப் படல் வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதும் பதிவு செய்யப்படாததுமான சுமார் 250 ற்கும்மேற்பட்ட அறபு மதரசாக்கள் இருக்கின்றன, பெரும்பாலும் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் உள் வாங்கப் படுகின்றார்கள்.

அதற்கும் மேலாக நூற்றுக் கணக்கில் ஹிப்லு மதரஸாக்கள் இருக்கின்றன அவற்றிற்கு இளம் சிறார்கள் உள்வாங்கப் படுகின்றார்கள். வருடாந்தம் சுமார் 2500 ஆலிம் ஹாபிஸுகள் பட்டம் பெற்று வெளியேறுவதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இல்லறமெனும் நல்லறம் போற்றும் இஸ்லாமிய வாழ்வு நெறியில் மதகுரு பீடங்களோ, துறவறமோ, சந்நியாசமோ இல்லை என்பதனால் ஆலிம் ஹாபிஸுகளும் தமக்குரிய வாழ்வாதாரங்களை தேடிக்கொள்ள கடமைப் பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஆசாபாசங்களும் தேவைகளும், கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன.

அரசோ சமூகமோ அல்லது வக்ஃபு நிதியங்களோ அவர்களுக்கான தொழில் ரீதியான உத்தரவாதங்களை வழங்குவதில்லை, எல்லோருக்கும் மஸ்ஜிதுகளிலும் மதரசாக்களிலும் தொழில்கள் கிடைப்பதுமில்லை, அவ்வாறு கிடைத்தாலும் உத்தரவாதங்களும், உரிமைகளும் சலுகைகளும் ஓய்வூதியங்களும் அவர்களுக்கு இல்லை.

வெளி நாடுகளிலாவது தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் ஆலிம் பட்டதாரிகளின் அரபுக்கல்லூரி சான்றிதல்கள் இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பின்னரும்  இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார் பிரிவு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது என பல முறையிடுகின்றார்கள்.

எமது சமூகத்தையும் தேசத்தையும் பொறுத்தவரையில் இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட சகலதரப்புக்களினதும் கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமான விவகாரமாகும்.

பல்கலைக் கழக மாணவர் அமைப்புக்கள் நாடளாவிய ரீதியில் இளம் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் செயலமர்வுகளை நடத்துவதும், பாடசாலைகள், சமூக நலஅமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சமூகத்தினர், அதற்கான வளங்களை, வசதிகளை பெற்றுக் கொடுப்பதுவும் மிகப்பெரிய தர்மமாக இருக்கும்.

இலங்கையில் சுமார் 18 கல்விக் கல்லூரிகள், 9 தொழில் நுட்பவியல் கல்லூரிகள், 29 தொழில் நுட்பக் கல்லூரிகள், 116 தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 10 இணைய கல்வி மையங்கள் இருக்கின்றன….

உயர் கல்வியைத் தொடர முடியாது போகின்ற  ஒரு பகுதியினருக்காவது மூன்றாம் நிலைக் கல்வி, தொழில் நுட்ப மற்றும் வாழ்வாதாரத் தொழிற்கல்வி பயிற்சி நெறிகளை வழங்க இலங்கையில் பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன; இத்தகைய பல்வேறு நிறுவனங்கள் தற்போதைய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன் விருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, வர்த்தக பயிர்ச் செய்கை நடவடிக்கைகள், சில்லறை, மொத்த வியாபாரம், சுய தொழில்கள், கைத்தொழில் முயற்சிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், கூட்டுறவு தொழில் முயற்சிகள், கொவனவு, சந்தைப்படுத்தல், அசையும் அசையா சொத்துக்களை வங்கி விற்றல், அல்லது தரகு சேவைகளை வழங்குதல், இவ்வாறு இன்னோரன்ன துறைகளில் சாதாரண, உயர்தரம் மற்றும் உயர்கல்வி கற்ற மாணவர்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? எனற விடயம் ஆய்வுக்கு உற்படுத்தப் படல் வேண்டும்!

பொதுவாக படித்தவர்கள் பட்டதாரிகள் ஒரு அரச தொழிலை, அல்லது தனியார் நிறுவனத்தில் ஒரு தொழிலை பெற்று மாத வருமானம் ஒன்றையே நம்பி வாழ்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்! பின்னர் மேலே குறிப்பிடப்பட்ட தொழில் அதிபர்களிடம் ஊழியர்களாக மாறுவதில் அக்கறை காட்டுகின்றனர்.

மத்திய கிழக்கை நோக்கி படை எடுத்து சொந்த நாட்டில் சொந்த வீட்டில் மேற்கொள்ளாத அளவு உழைத்து ஊத்கியம் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றோம் எதோ ஒரு கற்கையை நிறைவு செய்து விட்டு அந்த நாடுகளுக்கு சென்று வாழ்வை இழந்து தவிக்கின்றோம்!

 

About author

1 comment

  1. Aboobacker mohammed Ilyas 12 August, 2017 at 15:25 Reply

    அதிகம், பிடித்தது “விவசாயம், கால்நடை வளர்ப்பு, வர்த்தக பயிர்ச் செய்கை நடவடிக்கைகள், சில்லறை, மொத்த வியாபாரம், சுய தொழில்கள், கைத்தொழில் முயற்சிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், கூட்டுறவு தொழில் முயற்சிகள், கொவனவு, சந்தைப்படுத்தல், அசையும் அசையா சொத்துக்களை வங்கி விற்றல், அல்லது தரகு சேவைகளை வழங்குதல், இவ்வாறு இன்னோரன்ன துறைகளில் சாதாரண, உயர்தரம் மற்றும் உயர்கல்வி கற்ற மாணவர்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? எனற விடயம் ஆய்வுக்கு உற்படுத்தப் படல் வேண்டும்”

    இவற்றுக்கான வழிகாட்டல்கள் கட்டாயமானது.

Post a new comment

தொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.?

O சிறந்த தொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் சிறந்த தொழில் அதிபர்களாக உருவாவது குறித்து உரிய பருவத்தில் சிந்திக்கத் தவறி விடுகின்றோம், தெற்காசியாவில் பூகோள முக்கியத்துவமிக்க, இயற்கை வளங்கள், கடல் வளம், மனிதவளம் நிறைந்த ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com