முரண்பாட்டு முகாம்களுக்குள் முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?

0

தனிமனிதாக,குடும்பமாக,சமூகமாக,தேசமாக,உம்மத்தாக,சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர்.

ummath1ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத் ஆயினும் கிலாபாத் ஆயினும் அவை குறித்த பிக்ஹு அல்லது இஜ்திஹாது எல்லாமே மறுமைக்கான விளைநிலமான இன்மை வாழ்வில் மனிதனின் உயிரிலும் மேலான தீன்,உயிர்,அறிவு,உடைமைகள்,பரம்பரை என்ற அடிப்படை அம்சங்களை மையப் படுத்தியதாகவே அமைந்திருக்கின்றன.

காலத்திற்குக் காலம் நபிமார்கள்,தூதுவர்கள், இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் சஹாபாக்கள், தாபிஈன்கள் அவர்கள் பின் வந்த நல்லடியார்கள் மனித வர்க்கத்திற்கு தத்தமது பங்களிப்பை செய்திருக்கின்றார்கள்.

இறைவன்,பிரபஞ்சம்,உலகம்,வாழ்வு,மரணம்,இன்மை மறுமை குறித்த மிகவும் தெளிவான கோட்பாட்டுச் சிந்தனைகளை கொண்டுள்ள சிறந்த ஒரு உம்மத் நவீன உலகிற்கு இஸ்லாம் குறித்த எத்தகைய நடை முறை வியாக்கியானங்களை தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும், உம்மத்தாகவும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே ஒவ்வொரு விசுவாசியினதும் ஆன்மாவை ஆட்டிப் படைக்கின்ற, உள்ளத்தை உறுத்துகின்ற கேள்வியாகும்.

Warஇஸ்லாத்தின் பெயரால், ஷரீஅத்தின் பெயரால், அகீதாவின் பெயரால், கிலாபாத்தின் பெயரால், ஆன்மீகநெறிமுறைகளின் பெயரால் மொத்தத்தில் மதத்தின் பெயரால் வெவ்வேறு முரண்பாட்டு முகாம்களுக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு இன்மை மறுமை வாழ்வின் அத்துணை இலக்குகளையும் தொலைத்துக் கொண்ட ஒரு உம்மத்தாக, இஸ்லாத்தின் எதிரிகளை உள்வீட்டில் வைத்து போஷிக்கும் ஒரு உம்மத்தாக அவர்களின் நலன்களுக்கேற்பவே நகர்த்தப் படும் முகாம்களாக நாம் மாறி வருகின்றோம்.

இஸ்லாத்தையும் முஸ்லிம் இளைஞர்களையும் இலக்கு வைத்து சத்தியத்தின் கோலம் கொண்டு, சத்தியத்தின் சுலோகங்கள் சுமந்து சதி வலைகளை விரித்துள்ள பரந்து விரிந்த சியோனிஸ மற்றும் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளிடமிருந்தும் முஸ்லிம் உலக முகவர்களிடமிருந்து காப்பாற்றுகின்ற மிகப் பெரும் பாரதூரமான பணி நாம் கடந்த பல தசாப்தங்களாக கொண்டிருந்த செயற்பாட்டு இலக்குகளை, கோட்பாடுகளை காலாவதியாக்கியுள்ளன.

உலகம் வாழ்வு மரணம் பிரபஞ்சம் விஞ்ஞானம் தொழில் நுட்பம் மதம் மார்க்கம் ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம் குறித்த அனைத்துக் கோட்பாடுகளும், சித்தாந்தங்களும் மனிதனை மனிதன் மிகைப்பதற்கும் கொன்று குவிப்பதற்கும், ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்கும், ஆயுதங்களை விற்பதற்கும், போரினை விதைப்பதற்கும், இரத்தத்தை ஓட்டுவதற்கும், இரசாயண, உயிரியல், மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளுக்கும் மையப் படுத்தியுள்ளன.

Spaceஉலகை பிணக்காடாக்கிய மனிதன் சந்திரனிலும் செவ்வாயிலும் தண்ணீரை தேடுகின்றான்..! முஸ்லிம் உம்மத்தோ உலகிற்கு எத்தனை சந்திரன் எததனை பிறை என்று அடிபட்டுக் கொண்டிருக்கிறது,சுலைமான் நபிகாலத்து ஷைத்தான்கள் இன்னும் சூனியம் செய்கிறார்களா என்று மேடை போட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் உம்மத்து இறுதி இறைதூதருக்குப்பின் யார் கலீபா என்பதனை தீர்மானிக்க இன்னும் சண்டை பிடித்து தமக்குள் போர் தொடுத்து இலட்சக் கணக்கில் இறந்து மடிந்து கொண்டிருக்கிறது, இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் உம்மத்தின் ஒவ்வொரு கூறுகளையும் தீவிரவாதத்தின் உச்சத்திற்கே அழைத்துச் சென்று ஆயுதம் தரிக்கச் செய்து தம்மைத் தாமே உள்வீட்டில் அழிவை அரவணைக்கச் செய்துள்ளது.

அறபு பாரசீக வரலாற்று முரண்பாடுகள், மேலாதிக்கப் போட்டா போட்டிகள்  யூத சியோனிஸ சாம்ராஜ்யக் கனவை உயிர்பித்துக் கொண்டிருக்கின்றன, மேலைத்தேய மேலாதிக்க சக்திகள் முஸ்லிம் உலகில் மூன்றாம் உலகப் பேரழிவை முடுக்கி விடுவதற்கான களநிலவரங்களை சாதகமாக்கிக் கொடுத்திருக்கின்றன, அறபு முஸ்லிம் உலகின் அழிவு அறுவடைகள் மாத்திரமே.

palestineமுதலாம் உலக மகா யுத்தத்துடன் மத்திய கிழக்கை இலக்கு வைத்து கூறு போட்டு உஸ்மானிய சாம்ராஜ்யத்தை வீழச் செய்து அங்கே யூத சியோனிஸ சாம்ராஜயத்தை தோற்றுவித்து இன்று வரை அரபு முஸ்லிம் உம்மத்தை விட்டு வைக்க வில்லை.

முதலாம் உலகப் போருடன் உத்மானிய சாம்ராஜயத்தை முஸ்லிம் உலகு இழந்து நின்றது, இரண்டாம் உலகப் போருடன் பலஸ்தீனத்தையும் பயத்தில் மக்திசையும் இழந்தது, இன்று மூன்றாம் உலகப் பேரழிவு முஸ்லிம் உலகில் முஸ்லிம்களைக் கொண்டே /கொன்றே முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பனிப்போர் முடிவுக்கு வருமுன் சோவியத் ரஷ்யா எனும் வல்லரசை ஆப்கானின் முஸ்லிம் முஜாஹிதகளைக் கொண்டே வீழ்த்திய மேலைத்தேயம், இன்று வரை ஆப்கானை விட்டுவைக்க வில்லை.

ஷியா சுன்னி மோதல்களை தீவிரபப்டுத்தி வளைகுடா சுன்னிகளை தூண்டிவிட்டு ஈராக்கை ஏவிவிட்டு இரானை இலக்குவைத்த அமெரிக்கா இன்றுவரை ஈராக்கை விட்டுவைக்கவில்லை.

அறபு வசந்தத்தை காவுகொண்டு, அதன் தொடராய் எகிப்தையும், லிபியாவையும் சிரியாவையும் சின்னாபின்னப்படுத்தி அரபுலக முகவர்களைக் கொண்டே இஸ்ரவேலை அண்டியுள்ள ஈராக் சிரியா உள்ளிட்ட ஷாம் தேசத்தை கூறு போட அடுத்த கட்ட அதிரடிகளில் இறங்கியுள்ளது அமெரிக்கா.

அருளப்பட்ட வேதங்களில் கிறிஸ்தவத்தையும், யூத மதத்தையும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரிகளாய் வளர்த்துவிட்ட மேலைத்தேய மேலாதிக்க சக்திகள் இன்று ஆசிய நாடுகளில் இந்துக்களையும் பௌத்தர்களையும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக திட்டமிட்டு மோதவிட்டுக் கொண்டிருக்கின்றன.

இராணுவ ஊடுருவல்கள், உலகம் தழுவிய ஊடகப் போர்கள், கலை கலாச்சாரப் படையெடுப்புக்கள், சிந்தனை சித்தாந்தப் போர்கள், நாகரீக பண்பாட்டு விழுமிய ஆதிக்கங்கள், பொருளாதார கோட்பாட்டு சுரண்டல்கள்,அரசியல் இராஜ தந்திர மேலாதிக்க நகர்வுகள் என முஸ்லிம் உலகை முற்றுகையிட்டுள்ள இஸ்லாத்தின் எதிரிகள்…உள்வீட்டு முகவர்கள் கொண்டு முரண்பாட்டு முகாம்களை இனம் கண்டு மோதல்களை முடுக்கி விட்டுள்ளார்கள்.

aleppoஇவ்வளவு முற்றுகைக்கு மத்தியிலும் நம்பிக்கை இழக்காத விசுவாசிகள் கூட்டம் அனாதரவாய் அந்தரப் பட்டவர்களாய், அறிமுகமில்லாதவர்களாய் ஒரு விடியலுக்காக காத்திருக்கின்றார்கள், அடுத்த நிமிடம் மறுமை என்றிருப்பினும் கையில் உள்ள பேரீச்சம் குற்றியை நம்பிக்கையுடன் நடுவதுபோல் தமது பாதையிலும் பயணத்திலும் தெளிவாக இருக்கின்றார்கள்.

முஸ்லிம் உம்மத்தின் விடுதலைக்காக மாத்திரமன்றி, எதிரிகளின் தேசங்களில் மூளை முடுக்குகளில் எல்லாம் வாழும் மனித குலத்தின் விமோசனத்திற்காக ஒவ்வொரு விசுவாசியான ஆணும் பெண்ணும் அந்தகாரத்திலும் ஒரு நம்பிக்கை எனும் விளக்கை ஏந்தி முன்னோக்கிப் பயணிக்கின்றார்கள்.

நிச்சயமாக இறை நிராகரிப்பாளர்களே அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

மனிதனுடைய சன்மார்க்கம் உயிர் அறிவு ஆன்மா உடைமை கௌரவம் பரம்பரை போன்ற அடிப்படை அம்சங்களை போற்றி பாதுகாக்கின்ற அழகிய வாழ்வு நெறியே இஸ்லாமாகும்.

இஸ்லாமமிய ஷரீஅத் சட்டங்கள் இத்தகைய அடிப்படை அம்சங்களை பேணிக் காக்கின்ற சாதகாமான சகல அமசங்களையும் போற்றியும் பாதகமான சகல அம்சங்களையும் தவிர்த்தும் சில அடிப்படையான ஆன்மீக லௌகீக கோட்பாட்டு இலக்குகளின் மீது கட்டி எழுப்பப்பட்ட மிகச் சிறந்த வாழ்வு நெறியாகும்.

இஸ்லாமிய “ஷரீஅத்” என்றாலே குரூரமான கசையடித்தல்  கை வெட்டல், கழுத்து வெட்டல், கல்லடித்துக் கொல்லுதல் என ஒரு பிழையான காழ்ப்புணர்வுப் பரப்புரை சர்வதேச அளவில் மாத்திரமன்றி அண்மைக் காலமாக இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதே போன்றே இஸ்லாமிய உம்மத்தினை நிர்வகிக்கின்ற கட்டமைப்பெனும் “கிலாபத்” எனும் பிரயோகம் குறித்தும் அது குரூரமான இஸ்லாமிய ஷரீஅத்துக் சட்டங்களை மனிதர்கள் மீது திணிக்கின்ற மனித உரிமைகளைப் பறிக்கின்ற ஆட்சிக் கட்டமைப்பு என்ற பரப்புரையும் உலகெங்கும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

மேலே சொன்ன ஷரீஅத்து, கிலாபத்து போன்ற பிரயோகங்கள் போன்றே “ஜிஹாத்” எனும் பிரயோகமும் முஸ்லிம் உம்மத்து குறித்த பீதியை ஜனரஞ்சகப் படுத்துவதற்காக திட்டமிட்ட அடிப்படையில் தவறான அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஜிஹாத் என்றால் முஸ்லிம் அல்லாதவர்களை கொன்று குவித்தல், இஸ்லாத்தை பலாத்காரமாக அடுத்தவர் மிது திணித்தல், தேசங்களை ஆக்கிரமித்தல், வகை தொகையாக முரண்பட்டோர்களை கொன்று குவித்தல் என மிகவும் அகோரமான காட்சிப்படுத்தல்களை வெகுசனமயப்படுத்தல் மேற்கொள்ளப்பய்ட்டு வருகிறது.

OICஉண்மையில் மேலே சொன்ன அனைத்து பாதகமான கோட்பாடுகளையும் மேலைத்தேய மேலாதிக்க யூத சியோனிஸ சிலுவை சக்திகள் உலகின் மூளை முடுக்குகளில் எல்லாம் அரங்கேற்றியதோடு உலகெங்கும் ஆயுத கலாசாரத்தை போரை அழிவுகளை விதைத்தும் சகல அரசியல் பொருளாதார இராஜதந்திர இராணுவ மூலோபாயங்களையும் அத்தகைய ஆக்கிரமிப்புக் காலனித்துவத்தினை மையப்படுத்தியுமே நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

ஒரு மனித உயிரின் பெறுமதி  மொத்த மனித வர்க்கத்தினதும் பெருமதியிற்கு ஈடாகுமென அடிப்படை வாழ்க்கைத் தத்துவத்தை உலகில் அல் குரான் அன்றி வேறு எந்த மார்க்கமும் தெளிவாக ஒரு கோட்பாட்டுச் சிந்தனையை முன்வைக்க வில்லை.

தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும், கோத்திரங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும் மனித வாழ்வின் அடிப்படை இலக்குகளை பேணுகின்ற பொதுவான விதிகளையே இஸ்லாமிய ஷரீஅத் கிலாபத் ஜிஹாத் ஆகிய பிரயோகங்கள் உள்ளடக்கியிருக்கின்றன.

அத்தகைய அடிப்படை கோட்பாடுகளுடன் மானுட விழுமியங்களுக்கு முரண்படுகின்ற மனித வாழ்வின் அழகிய கட்டமைப்பினை சிதைக்கின்ற தீய அம்சங்கள் களையப்படுகின்ற அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் படுகின்ற குற்றவியல் சட்ட திட்டங்கள் யாவும் விதிவிலக்கான அரிதிலும் அரிய அம்சங்களாகும்.

ஆனால் அண்மைக் காலமாக உலக அரங்கில் இஸ்லாமிய கிலாபத்து, இஸ்லாமிய ஷரீஅத்து ,இஸ்லாமிய ஜிஹாது ஆகிய மூன்று பிரதான பிரயோகங்களுக்கும் விதிவிலக்கான விவகாரங்களை பூதாகரப் படுத்தி அவற்றை அடிப்படை வாதமாக ,தீவிரவாதாமாக, இஸ்லாமிய பயங்கரவாதமாக இஸ்லாமிய தேச அடையாளங்களுடன் காட்சிப் படுத்தி உள்வீட்டு மோதல்களாக அரங்கேற்றி  இஸ்லாமோபோபியா எனும் இஸ்லாம் முஸ்லிம்கள் குறித்து பீதியை கிளப்புகின்ற நடை முறை வியாக்கியானங்கள் உலகின் முன் வைக்கப்படுகின்றன.

Arab Springபுதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் தேசங்களில் உள்ள எண்ணெய் மற்றும் கனிய வளங்களை ஆக்கிரமிக்கும் நவீன காலனித்துவத்தை பரந்து விரிந்த சியோனிஸ சாம்ராஜயத்தை தோற்றுவிப்பதன் மூலமும், நவயுக சிலுவைப் போரை ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு விஸ்தரிப்பதன் மூலமும் மூன்றமுலக பேரழிவை முஸ்லிம் உம்மத்தின் மீது திணிக்க முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கில் யூத சியோனிஸ சிலுவை பனிப்போர்கள் அரபு வசந்த காவு கொள்கைக்கு பின்னர் உள்வீட்டில் முடுக்கிவிடப்பட்டுள்ள அதேவேளை ஆசிய நாடுகளில் இந்துக்களையும் பௌத்தர்களையும் முஸ்லிம் உம்மத்துடன் மோதவைக்கும் முஸ்தீபுகளும் தீவிரமாக அசுர வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா இலங்கை உற்பட இந்தோனேசியா வரை இந்தக் கொடூரமான காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக இஸ்லாமோபோபியா பரப்புரைகள் அமுலாக்க அரங்கேற்றங்களோடு அசுர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள எந்த  அணுகுண்டிற்கும் இஸ்லாமியர்கள் உரிமை கோரவில்லை,உலகில் பறக்கும் யுத்த விமானங்கள், நாசகாரி கப்பல்கள், உயிரியல்,இரசாயண ஆயுதங்கள் உற்பட முஸ்லிம் உலக முரண்பாட்டு முகாம்கள் காவித் திரியும்  அத்தனைஆயுதங்களும் ஆயுதக் கிடங்குகளும் முஸ்லிம் உலக எதிரிகளின் தயாரிப்புக்களாகும்.

உலகில் உள்ள சுமார்  65 ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் யூதர்களால் நடாத்தப்படுகின்றன, 95 % ஊடக நிறுவனங்களும் அவர்களது ஆயுத கலாசாரத்தை சந்தைப்படுத்துவதற்காக நடாத்தப் படுகின்றன..அந்த ஊடகங்களும் ஊதுகுழல்களும் தான் இன்றைய  நவீன உலகின் இஸ்லாமிய கிலாபாத்தையும், இஸ்லாமிய ஷரீஅத்தையும் இஸ்லாமிய ஜிஹாதையும் நடை முறையில் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

aleppo2ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும்,இளைஞனும் யுவதியும் இஸ்லாத்தின் பாலும், முஸ்லிம் உம்மத்தின் பாலும், முழு மனித குலத்தின் பாலும் தமக்குள்ள பங்களிப்பை, தாம் இருக்கும் இடத்தில் தேசத்தில் இருந்தவாறு அறிவுடனும் தெளிவுடனும் அவதானத்துடனும் மேற்கொள்கின்ற அறப்பணியிற்காக அழைக்கப்படுகின்றனர்

முஸ்லிம் உம்மத்தின் விடுதலைக்காக மாத்திரமன்றி, எதிரிகளின் தேசங்களில் மூளை முடுக்குகளில் எல்லாம் வாழும் மனித குலத்தின் விமோசனத்திற்காக ஒவ்வொரு விசுவாசியான ஆணும் பெண்ணும் அந்தகாரத்திலும் ஒரு நம்பிக்கை எனும் விளக்கை ஏந்தி முன்னோக்கிப் பயணிக்கின்றார்கள்.

(ஏற்கனவே எழுதப்பட்ட மூன்று பதிவுகளை காலப்பொருத்தம் கருதி ஒருங்கிணைத்து இன்று மீள்பதிவு செய்துள்ளேன், எடிட் செய்யப்படவில்லை)

About author

No comments

அமானிதங்கள் பாழாக்கப்பட்டால் யுக முடிவை எதிர்பாருங்கள்..

உலக வாழ்வில் எல்லாத் துறைகளிலும் எல்லா மாட்டங்களிலும் சத்தியத்தை நிலை நாட்டுகின்ற மிகப்பெரிய அமானிதத்தை மனிதன் சுமந்துள்ளான், மனித குல விமோசனத்திற்காக வெளியேற்றப்பட்ட சிறந்த உம்மத்தாக இறுதி இறை தூதர் எமது தலைவர் முஹம்மது ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com