16 அக்டோபர்2016 வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு பத்து வருடங்கள். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்.

0

16 அக்டோபர்2016 வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு பத்து வருடங்கள். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 1989 வடக்குடன் கிழக்கை இணைத்தது ஐக்கிய தேசியக் கட்சி, அந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்களின் முதுகில் எழுதிய அடிமைச் சாசனம் என்று முஸ்லிம் காங்கிரஸ் போர்க் கோடி தூக்கியது.

அதன்பின் 1994 ஆட்சி மாற்றத்தின் பிரதான பங்காளியாக மாறிய முஸ்லிம் காங்கிரஸ் 2000 ஆண்டுவரை சந்திரிக்கா தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணியின் பிரதான பங்காளியாக இருந்தது.

தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மரணத்திற்குப் பின் பொதுசன ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசு அமைய முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கியது.

2002 பெப்ரவரி 24 அன்று அரசு புலிகளுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து வடகிழக்கில் புலிகள் கட்டுப் பாட்டுப் பகுதிகளை அவர்களின் சுயநிர்ணயத்தில் விட்டுவிட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் புலிகளுடன் நேரடியாக பெயரளவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்து கொண்டாலும் பின்னர் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கூட முஸ்லிம்கள் முதுகில் எழுதப்பட்ட மற்றுமொரு அடிமைச் சாசணம் என உணரப்பட்டது.

தனித்தரப்பு, தனி அலகு கோஷங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது. வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்து தனித்திருக்க வேண்டும் என முஸ்லிம் அரசியலில் கோஷங்கள் எழும்பின.

2006 அக்டோபர் 16 இல் உயர் நீதிமன்றம் வடக்கு கிழக்கு மாகாணங்களை தனித்தனி மாகாணங்களாக பிரகடனம் செய்தது.

சரியாக பத்து வருடங்களின் பின் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் வட கிழக்கு இணைப்பு பற்றி பேசப்படுகின்றது , தேசிய ஒருமைப்பாட்டு அரசில் சுதந்திரக் கட்சி வடகிழக்கு இணைப்பிற்கு எதிராக கருத்து வெளியிடுகிறது.

கடந்த கால கசப்பான அனுபவங்களை வரலாற்றுப் பாடங்களை கருத்தில் கொண்டு கிழக்கிலங்கை முஸ்லிம்சிவில் சமூகங்களும் அரசியல் தலைமைகளும் வடகிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் திரைமறைவில் ஏதாவது உடன்பாடுகள், முரண்பாடுகள் எய்தப்பட்டுள்ளனவா மீண்டும் முஸ்லிம்களின் முதுகில் ஒரு அடிமைச் சாசனம் எழுதப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசிய ஷூரா சபை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமைகளை அழைத்து புதிய அரசியலமைப்பு மற்றும் அதில்உள்ளடங்கப் போகும் தேர்தல் சீர்திருத்த சட்டங்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டங்கள், அதிகாரப் பரவலாக்கம் குறித்து சமூகம் சார்ந்த தெளிவான நன்கு விரிவாக ஆழமாக ஆராயப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்.

எந்தவொரு அரசியல் தலைமையும் முஸ்லிம் சிவில்சமூக தலைமைகளை மற்றும் புத்திஜீவிகளை கலந்து கொள்ளாது எதேச்சாதிகாரமான முடிவுகளை எடுத்துவிடக் கூடாது.

About author

No comments

கட்டம் கட்டமாக முடிச்சுக்களை அவிழ்த்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

O முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹஸனலி மற்றும் தலைவர் ரவூஃப் ஹகீம் ஆகியோருக்கு இடையில் இருந்த முறுகல் நிலை தேசியப் பட்டியல் உத்தரவாதத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “தான் ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com