Monday, September 27, 2021

இது கிறிஸ்தவர்கள் மீதும் தேசத்தின் மீதும் விழுந்த அடி என்பதனை விட முஸ்லிம் சமூகத்தின் மீது விழுந்த பேரிடியாகும்!

ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து எனது முகநூலில் அவ்வப்பொழுது இடப்பட்ட குறும் பதிவுகள்! – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

முஸ்லிம்கள் பலிக்கடாவாக்கப் பட்டாலும் இலக்கு வைக்கப் படுவது இலங்கையின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் சுயாதிபத்தியமுமாகும்!

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு; இலங்கையில் மையம் கொள்ளும் அமெரிக்க சீன பனிப்போர் மேகம்!

சவால்களில் உள்ள சந்தர்ப்ப்பங்களை மட்டுமே பாருங்கள்!
எல்லா சோதனைகளுக்குப் பின்னும் பல நன்மைகள் இருக்கும்!

ஊடகங்கள் முடுக்கிவிட்டுள்ள உளவியல் யுத்தம் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கும் மலிவான அரசியலாகும்!ஊடகங்களுக்கு கடிவாளம் வேண்டும்!

உண்மை உள்வீட்டில் விளக்காய் எரிய பொய் காட்டுத் தீயாய் வியாபிக்கிறது! அரங்கேரும் சதிகளுக்குப் பின்னால் தஜ்ஜால்களின் மேலாதிக்கம்!

இன்ஷா அல்லாஹ்,  எத்தகைய உளவியல் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் ஆன்மீக பலத்தையும், திராணியையும் புனித ரமழான் எமக்குத் தரும்!

உள்ளிருந்தும் புறமிருந்தும் வரும் சோதனைகள் கண்டு அஞ்சவோ பதற்றமடையவோ அவசியமில்லை, அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது!

ஜனாதிபதித் தேர்தலிற்கு முன் பொதுத்தேர்தல் வேண்டி அரசைக் கவிழ்க்க முஸ்லிம்களை (விலகச் செய்து) பலிக்கடாவாக்குவதில் விஷமிகள் குறி!

யுத்தத்திற்கு இல்லாத வாள் பலாக்காய் வெட்டுவதற்கா? என்ற சிங்களப் பழமொழி போல் இப்போது உதவாத முஸ்லிம் அரசியல் அதிகாரம் இனி எதற்கு ?

மூன்று தசாப்தங்களாக எமது அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் தான்தோன்றித் தனமாக இழைத்த தவறுகளின் பின்விளைவுகளே இன்றைய அறுவடை!

ஆட்சியைக் காப்பாற்றிய முஸ்லிம் அரசியல் வாதிகளை வைத்துக் கொண்டே மதரசா சட்டமூலம் மாதர் ஆடை சட்டமூலங்களை அவசர அவசரமாக நிறைவேற்ற பிரதமர் ரணில் முஸ்தீபு! முஸ்லிம்கள் ஆடை (சீருடை) விவகாரத்திலும் முஸ்லிம் விவகார அமைச்சு மீது அழுத்தம்!

முஸ்லிம்கள் நிரபராதிகள் என்று கூறிக் கொண்டே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் சமய கலாசார விவகாரங்களில் நெருக்குவாரங்கள் அதிகரிப்பு!

முன்னறிவிப்புசெய்யப்பட்ட சோதனைகளுக்குத் தான் முகம் கொடுக்கின்றோம்! நிலைகுலைந்து விட வேண்டாம், சவால்களை சந்திப்பது தான் வாழ்கை!

சமாதான சகவாழ்வு, சமயோசிதம் என எல்லை மீறும் சரணாகதியினை நன்மக்கள் வேண்டுவதில்லை! காட்டுமிராண்டிகளை திருப்திப் படுத்த முடியாது!

நிகாப் விடயத்தில் புரிந்துணர்வு ஏற்பட்ட பின்னரும் முஸ்லிம் மாதரின் ஆடை சீருடை விடயத்தில் மேலதிக அழுத்தங்களை ஏற்றுக் கொள்ளமுடியாது!

இனமதவெறி காட்டுமிராண்டிகள் சேதமாக்கிய மஸ்ஜிதுகள் வீடுகள் கடைகளை அரசு புனர்நிர்மாணம் செய்து தர கடமைப்பட்டுள்ளது!

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சஹர் இப்தார் வசதிகளின்றி மக்கள் அவதிப்படுகிறார்கள்  நிறுவன ரீதியிலான நிவாரணங்கள் சென்றடையும் வரை..

பற்றுக பற்றற்றவர் பற்று என்ற சமயப் பற்றும் பற்றின் பற்றுக தேசப் பற்று எனும் பற்றும் முஸ்லிம் ஊர்களில் தீயாய் பற்றவைக்கப் படுகிறது!

யா அல்லாஹ், சதிகாரர்களின் சூழ்ச்சிகளை, திட்டங்களை அவர்களின் மத்தியில் பிணக்குகளிற்கும் அழிவிற்கும் காரணமாக திருப்பிவிடுவாயாக! யா அல்லாஹ்! அக்கிரமக்காரர்கள் மீது உந்தன் அத்தாட்சிகளை காட்டுவாயாக!

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் இயக்க வெறி அறிவிலிகளின் காட்டிக் கொடுப்புகள் எரிகிற தீயில் எண்ணெய் வார்க்கும் செயலாகும்!

அவசரகாலச் சட்டம்/ ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் காட்டுமிராண்டிகள் தாக்குதல்கள் நடத்தி விட்டு தப்பிவிடுவதன் பின்னணி ?!!

தற்போது இடம்பெறும் இனவெறி காட்டுமிராண்டித் தனங்கள் தேர்தல்களுக்கான முஸ்தீபுகளேயன்றி ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவைகள் அல்ல!

தேசியத் தலைமைகளை மட்டும் அண்ணார்ந்து பார்த்திராது ஊர்மட்ட கலந்தாலோசனை (ஷூரா) சபைகளை விழிப்புக் குழுக்களை தோற்றுவித்துக் கொள்ளுங்கள்!

முகநூலில் அல்ல ஆதங்கங்களை அகநூலில் பதிந்து அல்லாஹ்விடம் முறையிடுவோம்!  நீதிவழங்குவதில் அவனைவிட சிறந்தவர் யாருமுண்டோ!  “துஆ”

பின் விளைவுகள் உணர்ந்து ஒரு தர்கத்தை தவிர்த்துக் கொள்வது தான் அறிவு. சமூக ஊடகங்களில் உசுப்பேற்றுவோர் துணைக்கு வரமாட்டார்கள்.

புனித ரமழான் மாதம் இடம் பொருள் ஏவல் அறிந்து பொறுமையுடனும் பொறுப்பணர்வுடனும் நடந்து கொள்வோம்! வாதப்பிரதி வாதங்கள் தவிர்ப்போம்!

புதிய அச்சுறுத்தல்களில் இருந்து தேசத்தைக் காக்க முஸ்லிம்கள் மட்டுமல்ல சிங்கள தமிழர்களும் தங்களை சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டும்!

SAMSUNG CSC

இலங்கை முஸ்லிம்கள் 99.99% தேசப்பற்றுடைய சமாதான சகவாழ்வு விரும்பிகள் என்பதனை சுற்றிவலைப்புக்கள் தேடல்கள் நிரூபித்துள்ளன!

யா அல்லாஹ், எம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்பின் உம்மா வாப்பா மீது எல்லையில்லா உன்தன் ஈருலக அருள் பாக்கியங்களையும் சொரிவாயாக!

ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து இடம்பெறுவது பிரதான தேர்தல்களுக்கான இனமதவெறி முஸ்தீபுகள்! ஊடக மாபியாக்களும் முழு வீச்சில்!

அரசியல் நோக்கங்களுடன் கக்கப்படுகின்ற விஷமக் கருத்துக்கள் கண்டு யாரும் அச்சப்படவோ நிலைகுலைந்திடவோ அவசியமில்லை! இது கலங்கிய குட்டை!

அல்லாஹ்வின் கலாம் தந்த அருள் தேடும் மாதமிதில்
மருள் ஓய்ந்து விடியல் வரும் காலமது வெகு தூரமில்லை!

அடிப்படை உரிமை மீறல்கள் இடம் பெறின் ஆதாரபூர்வமாக பொலிஸ், உயர்நீதி மன்ற முறையீடுகள் செய்வது குறித்த விழிப்புணர்வு அவசியம் !

முடியுமான பிரதேசங்களில் பொலிசார் இராணுவ அதிகாரிகள் அரசியல் பிரமுகர்களை அழைத்து விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துதல் கலோசிதமனது!

ரமழான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு மஸ்ஜிதுகளூடாக பங்கீடு செய்யப்படும் உலர் உணவு பொதிகள் சதகாக்களை இம்முறையும் சிறப்பாக செய்வோம்!

பலிக்கடாவாக்கப் படுவது முஸ்லிம்கள் அல்ல, இந்த அழகிய தேசமே! என்பதனை ஏனைய சமூகங்கள் புரிந்து கொள்ள ஊடகங்கள் தடையாக இருக்கின்றன!

SRI LANKA-BLAST/

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையோர் கைது அல்லது மரணம்! அச்சமின்றி வழமைக்கு திரும்புங்கள். பதில் பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி.

பிராந்திய சர்வதேசிய வல்லரசுகளின் மேலாதிக்க கெடுபிடிக்குள் இலங்கை! இன,மத வேறுபாடுகள் களைந்து தேசத்தைக் காப்பதே இன்றைய தேவை.

தீமைகளில் சிறியதை தெரிவு செய்வதே நமது தேசிய அரசியலாக மாறி வருகிறது!  இடது சாரி அரசியல் குறித்து தீவிர கவனம் வேண்டும்!

யுகத்தின் மிகப் பெரிய சாபக்கேடு திறமை ஆற்றல் உள்ளவர்களை தேடுவதனை விடுத்து பிரபல்யங்களைத் தேடியலைவது. 
முற்றத்து மல்லிகைகள் ஆயிரம்!

ஈஸ்டர் தாக்குதல்கள்: 100 வருடங்கள் அல்ல 1440 வருடங்களுமே நாம் பின் சென்று விட்ட பிரமை! எல்லா சோதனைகளும் தாண்டி இந்த உம்மத்து பயணிக்கும்!

மலரும் புனித ரமழான் அருளும் அறமும் ஆன்மீக ஈடேற்றமும் அமைதியும் சமாதானமும் சுமந்துவர எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்திப்போம்!

ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் சுனாமியாய் சூழ்ந்து கொண்ட சத்திய சோதனை! உறவுகளே, மனம் தளர்ந்திடாதீர், நிச்சயமாக விடியல் வெகு தூரமில்லை!

பிரார்தனை “துஆ” விசுவாசியின் ஆயுதம், தொழுகை பொறுமை பேணி அல்லாஹ்விடம் உதவி தேடுவோம்! புனித ரமழானை ஆர்வத்துடன் வரவேற்போம்!

அக்கம் பக்கம் இரவு பகலாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸார் படைவீரர்களுக்கும் நீர், தேணீர் போன்றவை தேவைப்படலாம்!

நீண்ட வெண்ணிற தோப் /ஜுப்பா ஒரு கலாசார ஆக்கிரமப்பாக சமாதான விரும்பிகள் கூட பார்ப்பதனால் இடம் பொருள் ஏவல் அறிந்து அணிவது ஆரோக்கியம்!

கடந்த மூன்று தசாப்த யுத்தகாலத்தில் முஸ்லிம் சமூகம் உள்ளக சீர்குலைவுகளை கண்டு கொள்ளவில்லை!

உள்ளிருந்தும் புறமிருந்தும் வரும் சோதனைகள் கண்டு அஞ்சவோ பதற்றமடையவோ அவசியமில்லை, அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது!

பாதுகாப்பு அச்சம் இருப்பின் தம்மை தனித்து அடையாளம் காட்டும் கருப்பு மற்றும் வெண்ணிற ஆடைகளை தவிர்த்துக் கொள்வது தான் வாஜிபாகும்!

எல்லாத்துக்கும் ஆதாரம் கேக்குறாங்க! முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது ஒவ்வொரு விசுவாசியின் மீதும் விதிக்கப்பட்ட கடமையாகும், மூலாதரங்களுடன் மூளை ஆதாரமும் அல்லாஹ்வால் அருளப்பட்டது தான்!

இன மத வெறி சக்திகள் மாத்திரமன்றி நேச சக்திகளும் அரேபிய கலாசார ஆக்கிரமிப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்! இடம், பொருள், ஏவல் அறிக.

எல்.டி.டி ஈ, மற்றும் டயஸ்போரா மூலம் அடைய முடியாமல் போனதை அல்காயிதா, ஐ எஸ்.எஸ் மூலம் அடைந்து கொள்ள மேலைத்தேய மேலாதிக்கம் முயற்சி.

அன்போடும் கரிசணையோடும் இன்று சொல்லப்படும் அறிவுரைகள் உள்வாங்கப்படா விட்டால் வம்போடும் வன்முறைகளோடுமே நாளை எமது பொழுதுகள் கழியும்!

பிராந்தியத்தில் வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் ஆரம்பம்! இலங்கையை மையம் கொள்ளும் நகர்வுகள் !

ஊர் மட்ட ஷூரா அமைப்புகளை நிறுவி கூட்டுப் பொறுப்புடனும் தலைமைத்துவக் கட்டுக் கோப்புடனும் பாதுகாப்பு தரப்புகளுடன் ஒத்துழைப்போம்!

எல்லா ஊர்களிலும் சகல தரப்புகளையும் உள்வாங்கிய ஆலோசனை சபைகளின் வழிகாட்டலில் ரமழான் மாத நடவடிக்கைகளை கட்டுக்கோப்புடன் மேற்கொள்வோம்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles