Monday, September 27, 2021

இந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்!

நல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் செயல்பட்ட பொழுது முஸ்லிமறபுலகு இலங்கை அரசுக்கு கைகொடுத்தது.

இஸ்லாம் முஸ்லிம் என்ற வரையரைகளுக்கு அப்பால் அப்பட்டமாக சர்வதேச சட்டங்களையும், மனித உரிமை நியமங்களையும், ஐநா மற்றும் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களையும் மீறுகின்ற ஒரு தேசத்தினுடனான உறவுகளை நாகரீக உலகின் சகல மனிதாபிமானிகளும் நிராகரித்து வருகின்றார்கள்.

இன்றுவரை ஒரு நாட்டை இலங்கை முறையாக அங்கீகரிக்காமல் ஆகக் கூடுதலான ஒத்துழைப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெறுகிறதென்றால் அது இஸ்ரேல் என்ற முறைகேடாக பிறந்த, முறைகேடாக வளர்ந்த, சர்வதேச பயங்கரவாத சியோனிச சாம்ராஜ்யமாகும்.

பர்மா வரையிலான பறந்து விரிந்த சியோனிச மேலாதிக்க காலனித்துவத்தை கனவு காணும் இந்த ஹராமான பிறப்பைக் கொண்ட இஸ்ரேல் இலங்கை விமானப் படைக்கு கிபிர் விமானங்களையும் புலிகளுக்கு அவற்றை அழிக்கும் விமான ஏவு கணைகளையும், டோரா விசைப் படகுகளை கடற் படையினருக்கும், அவற்றை அழிக்கும் நீர் மூழ்கிகளை கடற் புலிகளுக்கும் கொடுத்து, இரு தரப்பு அதிரடிப் படையினருக்கும் ஒரே காலப் பிரிவில் இஸ்ரேலில் பயிற்சியும் அளித்து இரு தரப்பு இரத்தத்தையும் உறிஞ்சி விட்டு இன்று உள்ளே புகுந்து அட்டகாசம் செய்ய இலங்கைத் தலைவர்களை வளைத்து போட்டுள்ளது.

1980 ல் ஜே ஆர் ஜெயவர்தனவுடன் ஆரம்பித்த இந்த முறை கேடான உறவு; அன்று சிறிமா அம்மையாரால் ஆரம்பிக்கப் பட்ட 30 வருட மகாவலி அபிவிருத்தி திட்டத்தை துரித மகாவலி அபிவிருத்தி திட்டம் என 6 வருடமாக மாற்றச் சொன்னதும் இஸ்ரேல் பாணியிலான சட்ட விரோத குடியேற்றங்களை ஏற்படுத்தச் சொன்னதும் அதற்காக உலக வங்கியையும் பல்வேறு சர்வதேச முதலீட்டு நிறுவனங்களையும் ஏமாற்றி அபிவிருத்தி உதவிகள் பெற்று ஆயுத கொள்வனவிற்கான காசுகளைப் பெற்றதும் இந்த இஸ்ரேல் தான்.!

ஜே ஆருக்கு வழங்கிய அதே கயிறை நெருக்கடிகள் மிகுந்த இலங்கையின் தற்போதையா தலைவர்களுக்கும் இஸ்ரேல் வழங்குகிறது. அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவையும் தமிழர்களையும், சிங்களவர்களையும் ஏமாற்றும் இஸ்ரேலிய திட்டம் தற்போது முஸ்லிம் சிங்கள இன முறுகளுடன் ஆரம்பமாகிறது… இலங்கை, முஸ்லிம்களுக்காக அல்ல.. தனக்காக இந்த நாசகார சக்தியிடம் இருந்து விடுதலை பெற வேண்டும்!

இலங்கையிலிருந்து ஆயுதக் கொள்வனவிற்காக  இஸ்ரேல் சென்ற தூதுக் குழுவினருக்கு துறை முகம் துப்பரவு செய்யும் காற்று விசை (வோக்க்யூம் கிளீனரை )யந்திரத்தை காட்டி இது நீருக்கடியில் மூழ்கிச் செல்லும் மனிதர்களின் காலணி அளவை மாத்திரமல்ல இரத்த வகையை கூட அறிந்து சொல்லும் ராடார் கருவி என்று வகுப்பு நடாத்தியது மாத்திரமன்றி இதுகள் நாகரீகமடையாத மரத்தையன்றி வேறொன்றும் தெரியாத குரங்குகள் ஒரு வாழைப்பழத்தை கொடுத்து அனுப்புங்கள் என்று சொன்ன மொஸாட் உளவாளிகள் இஸ்ரேல இலங்கையுறவு எந்த அளவில் பேணப் பட வேண்டும் என அறிந்திருந்தனர்.  “ஏமாற்றிக் காரியம் பார்த்தல்: ஒரு மொஸாட் உளவாளியை உருவாக்கலும் இல்லாமல் செய்வதும்!” என்ற நூலில் விக்டர் ஒச்ரோவகி மற்றும் கலயர் ஹாய் ஆகிய இருவரும் இந்த கேவலமான இஸ்ரேலிய இராஜ நரித் தந்திரம் குறித்து குறிப்பிட்டுள்ளார்கள்.

நோர்வே அமரிக்காவின் இராஜ தந்திர சமாதானப் பொறி என்றால் இஸ்ரேல் அதன் ஆயுதக் கிடங்காகும்.! சமாதானப் பொறி தப்பின் சண்டைப் பொறி அமெரிக்காவின் புதிய உலக ஒழுங்கு..! நோர்வேயின் சமாதான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது இலங்கை தென் கடலில் இஸ்ரேல் கடலுக்கடியில் அணு ஆயுதம்  தாங்கிய  நாசகாரி நீர் மூழ்கிகளை பரிசீலித்தது…இந்திய இஸ்ரேல அமெரிக்க முக்கூட்டு இராணுவ பலப் பரீட்சைகள் அரங்கேறின! இன்று மீண்டும் அதே சதிவலை பின்னப் படுகிறது…!  இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமாதானம் என்ற பெயரில்  இந்தியாவையும்  தலை குணியச் செய்து இழுத்துப் போட்டு இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்க திடமாக கால் பதிக்கிறது.

அன்று இந்தியாவின் முதுகுக்குப் பின்னால் ஜே ஆருக்கு உதவிய அமெரிக்கா இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவை தனது தூதரகத்தில் இயங்க வைத்து இலங்கையின் உள்விவகாரங்களில் நாசூக்காக தலையிட்டது, இன்று சீனாவின் முதுகில் குத்துவதாக இந்தியாவிடம் கூறிக் கொண்டு இஸ்ரேல தூதுவராலயத்தை இலங்கையில் திறப்பதன் மூலம் அமெரிக்க இன்னுமொரு முறை இலங்கை இந்தியாவை மாத்திரமல்ல தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளிக் கூட பலிக்கடாவாக்க விரும்புகிறது !

தமிழர்களினதும் இலங்கையினதும் (தீமைகள் குறைந்த) உண்மை  நண்பனாக இருந்த இந்தியாவையும் தமிழ் போராளிகளையும் மூட்டி விட்டவர்கள் இந்த மேலைத்தேய  மற்றும் சியோனிஸ உளவாளிகள் தான், இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்ட பின்னர் அதன் பிதாவான ராஜீவ் காந்தியினை கொலை செய்யத் தூண்டியவர்களும் இந்த சதிகாரர்கள் தான்! பிராந்தியத்திலிருந்து மேலைத்தேயம் நோக்கி தமிழ் போராளிகளின் நியாயமான உரிமைப் போராட்டத்தை நகர்த்தி தமது நலன்களுக்காக  நசுக்கி நாசமாக்கியவர்களும் அவர்கள் தான்!

இலங்கையும் இஸ்ரேலும் பயங்கர வாதத்திற்கெதிராக போராடுவதாக இலங்கையின் புதிய தலை முறையினரை இஸ்ரேல் மற்றும் இலங்கைத் தலைவர்கள் சிலர் நம்ப வைக்கின்றனர், காலனித்துவ பிரித்தானியாவும் ஏகாதிபத்திய அமெரிக்காவும் நேச நாடுகளும் இணைந்து பறந்து விரிந்த பலஸ்தீனை ஆக்கிரமித்து சர்வதேச சட்டங்களை மீறி நாள் தோறும்  சொந்த தாயகத்தையே இழந்து தவிக்கும் பாலஸ்தீன மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் காட்டு மிராண்டித்தனங்கள்  குறித்த விழிப்புணர்வை இன மத பேதமின்றி இலங்கை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.!

வட கிழக்கில் தமிழர்களை ஏவி முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்ய வைத்ததும், சிங்களவர்களை ஏவி தமிழர்களை இனச் சுத்திகரிப்புக் செய்ததும் இஸ்ரேல் தான்! கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் வருவதனை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பாத நிலையில் இலங்கையில் சிங்கள முஸ்லிம் இன முறுகல் தூண்டி விடப் பட்டுள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் போட்டா போட்டியின் சதுரங்க விளையாட்டில் இலங்கை பிரதான ஆடுகளமாக மாறி வரும் நிலையில் அமெரிக்க தலைமையிலான மேலைத்தேய மேலாதிக்கத்தை  கிழக்காசிய பிராந்தியத்தில் மேலோங்கச் செய்வதற்கு இலங்கையிலும் அல் காயிதா தாலிபான்  இஸ்லாமிய அடிப்படைவாத  பயங்கரவாதம் வேரூண்டுகிறது என்ற பிரச்சாரம் இன்று முடுக்கி விடப்பட்டுள்ளது.

யூத சியோனிச சக்திகளின் மூலோபாய திட்டமிடல்களின் அடிப்படையிலேயே இன்று அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் உலக விவகாரங்களைக் கையாளுகின்றன. அந்த வகையில் கிழக்காசியாவின் கேந்திர முக்கியத்துவமிக்க இலங்கையினை இஸ்லாத்திற்கெதிரான யூத சியோனிச பின்புலத்திலான சிலுவைப் போரின் கேந்திரமாக மாற்றுகின்ற நகர்வுகளை இஸ்ரேல்  பிராந்தியத்தில் மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச சதிகாரர்களின் நலன்கள் காக்க இனிமேலும் இன்னும் பல தசாப்தங்களுக்கு இரத்த ஆறு ஓடுவதை அனுமதிக்க முடியாது..! இனமுறுகல் களைத் தூண்டி இன்னும் நூதனமான  அழிவுகளை இஸ்ரேல் இங்கு சந்தைப் படுத்த அனுமதிக்க முடியாது..! சர்வதேச பிராந்திய சதிகாரக் கும்பல்களின் கைக்கூலிகளிடம்  நமது தலைஎழுத்து அடகு வைக்கப் படக் கூடாது..!

கட்சி அரசியலின்  குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இந்த நாட்டிலுள்ள தீய சக்திகளையும் காடையர்களையும் கூலிப்படைகளையும் தேசப் பற்றில்லாத இலாப நோக்கம் கொண்ட ஊடகங்களையும் எழுது கோள்களையும்  விலைக்கு வாங்கி  தமது சதி நாசகார பொறிகளுக்குள் இந்த அழகிய தேசத்தையும் அதன்  மக்களையும் உள்வாங்க எடுக்கப் படுகின்ற சகல முயற்சிகளையும் முறியடிப்பதற்கான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேச பிராந்திய சக்திகளுடன் இணைந்து தேசப் பற்றுள்ள சக்திகள்  அனைத்தும் ஒரே அணியில் நின்று இன மத மொழி வேறுபாடுகளைக் களைந்து முறியடிக்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles