சிவனொளி பாதமலை (ஸ்ரீபாத- சமனல கந்த) முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அல்ல அதற்கு நாம் உரிமை கோரவும் இல்லை.

0

sripaadaO சிவனொளி பாதமலை (ஸ்ரீபாத- சமனல கந்த) முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அல்ல அதற்கு நாம் உரிமை கோரவும் இல்லை. முதல் மனிதர் ஆதம் தொடர்பாக எவராவது உரிமை கோருவதானால் அது முழு மனித வர்க்கத்திற்கும் சொந்தமானது.

கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்து வெளிநாட்டுச் செலாவணியை சுற்றுலத்துறையூடாக ஈட்டி நாட்டின் பொருளாதரத்தை கட்டி எழுப்பும் நோக்கில் குறிப்பிட்ட பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அபுதாபி கெப்பிட்டல் குரூப் என்ற நிறுவனம் பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக 83 ஏக்கர் 2 ரூட் காணியை கொள்வனவு செய்துள்ளது. தற்போது களஞ்சியசாலையும் விமானம் இறங்கும் தளமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஹோட்டல் நிறுவப்பட்டால் அது எமது பௌத்த கலாசாரத்தையும் சிவனொளிபாதமலை வரலாற்றினையும் பாதிக்கும்  என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அறபு இராச்சிய இத்திஸாலாத் நிறுவனம் இலங்கையில் ஏற்கனவே செல்டெல் டிகோ சேவையை கொள்வனவு செய்துள்ளது, அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய அந்நாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அந்த முதலீட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை அரசியல் நோக்கங்களுக்காக பூதாகரப் படுத்தும் நோக்கிலும், இனவெறி நிகழ்ச்சி நிரலுக்கு முதலீடாக்குவத்ற்கும் சில தீய சக்திகள் மட்டரகமான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள்.

ஆச்சர்யம் என்னவென்றால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுவதுபோல் சில கூலிப்படைகள் சில ஒலி/ஒளி பதிவுகளை வெளியிட்டுள்ளனர், அதனை அறியாமல் முஸ்லிம் இளைஞர்கள் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

adamspeak-1 ஸ்ரீ பாத குறித்து பௌத்த மதத்தை தழுவிய மஹாவச்சம், தீபவம்சம், சிங்கள போதி வங்சய, சிங்கள தூபவங்சய போன்ற எந்த நூல்களிலும் இதைப்பற்றி குறிப்பிடவில்லை., மாறாக அறபு கடல்வழி சுற்றுப்ப்யணி இப்னு பதூதாவின் குறிப்புக்களே எடுத்துக் கூறுவதால் அது முஸ்லிம்களுக்கே உரித்தாகும் என முட்டாள்தனமான தீ மூட்டிவிடுகின்ற பதிவொன்றையும் அவதானிக்க முடிகின்றது, குறிப்பாக அதனை சிங்கள மொழியில் செய்துள்ளார்கள்.

ஹலால் சான்றிதழை முஸ்லிம்கள் நிறுத்திவிட்டால் இந்த நாட்டில் உற்பத்தியாகும் பல் ஆயிரக்கணக்கான பொருட்களிற்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பு இல்லாமல் போகும், அதுபோன்றுதான் அறபு நாட்டு முதலீட்டாளர்களை சீண்டுவது இந்த நாட்டின் பொருளாதரத்திற்கு பாதகமான விளைவுகளையே கொண்டிருக்கும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பின்னால் சர்வதேச சதிகார சக்திகளும் செயற்படுகின்றன என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் குறிப்பாக சமூக ஊடகங்களை பாவிக்கும் இளைஞர்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இவ்வாறான விடயங்களை அணுக வேண்டும்.

About author

No comments

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட முன்வரல் வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு பின்னால் பல்கோண, பல்பரிமாண அரசியல் இராஜதந்திர பின்புலன்கள் இருக்கின்றன, அவற்றிற்கு முகம் கொடுக்கும், சாணக்கியம், திராணி, தகைமை எமது முஸ்லீம் அரசியல் தலைமைகளிடம் இல்லை என்பது யதார்த்தம், பல ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com