மரணிப்பவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரம் வீதி விபத்துகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் (குறிப்பாக சாரதிகள்) ஏற்படுத்துவதாகும்.
இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 150 பேர் விபத்துக்களால் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப் படுகின்றனர்.
வருடத்திற்கு சுமார் 40,000 – 50,000 வாகன விபத்துக்கள் இடம் பெறுகின்றன, சுமார் 2000- 3000 பேர்கள் விபத்துக்களில் இறந்து விடுகிறார்கள், ஒருநாளைக்கு சுமார் 5-6 பேர்கள் விபத்துக்களில் சிக்கி இறந்து விடுகின்றனர.
41% உயிராபத்துள்ள விபத்துக்கள் மற்றும் 61% விபத்துக்கள் மேல் மாகாணத்திலேயே இடம்பெறுகின்றன.
18% முச்சக்கர வண்டிகளும் 17% பஸ் வண்டிகளும் 16% வான்களும் 12% மோட்டார் சைக்கிள்களும் 6% கார்களும் விபத்துக்களில் சிக்குகின்றன.
விபத்துக்களில் சிக்கும் ஆட்களில் 38% பாதசாரிகள் 26% பயணிகள் 14% துவிச்சக்கர வண்டி பயணிகள் 12% மோட்டார் சைக்கிள் பயணிகள் 10% சாரதிகள் ஆவர்.
குடும்பங்களின் பேரிழப்புக்களுக்கு அப்பால் அரசாங்கம் வருடம் தோறும் 10,000 சிகிச்சைகள் பொலிசார் சேவை சட்ட சேவைகள் என பல்வேறு விடயங்களுக்காக செலவிடுகிறது.
இன்று இலங்கையில் அதிகரித்து வரும் வாகனங்கள், அபிவிருத்திகாணும் அதிவேக பாதைகள் விபத்துக்களின் அதிகரிப்புக்கும் காரணமாக இருந்தாலும், பொதுமக்களின் விழிப்புணர்வு இன்மை, சாரதிகளின் கவனஈனங்கள், மது போதை வஸ்துக்களின் பாவனை, போக்குவரத்து சட்டவிதிகளின் குறைபாடுகள் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
கடந்த ஓரிரு வருடங்களாக செப்பனிடப்பட்டு கார்பட் போடப்பட்டுவரும் உள்ளூர் பாதைகளில் வேகத் தடுப்புகள் போடப்படாமையும் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாக இருக்கின்றன.
இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பாடசாலைகள், கல்வி உயர்கல்வி நிறுவனங்கள், வணக்கஸ்தலங்கள், பொலிசார், கல்விமான்கள், மததலைவர்கள், பல்கலைக் கழக சமூகத்தினர் தமது பங்களிப்பை செய்தல் வேண்டும், தோற்று மற்றும் தொற்றா நோய்களைவிடவும் கூடுதலான உயிர்ப்பலி மற்றும் மருத்துவ செலவினங்களை வாகன விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன.
இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் விபத்துக்களில் வீதி விபத்துக்களே அதிகமாக காணப்படுவதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
போல் வில்சன் : தினகரன் வார மஞ்சரி Sunday, 30 September 2018
இவ்வீதி விபத்துக்களின் மூலம் நாளாந்தம் சராசரியாக 8.7 பேர் மரணிக்கின்றனர். 8 பேர் படுகாயமடைகின்றனர். நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்களைவிட அதிகமானவர்களை பலியெடுப்பது வீதி விபத்து என்றால் மிகையில்லை. அதாவது சுமார் மூன்று மணித்திலாலத்திற்கு ஒரு வீதி விபத்து ஏற்படுகின்றது என்று சுட்டிக்காட்டுகின்றது.
இலங்கை பொலிஸ் திணைக்களம் நாளாளவிய ரீதியில் வீதி போக்குவரத்தை கண்காணித்து, ஒழுங்குகளை செய்துவருகின்றது. அதிகமான வீதிச் சமிக்ஞை விளக்கும், சில முக்கியமான சந்திகளில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இவற்றை சில சாரதிகள் கவனத்தில் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுண்டு.
வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் கவலையீனத்தினால்; இவர்களில் சிலர் வேகமாக வானத்தை செலுத்த முற்படுதல், சிலர் இரவு பகல் பாராது கண்ணயராது வாகனத்தைச் செலுத்துவதும், விசேடமாக இளம் வயதில் சாரதி அனுமதி பத்திரம் பெற்ற இளைஞர்கள் மிக துடிப்புடன் வாகனத்தை செலுத்துவதும், வீதி ஒழுங்குகளை பின்பற்றாது வாகனத்தைச் செலுத்துவதினாலுமே அதிகளவான வீதி விபத்துக்கள் நிகழ்கின்றன.
அதிகமான வீதிகளின் இருமருங்கிலும் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் உட்பட பல அறிவிப்புக்கள் காணப்படும். அத்துடன் வீதிகளில் கீறப்பட்டுள்ள கோடுகள் கூட சாரதிகளின் கவனத்திற்குரியவை. ஆனாலும் சில சாரதிகள் இந்த விதிகளைக் கூட கடைப்பிடிப்பதில்லை.
“வாகனம் ஓட்டும் போது தூங்கி வழிவது, பயணத்திற்கு முன்னர் ஓய்வு எடுப்பதில்லை என்பன சமீபகால விபத்துகளுக்கு வழிவகுத்திருக்கிறது’ என்று விபத்துக்கான ஒரு குறிப்பில் கூறப்பட்டுள்ளது
சில வாகனங்கள் வீதிக்கு வருவதற்கு முன் வாகனத்திற்கு எண்ணெய் இருக்கிறதா? பிரேக் உள்ளதா? அல்லது வாகனத்தின் நிலை என்னவென்பதை வாகனத்தை செலுத்தும் சாரதிகள் அறிந்திருக்க வேண்டும்.
அதேநேரத்தில் அதிகளவான வாகன ஓட்டுநர்கள் வீதி ஒழுங்கை பின்பற்றாமலும், சில சாரதிகள் ஏனைய வாகனங்களுக்கு இடம்கொடுக்காமல் விரைந்து செல்ல முயற்சிப்பது, ஓட்டுநர்களின் பார்வை கோளாறு. ஒருசில சாரதிகள் கைபேசியூடாக பேசிக் கொண்டே வாகனத்தைச் செலுத்துவதினாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மதுபோதையில் வாகனம் செலுத்துதல், இடதுபுறமாக முந்திச் செல்லல் போன்றவற்றினாலும் அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகள், நாய்களும் அதிகளவான விபத்து ஏற்பட காரணமாகின்றன.
கடந்த வருடங்களில் வீதி விபத்துக்களினால் மரணித்த எண்ணிக்கையும், படுகாயமுற்ற எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்;
2014 ஆம் ஆண்டு 2404 பேர் மரணித்துள்ளனர், 2015 ஆண்டு 2722 பேர் மரணித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு 3003 பேர் மரணித்துள்ளனர் 8518 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு 3101 பேர் மரணத்துள்ளனர். 8303 பேர் படுகாயமுற்றுள்ளனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் 2018 ஜனவரி முதல் ஏப்ரல் 31 ஆம் திகதி வரை 786 பேர் மரணித்துள்ளனர். இக்காலப் பகுதியில் 732 வீதி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நாளாந்தம் 8 அல்லது 7 பேர் மரணித்திருப்பதாவும், மூன்று மணித்தியாலத்திற்கு ஒருவர் வீதம் மரணித்திருப்பதாவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகிறது.
அன்றாடம் இடம்பெறும் வீதி விபத்துக்களில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களே அதிகமாக சேதத்துக்குள்ளாகுகின்றன. வீதி ஒழுங்கு விதிகளை மோட்டார் சைக்கிளோட்டிகள், முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அதிகம் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகமாகவே காணப்படுகிறது.
பாதசாரிகள் கவனயீனமாக வீதியை கடப்பதினால் மற்றும் அலைபேசியில் கவனத்தைச் செலுத்திக் கொண்டு வீதிகளில் செல்வதினாலும் விபத்துக்களுக்கு இன்னுமொரு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களினால் ஒருவர் மரணமடையும்போது அந்த குடும்பத்தின் நிலை என்னவாகும்? அதேநேரத்தில் ஒருவர் படுகாயமுற்ற வேலையில் குடும்பத்தின் பொருளாதார பிரச்சினையை தாங்குவது யார்? இப்படியான கேள்விகளுக்கு பதில் இல்லாவிடினும், வாகனத்தைச் செலுத்துபவர்கள் குற்றவாளியாக காணப்பட்டு சாரதிக்கு தண்டனை வழங்கும் பட்சத்தில் அக்குடும்பத்தின் நிலை என்ன?
எது எப்படியிருப்பினும் வீதியில் வாகனத்தைச் செலுத்தும் ஒவ்வொரு சாரதியும் நிதானத்துடனும், ஏனைய வாகனங்களுக்கு இடங்கொடுத்தும், வீதி ஒழுங்கை சரிவர கடைப்பிடிக்கும் போதும் எதிர்காலத்தில் இந்த வீதி விபத்துக்களை தவிர்க்கலாம். அதேநேரத்தில் வீதிகளில் பயணிக்கும் பாதசாரிகளும் வீதிகளில் செல்லும் கட்டாக்காலிகளைப் போல் செல்லாது வீதி ஒழுங்குகளை கைக்கொள்ள வேண்டும். நடுவீதிகளில் வாகனங்களுக்கு குறுக்காக வீதிகளை நடக்காமல், வீதி கடவைகளில் வீதிகளை கடந்தால் வீதி விபத்துக்களை தவிர்க்கலாம். ஒவ்வொரு உயிருக்கும் பெறுமதியுண்டு என்பதை தெரிந்துணர வேண்டும்.
போல் வில்சன் (w_paulwilson@yahoo.com
Rally Round in making road safer and to prevent accidents
The National Council for Road Safety NCRS statistics from January 1 to November 30 (in 2017) show 913 motorcyclists, 169 pillion riders, 263 push cyclists, 840 pedestrians, 222 drivers died in road accidents. According to Traffic Police Headquarters statistics from January 1 to December 25, some 2,984 people died in 2,822 road accidents. During the festive season — from December 19 to 25 – around 62 people died in 60 road accidents.
A road accident occurs every 10 minutes in Sri Lanka and the resultant losses of lives is six or seven, a study has revealed. Only 30 out of these accidents get reported, says director general of the non-communicable diseases unit Thilak Siriwardena.
150 admitted to hospital a day : Also, more than 150 people are admitted to hospital following road accidents on a daily basis, he says.
Most of these accidents are blamed on three wheelers and motorcycles. According to the National Council on Road Safety, 18,980 road accidents occurred from 01 January 2017 to 30 June 2017.
Of them, 1,473 were fatal, causing 1,547 deaths.
These accidents also left 4,062 with serious injuries and 15,340 with minor injuries, says the council.
20,000 deaths a year : Meanwhile, statistics issued by the office of the police media spokesman for fatal road accidents between 2012 and 2016 indicates that around 20,000 lives were lost each year.
================================================================================
Traffic Police – Road Traffic Accidents |
What is An Accident ?
Reasons for Accidents
Driving distractions
|