இஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் !

0

உலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய  நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற அதேவேளை 49 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் உலகில் இருக்கின்றன.

உலகில் இந்தோனேசியவிலேயே ஆகக் கூடிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழுகிறார்கள்  21 கோடி முஸ்லிம்களும், இரண்டாவதாக பாகிஸ்தானில் 17. 8  கோடி முஸ்லிம்களும்  மூன்றாவதாக இந்தியாவில் 17.6 கோடி முஸ்லிம்களும் செறிவாக வாழுகின்றனர். இரண்டாம் இடத்தில் இந்திய இருப்பதாகவும் சில கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. பங்களதேசில் 14 கோடி முஸ்லிம்கள் வாழுகின்றனர்.

ஆக மொத்தத்தில் இந்திய துணைக் கண்டத்தில் மாத்திரம் சுமார் 50 கோடி முஸ்லிம்கள் வாழுகின்றார்கள்.

எல்லைகள் தாண்டிய முஸ்லிம் உலக எழுச்சியில் இந்த முஸ்லிம்களது பங்களிப்பு மகத்தானதாக இருக்க வேண்டும், முஸ்லிம் உலகிற்கு எதிரான சதிகளை முறியடிப்பதிலும் இஸ்லாமிய தேசங்களை இஸ்லாமிய கிலாபத் ஒன்றினை நோக்கி மீட்டெடுப்பதிலும், முஸ்லிம் உலகின் ஒருமைப்பாட்டிலும் இந்திய துணைக் கண்ட முஸ்லிம்களது பங்களிப்பு கேந்திர முக்கியத்துவமானதாகும்!

இஸ்லாமிய காஷ்மீரை மீட்டேடுப்பதாயின்மு சரி, மூன்றாவது புனித  மஸ்ஜிதான பைத்துல் மக்திஸை  மீட்ப்பதாயினும் சரி, வரலாற்று முக்கியத்துவமிக்க அரபு தீப கற்பத்தை இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதாயினும் சரி, முஸ்லிம் உலகை கொடுங்கோலர்களது கெடுபிடிகளில் இருந்து மீட்பதாயினும் சரி, முஸ்லிம் உலகின் வளங்களை முஸ்லிம் உம்மத்தை மென்மேலும் பலப்படுத்துவதற்கும், மனித குல விமோசனத்திற்கு வசப்படுத்துவதாயினும் சரி இந்தியத் துணைக் கண்ட முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாதது.

ஆசியாவில் இஸ்லாமிய எழுச்சி திட்டமிட்ட அடிப்படையில் நெறிப்படுத்தப் படல் வேண்டும்.

107 கோடி இந்திய சனத்தொகையில் சுமார் 14% முஸ்லிம்கள் இருக்கின்றார்கள், தமிழ் நாட்டில் சுமார் 40 இலட்சம் முஸ்லிம்கள் வாழுகிறார்கள், இலங்கையில் சுமார் 20  இலட்சம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழுகிறார்கள்.  இந்திய பாபுயுலர் முன்னணி போன்ற அமைப்புக்கள் பிராந்திய உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரல் வேண்டும்.

நவீன யுகத்தில்  இஸ்லாத்திற்கும் இஸ்லாத்தின் எதிரிகளான மேலைத்தேய யூத சியோனிஸ சிலுவை சதிகார சக்திகளுக்கும் இடையில் இடம் பெரும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான சமரில் பிழையான தரப்புக்களுடன் நமது தேசங்கள் கைகோர்ப்பதனை தேசப்பற்றுள்ள எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அவ்வாறான ஒரு வரலாற்றுப் பனை நோக்கி தமது கவனத்தை பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம்கள் செய்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இது விரிவான ஒரு ஆய்விற்கான மற்றும் நிதானமாக ஆராயப்பட்ட நகர்வுகளுக்கான ஒரு ஆரம்பப் புள்ளியே, முஸ்லிம் உலகின் புத்தி ஜீவிகள் இது குறித்து ஆய்வுகளையும் கலந்துரையாடல்களையும் பரவலான அடித்தளங்களில் மேற்கொள்ள வேண்டும்!

About author

No comments

சமூக உளவியலில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியும் பொறாமையும்.

Post Views: 858 அமானிதங்கள் பாழ் படுத்தப் படுகின்றமைகான முதன்மையான காரணி. போட்டி பொறாமை ஆற்றாமை எனும் இழி குணங்கள் இயல்பாகவே மனித மனங்களில் ஆதிக்கம்செலுத்துகின்றன, மற்றொருவருக்கு இறவன் வழங்கியுள்ள அறிவு ஆற்றல் ஆரோக்கியம்,திறமைகள், ...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com