Monday, October 18, 2021

தீர்வின் பங்காளர் என சமூகமும் தேசமும் கருதுவோரே மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளனர்.

கடல் கடந்து உழைப்பது பணம் அல்ல, அர்ப்-பணம்!  இது அவர்களுக்கு சமர்ப்-பணம்!

தீர்வின் பங்காளர் என சமூகமும் தேசமும் கருதுவோரே மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளனர். (Part of the Problem not Solution!)

ஆன்மீக அறநெறிகளுடன் நிபுணத்துவ தராதரங்களையுடைய சமுதாய விழிப்புணர்வு மையங்களாக மஸ்ஜிதுகள் வலுவூட்டப் படுதல் காலத்தின் கட்டாயமாகும்!

போதைப் பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது வர்வேற்கத்தக்க விடயமாகும்!

பக்காத் திருடர்களை இன்று அரசியல் உருவாக்குகிறது, மக்கள் சட்டம் ஒழுங்கை கையிலெடுக்கும் அராஜகத்தை நோக்கியே நாட்டை நகர்த்துகிறார்கள்.

எமக்குரிய பாத்திரங்களிலன்றி எம்மாலியன்ற அல்லது எம்மீது திணிக்கப்படுகின்ற வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறோம்!  கோழைகளா நாம்!!

Signature:c6e3e0202ba2daccd15e4be5cb8b72fc1d5675e03068c5ddcc60c3f88acae198

அநீதியும் அக்கிரமும் ஓங்கி நிற்கின்றதென்றால் நாம் தோற்று விட்டோம் என்று அர்த்தமில்லை; சரணாகதி மனநிலை ஆபத்தானது!

இந்த அழகிய தேசமும் நம் சமூகமும் எதிர் கொண்டுள்ள சவால்கள் கண்டு அஞ்சவில்லை, மாறாக அவற்றை எதிர்கொள்ள அவை தயாரில்லை என்பதே அச்சம்!

மத்திய கிழக்கில் பல மில்லியன் சிறுவர்கள் உயிராபத்தில், தாய்-குகை சிறுவர் மீட்பு காட்சிப் படுத்தலிற்கான மனிதபிமானம்!  வாழ்த்துக்கள்!!

ஆழமான இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கே வாழ்வில் உண்மையான தன்னம்பிக்கை இருக்க முடியும்.

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடுமை ஆன்மீக வறுமை.

ஒரு ஈ எறும்பையேனும் அல்லாஹ் வீணுக்காக படைக்கவில்லை,  நாம் ஏன் பிறந்தோம்? என எவரும் நம்பிக்கை இழக்காதீர்;  எங்களது நேரமும் வரும்!

ஒருவர் ஒரு தொழிலை பெற்றுக் கொள்ள உதவுவது போன்ற ஒரு ஸதகா ஜாரியாவை நான் அறியவில்லை; கைகொடுத்து உதவுங்கள்!

விவசாயிகள் சேற்றில் கால் வைக்கா விட்டால் நமக்கு சோறு இல்லை என்பது போல போராளிகளும் சேற்றில் கை வைக்கா விட்டால்..  சோறு ..?

கார்பட் ரோடுகளில் கண்ணு மூக்குத் தெரியாமல் வேகமாக ஓடும் இரு மற்றும் முச்சக்கர வண்டிகளே அதிகம் விபத்துக்குள்ளாகின்றன!

அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண அரசு, மாவட்ட, பிரதேச செயலகங்கள் வழங்கும் சேவைகள் குறித்து முஸ்லிம்கள் ஆர்வம் காட்டுவதில்லை!

தன்னார்வப் பொதுப்பணிகளில் இருந்து விலகி நிற்கும் மனப்பான்மை தலைமைத்துவப் பண்புகளை உயரிய மானுட விழுமியங்களை கருவறுக்கும்.

தம்மிடமுள்ள பணத்திற்கு இருப்பதனை விடவும் அதிக பெறுமதி.. அறிஞர்களது அர்ப்பணத்திற்கு இருப்பதை செல்வந்தர்கள் உணர்தல் வேண்டும்.  அ/நீதி

விடிய விடிய ஆன்மீகம் பேசி மஸ்ஜித் வளாகத்தில் இருந்தும் ஸுபஹு ஜமாஅத்திற்கு வராத குருமார்களை  ஓய்வு கொடுத்து அனுப்பி வையுங்கள்.!

மாற்றுக் கருத்துள்ளவர்களை  இளக்காரமாக மட்டம் தட்டிப் பேசுவோர் அறிவுலகிற்கு பங்களிப்பு செய்வோரல்லர்! ஜாஹிலிய்யதின் காவலர்கள்!!

இறுதித் தேர்விற்கான ஆய்வுகளை தாய் மொழியில் அதிகம் வேண்டப்படும் நூலுருப்படுத்த முடியுமான பரப்புகளில் செய்யுங்கள்!

மனைவி மக்களை பிரிந்து நீண்ட காலம் வெளி நாடுகளில் வாழ்வோர் உடனடியாக நாடு திரும்பும் வழி வகைகளை ஆராயவும்.

வாழ்வதற்காகவே உழைக்கிறோம்.. உழைப்பதற்காக வாழ்வதில்லை!

விவாகரத்தும் தாபரிப்புமின்றி மனைவி மக்களை தவிக்கவிட்டு கடல் கடந்து வாழும் அந்த உயிரினம் ஓர் அடிமட்ட அஃரினையே!

ஸைபர் உலகில் இடைவெளிகள் துரிதமாக நிரப்பப் படுகின்றன, சமூக ஊடகங்கள் பள்ளியறை வரை ஊடறுத்து தனிமையை விரட்டுகின்றன!

எமது தவறுகள் பலவீனங்கள்  குற்றங்களை மறைக்க யஹூதி நஸாராக்களையும் மாற்று முகாம்களையும் குறை சொல்கிறோம்.

வாதம்,விவாதம், விதண்டாவாதம், பக்கவாதம், முடக்குவாதம், குதர்க்க வாதம் போன்ற சகல நோய்களில் இருந்தும் பாதுகாப்பு தேடுகின்றேன்!

முழு வீச்சில் தொடங்கிய நம் போராட்டங்கள் சூதாட்டங்களானதால் போராட்ட உணர்வுகள் மழுங்கிப்போன புதிய தலைமுறைகள் தோன்றியுள்ளன.

மனிதாபிமான உதவி என்றால் உங்கள் தனிப்பட்ட அறிமுகங்களை மட்டும் தேடாதீர், அவர்களை விடவும் பன்மடங்கு தேவையுடன் பலரும் இருப்பர்.  அ/நீதி

சவால்கள் கண்டு அஞ்சி சந்தர்ப்பங்களிற்காக காத்திருப்பவன் அல்ல.. சவால்களையே சந்தர்ப்பங்களாக மாற்றி முன்னே செல்பவனே தலைவன்!

அழைக்கப்படுவதற்கு வரிசையில் காத்திருக்கணும். அல்லாஹ்வின் அருள் யாருக்கு எந்த வடிவில் எப்போது வரும் என்பதனை அறியோம்.

எதிர் கொள்ளும் தோல்விகள், அவமானங்கள், அநீதிகள், பாகுபாடுகள், புறக்கணிப்புக்கள் கூட பலரை சாதனைகளின் உச்சம் தொடச் செய்துள்ளன.

கார்படட் ரோடுகளில் கண் மூக்குத் தெரியாமல் ஓடும் மோட்டார் பைக்குகளும் ஆட்டோக்களும் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுகின்றன!

பாரிய ஊழல் மோசடிகள் குற்றச் செயல்கள் புரிந்த வி ஐ பி கள் சட்டத்தின் முன் கொணரப்பட்டு தப்பிக்கச் செய்வது தேர்தல் அரசியல்!

அரச மற்றும் தனியார் ஊடகங்களின் ஏகபோகங்களை சமூக ஊடகங்கள் தகர்த்தெறிவதால் அநீதிகள் அராஜகங்களுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

பாமரத்தனமான பற்றுதல்களே சமூகங்களின் எழுச்சியிற்கு முன்னால் உள்ள பாரிய தடைகளாகும். அடகு மீட்கப்பட வேண்டிய மூளைகள்.

தவறிழைப்போர் பாதுகாக்கப்பட்டு பாதிக்கப்பட்டோரே தண்டிக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள், கணம் கோட்டார் அவர்களே!

நீதியை நிலை நிறுத்துவதும் அநீதிக்கெதிராக போராடுவதும் இன மத மொழி பிரதேச தேச எல்லைகளால் நிர்ணயம் செய்யப்படுவதில்லை! இஸ்லாம்!

சமூகத்தில் (பிர)பல வளவாளர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து அர்/றப்பணி செய்கிறார்கள்  ஸகாத் ஸதகா அவர்களை அடைவதில்லை.

சத்தியத்தை சொல்லும் பொழுது கத்துவதோ வெறிபிடித்தால் போல் பேசுவதோ, இளக்காரமாக விமர்சிப்பதோ அசத்தியமான வழிமுறைகளாகும்!

தனியாட்களையோ நிறுவனங்களையோ தூற்றாது கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே உயரிய இஸ்லாமிய பண்பாடாகும்! நபி வழியாகும்!!

பைதுல் மால் நிதியிலிருந்து எந்தவொரு கலீபாவும் அரசியல் இப்தார்கள் கொடுத்ததில்லை! மக்களது வரிப்பணம் அமானிதமாகும்!

அல்லாஹ்விற்காக நோற்ற நோன்பை ஹலாலான ஆகாரத்தைக் கொண்டே துறப்போம்!

சரி பிழை என தெரிவதை எழுதுகிறேன். தனி நபர்களுடனோ குழுக்களுடனோ எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு,கொடுக்கல் வாங்கல் கிடையாது!

விமர்சனங்கள் அமானிதங்கள்! ஆதரவோ எதிர்ப்போ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வோம்! வரம்பு மீறல் பாவச் செயலாகும்!

அரசியலில் வயிறு வளர்ப்போர் துன்யாவையும் மார்க்கத்தில் வயிறு வளர்ப்போர் உம்மத்தின் துன்யா ஆகிரம் இரடண்டையும் விற்றுப் பிழைக்கின்றன.

அறபியின் வீட்டில் அடிமைத் தொழில் புரிய மஹ்ரமின்றி கடல் கடக்கும்  பெண்களை வாழ்விக்க ஸகாத்தில் ஒரு பங்கை ஒதுக்கலாம்! நவயுக அடிமைகள்.

செல்வம் செல்வாக்கு ஆட்சி அதிகாரம் எதுவுமின்றி அனாதரவாய் நிற்கும் சத்தியத்தின் காவலர்களுக்கு சுபசோபனம் உண்டாகட்டும்! அல்லாஹ் உடனிருக்கிறான்!

ஆறு நாள் லெப்பை வைத்தியர்களை சட்டத்தின் முன் நிறுத்துதல் ஒரு சமூகக் கடமையாகும்! மஸ்ஜிதுகள்  விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது!

சத்தியத்தை சாட்டையாய் எடுத்து அடுத்தவரை போட்டுத் தாக்கவே    சண்டாளர்கள்போல் சிலர் காத்திருப்பர். வினை அவர்கள் மீதே விழுகிறது.

“எந்தவொரு துறையிலும் ஒரு சில தனியாட்களை ஆயுட்கால மகாத்மாக்களாக துதி பாடாதீர்கள் அவர்கள் விலை போய் விடலாம் விழுந்தும் விடலாம்!”

மூளை ஆதரமின்றி மூலாதாரங்களை அணுக முடியாது, பகுத்தறிவின்றி பகுப்பாய்வுகள் இல்லை!

நூற்றுக்கணக்கான ஆலிம்கள் உள்ள அமைப்புகளில் கூட விரிவுரைகளிற்கு ஒரிருவரையே  முற்படுத்தும் அரசியல் நிலவுகிறது. ஆயுட்கால ஏகபோகம்?

மஸ்ஜித் மைய செயற்பாடுகளூடாக சிவில் சமூக மயப்படாத சிந்தனைகள் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை தருவதில்லை. சமூக அங்கீகாரம்!

நோன்பு : ஆன்மாக்களை வலிமைப் படுத்தும் பயிற்சியாகும்! உண்ணும் பருகும் நேரங்களை பகலிலிருந்து இரவிற்கு மாற்றிக் கொள்வதல்ல!

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இல்லாத போது வித்திட்ட நாம் அவை வியாபித்த பின் கையாளும் ஞானமின்றி தவிக்கிறோம்! ஜாஹிலிய்யத்!

விரிவுரைகளின் பொழுது அறிஞர்களின்  குறைநிறைகள் பேசும் ஈனப் பிறவிகள் கல்வியுலகிற்கு சாபக் கேடுகளாகும்! -மட்டம் தட்டும் மட்ட ரகங்கள்-

ஹலாலான வாழ்வாதார கற்கைகள் |பயிற்சிகள் இல்லா சமயக்கல்வி நிறுவனங்கள் பரிசீலனை செய்யப்படுதல் காலத்தின் கட்டாயம்!

மருந்து போல் உணவின்றேல் விருந்து போல் மூவேளை மருந்துண்பீர்.

குறுகிய வட்டத்திற்குள் வாழ்வையும் பணியையும் குறுக்கிக் கொள்ளுமளவு தனியாட்களிடமோ குழுக்களிடமோ சொந்த மூளையை அடகு வைத்தலாகாது.

பிரபல பீரங்கிகளை தேடியலையாது ஊரிலுள்ள உலமாக்களை கல்விமான்களை புனித ரமழான் நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்வோம்! முற்றத்து மல்லிகை!

நேற்று விதைத்தவைகளை தான் இன்று அறுவடை செய்கிறோம், இன்று விதைப்பவை நாளை..! யார் யாரோ எதை எதையோ விதைத்தார்கள், விதைக்கிறார்கள்.

அருகிலிருப்போர் தான் அதிகம் பொறாமைப் படுவார்கள், சகபாடிகளோடு பணிகளை மட்டுப் படுத்திக் கொள்ளாதீர்! சிலர் விடவே மாட்டார்கள்!

ஒலி பெருக்கிகள் நன்மைகளை அடைவுகளை பெருக்குவதுமில்லை (x) கூட்டுவதுமில்லை (+) மாறாக (-) கழிக்கின்றன.

உழைப்பதற்காக வாழ்கிறோமா? வாழ்வதற்காக உழைக்கிறோமா? வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் ஆயிரங்கள் மட்டுமல்ல!

உரிய வேடங்கள் தவிர்த்து எமக்கில்லாத பல வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறோமா? என ஆழ் மனது உறுத்துகிறது! அஸ்தஃபிருள்ளாஹ்!

அறிவும் விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் எல்லாம்  வல்ல அல்லாஹ் மானிடருக்களித்த மூலாதார அருட் கொடைகள், கற்றலும் தேடலும் இஜ்திஹாதே!

இலங்கையில் தினமும் போதைவஸ்துகளுக்காக 45 கோடி செலவிடப்படுகிறதாம்! சமூகமே! 12-19 வயதினர் இலக்கு.

குறுக்கு வழிகளில் முன்னே செல்வோரை கண்டுகொள்ளா சமூகம் நேரியவழியில் செல்வோரை குறுக்கே நின்று குறுக்கு விசாரணை செய்யும்!

ஸுபஹு தொழாத பொழுதுகள் விடிவதில்லை. தொழிலுக்காக விழிக்கும் பலர் தொழுகைக்காக விழிப்பதில்லை!

அநீதிக்கு ஆளனவர் பிரார்தனை அங்கீகரிக்கப்படும் பொறுமையாளர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.

விதவிதமான உணவுகளை சுவைக்கும் நாம் அவற்றை உற்பத்தி செய்வதில்லை, சிறந்த நூல்களை வாசிக்கும் நாம் அவற்றிற்கு உயிர் கொடுப்பதில்லை!

“மகாஸிதுஷ் ஷரீஆ” இஸ்லாமிய ஷரீஆவின் உயர் இலக்குகள் குறித்த ஆய்வுப் பரப்பு நவீன யுகத்திற்கான ஒரு சர்வதேசிய பரிபாஷையாகும்!

இஸ்லாத்தின் அபார வளர்ச்சியே எதிரிகளை கதிகலங்கச் செய்துள்ளது! “இஸ்லாமோபோபியா” சத்தியம் வெல்லும் அசத்தியம் அழிந்தே தீரும்!!

எனக்கு / எமக்கு மட்டுமே எல்லாம் தெரியும், நாம தான் எல்லோரையும் மேய்க்கணும் என்போர் சகலரையும் மதிக்கும் “ஷூரா” முறை கண்டஞ்சுவர்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles