அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய தீர்மானங்கள்.!

0
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்திய,  மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி பெரிய ஜும்ஆ(கண்டி லைன்) மஸ்ஜிதில் கௌரவ தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் 25 மாவட்டக் கிளைகளினதும், 120 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனர்கள் இப்பொதுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அன்று அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது, அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்கள் தலைவராகவும்  தெரிவு செய்யப்பட்டார்.

1)  அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி

2)  அஷ்-ஷைக் ஏ.சீ.எம் அகார் முஹம்மத்

3)  அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

4)  அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல்

5)  அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக்

6)  அஷ்-ஷைக் எம்.எச்.எம் யூசுப்

7)  அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா

8)  அஷ்-ஷைக் எஸ.எச் ஆதம்பாவா

9)  அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம்

10) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம்

11) அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முர்ஷித்

12) அஷ்-ஷைக் எம்.கே அப்துர்றஹ்மான்

13) அஷ்-ஷைக் எச் உமறுத்தீன்

14) அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பர்;

15) அஷ்-ஷைக் எம்.எல்.எம்.இல்யாஸ்;

16) அஷ்-ஷைக் எம்.எப்.எம்.பாஸில்

17) அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்;

18) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர்

19) அஷ்-ஷைக் அர்கம் நூறாமித்

20) அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத்

21) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில்;

22) அஷ்-ஷைக் ஏ.பி.எம். அலியார்;

23) அஷ்-ஷைக் எஸ்.எம்.எம் ஜுனைத்

24) அஷ்-ஷைக் எஸ்.ஏ.பி.ஏ.எஸ் சுப்யான்

25) அஷ்-ஷைக் எஸ்.எச் சறூக்

அத்தோடு ஜம்மியாஹ் கீழ் காணும் முக்கியமான  தீர்மானங்களை நிறைவேற்றியது:
ACJU 41) எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன நல்லிணக்கத்துடன் வாழும் நிலையில், சில இனவாத சக்திகளின் செயற்பாடுகள் பொதுவாக நாடும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர் கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளன. பொதுவாக நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் குறிப்பாக முஸ்லிம்களினதும் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் அரசும் அரச அதிகாரிகளும் மதிப்பளித்து இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆவன செய்யுமாறு இம்மாநாடு அரசை வேண்டிக்கொள்கிறது.
 
2) இந்நாட்டில் வாழும் சகல இனங்கள் மத்தியிலும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென இம்மாநாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. அதேபோன்று எந்த ஒரு நிந்தனையான பேச்சையும் அரசு அனுமதிக்கக் கூடாதெனவும் அதனைத் தடுக்கும் வகையிலான சட்டங்களை அரசு அவசரமாக இயற்ற வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
 
3) நம்நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேதகு ஜனாதிபதி அவர்கள் சமயங்களுக்கிடையிலான ஓர் உயர் ஆலோசனைச் சபையை நியமித்துள்ளதை இம்மாநாடு வரவேற்பதோடு சபையின் பணிகள் எல்லா வகையிலும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றது.
 
4) ஐ. எஸ் இயக்கம் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமான இயக்கம் என்றும் அவ்வியக்கம் போன்றவற்றின் தீவிரவாத செயற்பாடுகள் அனைத்தையும் இம்மாநாடு முற்றிலும் நிராகரிப்பதோடு, அவற்றின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் இஸ்லாமிய போதனைகளுக்கு உட்பட்டதல்ல என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. மேலும் உலக மட்டத்தில் இவ்வியக்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் அதன் ஆரம்ப காலத்திலேயே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டித்தது என்பதையும் இம்மாநாடு இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றது.
 
5) சமூகத்தின் நலனையும் அதன் ஸ்திரப்பாட்டையும் கருத்திற் கொண்டு தஃவாப் பணியில் ஈடுபடும் ஆலிம்களும், ஏனைய தஃவாப் பணியாளர்களும் கருத்து வேற்றுமைகளைப் புறந்தள்ளி, பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் தஃவாப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்றும், எப்போதும் பிறர் இஸ்லாத்தை தவறாகப் புரிந்து கொள்ளாதிருக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் இம்மாநாடு சகலரையும் கேட்டுக் கொள்கிறது.
 
ACJU66) நீண்ட காலமாக அரச பாடசாலைகளில் அறபு, இஸ்லாம் பாடங்களைப் போதிக்க ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்படாதிருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் புதிதாக அறபு, இஸ்லாம் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்குமாறும், அவ்வாறு சேர்த்துக் கொள்ளும் போது மத்ரசாக்களினால் வழங்கப்பட்ட மௌலவி, அஷ்-ஷைக் சான்றிதழை ஒரு முக்கிய தகைமையாகக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்களையும் கல்வி அமைச்சரையும் கல்வி உயர் அதிகாரிகளையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
 
7) கதீப்மார்கள் தமது குத்பாக்களை வினைத்திறன்மிக்கதாகவும் சமூக நல்லிணக்கத்தைத் தூண்டும் வகையிலும் அமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் உரிய நேரத்தில் குத்பாக்களை முடித்துக் கொள்ள வேண்டுமெனவும் இம்மாநாடு அனைத்து கதீப்மார்களையும் கேட்டுக் கொள்கிறது.
 
மேற்படி தீர்மானங்களை மக்கள் மயப்படுத்துவதிலும் உரியவர்களிடம் சென்றடையச் செய்வதிலும் ஜம்இய்யாவின் கிளைகள், ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், துறைசார்ந்தோர் போன்ற சகலரையும் ஈடுபடுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.

About author

No comments

அக்குரணை : அஸ்னா மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் புத்திஜீவிகளின் கூட்டுப்பொறுப்பு!

Post Views: 420 அக்குரணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகமும் உலமாக்களும் உஸ்தாத் மன்ஸுரும் கூட்டுப்பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். சொல்லப்படுகின்ற சகல ஆதங்கங்களையும் உள்வங்கியவனாக, சொல்பவர்களின் வயது தாண்டியும் புரிந்தவனாக மேலே சொல்லப்பட்ட ...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com