யா அல்லாஹ்…

0

O யா அல்லாஹ்…

உனது திருப் பெயரைக் கொண்டே ஆரம்பம் செய்கின்றேன், அகிலத்தாரின் இரட்சகனாகிய Alhamdulillahஉனக்கே புகழும் புகழ்ச்சியும் உரித்தாகும், உனது தூதர் எங்கள் தலைவர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடம்பத்தினர் சஹாபாக்கள் இறுதிநாள் வரை உண்மை விசுவாசிகளாக வாழும் அனைவர் மீதும் உனது ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.!
இந்தப் பிரபஞ்சத்தையும் அனைத்துப் படைப்புக்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் நீயே.! உன்னை நாங்கள் விசுவாசிக்கின்றோம், உனது தூதர்களை, வானவர்களை நீ அருளிய வேதங்களை நாங்கள் விசுவாசிக்கின்றோம்…

வானத்தினதும் பூமியினதும் படைப்பிலும் , இரவு பகல் மாறி மாறி தோன்றுவதிலும் மறைவதிலும் உனது வல்லமையை அத்தாட்சிகளை நாங்கள் காணுகின்றோம்…
ஆட்சியையும் அதிகாரத்தையும் அந்தஸ்த்துக்களையும் கொடுப்பவனும் நீயே பறித்து எடுப்பவனும் நீயே..மனிதர்களை அவர்களது நடவடிக்கைகளைக் கொண்டு மாண்புறச் செய்பவனும், இழி நிலைக்கு தள்ளுபவனும் நீயே…

இரட்சகா, நாங்கள் உனது வழிகாட்டல்களை அறிந்தோம், கேட்டோம், உனக்கு வழிப்பட்டோம் எமது இயலாமைகளை, பலவீனங்களை, குறைகளை, குற்றங்களை மன்னித்து விடுவாயாக. உன்னிடமே நாங்கள் நிச்சயமாக மீளுவோம்..!

Burdenஒவ்வொரு ஆன்மாவையும் அதனதன் சக்திற்கு உற்பட்ட வகையிலேயே பரிசோதிக்கின்றாய்..அவைகள் சம்பாதித்துக் கொண்டவைகளே அவைகளுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமைகின்றன.! இரட்சகா, நாங்கள் மறந்து விட்டாலோ பிழைகள் செய்து விட்டாலோ எங்களை தண்டித்து விடாதே…

எமது இரட்சகா எங்களால் சுமக்க முடியாத சோதனைகளை பொறுப்புக்களை சுமைகளை எங்கள் மீது சுமத்தி விடாதே… எமது இரட்சகா, உனது தூதர்களூடாக எமாக்கு அளித்த நன்மாராயங்களை நாங்கள் மன்றாடிக் கேட்கின்றோம்……

நவ யுகத்தின் பிராவுன்கள், ஹாமான்கள், காரூன்கள், நும்ரூதுகள், உத்பாக்கள்,உமையாக்கள்,ஆபூ ஜாஹ்ல்கள் அக்கிரமக்கார ஆட்சியாளர்கள்,கொடுங்கோலர்கள், நயவஞ்சக அரபு முஸ்லிம் ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து இந்த உம்மத்தை பாதுகாப்பாயாக..!

எகிப்தில் சிரியாவில் ஈராக்கில் பலஸ்தீனில், ஆப்கானில், காஷ்மீரில் மற்றும் குட்டி சுல்தான்களின் சிறைகளில் இன்னும் உலகெங்கும் அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டு வதைக்கப் படும் முஸ்லிம் உம்மத்தை அழிவிலிருந்து நீ பாது காப்பாயாக…

இந்த நாட்டில் வாழும் எங்களை எங்களது உயிர் உடைமைகளை மஸ்ஜிதுகளை சமய கலாச்சார உரிமைகளை தீய சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாயாக, இந்த நாட்டை உண்மையான அமைதி சுபீட்சத்தின் வழி நீயே நடாத்துவயாக.. யுக முடிவின் போது அல்லது அது நெருங்கும் பொழுது ஏற்படும் சோதனைகளில் இருந்து எங்கள் மீது கருணை கொண்டு காப்பாற்றுவாயாக..

Asthagfirதாஜ்ஜல்களின் சதி வலைகளில் கவர்ச்சிகளில் சூழ்ச்சிகளில் சிக்கி விடாது எம்மை சத்தியத்தின் வழி நிற்கச் செய்வாயாக! யா அல்லாஹ், உனது களாவில் இருந்தும் கத்ரில் இருந்தும் எங்களுக்கு ஒரு பொழுதும் ஒரு திக்கிலும் விரண்டு ஓட முடியாது ரப்பே ரஹ்மானே..

எமது சொத்து சுகங்களும் செல்வங்களும் செல்வாக்குகளும், ஆட்சியும் அதிகாரங்களும் மனைவி மக்களும் பட்டங்களும் படிப்புகளும் பதவிகளும் உனது திருப்தியில் இல்லாதவிடத்து அவற்றால் எமக்கு விம்ஷனத்தை தர முடியாது என விசுவாசிக்கின்றோம் ரஹ்மானே…

உனது கட்டளைகளை உனது தூதர் வழிமுறைகளை ஏற்று வாழ்ந்து உண்மையான விசுவாசிகளாகவே வாழ்ந்து உண்மையான விசுவாசிகளாகவே மரணிக்க எமக்கும் எமது உற்றார் பெற்றார் உறவினர்கள் நண்பர்கள் எமது ஆசான்கள் எல்லோருக்கும் தவ்பீக் செய்வாயாக!
யா அல்லாஹ்…
அல்-குர்ஆன் அருளப்பட்ட புனிதமிகு ரமழானை எங்களுக்கு ஆன்மீக ஈடேற்றங்களின் மாதமாக அருளிய உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாவதாக.!

பசித்திருப்பதற்கும் தாகித்திருப்பதற்கும் அப்பால் புனிதமிகு நோன்பின் மாண்புகளையும் ஆன்மீக பண்பாட்டு வரைமுறைகளையும் கற்றுத் தந்த உனது தூதர் எமது தலைவர் அருமை நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது உனது ஸலாத்தும் ஸலாமும் என்றென்றும் உண்டாவதாக!

Quraanபுனித அல்-குர்ஆன் அருளப்பட்ட ஆயிரம் மாதங்களையும் விட சிறந்த புனிதமிகு லைலதுல் கத்ர் இரவை சுமந்துவரும் இறுதி பத்து நாட்களையும் யா அல்லாஹ்.. நல்ல அமல்களைக் கொண்டு இந்த நாட்களையும் கழிக்க எமக்கு தவ்பீக்கு செய்வாயாக.!

யா அல்லாஹ்..

அல்-குர்ஆனைக் கொண்டு எங்கள் ஆன்மாக்களையும், உள்ளங்களையும், அறிவு ஆற்றலையும், செயற்பாடுகளையும் ஒளிபெறச் செய்வாயாக..! அல்-குர்ஆனின் மாதமான ரமழான் சுமந்து வரும் சுப சோபனங்களுக்கு உரித்துடையவர்களாக எம் அனைவரையும் ஆக்கியருளவாயாக.! எங்கள் பெற்றாரகளது பாவங்களை மன்னித்து அவர்கள் மீது ஈருலக வாழ்விலும் கருணை காட்டுவாயாக.!

எமது உற்றார் உடன் பிறப்புக்கள் மீது கருணை காட்டுவாயாக. ஏழை எளியோர், முதியோர் அங்கவீனர் அனாதைகள் விதவைகள், நோய்வயப்பட்டிருப்போர் அனைவரையும் உனது அருள் கொண்டு அரவணைத்துக் கொள்வாயாக.!

அல்லாஹ்வின் பாதையில் உழைப்போர், சமூகப் பணியில் உள்ளோர், சத்தியத்தின் வழி நடப்போர், தமது செல்வங்களை சதக்காவாகவும் சக்கத்தாகவும் வரி வழங்குவோர் வாழ்வில் மென்மேலும் பரக்கத்துச் செய்வாயாக.! யா அல்லாஹ்.!

எங்களது வாழ்வினை தூய்மைபடுத்துகின்ற அரணாகிய தீனில் எம்மை நிலைபெறச் செய்வாயாக, நாங்கள் வாழுகின்ற இந்த துன்யாவை எமக்கு வளமானதாக ஆக்கியருள் வாயாக, நாங்கள் மீளுகின்ற மறுமைய வாழ்வை எமக்கு சிறந்ததாக அமைத்தருள்வாயாக!

யா அல்லாஹ்..
Warதீய சக்திகளின் கெடுபிடிகளில் இருந்து இந்த உம்மத்தையும், நமது உயிர் உடமைகளையும், கௌரவத்தையும், நமது பள்ளி வாயால் களையும் பாது காத்தருள் வாயாக, நய வஞ்சகர்களிடமிருந்தும் சூழ்ச்சிகள் செய்வோரிடமிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக, நிர்க்கதியாய் நிராயுத பாணிகளாய் இருக்கும் உனது அடியார்களை குறி வைப்போர் மீது உனது அத்தாட்சிகளை காண்பிப்பாயாக! யா அல்லாஹ்!

புனித பைத்துல் முகத்தஸையும், பாலஸ்தீன் நாட்டையும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பாயாக, பாலஸ்தீன் மக்களை கொடிய யூதர்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இருந்து பாது காப்பாயாக, முஸ்லிம்கள் மீது ஆயுத அராஜகத்தை கட்டவிழ்த்துள்ள எதிரிகளை அழித்து ஒழித்து விடுவாயாக, தமது உயிர் உடமைகளையும் தாய் மண்ணையும் மீட்கப் போராடும் போராளிகளை பாது காப்பாயாக, அவர்களுக்கு உனது குத்ரத்தை கொண்டு உனது பட்டாளங்களைக் கொண்டு உதவி புரிவாயாக, எல்லை கடந்த ஈமானிய உறவுகளை அரவணைக்கின்ற தலைவர்களை முஸ்லிம் தேசங்களில் உருவாக்குவாயாக! நயவஞ்சக ஆட்சியாளர்களை ஒழித்துக் கட்டுவாயாக.!

யா அல்லாஹ்,

இஸ்லாத்தினதும் முஸ்லிம் உம்மத்தினதும் எதிரிகளின் நூதனமான சதி வலைகளில் இருந்து முஸ்லிம் தேசங்களை காப்பாற்றுவாயாக! அவர்களுக்கு துணைபோகும் நயவஞ்சக ஆட்சியாளர்களை தூக்கி எறியும் வல்லமையை உண்மை விசுவாசிகளுக்கு வழங்குவாயாக! மத்திய கிழக்கில் முஸ்லிம் உம்மத்திற்கு எதிராக இடம்பெறும் மிகப் பெரிய சூழ்ச்சியை தவிடு பொடியாக்கிவிடுவாயாக, புனித ரமழான் மாதத்திலே அவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தை அங்கீகரித்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியை நீ வழங்குவாயாக!

யா அல்லாஹ்,

எமது ஹலாலான ஆசைகள் தேவைகளை நிறைவேற்றியருள்வாயாக, கவலை, நிம்மதியின்மை, வறுமை, கோழைத்தனம், கடன் தொல்லை , நன்றி மறுக்கும் குப்று, கருமித்தனம் என்பவற்றிலிருந்து நாம் உன்னிடம் பாது காவல் தேடுகின்றோம்!

DUAபெருமை, பொறாமை, பேராசை, நயவஞ்சகம்,இக்லாசின்மை போன்ற தீய உள நோய் களில் இருந்து எமது உள்ளங்களை பரிசுத்தப் படுத்துவாயாக, அத்தகைய நல்ல உள்ளங்கள் போன்று விசுவாசிகளுக்கு மகிழ்ச்சி தரும் இல்லங்களாக எமது வாழ்விடங்களை ஒளி பெறச் செய்வாயாக! பொறுமை, நளினம் ,நிதானம் ,காருண்யம் உளத்தூய்மை, விட்டு கொடுக்கும் ,மன்னிக்கும் மனப் பான்மை, இறையச்சம், உயரிய மானுட குணாதிசியங்கள் கொண்டு நமது வாழ்வை அலங்கரிப்பாயாக!

திருப்திப் படாத நப்சு, நல்லவற்றை செவி மடுக்காத காது, உன் தியானத்தில் கண்ணீர் விடாத கண்கள் என்பவற்றிலிருந்து உன்னிடம் அபயம் தேடுகிறோம்! எங்களில் நோய் வாய்ப் பட்டிருப்போர் மீது நீ கருணை கொண்டு பூரண ஆரோக்கியத்தை தந்தருள்வாயாக, ஏழை எளியோர்,அனாதைகள், விதவைகள், வலது குறைந்தோர் மீது கருணை காட்டும் உள்ளங்கள் மீது உனது அருள் மாரியை சொரிவாயாக!

கல்வியில் தொழில் தேடும் முயற்சியில் இருக்கும் யுவதிகள்,இளைஞர் மீதும், உற்றார் பெற்றார் உறவினரை வாழ வைப்பதற்காய் கடல் கடந்து கஷ்டப் பட்டு உழைக்கும் இளைஞர் யுவதிகள் மீதும் கருணை கொண்டு அவர்களது இன்மையிலும் மறுமையிலும் வளம் சேர்ப்பாயாக!

எம்மோடு வாழுகின்ற எமது தாய் தந்தையர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் அனைவர் மீதும் நீ உன் அருள் பாக்கியங்களை வாரி வழங்குவாயாக!

யா அல்லாஹ்,

Rabbirhamஎங்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய எங்கள் பெற்றோர்கள் மீது கருணை காட்டுவாயாக, அவர்களது நற்செயல்களை அங்கீகரித்து பாவங்களை மன்னித்தருள்வாயாக, அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் பூரண ஆரோக்கியத்தையும் ,மன நிம்மதியையும் அருள் வாயாக!

எங்களை விட்டுப் பிரிந்திருந்தால் அவர்களை நீ அங்கீகரித்து உனது ஜன்னத்துல் பிர்தௌசில் ஆலா எனும் உயர் சுவன வாழ்க்கையை வழங்குவாயாக! வாழ்வின் பிடியில் இருப்பின் எம்மால் இயன்றவரை அவர்களுக்கு பணி புரிந்து அவர்களை பேணிக் காக்கும் பேற்றை தந்தருள்வாயாக!

எமது மனைவி மக்கள் சகோதர சகோதரிகள் எல்லோரையும் உனக்கு பொருத்தமான வாழ்வினை வாழ்ந்து ஈருலக அருள் பாக்கியங்களையும் பெறக் கூடியவர்களாக ஆக்கி விடுவாயாக!

எல்லா வித தீய சக்திகளில் இருந்தும் இந்த உம்மத்தை நீ பாது காப்பாயாக! பலவீனங்களோடும் குறைகளோடும் வாழும் எமக்கு சீரிய சிந்தனைகளையும் நேரிய வழி முறைகளையும் உதிக்கச் செய்வாயாக!

யா அல்லாஹ்…

Dua2கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாகிய இறைவனே! எங்கள் எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. எங்கள் எந்தக் குறையையும் மறைக்காமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கவலையையும் சந்தோஷப்படுத்தாமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கடனையும் நிறைவேற்றாமல் வைத்து விடாதே. எங்களுக்குப் பயனுள்ள ஈருலக எந்தத் தேவைகளையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே.

உன் மீதும் உனது உத்தம அடியார் கண்மணி ரசூலுல்லாஹ் முஹம்மத் ஸல் அவர்கள் மீதும் உண்மையான அன்பினை எமது உள்ளங்களில் ஏற்படுத்தி எமது அகத்தையும் புறத்தையும் உனது குரானின் ஒளியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக!

About author

No comments

உம்மத்தின் நிலை குறித்து கவலையா..? நெஞ்சு பொறுக்குதில்லையா..?

O “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com