சமகால வங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்கான மாற்றீடு அவசியம்.

0

(எனது முகநூலில் இருந்து..Inamullah Masihudeen )

சமகால வங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்கான மாற்றீடு அவசியம் என்பதில் எல்லோரும் உடன்படுவார்கள், ஆனால் அது வானிலிருந்து வரவேண்டும என்று தான் பலரும் காத்திருக்கின்றார்கள், களத்தில் மாற்றீடு பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கும் ஏதாவது முத்திரை குத்தி ஓரம்கட்டுவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

கொள்கை கோட்பாடுகளை பொறுத்தவரை “நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை” களத்தில் தற்பொழுதுள்ள சிறந்த மாற்றீடாக நான் பார்கின்றேன். மாவட்ட, மாகாண, தேசிய அரசியல் சக்திகளை அவர்கள் கையாளுகின்ற விதம் தவறாக புரியப்பட்டுள்ள ஒரு விவகாரமாகும்.

இறுதி நேரம் வரை எல்லா முஸ்லிம் கட்சிகளும் முன்னாள் அதிபர் மஹிந்த அவர்களுடன் சராணாகதி அரசியல்செய்த பொழுது 2015 நல்லாட்சி மாற்றத்திற்கான துணிகரமான பாரிய பங்களிப்பை எதிர்க்கட்சிப் பொது முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து அவர்கள் செய்தமையை நான் நன்கு அறிவேன்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களில் கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட முடியுமாயின் ஒரு மாற்றத்தை நோக்கிய நகர்வை மேற்கொள்ளலாம் என நம்புகின்றேன்.

“முஸ்லிம் அரசியல் குழுக்கள் சிறுபிள்ளைத் தனமான போட்டா போட்டியில் பராக்காக இருக்கின்ற நிலையில் பாலஸ்தீன் மக்களுக்கு காஸா, மேற்குக் கரை அமைந்தது போல் கிழக்கு முஸ்லிம்களின் நிலை அமைந்து விடும் அபாயம் இருக்கின்றது.

கிழக்கில் 40% முஸ்லிம்கள் 4% நிலத்தில் இருக்கின்றார்கள், விவசாய நிலங்களிற்கான அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப் படுவதில்ல, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படவில்லை, சனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கரையோர குடியிருப்புக்களில் வதிவிடங்களிற்கான இடப்பற்றாக்குறை நிலவுகின்றது.

70% நிலம் அரச கட்டுப் பாட்டில் இருக்கின்றது, புதைபொருள் ஆய்வுகள், புராதான சின்னங்கள், புனிதபிரதேசங்கள் என பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, இராணுவம் காணிகளை கட்டுப்பாட்டில்வைத்திருக்கின்றது, திட்டமிட்ட குடியேற்றங்கள், அபிவிருத்தி திட்டங்கள், வர்த்தக பயிர்ச் செய்கைகளிற்கென காணிகள் பெறப்பட்டுள்ளன.

முஸ்லிம் சிவில் தலைமைகளும் இளைஞர்களும் விழித்தெழ வேண்டிய நெருக்கடியான தீர்க்கமான கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கின்றோம், தேசிய பிராந்திய அரசியல் தலைமைகளிற்கு போதிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும்”

பாரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்றை களத்திற்கு வெளியிலிருந்து வெறும் பார்வையாளர்களாகவும், விமர்சகர்களாகவும் இருந்து கொண்டு செய்ய முடியாது என்பதனை எமது அண்மைகால அரசியல் நன்கு உணர்த்தியிருக்கின்றது, அந்த வகையில் மக்களின் வீட்டு வாசல் வரை அல்லது சமையல்கட்டுவரை அரசியலை எடுத்துச் செல்லுகின்ற அடிமட்ட அரசியல் கட்டமைப்புக்களான உள்ளூராட்சி தேர்தல்களில் பங்காளர்களாக நாம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், விரைவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் நல்லாட்சிக் கோட்பாடுகளை மதிக்கின்ற மிகச் சிறந்த இளம் அரசியல் தலைமைகளை நாம் சமூக தளத்தில் அறிமுகம் செய்தல் வேண்டும். அது எமது தெரிவு மாத்திரமன்றி கடமையும் கூட.

================================================================================

Feed-back from Br.Shihar Hasan –Attorney At Law

shiharIt is true that we need a change in the political culture and ideology and NFGG was a credible alternative UNTIL it partnered with SLMC in the eastern province to contest in the last General elections. NFGG made a historical mistake by the move i.e. getting into a coalition with the same political party they said they have come as an alternative. My faith in NFGG faded that instant.

 

 

================================================================================

எதற்காக கூட்டுச் சேர்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அற்ப லாபங்களுக்கா? பதவி பட்டங்களுக்கா? சமூக நன்மைக்கா

விரிவுரையாளர் ஸிராஜ் மஷ்ஹூர் – தேசிய அமைப்பாளர்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹுதீன் இப்படி திறந்த மனதோடு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை (NFGG) ஆதரித்து நீங்கள் கருத்துரைத்திருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள். நமது இளைஞர்களுக்கு நீங்கள் காட்டியிருக்கும் வழி மிகவும் முக்கியமானது.

Sirajஆற அமர சிந்தித்து செயற்படுபவர்கள் நீங்கள். மிகவும் நிதானமாக, பலதையும் பத்தையும் யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருப்பீர்கள். நாடும் மக்களும் மிக முக்கியமான ஒரு சூழலில் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்திலேயே உங்களது இந்த முடிவு வந்திருக்கிறது. அதற்கு மிகுந்த நன்றிகள்.

இந்த இக்கட்டான தருணத்தில் NFGGயுடன் இணைந்து செயற்பட வறுமாறு இளைஞர்களை அன்புடன் அழைக்கிறேன்.

கருத்து வேறுபாடுகள், தெளிவீனங்களைப் பேசித் தீர்க்கலாம். தெரிந்து கொண்டே தவறிழைக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அநேகமான விமர்சனங்கள், போதிய தெளிவில்லாத நிலையிலேயே வெளிவருகின்றன. அவசர கதியில், போதிய புரிதல் இன்றி சிலர் விமர்சனங்களை முன்வைக்கும்போது, பொறுமை காக்கத்தான் வேண்டும்.

கதைப்பதற்கு இங்கு நிறையப் பேர் உள்ளனர். செயற்படுவதற்கு முன்வருவோர்தான் மிகவும் சொற்பம். அதிலும், தீர்ப்பு வழங்கி விட்டு ஓரமாய் ஒதுங்கி விடுவோர் குறித்து என்ன சொல்வது?

Politics is an art of possible என்று ஒரு பிரபல்யமான மேற்கோள் உண்டு. நடைமுறை அரசியலில் சில சமரசங்கள் செய்ய வேண்டியிருப்பது தவிர்க்க இயலாத நியதி.

1971 இல் ஜெ,வீ.பீ யினரைக் கொன்றது எஸ்.எல்.எப்.பி தான். அதற்காக சந்திரிகா காலத்து எஸ்.எல்.எப்.பி யுடன் சேர மாட்டோம் என்று ஜெ.வீ. பி. ஆடம் பிடிக்கவில்லை. சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தார்கள். எந்த சூழலில் அந்தத் தீர்மானங்களை, ஏன் எடுத்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த முடிவால் நாடு நன்மை அடைந்தது.

nfggதேர்தல் அரசியல் என்று வந்து விட்டால், அதற்கென்றேயான சில நிர்ப்பந்தங்கள், தவிர்க்க இயலாமைகள் உள்ளன. சிறுபான்மை சமூகங்கள், வாக்குகளைப் பொறுக்கி எடுத்துத்தான் இங்கு அரசியல் செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் முறையிலுள்ள சிக்கல்கள் குறித்து நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

எதற்காக கூட்டுச் சேர்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அற்ப லாபங்களுக்கா? பதவி பட்டங்களுக்கா? சமூக நன்மைக்கா?   இங்குள்ள தேர்தல் முறைக்கு ஏற்பவும், மக்களுடைய மன ஓட்டத்திற்கு ஏற்பவும் செயற்படாவிட்டால், தேர்தல் அரசியல் படுத்து விடும்.  மக்கள் நலன் அரசியல் செய்வோர் இதைக் கருத்தில் எடுத்தே செயற்பட வேண்டியுள்ளது.

பொது நன்மைக்காக பகிரங்க ஒப்பந்தத்துடன் சேர்வதும்- அதே போல, அதே பொது நன்மைக்காகப் பிரிவதும் தவிர்க்க இயலாது.  இது ராஜ தந்திரத்துடனும் மூல உபாயங்களுடனும் சம்பந்தப்பட்டது.

About author

No comments

எதிர்மறையான எதிர்வினைகளை தூண்டும் கருத்து வெளியீடுகள் ஹராமாகும்!

O “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான (தெளிவான) சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com