ஆசான்கள் எல்லா நாட்களும் மதிக்கப் பட வேண்டியவர்கள்..!

0

நாம் உலகில் பிறப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் எமது பெற்றோர்கள், இந்த உலகில் நல்லோர்களாக வாழ்வாங்கு வாழ்ந்து மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற எங்களை வழி நடத்துவோர் எங்கள் ஆசான்கள், அன்றாடம் எமது பிரார்த்தனைகளில் எவ்வாறு நாம் பெற்றோர்களுக்காக பிரார்திக்கின்றோமோ அவ்வாறே எமக்கு கற்றுத் தந்த ஆசான்களுக்கும் நாம் பிரார்த்தனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம்.

“உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் – அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.” (ஸுரத்துல் முஜாதிலா 58:11)

muallimஒரு  அறிஞனுக்கும் பாமரனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு  தனக்கும் சாதாரண அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு போன்றது என கூறிய கண்மணி ரஸுலுல்லாஹ் (ஸல்)   மனிதர்களுக்கு நல்லவற்றை கற்றுக் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ்வும், வானவர்களும் , வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளும் புற்றில் இருக்கும் எறும்புகளும் கடலில் இருக்கும் மச்சங்களும் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்கள்.

கற்பித்தல் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பண்பாகும் அவனது பிரதிநிதியான மனிதர்களுக்கு அந்தப் பண்பினை வழங்கி இருக்கின்றான்.

“அளவற்ற அருளாளன், இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான், அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.” (ஸுரத்துர்ரஹமான் 55 : 1,2,3,4)

“இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.” (ஸுரத்துல் பகரா : 31)

“ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” ஸுரத் இக்ராஃ

உலகத்தில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஆசான்களாகத் திகழ்ந்தனர். அத்தகைய இறைத் தூதர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள்தான் ஆசிரியர்கள்.

கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு புனிதமான பணி .

“நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்.” என இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னை அறிமுகப் படுத்தும்போது கூறினார்கள்:

aalim“நான் ஒருஆசிரியர்” என பெருமிதமடையும் பெரும்பேறு போல் வேறு எந்த தொழில் செய்வோருக்கும் இருக்க முடியாது, ஏனெனில் எல்லாத்துறை சார்ந்தவர்களையும் தோற்றுவிப்பவர்கள் இந்த ஆசிரியர்களே.

நான்கு தசாப்தங்களுக்கு முதல் நானறிந்த வகையில் இரண்டு பவுன் தங்கத்தின் ஊதியத்தைப் பெற்ற ஆசிரிய சமூகத்திற்கு இன்றும் அதற்கு நிகரான கொடுப்பனவுகளை எமது தேசம் பெற்றுக் கொடுத்து அவர்களை கௌரவிக்க வேண்டும்.

புதிய தலைமுறைகளை உருவாக்கும் புனித பணியை அறமெனப் போற்றி அறப்பணி செய்யும் அத்தனை ஆசிரியருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் நிறைவாக கிடைக்கப்பெற உளமார்ந்த பிரார்த்தனைகள்.

எனதருமைத் தந்தை மஸிஹுத்தீன் (ரஹ்) ஒரு அதிபராகவும், தாயார் ஆமினா ஆசிரியராகவும் கல்விப்பணி செய்ய, பாடசாலை வளாகத்தில் அதிபர் விடுதியில் பிறந்து வளர்ந்த நாம் பெரும் பேற்றினையே பெற்றிருந்தோம், அவர்களே எமக்குத் தெரிந்த முதல் முன்மாதிரி ஆசிரிய ஆளுமைகள்.

அலிஃப் பே சொல்லித் தந்த ஹஸரத் முதல் உயர்கல்வி கற்றுத்தந்த விரிவுரையாளர் வரை அத்தனை ஆசான்களினதும் ஈருலக ஈடேற்றத்திற்கும் இன்றொருநாள் மட்டுமல்ல எல்லா நாளும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் பிரார்த்திக்கின்றேன்.

 

About author

No comments

உங்களுக்கு உரியதை மாத்திரமே பெற்றுக் கொள்ளுங்கள்.

O (முகநூல் பதிவுகளில் இருந்து…) உங்களுக்கு உரியதை மாத்திரமே பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு உரியதை மாத்திரமே பெற்றுக் கொள்ளுங்கள், பிறருக்கு சேரவேண்டியதை ஒப்படைத்துவிடுங்கள், தரப்படுகின்றது என்பதற்காக பெறப்பட வேண்டும் என்பதில்லை, குறுக்கு வழிகளில் எதனையும் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com