முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டுள்ள சவால்களும், அவற்றின் பின்புலமும் ஒருசில தீர்வுகளும்.!

0

 

முஸ்லிம்களுக்கெதிரான காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்களும் அடாவடித்தனங்களும் !

 பின்புலம் :

 • போருக்குப் பின்னரான உள்நாட்டு அரசியல் நகர்வுகள்.
 • சர்வதேச மற்றும் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பூகோள அரசியல் மற்றும் இராஜதந்திரமும் உளவுச் சக்திகளின் தொழிற்பாடுகளும்
 • முஸ்லிம் அரசியல்வாதிகளின்  சாணக்கியமின்மையும் சரணாகதி அரசியலும்…அவர்கள்  தீர்வின் ஒரு பகுதியாகவன்றி சவால்களின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளமை.
 • முஸ்லிம் சமூகத்திற்கான நன்கு ஆராயப்பட்ட மூலோபாய தேசிய மற்றும் பிராந்திய நிகழ்ச்சி நிரலின்மை…
 • முஸ்லிம் சமூகத்தில் கருத்து வேறுபாடுகளை சரியான பரிமாணங்களில் கையாளத் தெரியாமையினால் புரையோடிப்போயுள்ள  வேற்றுமைகளும் பிளவுகளும் பிணக்குகளும் எமது அரசியல் சமூக கலாச்சார  கனதியை மதிப்பிழக்கச் செய்துள்ளமை.
 • கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவி  வந்த  இன ரீதியிலான அடையாள அரசியலும், இன ரீதியிலான பாகு பாடுகளும்  இனங்களுக்கிடையில் ஆழமாக வேரூன்டியுள்ள தப்பபிப்பிராயங்களும் சந்தேகங்களும்.
 • முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சம் , இன விகிதாசாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம்,கல்வித் துறையிலான ஆர்வம், திட்டமிடலின்றி அங்காங்கே தோன்றிவரும் பள்ளி வாயல்கள் குறித்த அச்சம் , இன ரீதியிலான காழ்ப்புணர்வு போன்ற உடனடிக் காரணங்கள் அரசியல் இராஜ தந்திர நகர்வுகளுக்காக தீய சக்திகளால்தீவிரமாக கையாளப்படல்.
 • இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் “ஹலால் ” சான்றிதழ் விவகாரம் பெரும் தடையாக உள்ளதால் சர்வதேச அளவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் பிரச்சாரமும் முதலீடும் கூலிப்படைகளும்.

 

தீர்வுகள்:

 • பலதரப்பு பிரதிநிதிகளையும் கொண்ட தலைமைத்துவ கட்டமைப்பொன்றை நாம் ஏற்படுத்திக் கொள்ளல்.
 • முஸ்லிம் சமூகத்திற்கான சவால்களாக இவற்றை பார்க்காது   மொத்த தேசத்தினதும் சமாதான சகவாழ்வுக்கான அச்சுறுத்தலாக அணுகுதல்.
 • அரச உயர் மட்டத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தல்.
 • பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் மதத்  தலைமைகளை அணுகி நியாய தர்மங்களிற்கான அவர்களது ஆதரவைப் பெறுதல்.
 • அத்துமீறல்களை கையாள்வதற்கான ஒரு சட்ட ஆலோசனைக் குழுவையும் அவ்வப்போது தேர்ச்சிபெற்ற முஸ்லிம் முஸ்லிமல்லாத சட்டத் தரணிகளின் சேவைகளை நாடு தழுவிய மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கான நிதியம் ஒன்றை தாபித்துக் கொள்ளல்.
 • இந்த சவால்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் மற்றும் இராஜ தந்திர நகர்வுகளை இனம்கண்டு அவற்றை அரசியல் மற்றும் இராஜ தந்திர வழிமுறைகளில் முறியடித்தல்.
 • தேசிய ஊடகங்களில் இன நல்லுறவை வளர்த்தெடுப்பதில் அக்கறையுள்ள பெரும்பான்மையின அரசியல் வாதிகள் மதத் தலைவர்கள் கல்விமான்கள் எழுத்தாளர்களைக் கொண்டு தீய சக்திகளின் பிரச் சாரங்களை முறியடிக்க முயற்சிகளை மேற்கொள்ளல்.
 • இந்த  நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பொருளாதாரம் மதம் கலாச்சாரம் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் மற்றும் தேசிய வாழ்வில் அவர்களது பங்களிப்பு  குறித்த சமூகம் சார்ந்த மூலோபாய திட்டமிடல் ஒன்றை வகுத்துக்கொள்ளல்  .
 •  இந்த நாட்டு முஸ்லிம்களின் வரலாறு தேசத்திற்கான பங்களிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு சகோதர இன புதிய தலைமுறையினரை அறிவுறுத்தல்.
 • தேசிய சமூக அரசியல் பொருளாதார வாழ்வில் முஸ்லிம்களது அணுகுமுறை  நடத்தைகளை மீளாய்வுக்கு உற்படுத்தல்.
 • முஸ்லிம் உலகுடனான தொடர்புகளை வலுப்படுத்தி எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதோடு  தேசத்திற்கான பங்களிப்பையும் செய்தல்.
 • கடல் கடந்து வாழும் இலங்கை முஸ்லிம்களின் டயஸ்போரா  கட்டமைப்பொன்று உடனடியாக தோற்றுவிக்கப் படல் வேண்டும்.
 • தேச நலன்களிற்கு  பாதகமற்ற மாறாக பங்களிப்புச் செய்கின்ற சமூகத்திற்கான சர்வதேச விவகாரபொறிமுறை ஒன்றின் தேவை தற்போது வெகுவாக உணரப் படுகிறது.
 • மேலைத்தேய மேலாதிக்க சக்திகள், யூத சியோனிஸ சாதிகாரர்கள்,முஸ்லிம் உலகிற்கு  எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள நவீன காலனித்துவ சுரண்டல் மற்றும் சிலுவை யுத்தம் தொடர்பான சகலசமூகங்களுக்குமான அறிவூட்டல்.

அரசியல் இராஜ தந்திர அழுத்தக் குழு:

சகல முஸ்லிம் சிவில் தலைமைகளினதும் இஸ்லாமிய இயக்கங்களினதும் தொண்டர் நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் இராஜ தந்திர அழுத்தக் குழு ஒன்று உடனடியாக தோற்றுவிக்கப் பாடல் வேண்டும், ஒவ்வொரு கால சூழ்நிலைகளுக்கும் ஏற்ற பரி பாஷைகளை, வித்தைகளை கலைகளை, ஆயுதங்களை (சாதனாங்களை ) நாம் கையிலேடுத்தேயாக வேண்டும்.

ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கமும் அரசியல் செய்ய வேண்டுமென்பதில்லை, தனித்தனியாக இயக்கங்கள் தம்மை அரசியல்ரீதியாக அடையாளப் படுத்திக் கொள்வதும் தற்போதைய சூழலில் ஆரோக்கியமில்லை.

முஸ்லிம்களுக்கு தற்போது விடுக்கப் படும் சவால்களுக்குப் பின்னால் பாரிய அரசியல் இராஜ தந்திர நிகழ்ச்சி நிரல் உள்நாட்டு வெளி நாட்டு பின் புலன்களுடன் இருப்பதனை சகலரும் உணர்ந்த்குள்ள நிலையில் காலத்துக்கு தேவையான யுக்திகளையும்உத்திகளையும் நாம் -பேசுபொருளாக மாத்திரம் வைத்துக் கொள்ளாது- கையாளவும் வேண்டும்

சவால்களுக்குப் பின்னால் உள்ள சந்தர்ப்பங்கள்: 

 • வேற்றுமைகளுக்கு மத்தியிலும் பொதுவான இலக்குகளில் உடன் படுகின்ற உயரிய பண்பாட்டை இந்த சமூகம் வளர்த்துக் கொள்ளல்.
 • இந்த நாட்டு முஸ்லிம்களுக்கான நன்கு ஆராயப்பட்ட சிவில் மற்றும் அரசியல் தலைமைக் கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்ளல்
 • இந்த நாட்டு முஸ்லிம்களின் சமூக அரசியல் பொருளாதார கல்வி கலை கலாச்சார மற்றும் இன்னோரன்ன துறைகளிலான வாழ்வினை வளப்படுத்துகின்ற தேசத்திற்கான நமது பங்களிப்பை வடிவமைக்கின்ற மூலோபாய திட்டமிடல்களை மேற்கொள்ளல்.
 • இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் நிலவுகின்ற விஷமப் பிரச்சாரங்களினை முறியடித்து தப்பபிப்பிராயங்களையும் களைதல்.
 • இனங்களுக்கிடையிலான  புரிந்துணர்வை வளர்ப்பதோடு சமாதான சகவால்விற்கான சரியான அடித்தளங்களை இடுதல்.
 • முஸ்லிம் உலகுடனான தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுதல்.
 • இஸ்லாமிய கலநிலயங்கள் தவா அமைப்புக்களின்  பரப்புக்களை பன்முகப்படுத்தல்.
 • சிவில் சமூகத்தை வலுப்படுத்தல்.
 • கடல் கடந்து வாழும் இலங்கை முஸ்லிம்களின் டயஸ்போரா  கட்டமைப்பொன்று தோற்றுவிக்கப் பட்டு   சமூகத்திற்கான சர்வதேச விவகார பொறிமுறை  ஒன்றினை உருவாக்கிக் கொள்ளல்.
 • சர்வதேச அரங்கில் அடாவடித்தனம் புரியும் தீய சக்திகளின் சதிவலைகளில் இருந்து தேசத்தையும் சமூகத்தையும் காத்தல்…

 

About author

No comments

சமகால வங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்கான மாற்றீடு அவசியம்.

(எனது முகநூலில் இருந்து..Inamullah Masihudeen ) சமகால வங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்கான மாற்றீடு அவசியம் என்பதில் எல்லோரும் உடன்படுவார்கள், ஆனால் அது வானிலிருந்து வரவேண்டும என்று தான் பலரும் காத்திருக்கின்றார்கள், களத்தில் மாற்றீடு பற்றி யார் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com