Monday, September 27, 2021

பெற்றோர்களின் வாழ்நாள் கனவுகளை சிதைத்து, நிம்மதியை கெடுப்பது கொடிய பாவமாகும்.

O பெற்றோர்களின் வாழ்நாள் கனவுகளை சிதைத்து, நிம்மதியை கெடுப்பது கொடிய பாவமாகும்.

தமது பெற்றார்களின் மனம்நோதலுக்கும் ஏனைய பெற்றார்களின் சாபக் கேட்டிற்கும் ஆளாகாது நாம் எமது இளம் பருவத்தை பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்.

வாழ்கையில் திருமணம் என்பது ஒரு பெரிய மைல்கல்,கனவு, திருப்புமுணை, நல்ல மனைவி அமைவது மிகப்பெரிய அருளாகும் அதேபோல் ஆயிரம் கனவுகளுடன் பெற்றெடுக்கும் குழந்தைகள் அளப்பரிய செல்வங்களாகும்.

rabbiஅல்லாஹ் அவர்களிடம் ஒப்படைத்துள்ள அமானிதங்களை, குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்குவதில் தாய் தந்தையர் காட்டும் அன்பும் அர்பணிப்பும் அல்லாஹ் ரஸுலுக்கு அடுத்த அந்தஸ்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கின்றது.

தமது குழந்தைச் செல்வங்களின் கண்ணில் நீர் கசிவதை, அவர்கள் மனது காயப்படுவதனை அல்லது அவர்களுக்கு எவரேனும் தீங்கு இழைப்பதனை பெற்றோர்கள் தாங்கிக்கொள்ளவே மாட்டார்கள்.

அந்த வகையில் ஆயிரம் கனவுகளோடும் அர்பணிப்புக்களோடும் தாம் கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுக்கும் சிறார்கள் தீயவழிகளில் செல்வதனை அவர்கள் ஒரு பொழுதும் சகித்துக் கொள்ளமாட்டார்கள்.

தமது குழந்தைகள், பிள்ளைகள் துஷ்பிரயோகங்களிற்கு ஆளாவதனை அல்லது தகாத நட்பு, காதல் என தவறான வழிகளில் செல்வதனை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது.

ஒருவரின் இரத்தம், உடைமை, மானம் என்பது மற்றொருவருக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது, கேலி செய்வது , பரிகாசம் பண்ணுவது, ஏமாற்றுவது, இளக்காரமாக கணிப்பது, பட்டப்பெயர்கள் சொல்வது என உள்ளங்களை காயப்படுத்துவது எவ்வாறு கூடாதோ அதே போன்றே உடல் ரீதியாக நோவினை செய்வதும் காயப்படுத்துவதும் ஹராமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டிப்பான கட்டளைகள் இருக்க குழந்தைகளை சிறார்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது இன்னொருவரது உன்னதமான குடும்ப வாழ்வில், வாழ்நாள் கனவுகளில் விளையாடுகின்ற கொடிய பாவமாகும், அவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு மரணதண்டனைவரை கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று சினிமா மற்றும் தொடர் நாடகங்கள் காதலை ஓரினநட்பை ஒரு மதமாகவே போதித்து வருகின்றன, முறைகேடான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்தல், எல்லா வகையான குடும்ப சமூக கட்டுக் கோப்புக்களையும் தகர்த்து எறிதல் தெய்வீகக் காதலின் இலட்சியக் கனவாக போற்றப்படுகின்றது.

இன்று பதின்ம வயதினர் முதல் இளைஞர்கள் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், பிரத்தியேக வகுப்புக்கள் என தமக்கு கிடைக்கின்ற சுதந்திரத்தை மிகவும் பொறுப்பற்ற விதத்தில் காதலுக்காகவும் தகாத உறவுகளுக்காகவும் பயன்படுத்த தலைப்பட்டுள்ளனர்.

Social Media 2இந்த யுகத்தில் தம்மிடமுள்ள செல்லிட தொலைபேசிகள், சமூக ஊடகங்கள், இணையதள வசதிகள் என்பவற்றை பயன்படுத்தி முறைகேடான பல்வேறு தொடர்புகளை மிகவும் சுதந்திரமாக ஏற்படுத்திக் கொள்கின்றனர், வீட்டில் பெற்றார் பாதுகாவலருடன் இருக்கும் சிறார்களை, சிறுமியர்களை கூட இலக்கு வைக்க முடியமான தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அடுத்தவர் வாழ்வில் அவர்களது குடும்ப வாழ்வில், அவர்களது வாழ் நாள் கனவுகளில் விரும்பத்தகாத தலையீடுகளை மேற்கொள்வது நிச்சயமாக சூறையாடல்களில் மிகக் கீழ்த்தரமான கொடிய சூரையாடலாகும்.

கற்பு நெறி என்பது பெண்களுக்கு மாத்திரம் உரியதல்ல அது ஆண் பெண் இருபாலாருக்கும் இருக்கின்றது.

எமது பருவக் கோளாறுகளுக்காக, எமது கேளிக்கைகளுக்காக, எமது உள்ளாசங்களிற்காக, எமது இச்சைகளுக்காக எமது பொழுது போக்குகளுக்காக அடுத்தவர்கள் குழந்தை குட்டிகளை பெற்று வளர்ப்பதில்லை என்பதனை நாளை தாமும் பெற்றோர்களாகப் போகும் ஒவ்வொரு இளைஞனும் யுவதியம் மனதில் வைத்துக் கொள்ளல் வேண்டும்.

அதேவேளை உண்மையான இறையச்சம் ஒன்று மாத்திரமே நமது இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும் என்றவகையில் பெற்றார்கள் மாத்திரமன்றி பாடசாலைகள் மஸ்ஜிதுகள் சிறார்களை ஆழமான ஆன்மீக பண்பாட்டுப் பயிற்சிகளுக்குள் வாழ வைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

பெற்றார்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையை ஏமாற்றாதீர்கள், அவர்கள் மனதை காயப்பபடுத்தாதீர்கள், கண்கலங்க வைக்காதீர்கள்.

அவர்களுக்கு புரியாத விடயங்கள் என்றாலும் அவர்கள் புரிந்துகொள் பவராயின் துயரப்படும் விடயங்களில் அல்லாஹ் ரஸுலுக்குப் பின் அவர்களுக்கு விசுவாசமாக இருங்கள்.

parents-3அவர்களது உணர்வுகளை, கனவுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்,
அவர்களது கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருப்பினும் அவர்களது மானம், கௌரவம், அந்தஸ்து என்பவற்றிற்கு அபகீர்தி ஏற்படுத்தி விடாதீர்கள்.

குடும்பத்தில் சமூகத்தில் அவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடாதீர்கள், அவர்களை பிறர் திட்டுமளவு முறைகேடாக நடந்து கொள்ளாதீர்கள்.

வாழ்க்கைக்கும் அவர்களுக்கும் மாற்றீடுகள் கிடையாது, வரம் கிடைப்பது ஒரு முறைதான், பாழாக்கி விடாதீர்கள்.

அல்லாஹ் ரஸூலுக்கு பின்னர் அவர்களது திருப்தியும், மகிழ்ச்சியும், துஆவும், ஆசிர்வாதமும் இல்லாத வாழ்வு சிறப்பதில்லை.

உங்கள் பெற்றார் விரும்பமாட்டார்கள் எனக் கருதும் விடயங்களை அடுத்தவர் பெற்றாருக்கு இழைக்கும் தருதலைகளாக இருந்து விடாதீர்கள்.
பெற்றாரின் கண்களில் மண்ணை வாரி நெறிபிறழும் ஆண் பெண் மாணவர் விடயத்தில் நன்மையை ஏவி தீமையை தடுப்பது உங்கள் கடமையாகிறது,

திருந்தாவிடின் ஆதாரபூர்வமான தகவல்களை அவர்கள் பெற்றோர் பாதுகாவலருக்கு வழங்கும் சமூகக் கடமையை செவ்வனே செய்யுங்கள்.

சமூகக் கட்டுக் கோப்பை பேணுவது ஒவ்வொருவரதும் கூட்டுப் பொறுப்பாகும்.
அது பற்றி அல்லாஹ் உங்களிடமும் கேட்பான்.

பெற்றார்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

பெற்றோருக்கு பிள்ளைகள், பிள்ளைகளிற்கு பெற்றோர்கள் அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகள்!

சிலவேளை எமது பெற்றார்கள் கல்வித் தகைமைகள் அற்றவர்களாக இருக்கலாம், வசதிவாய்ப்புக்கள் அற்றவர்களாக இருக்கலாம் ஆனால் எங்களை கல்வித் தகைமைகள் உள்ளவர்களாக, வசதி வாய்ப்புக்கள் வாய்க்கப் பெற்றவர்களாக வளர்த்து ஆளாக்கி விடுவதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.

நாளை நாங்கள் திருமண வயதை அடைகின்ற பொழுது எங்கள் தகைமைகளுக்கும் வசதி வாய்ப்புக்களிற்கும் ஏற்ற வரண்களையே தேடுகின்றோம், இங்குதான் நீங்கள் பெரிதும் சோதிக்கப்படுகின்றோம்.

parents2நாங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இரு தரப்பிலும் பெற்றார்கள் என்றுவருகின்ற பொழுது அவர்களுக்கு பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தை என்ற உயரிய அந்தஸ்தை தந்தேயாக வேண்டும், அது வாய்க்க்கின்ற கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி மிகவும் கண்டிப்பான புரிந்துணர்வு ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளப்படல் வேண்டும், அங்கு எந்தவித விட்டுக்கொடுப்பும் இருக்கவேகூடாது.

இந்த உயரிய பாரம்பரியம் கட்டிக்காக்கப் படுகின்ற பொழுதே நாளை நமது பிள்ளைகளும் அவர்களது வரண்களும் அதே பாரம்பரியத்தை பேணுவார்கள்.

“நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
(ஸுரத்துல் லுக்மான் 31:14)

பெற்றார்களது அறியாமைகள் இல்லாமை இயலாமைகளுக்கு முன்னால் பணிவாகவும் கனிவாகவும் நடந்து கொள்ளுமாறு அல்-குரான் எங்களுக்கு கண்டிப்பாக கட்டளை இட்டிருக்கின்றது. அவர்களோடு தர்க்கிப்பது அவர்களது மனம் புண்படுபடி நடந்து கொள்வது “சீ” என்று கடிந்து கொள்வது எல்லாம் இணைவை த்தலிற்குப் பின் பெரிய பாவங்களாகும்.

“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!”

“இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!”

(ஸுரத்துல் இஸ்ரா 17:23,24)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles