உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முற்போக்கு இளம் அரசியல் தலைவர்களுக்கான அரிய சந்தர்ப்பம்.

0

ஜனநயாக அரசியல் கட்டமைப்பில் மக்களது அன்றாட வாழ்வுடன் நேரடியாக பெரிதும் தொடர்புபடும் அதிகார அலகுகளாக உள்ளூராட்சி கட்டமைப்புக்களான, பிரதேச சபைகள்,நகர சபைகள், மாநாகர சபைகளை கருதலாம்.

ME24816தற்பொழுது நாமெல்லோரும் அதிருப்தி வெளியிடும் கையாளாகாத வங்குரோத்து அரசியல் தலைமைகளை மாற்றீடு செய்வதற்கான அல்லது நமது அரசியல் கட்சிகளை,சரியான திசைகளில் நகர்த்துவதற்கான முனைவுகளின் தொடக்கப் புள்ளிகளாக மேற்படி உள்ளூராட்சி கட்டமைப்புக்களை பயன்படுத்துதல் காலத்தின் கட்டாயமாகும்.

முற்போக்கான அரசியல் சமூக பொருளாதார சிந்தனைகளை கடந்த பல தசாப்தங்களாக இஸ்லாமிய சமூக வாழ்வியலின் பிரதான அமசங்களாக பிரச்சாரம் செய்து வருகின்ற சிந்தனைப் பள்ளிகள், சரவதேச அரங்கில் அவை குறித்து வெளியிடப்படுகின்ற நவீன சிந்தனைகளை தமதாக்கிக் கொண்டுள்ள செயற்பட்டு முகாம்கள் அவற்றை சிவில் சமூக மயப்படுத்த தவறியுள்ளமையின் இயல்பான விளைவுகளையே எமது தேசிய பிராந்திய மற்றும் உள்ளூராட்சி அரசியலில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மக்களின் அன்றாட வாழ்வியலுடன் தொடர்புபடாத சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்த சிந்தனைகளை பாமர மக்கள் மாத்திரமன்றி படித்தவர்களும் கூட சீரணித்துக் கொள்ள மறுக்கின்றார்கள், எனவே மக்கள் மத்தியில் செல்வதற்காக சிந்தனைப் பள்ளிகளும், செயர்ப்[ஆட்டு முகாம்களும் அரசசார்பற்ற தொண்டர் பணிகளில் அதிகூடிய கவனம் செலுத்த தலைப்பட்டிருக்கின்றமை மிகச் சரியான இயங்குதள உளவியலாக கருதப் பட முடியாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் வகுத்துள்ள பிரபஞ்ச இயற்கை நியதிகளின் படி ஆட்சி அதிகாரம் சத்திய வழியில் அமையாவிடத்து அநீதியும், அராஜகமும், அக்கிரமமும், ஊழல் ,மோசடிகளும், குழப்பம்ம் , குளறுபடிகளும் மனித வாழ்வின் அன்றாட அம்சங்களாகி விடுகின்றன, பிரபஞ்சத்தின் இயல்பான ஓட்டத்துடன் மனித வர்க்கம் முட்டி மோதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது.

ummath1முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி அதிகாரம் என்பவை இடம், காலம், இனம், மதம், மொழி எல்லைகளுக்கு அப்பால் பட்ட மனித நேயப்பணியாகும், நாம் அதிகம் விமர்சிக்கின்ற வங்குரோத்து சாக்கடை அரசியல் ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் மகஜனங்களான பொதுமக்களையும் வாங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்குள் கட்டிப் போட்டிருக்கின்றமை பெரும்பாலும் பேசப்படுவதில்லை.

அத்தகைய மட்டரகமான அரசியல் கலாசாரத்தின் முகவர்களாக இருக்கும் தலைமைகளையும், தொண்டர்படையணிகளையும் சரியான அரசியல் திசையில் நகர்த்துவதென்பது மிகக் கடினமான பணியாகும், சரியான தரப்புக்கள் காலாகாலமாக விட்டுவந்த இடைவெளிகளே இன்று பிழையான தரப்புக்களால் நிரப்பப் பட்டுள்ளன.

என்றாலும், அவர்களையும் மகாஜனங்களான பொதுமக்களையும் இத்தகைய நிராகரிக்கபப்டுகின்ற சாக்கடை அரசியல் கலாச்சாரத்திலிருந்து மீட்டெடுக்கின்ற பணி அடிமடத்திலிருந்தே ஆரம்பிக்கப்படுதல் வேண்டும், அதற்கான பரந்துபட்ட விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிதீவிரமாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

HOPE-அவ்வாறான பாரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்றை களத்திற்கு வெளியிலிருந்து வெறும் பார்வையாளர்களாகவும், விமர்சகர்களாகவும் இருந்து கொண்டு செய்ய முடியாது என்பதனை எமது அண்மைகால அரசியல் நன்கு உணர்த்தியிருக்கின்றது, அந்த வகையில் மக்களின் வீட்டு வாசல் வரை அல்லது சமையல்கட்டுவரை அரசியலை எடுத்துச் செல்லுகின்ற அடிமட்ட அரசியல் கட்டமைப்புக்களான உள்ளூராட்சி தேர்தல்களில் பங்காளர்களாக நாம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் நல்லாட்சிக் கோட்பாடுகளை மதிக்கின்ற iமிகச் சிறந்த இளம் அரசியல் தலைமைகளை நாம் சமூக தளத்தில் அறிமுகம் செய்தல் வேண்டும். அது எமது தெரிவு மாத்திரமன்றி கடமையும் கூட.

உங்களை வழிநடாத்த நாங்கள் தயாராகவே இருக்கின்றோம், இன்ஷா அல்லாஹ், அதேவேளை எந்தவொரு அவையிலும் மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட ஆசை என்னிடம் இல்லை என்பதனையும், சரியானவர்கள்,சரியான தளங்களில் இருக்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் மாத்திரமே எனது பதிவுகள் இடப்படுகின்றன என்பதனையும் கவனத்திற் கொள்ளவும்.

பிழையான அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராகவே போராடுகின்றோம், தனி நபர்களுடனும், குழுக்களுடனும் பகைமை பாராட்டுவது எமது இலக்கு அல்ல.

public-opinion1நாங்கள் ஒரு பிழையான, கையாலாகாத, ஊழல் மோசடிகள் நிறைந்த, அநீதிகள் அடாவடித்தனங்கள் கோலோச்சுகின்ற வங்குரோத்து, சூதாட்ட, சரணாகதி அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராகவே எழுந்து நிற்கின்றோம், குரல் கொடுக்கின்றோம்.

மேற்படி ஜாஹிலிய அரசியல் கலாச்சாரத்தில் இருந்து, எமது அரசியல் குழுக்களையும், பிரமுகர்களையும், தனியாட்களையும் விடுவிப்பதென்பது ஒரே இரவுடன் அல்லது பகலுடன் நடந்து முடிகின்ற கைங்கரியமல்ல.

ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர், அந்தவகையில் வாக்காளர்கள் மத்தியில் மேற்படி ஜாஹிலிய அரசியல் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எமது முதற்கட்ட பணியாகிறது.

ஜாஹிலிய அரசியல் கலாச்சாரத்திற்கெதிராக போராடும் பொழுது அதன் முகவர்களோடும், அடியாட்களோடும் அல்லது பாமரத்தனமான ஆதரவுத் தளத்துடனும் மோதிக்கொள்கின்ற, அதிதீவிர முரண்பாட்டு எதிர்வினை-யாற்றல்கள் எமது பாதையினை குறிப்பாக இளம் தலை முறையினரை வேறு திசைகளை நோக்கி திருப்பி விடும் அபாயமும் இருக்கின்றது.

VOTE1அதிலும் குறிப்பாக சிறுபான்மைச் சமூக தனித்துவ அடையாள அரசியல் இன மத மொழி வேறுபாடுகளை அல்லது உரிமைப் போராட்டங்களை மையப்படுத்திய அரசியல், நாடுதழுவிய பெரும்பான்மை சமூகங்களின் பிழையான அரசியல கலாச்சாரத்தில் சங்கமித்து இரண்டறக் கலந்திருக்கின்ற நிலைமைகளில் அதி தீவிர முரண்பாட்டு அணுகுமுறைகள், எங்கள் இலட்சியப் பயணத்தில் பாரிய தடைக் கற்களை, நெருக்கடிகளை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கின்றது.

இவாரனதொரு பாரிய பணியை முன்னெடுக்கும் பயணத்தில் புத்திஜீவிகள், கல்விச் சமூகம், இளைஞர்கள், யுவதிகள், பல்கலைக் கழக மாணவர் சமூகம், சன்மார்க்க அறிஞர்கள், வர்த்தக சமூகத்தினர் என சகல தரப்பினரும் கூட்டுப் பொறுப்புடன் இணைந்து செயற்படுகின்ற அவசியம் இருக்கின்றது, குறிப்பாக ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் ஊடகங்கள் முதன்மையான பங்களிப்பினை செய்தல் கட்டாயமாகும்.

VOICEமனிதர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுகின்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், கருத்து வெளியீடுகள் வன்முறைகளைத் தூண்டிவிடும் பிரயோகங்கள், பிரசுரங்கள் அறிவார்ந்த எமது பணியின் அடையாளங்களாக இருக்க முடியாது, இடம் பொருள் ஏவல் குறித்த சமயோசித சாமர்த்திய நகர்வுகள், அறிவார்ந்த விழிப்பூட்டல்கள், அழகிய கருத்துப் பரிமாறல்கள் எந்தவொரு இலட்சியப் பணியினதும் அடிப்படை அம்சங்களாகும்.

தேசத்திலும், சமூகத்திலும் கோலோட்சுகின்ற பிழையான வங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் எமது சகோதர இனத்தினர், எமது சகோதர சமூகத்தினர், விசுவாசக் கோட்பாடுகளில் எமது சகோதரர்கள், உறவினர்கள்,நண்பர்கள் என்ற பரந்துபட்ட சிந்தனை எம்மிடம் இருத்தல் அவசியமாகும். அவர்களுடன் பகைமை பாராட்டுகின்ற வைராக்கிய, வஞ்சம் தீர்க்கும், பழி வாங்கும் அரசியலை எம்மால் ஒரு போதும் செய்ய முடியாது.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை, அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்.

 

About author

No comments

சந்திரமாத சர்ச்சைகள் முடிவிற்கு கொண்டுவர முடியுமானவையே !

இஸ்லாமிய நாட்காட்டியை (கலண்டர்) தீர்மானித்துக் கொள்வதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றமை நாம் அறிந்த விடயம் மாத்திரமன்றி எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் எங்கள் அனைவரையும் “இதற்கு ஒரு முடிவு கிட்டாதா?” என்று கவலை கொள்ளச் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com