அல்லாஹ் அல்லாதவற்றை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம்.

0

O ஸுரத்துல் அன்கபூத் சொல்லும் அழகிய உதாரணம்..

“வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.” (ஸுரத் ஆல இம்ரான் 3:149)

“வானங்களையும், பூமியையும் அல்லாஹ் சத்தியத்தை (ஹக்) கொண்டே படைத்துள்ளான் – நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.” (ஸுரதுல் அன்கபூத் 29:44)

Universeபரந்து விரிந்த இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தை அதில் உள்ள மண்டலங்களை கிரகங்களை, நட்சத்திரங்களை இந்த சூரிய குடும்பத்தை கோள்களை புவியை மண்ணை விண்ணை, கடலை அவற்றில் உள்ள அத்தனை படைப்புக்களை படைத்து (ஹக்) சத்திய வழியில் அவற்றிற்கான பிரபஞ்ச இயங்கு நியதிகளை வகுத்து பரிபளித்துக் கொண்டிருக்கின்ற எல்லாம் வல்ல அல்லாஹ் எவாளவு மகத்தானவன்.

“அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.” (ஸுரதுல் பாதிர் 35:13)

“அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.” (ஸுரதுல் பகறா 2:225- ஆயத்துல் குர்ஸி)

Military 1இத்தகைய கண்ணியமும், மாட்சிமையும் மகத்துவமும் பொருந்திய புகழ் அனைத்திற்கும் பாத்திரமான ஈடு இணையற்ற ஏக வல்லோனாகிய அல்லாஹ்விற்கு முன்னால் இந்த உலகம் அதில் உள்ள மனிதர்கள், ஆட்சி அதிகாரங்கள், வளங்கள் செல்வங்கள், அரசுகள் வல்லரசுகள், படை பட்டாளங்கள் அத்தனையும் எம்மாத்திரம்.

“இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.” (ஸுரத்துன் நிஸா 4:139)

“அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).”  (ஸுரதுல் அன்கபூத் 29:41)

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் Militaryஅறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”  (ஸுரதுல் அன்கபூத் 29:42)

“இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் – ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.” (ஸுரதுல் அன்கபூத் 29:43)

“நபியே நீர் கூறுவீராக, ஆட்சி அதிகாரங்களை தன்னகத்தே கொண்டுள்ள அல்லாஹ்வே, நீ விரும்பியவ்ர்களிற்கு ஆட்சியை கொடுக்கின்றாய், நீ நாடியவர்களிடமிருந்து ஆட்சியை பறித்தேடுக்கின்றாய், நீ நாடியவரை கண்ணியப் படுத்துகின்றாய், நீ நாடியவரை தாழ்த்தி விடுகின்றாய், உன்னிடமே அனைத்து நன்மைகளும் இருக்கின்றன, நீயே அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன்” (ஸுரத் ஆல இம்ரான் 3:26)

(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.(ஸுரத் ஆல இம்ரான் 3:27)

முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. (ஸுரத் ஆல இம்ரான் 3:28)

 

About author

No comments

இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.

இலங்கையில் வேகமாக டெங்கு நோய் பரவி வருகின்றது 2016 ஆம் ஆண்டில் 51 ஆயிரத்து  823 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், வாரத்திற்கு சுமார் 500 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்படுகின்றனர், கொழும்பில் மாத்திரம் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com