அறபு மொழி கற்கைகளை இலங்கையில் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப மேன்படுத்தல் அவசியமாகும்.!

0

அறபு மொழி இன்று அரசியல் பொருளாதார இராஜதந்திர தேசிய பிராந்திய சர்வதேச கேந்திர முக்கியத்துவமிக்க பாதுகாப்பு நகர்வுகள்,யுத்தம் சமாதானம் குறித்த நகர்வுகளுடன் பெரிதும் தொடர்புபட்டுள்ளது.

அறபு முஸ்லிம் முஸ்லிம் உலகுடனான எமது உறவுகளை பலப்படுத்துவதற்கும் அதன் மூலம் இந்த தேசத்தினதும் அமைதி சமாதானம் சகவாழ்வு அபிவிருத்தி ஒருமைப்பாடு என்பவற்றிற்கு காத்திரமான பங்களிப்புக்களை செய்வதற்கும் அறபு மொழி பெரிதும் உதவுகின்ற மொழியாகும்.

உலகில் உள்ள அனைத்து மதங்களினதும் மொழிகளில் உயிரோட்டத்துடன் வாழுகின்ற ஒரு மொழி மாத்திரமல்லாது இன்று முழு உலகினதும் கவனத்தை ஈர்த்துள்ள மத்திய கிழக்கின் இஸ்லாமிய எழுச்சியின் மொழி என்பதால் அது சர்வதேச முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

Arabic 2முஸ்லிம்களைப் பொறுத்தவரை அறபு மொழியை முறையாக கற்பதன் மூலம் அல்-குரான், சுன்னாஹ் உற்பட இஸ்லாமிய கற்கைகளை கற்றுக் கொள்வதற்கும், தமது ஓதல்களை, வணக்க வழிபாடுகளை அர்த்தமுள்ள உயிரோட்டமுள்ளவைகளாக மாற்றிக் கொள்வதற்கும், ஆன்மீக உயர்விற்கும் அறபு மொழி பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

சாதாரண உயர்தரம் வரை முறையாக அரபு மொழிகறவர்கள், அறபு இஸ்லாமிய கற்கை கல்லூரிகளுக்கு செல்லும் பொழுது அவற்றின் தராதரங்கள் உயர்கல்வி தராதரங்களாக மாறுகின்ற நிலையம், கற்கின்ற காலத்தின் அளவினை குறைத்துக் கொள்ளும் வாஈப்பும் அதிகரிக்கும், அதோடு மிம்பர் மேடைகளின் தராதரங்களும் உயருகின்ற நிர்பந்த நிலையம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் கல்வித் திட்டத்தில் சர்வதேச மொழிகளுடன் அறபு மொழியும் அங்கீகாரம்பெற்றிருக்கின்றது, ஆனால் பெயரளவிலேயே அறபு மொழிக்கான பாட விதானம் இருக்கின்றது, உயர்தரப் பரீட்சைக்கும் அரபு மொழியை ஒரு பாடமாக கற்க முடியும், ஓரிரு பல்கலைக் கழகங்களிலும் அறபு மொழி பீடங்கள் இருக்கின்றன.

பேராதனை பல்கலைக் கழகத்தில் 1986 ஆம் ஆண்டு அறபு மொழியில் சிறப்பு பட்டதாரி கற்கைகளை வெளிவாரியாக நானும் நிறைவு செய்துள்ளேன், கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்ற பொழுதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கடமைகளை பொறுப்பேற்கவில்லை.

இலங்கையை பொறுத்த வரையில் ஆரம்பப் பாடசாலை முதல், சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக் கழகம் வரைக்குமான அறபு மொழி பாடவிதானங்களை தயார் செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது, அறபு நாடுகளில் அறபு மொழியை தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கான கற்கைகளும், பாடவிதானங்களும், நவீன கற்பித்தல் முறைகளும் பிரயோகத்தில் உள்ளன, அவற்றை நாம் பெற்று எமக்கான பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்.

சர்வதேச தரம் வாய்ந்த ஒரு பாட விதானத்தை எம்மால் தயார் செய்து கொள்ள முடியுமாயின், இலங்கையின் கல்வி உயர் கல்வி அமைச்சின் அங்கீகாரத்தை காலப் போக்கில் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உண்டு, பிர மொழி கற்கைகளுக்கான பிரிவில் கல்வி அமைச்சு அறபு மொழிக்கு உரிய இடத்தை வழங்கியுள்ளது.

அடுத்த கட்டமாக அரபு மொழி கற்பிக்கும் தகைமை வாய்ந்த ஆசிரியர்களை உள்வாங்குதல் அவர்களை பயிற்றுவித்தல் போன்ற பாரிய பணிகள் இருக்கின்றன, தென் கிழக்கு பலகலைக் கழகம் கருத்திட்டமாக இருக்கின்ற பொழுது மேற்படி இலக்குகளை அடிய முடியுமான அறபு மொழி பீடம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பான திட்ட வரைவொன்றை அமைச்சர்அஷ்ரஃப அவர்களிடம் அன்று உலமா காங்கிரஸ் சார்பாக நாம் முன்வைத்திருந்தோம்.

அறபுமொழி கற்கைகளுக்கான ஒரு (ARABIC LANGUAGE ACADEMY ) ஸ்தாபிப்பதற்கான கருத்திட்டமொன்றை தாயார் செய்து வைத்துமுள்ளேன், அது தொடர்பாக பல்வேறு தரப்புக்களுடனும் கலந்துரையாடி வருகின்றேன,

இன்ஷா அல்லாஹ் இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் தேசிய நலன்களையும் கருத்திற் கொண்டு சர்வதேச தராதரங்களுக்கு அமைய அரபு மொழி கற்பிக்கும் காலம் வர வேண்டும் அது எமது தெரிவும் உரிமையுமாகும்.

கொரியன், சீன, ஜப்பானிய , பிரெஞ்சு, ஆங்கில மொழிகள் போன்று அறபு மொழி அபிவிருத்திக் கற்கைகள் இலங்கையின் வெளிநாட்டுச் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை செய்ய முடியும், அறபு தேசங்களில் சிறந்த தொழில் வாய்ப்புக்கள், வெளிநாட்டுச் செலாவணி, அரசியல் இராஜ தந்திர உறவுகளின் மேம்பாடு என பல்வேறு நன்மைகள் தேசத்திற்கு இருக்கின்றன.

அறபு மொழியை கற்பதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளவர்கள் குறிப்பாக அறபு இஸ்லாமிய கல்லூரிகளில் கற்பவர்கள் அந்த மொழியில் சிறப்புத் தேர்ச்சியை பெற்றுக் கொள்ளுங்கள்.. ஷரிஅத் துறை கற்கைகளுக்காக மாத்திரம் கற்பவர்கள் குறிப்பாக நவீன பிரயோக மொழியில் பாண்டித்தியம் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை, அதேபோன்று பலர் கற்கைகளை நிறைவு செய்த பின் அறபு மொழியிற்கு தலாக் சொல்லி விடுகின்றனர்.

About author

No comments

வளர்ச்சி பாதையில் கட்டார் இலங்கை இராஜ தந்திர உறவுகள் !

Post Views: 532 கலாநிதி இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் கத்தார் இலங்கை  இராஜதந்திர உறவு 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும்   1997 ஆம் ஆண்டே இலங்கைக்கான தூதுவராலயம் கத்தார் தலை நகர் தோஹாவில் திறந்து வைக்கப்பட்டது, ...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com