ஆன்மீக ஈடேற்றம் தரும் துல்ஹஜ் முதல் 10 தினங்கள்!

0

அல்-ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!                                                                       ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும்  உலக முஸ்லீம்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!   

அல்லாஹ் தன் நல்லடியார்கள் அதிக அளவில் நல்லமல்களை மேற்கொள்ளும் அமைத்துக்கொடுத்துள்ள பருவ காலங்களில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும்!

நல் அமல்கள் செய்தல்:

First 10துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி)

தக்பீர் சொல்லுதல்:

துல் ஹஜ் மாதத்தின் பத்துநாட்களும் அவற்றில் செய்யும் அமல்களும்தான் அல்லாஹ் விடத்தில் மிகவும் மகத்துவம் உடையதாகவும் பிரியமானதாகவும் உள்ளது! இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்;நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹு  அக்பர் – அல் ஹம்து லில்லாஹ் என்று அதிகம் அதிகம் சொல்லுங்கள்! அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்னத் அஹ்மத்

Dhul Hijjah Reminderஇப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள். இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். (ஆதாரம்: புகாரி)

பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து துல்ஹஜ் பிறை 13-ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறவேண்டும்.

அரஃபா நோன்பு:

அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம்)

அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது. அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்திஅதான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

பெருநாள் தொழுகை:

Makkahஹஜ் பெருநாள் தொழுகை,மற்றும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் கன்னிப்பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் உட்பட அனைவரும் முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும், நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள்.(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

 உழ்ஹிய்யா:

உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும். இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும். கொம்புள்ள, கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி ஆடுகளின் ஒரு பக்கத்தின் மீது காலை வைத்துக்கொண்டு தனது கையால் அறுத்தார்கள். (ஆதாரம்: புகாரி)

 

நன்மை தரும் நல் அமல்கள்                                                                                                                                            -அஷ்-ஷேக் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அல் ஜிப்ரீன் (ரஹ்)-

நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்  ( ஸுரத்துல் பகரா 2:148)

Arafatஇந்த நாட்களில் அதிகமான நல் அமல்களில் ஈடுபட வேண்டும். உடலாலும் பொருளாலும் சக்தி பெற்றவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவது, அல்லாஹ்வுக்காக குர்பானியை நிறைவேற்றுவது, அதிகமாக குர் ஆன் ஓதுவது, மனனம் செய்வது, ஓதத்தெரியாதவர்களுக்கு கற்றுக் கொடுப்பது, பாவமன்னிப்பு தேடுவது, பெற்றோர்களுக்கும், பெற்றோர்களின் நண்பர்களுக்கும் நன்மை செய்வது,

இரத்த பந்தங்களையும், உறவினர்களையும் ஆதரிப்பது, ஸலாத்தை பரப்புவது, பசித்தவர்களுக்கு உணவளிப்பது, மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, நாவைப் பேணுவது, அண்டை வீட்டார்களுக்கு உதவுவது, விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது, அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது, நடை பாதையில் மக்களுக்கு தொல்லை தருவதை அகற்றுவது,

மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் செலவு செய்வது, அனாதைகளை அரவணைப்பது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவது, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வது, பிரார்த்தனை செய்வது அப் பிரார்த்தனையில் பிற சகோதரர்களையும் இணைத்துக் கொள்வது, அமானிதங்களை பேணுவது, உடன்படிக் கைகளை நிறைவேற்றுவது, ஹறாமானவற்றிலிருந்து பார்வையை தாழ்த்திக் கொள்வது,

ஒளுவை பரி பூரணமாக செய்வது, பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் துஆ செய்வது, ஐவேளை தொழுகையும் பள்ளிவாசலுக்கு சென்று நிறைவேற்றுவது, தஹஜ்ஜத் மற்றும் உபரியான தொழுகைகளில் அதிக கவனம் செலுத்துவது. தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய திக்ருகளை ஓதுவது, காலை, மாலை திக்ருகளை செய்வது, முஸ்லீம்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் பங்கெடுப்பது… இது போன்ற அனைத்து நல் அமல்களிலும் ஈடு பட்டு அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்று மறுமையில் சுவனத்தை அடைய முயற்சிப்போம்!

யா அல்லாஹ்!

Takbeer-of-‘Eid-ul-Fitrஎங்களது தீன் பற்றிய அறிவு ஞானத்தையும் அதன் படி அமல் செய்யும் பாக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! அதில் எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக!

இறை விசுவாசிகளாக எங்களை மரணிக்கச் செய்வாயாக!  மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களை சேர்ப்பாயாக!

கருணை மிக்க இறைவனே! உனது கருணையினால் எங்களுக்கும் எங்கள் பெற்றோர்களுக்கும் அனைத்து முஸ்லீம்களுக்கும் பாவமன்னிப்பு வழங்குவாயாக!

About author

No comments

சமரசம் இன்றேல் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் ஆணையாளரால் முடக்கப்படும்.

சமரசம் இன்றேல் முஸ்லிம் காங்கிரஸ் நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை தேர்தல் ஆணையாளரால் முடக்கப்படும். எதிர் வரும் 15 ஆம் திகதியிற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் உத்தியோக பூர்வமான செயலாளர் யார் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com