மௌலவி எம் கியூ.புர்ஹானுதீன் அஹமத் தேவ்பந்தி அவர்கள்..

0

O மௌலவி எம் கியூ.புர்ஹானுதீன் அஹமத் தேவ்பந்தி அவர்கள் எனது மதிப்பிற்குரிய ஆசான்களில் ஒருவர், ஜாமியாஹ் நளீமியாஹ்வில் அதிபர் யூஸுப் தலால் அலி அவர்கள் காலத்தில் குறுகிய காலம் விரிவுரையாளராக பணியாற்றினார், எங்களுக்கு இரண்டாம் வருடத்தில் ஹதீஸ் பாடம் எடுத்தார்.

பின்னர் அல்-ஜாமியாஹ் இஸ்லாமியா அரபுக் கல்லூரியை நாவலப்பிட்டி நகரப்பள்ளியில் ஸ்தாபித்தார், பின்னர் நகர மஸ்ஜிதில் இருந்து வெளியேறுமாறு வேண்டிக் கொள்ளப் பட்டதற்கு இணங்க தனது வீட்டுவளவில் இன்றுவரை அந்த கல்லூரியை நடாத்தி வருகின்றார்.

இலங்கையில் தப்லீக் ஜமாஅத் அறிமுகமான காலப் பகுதியில் மௌலவி மஸூத் ஆலிம் போன்றவர்களுடன் களமிறங்கி பணியாற்றிய உலமாக்களுள் அவரும் பிரதானமானவர்.

எனது சிறு பிராயத்தில் ஊருக்கு ஜமாத்களை தலைமை தாங்கி வருவார், அவரது பயான் என்றாலே விஷேஷமாக மக்கள் அணிதிரள்வார்கள். முதன் முதலாக மாணவர் ஜமாத்தில் அவர் அமீராக தலைமை தாங்கி சென்ற ஜமாத்தில் சென்று மஸ்கெலியாவில் குளிர் தாங்க முடியாமல் 10 நாட்களில் வீட்டுக்கு வந்து விட்டேன்.

அமல் இபாதுத்துகளில் மாத்திரமன்றி அரபு மற்றும் இஸ்லாம் கற்று ஆலிமாக வேண்டு மென்ற ஆர்வத்தையும் என்னில் ஏற்படுத்தியவர், என்னை டில்லி மர்கசில் மார்க்கம் கற்க அனுப்ப வேண்டு மென்பதில் ஆர்வம் காட்டினார், பின்னர் நான்ஜாமியா நளீமியாஹ்விற்கு சென்று விட்டேன்.

புர்ஹானுதீன் ஹஸரத் அவர்கள் உர்து மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் உர்து பயான்களை அவர் நீண்ட காலமாக நிகழ்த்தி வந்தார், கொழுப்பு ஜாவத்த ஜும்மாப் மஸ்ஜிதில் மாதம் ஒருமுறையென தொடர்ந்து சுமார் முப்பது வருட காலம் குத்பா பிரசங்கம் நடத்தி வந்துள்ளார்.

எனக்கும் ஹஸரத் அவர்களிற்கும் கிட்டிய உறவு முறை உள்ளது, அவர் எனது வாப்பம்மாவின் இளைய சகோதரர் முஹம்மத் காசிம் (MQ) அப்பா அவர்களின் மகனாவார்.

தற்பொழுது புர்ஹானுதீன் ஹஸரத் அவர்கள் சற்று நோய் வாய்ப்பட்டுள்ளார்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது நற்பணிகளைஅங்கீகரித்து, குற்றங் குறைகளை மன்னித்து, பூரண ஆரோக்கியத்தையும் அவன் பணியில் நீண்ட ஆயுளையும் வழங்குவானாக.

வாப்பம்மாவின் மற்றுமொரு இளைய சகோதரரர் மர்ஹூம் கபூர் அதிபர் அவர்கள் நான் ஜாமியாவிற்குச் சென்ற பொழுது அங்கு விடுதி முகாமையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

Periyaappaஎனது வாப்பாவின் மூத்த சகோதாரர் மர்ஹூம் உபைதுஸ்சத்தார் அல்-அஸ்ஹரி அவர்களே ஜாமியாஹ்வின் முதலாவது நூலகராக இருந்து நூல்களை துறைகளிற்கேற்ப ஒழுங்கமைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் படத்தில் இமாம் ஹஸன் அல் பன்னா வர்களுக்கு இடப்பக்கத்தில் இருப்பவர் எனது (இனாமுல்லாஹ் ) பெரிய தந்தை உபைத்துஸ் ஸத்தார் அல் அஸ்ஹரி (ரஹிமஹுமுல்லஹ்)

குறிப்பு : மௌலவி புர்ஹானுதீன் அஹமத் தேவ்பந்தி அவர்களால் நாவலப்பிட்டியில் நடாத்தப்படும் அல்-ஜாமியா இஸ்லாமியாஹ் கல்லூரியிற்கு தாராளமாக உதவுமாறு நண்பர்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

About author

No comments

கௌரவமான ஹலாலான உழைப்பு வாழ்வில் பிரதானமானது.

சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னர் உள் நாடாயினும், பிற நாடாயினும்,உங்களுக்கு ஆர்வமுள்ள ஒரு துறையில் தொழிற் சந்தை வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு உயர்கல்வியை தொடருங்கள். சன்மார்க்கக் கல்வி கற்போரும் தமது எதிர்கால ஹலாலான எவரிலும் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com