சமரசம் இன்றேல் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் ஆணையாளரால் முடக்கப்படும்.

0

சமரசம் இன்றேல் முஸ்லிம் காங்கிரஸ் நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை தேர்தல் ஆணையாளரால் முடக்கப்படும்.

எதிர் வரும் 15 ஆம் திகதியிற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் உத்தியோக பூர்வமான செயலாளர் யார் என்பதனை கட்சியி யாப்பின் படி  பேராளர் மாநாட்டை கூட்டி தீர்மானித்து தனக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கட்சியின் தலைவருக்கு அறிவித்தல் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

hakகட்சியின் பொதுச் செயலாளர் ஹஸனலி இருக்க உயர்பீட செயலாளர் என மற்றுமொரு புதிய முகத்தை நியமித்து கட்சியின் உத்தியோக பூர்வ செயலாளராக முறைகேடாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக கட்சியின் ஒரு தரப்பினர் தலைவருடன் முரன்பட்டுள்ளதால் இந்த இழுபறி நிலை தோன்றியுள்ளது.

கட்சிக்கு செயலாளர் நாயகம் என்று ஒருவரும், செயலாளர் என்று ஒருவரும் இருப்பதால் குழப்பம் காணப்படுவதாகவும்,

தேர்தல் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எனும் இடத்தில் தனது பெயருக்கு பதிலாக மன்சூர் ஏ காதரின் பெயர் மாற்றீடு செய்யப்பட்டமைக்கு எதிராக கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலி செய்துள்ள முறைப்பாட்டின் காரணமாகவும்,

கடந்த பேராளர் மாநாட்டின் முடிவுகளை சட்டத்திற்கு முரணாக கட்சியின் செயலாளருக்கு பதிலாக கட்சியின் தலைவர் தேர்தல் ஆணையகத்துக்கு அறிவித்தமையை ஹசனலி கேள்விக்குட்படுத்தியதனாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்

?

அதன்காரணமாகவே எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் முடிவை அறிவிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்துள்ளாராம்.

அவ்வாறு அறிவிக்காவிட்டால் கட்சி எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளுதாம்.

ஒரு கட்சியின் பொதுச் செயலாளரை பதவி நீக்குவதில் ஏதேனும் சர்ச்சைகள், சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இருப்பின் அது தொடர்பாக இரு சாராரும் தேர்தல் ஆணையாளரை சந்தித்து தீர்வு ஒன்றைக் கோர முடியும்.

கட்சி அல்லது கட்சியின் தலைமை பேராளர் மாநாட்டினூடாக அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையின் பெயரில் செயலாரை பதவியில் இருந்து நீக்கியமை குறித்து தனது தனது நியாயாதிக்க அதிகாரத்தை வைத்து தேர்தல் ஆணையாளர் ஒரு தீர்வை சொல்லுவார்.

அல்லது, பிரச்சினையை சுமுகமாக தமக்குள் தீர்த்துக் கொள்ளுமாறோ நீதி மன்றம் செல்லுமாறோ இரண்டு தரப்பினரையும் வேண்டிக் கொள்வார்.

hak2அவ்வாறான ஒரு நிலைவரின் தற்காலிகமாக கட்சியின் சட்டபூர்வமான செயற்பாடுகள் தேர்தல் ஆணையாளரினால் இடை நிறுத்தப் படும், சுமுகமாக விவகரம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை அல்லது நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கட்சியின் சின்னத்தை பெயரை மற்றும் அதிகாரங்களை எந்தவொரு தரப்பும் பயன் படுத்த முடியாது.

அதுவரை கட்சியிற்கு இரண்டு தரப்பினரும் உரிமை கொண்டாடவும், அறிக்கைகள் விடவும் மாநாடுகள் நடாத்தவும், கட்சிக் கூட்டங்களை நடாத்தவும் இடைக்கால தடை உத்தரவு பெறப்படாதவரை எந்தவித தடையும் இல்லை.

அடுத்த வருட (2017) ஆரம்பத்தில் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சித் தேர்தல்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது, கட்சி முடக்கப்படும் பட்சத்தில் வேறு ஒரு சின்னத்திலேயே கட்சி போட்டியிட வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

முஸ்லிம் தேசியக் கூட்டணி என்ற பெயரில் கட்சியின் பிரதித் தவிசாளர் மஸிஹுத்தீன் நஈமுல்லாஹ் அவர்களை பொதுச் செயலாளராக கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியும் ,கிழக்கு முதலமைச்சர் ஹாபிழ் நசீர் அஹமது அவர்களை பொதுச் செயலாளராக கொண்ட மற்றுமொரு பதிவு செய்யப்பட்ட அரசியல்  கட்சியும் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

About author

No comments

“இகாமதுத் தீன்” சில குறிப்புக்கள்…

கீழிருந்து மேல்நோக்கி பயணிப்பதே இலக்கை நோக்கிய இனிய பயணம். தேவையான அறிவு ஞானத்தோடு, விவேகத்துடன், தன்னம்பிக்கையோடு ,துணிவோடு, சாதுரியமாக, சமயோசிதமாக, நிதானமாக, பொறுமையோடு, படிப்படியாக, கீழிருந்து மேல்நோக்கி பயணிப்பதே இலக்கை நோக்கிய இனிய பயணம். ...
Facebook Auto Publish Powered By : XYZScripts.com