Friday, July 30, 2021

வளங்களை முகாமை செய்ய முடியாது தசாப்தங்களை கடத்தும் சமூகம்!

ஒரு உண்மை தெரியுமா?
 
ACJU (2)இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்த வரை எல்லாத் துறைகளிலும் சமூகத்தில் மிகவும் சிறந்த கல்விமான்களும், புத்தி ஜீவிகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள், ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றார்கள்.
 
ஆனால் அவர்களுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்படுவதில்லை, ஒரு சில பிரபலங்களை சமூகம் காத்தமுல் அறிஞர்களாக நம்பி பின்னால் செல்கின்றது, போதாக்குறைக்கு வெளிநாட்டு பிரமுகர்களை அழைத்து வருகின்றது.
 
ஒரு சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சுகாதார, கல்வி கலை கலாச்சார பண்பாட்டு வாழ்வியலை நெறிப்படுத்தவும், இருப்பு பாது காப்பு என்பவற்றை உறுதிப் படுத்திக் கொள்ளவும், உரிமைகளை வென்றெடுக்கவும், தேசிய வாழ்வில் தங்களை சரியான தளங்களில் நிலைப் படுத்திக் கொள்ளவும் போதுமான மதி நுட்பமும் திறன்களும் இங்கு மிகை நிரம்பலாகவே இருக்கின்றது.
 
இஸ்லாமிய அறிவை கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும், முஸ்லிம் உம்மாவுடன் முறையான உறவுகளைப் பேணவும் தாராளமாக அறிவு முதிசங்களும், கல்வி ஞானங்களும் தாராளமாகவே இருக்கின்றன.
 
ஆனால் நாங்கள் எங்களை ஒழுங்கு படுத்திக் கொள்ளவும், அழகிய கூட்டுப் பொறுப்புடன் கூடிய தலைமத்துவக் கட்டமைப்புகளை அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரை அமைத்துக் கொள்ளவும் இன்னும் தயாராகவில்லை.
 
இங்கு நாட்கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் பேசுவதற்கும், எழுதுவதற்கும், ஆராய்ச்சிகள் செய்வதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும், பதிவேற்றம் செய்வதற்கும், சமர்ப்பணங்கள் செய்வதற்கும் மணித்தியலக் கணக்கில் உரைகள் நிகழ்த்துவதற்கும் பெரிதாக எதுவுமில்லை.
 
கருத்துக்கள் கருத்துக்களாக இருக்குமட்டும் கருத்து வேறுபாடுகள் மாத்திரம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன, கருத்துக்கள் களத்தில் அமுலாக்கங்களாக மாறுகின்ற பொழுது மாத்திரமே யதார்த்தமான ஒருமைப்பாடுகள் எங்கள் மத்தியில் உருவாகும்.
 
எங்களுக்கு மத்தியில் உள்ள முற்போக்கு சிந்தனை முகாம்கள் வெறும் மென்பொருள்களாகவே இருக்கின்றன, அவை சிவில் சமூக மயப்படவில்லை, மஸ்ஜித் மைய செயற்பாடுகளை சென்றடையவில்லை.
 
நாம் இருக்கின்ற இடத்தில் இருந்து ஒரு அடியேனும் சரியான ஒழுங்கில் சரியான திட்டமிடலில் சரியான கட்டமைப்பில் பயணிக்கத் தயாராகவில்லை , ஒருவர் அடுத்தவரை அங்கீகரிக்காத் தயாராக வில்லை, முற்றத்து மல்லிகைகளை இனம் கண்டு அரங்கிற்கு கொண்டு வரத் தயாராகவில்லை.
 
எல்லா மட்டங்களிலும் ஒரு சில தனி நபர்களை வாழ்நாள் வளவாளர்களாக ஆக்கி காத்தமுல் உலமாக்களாக ஆக்கி, ஒரு சில கையாளாகாத அரசியல் வியாபாரிகளிடம் சமூகத்தின் தலை எழுத்தை பாரம் சாட்டி நாங்கள் ஆழ்ந்த துயிலில் இருக்கின்றோம்.
 
எமது சமூக உளவியலில் போட்டியும் பொறாமையும், காழ்ப்புணர்வுகளும் இயக்க கட்சி பற்றுக்களும் மலிந்து எம்மை சின்னாபின்னப் படுத்திக் கொண்டிருக்கின்றன, நாங்கள் தீர்வுகளின் பங்காளிகளாக அன்றி பிரச்சினைகளின் பங்காளிகளாக இருக்கின்றோம் .
 
நாட்டை விடுங்கள் எங்கள் ஊரில் உள்ள திறமைகளை, ஆற்றல்களை, தகைமைகளை, தலைமைகளை ஒன்று திரட்ட ஒருநாளாவது முயற்சித்திருக்கின்றோமா?
 
கோளாறு எங்கே இருக்கிறது என்று பாருங்கள், எங்கிருந்து ஆரம்பிப்பாது என்று சிந்தியுங்கள், தீர்வுகள் உள்வீட்டில் இருக்கின்றன, அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.
ஆளை விட்டால் யாருமில்லை,சித்தப் பிரமை.!

இலங்கையில் பல்வேறு துறைகளிலும் நிபுணர்கள் வளவாளர்கள் கல்விமான்கள் எல்லா மட்டங்களிலும், பிரதேசங்களிலும் இருக்கின்றார்கள்.

good-leadersஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், சந்தர்ப்பங்களும் வழங்கப் படுவதில்லை, ஒரு சில பிரபல பிம்பங்களை உருவாக்குவதும் அவர்களை நம்பியிருப்பதும் இந்த சமூக அமைப்புகள் செய்யும் மிகப் பெரிய தவறாகும், இது எமது காரங்களாலேயே நாங்களே சிலைகள் செய்து வழிபடுவது போன்ற பாமரத்தனமாகும்.

இதனை ஹீரோ வெர்ஷிப் என ஆங்கிலத்தில் சொல்வார்கள், இது அநீதிகளில் பெரிய அநீதியாகும், அமானிதங்களை பாழ் படுத்துகிற பாவமாகும்.

பல வருடங்கள் பல்கலைக் கழகங்களில் ஜாமியாக்களில் கற்றவர்களை கூட வாழ்நாள் முழுவதும் மாணவர்களாகவே முடக்கி வைத்து ஒரு சில வாழ்நாள் வளவாளர்கள் பாடம் நடாத்திக் கொண்டிருப்பார்கள், அவர்களை போன்றே அல்லது அவர்களை விடவும் ஆற்றல்களும் திறமைகளும் உள்ளவர்கள் அரங்குகளில் வாழ்நாள் பார்வையாளர்களாக இருப்பார்கள்.

அரசியலில் ஒரு சிலரை விட சிறந்த ஆளுமைகள் சமூகத் தளத்தில் இல்லை என்பது போன்ற பிரமை அதிகார மையங்களால், ஊது குழல் ஊடகங்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் படுவது போன்று சிவில் சன்மார்கத் தலைமைகளும் அமைப்புக்களும் ஒருவகை சினிமாத்தனமான ஹீரோ வெர்ஷிப் உருவாக்கத்தில் அறிந்தோ அறியாமலோ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles