அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன.
தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், நேற்றைய பகைவர்கள் இன்றைய நண்பர்கள், நேற்றைய நண்பர்கள் இன்றைய பகைவர்கள்.
பாரசீக (ஷீயா) பின்புலத்தில் சுன்னிக்களையும், (அறபு) சுன்னிக்களின் பின்புலத்தில் ஷீயாக்களையும் அழித்து பறந்து விரிந்த சியோனிஸ சாம்ராஜயத்தை நோக்கி காய்கள் நகர்த்தப் படுகின்றன.
யுக முடிவிற்கு முன்னர் இவ்வாறான சோதனைகள் இடம்பெறும் என்பதனை அல்-குர்ஆனும் சுன்னஹ்வும் உணர்த்தியுள்ளன, நிச்சயமாக இறுதி வெற்றி சத்தியத்திற்கே இருக்கும் என்பதனையும் அவை வலியுறுத்தியுள்ளன.
சோதனைகள் வரும் பொழுது ஒவ்வொரு தேசமும், சமூகமும் சோதிக்கப் படுவது போல் உம்மத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் இருக்குமிடத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தனித்தனியாகவும் சோதிக்கப் படுகின்றோம்.
மேலைத்தேய முதாளித்துவ மேலாதிக்க சக்திகளின் நவயுக காலனித்துவ நகர்வுகளை யூதசியோனிஸ சிலுவை சக்திகளே இருபது இருபத்தோராம் நூற்றாண்டுகளில் நகர்த்திவருகின்றன.
எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கும், கனிய வளங்கள் புதைந்திருக்கும் ஆபிரிக்க, மத்திய ஆசிய நாடுகளும் அவர்களின் நேரடி மறைமுக ஆக்கிரமிப்புக்களுக்கு உற்பட்டு வருகின்றன.
கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் ஏற்பட்டு வந்த பாரிய பொருளாதார நெருக்கடி, பெட்ரோ டாலரில் ஏற்பட்ட வீக்கம் என்பன அறபு வசந்தத்துடன் முடுக்கி விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்புப் பணிப்போரின் மூலம் சீர் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அறபுவசந்தம் அவர்களின் இலக்குகளுக்காக காவு கொள்ளப்பட்டதன் பின்னர் வட ஆபிரிக்க, மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளை இலக்கு வைத்து பல்வேறு அரசியல் இராணுவ பொருளாதார மூலோபாயத் திட்டமிடல்களை அதிதீவிரமாக அவை அமுலாக்கி வருகின்றன.
அறபு தேசங்களுக்கிடையிலான வேறுபாடுகளை பூதாகரமாக்கி பாரிய இராஜதந்திர பனிப்போரை முடுக்கிவிட்டுள்ள சியோனிஸ சிலுவை மேலாதிக்க சக்திகள் அவற்றைத் துண்டாடி தமது நிகழச்சிநிரலுக்குச் சாதகமான புதிய வரைபடமொன்றை அறிமுகம் செய்கின்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.
துரதிஷ்ட வசமாக முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் தொன்று தொட்டு நிலவி வரும் கிலாபத்திற்கான ஷியா சுன்னி பிரிவினை சர்ச்சைகளை யூத சியோனிஸ சிலுவை சக்திகள் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு துணையாகவும், சாதகமாகவும் மூலதனமாகவும் பயன்படுத்தி மத்தியகிழக்கு நாடுகளை பிணக்காடுகளாக மாற்றிவருகின்றன.
பாரிய இராணுவ செலாவணியுடன் ஆகாய, கடல்வழி, தரைமார்க்க கூட்டு யுத்த நகர்வுகளை ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மேற்கொண்டு தோல்வி கண்ட மேற்படி சக்திகள் முஸ்லிம் உலகில் உள்ளிருந்தே தமக்கு விசுவாசமான தேசங்களையும் , ஆயுத தீவிரவாத குழுக்களையும் பரஸ்பரம் மோதவிட்டு தமது இராணுவ மூலோபாய நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.