Monday, December 9, 2024

அன்பின் தாயார் ஆமினாவின் பூர்வீகம்!

தாயாரின் பூர்வீகம் ரலிமங்கொடை தெல்தோட்டை…!

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னரின் வேண்டுகோளின் படி கண்டி தெப்பக்குளத்தை அமைத்த பெரியார் மம்முநெய்னார் (அறேபிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்தப் பெரியாரது பூர்வீகம் இரண்டாவது கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் சார்ந்த அல்குஹாபா எனும் கோத்திரமென வரலாற்றுக் குறிப்புகளில் இருப்பதாக குடும்ப பெரியார்கள் கூறுகின்றனர்.) அந்தப் பெரியாருக்கு ஹெவாஹட்ட பகுதியில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பாரிய பிரதேசமொன்றில் அவரது வம்சாவளியினர் வாழ்ந்ததாகவும் அவரது வாரிசுகளில் ஒருவரே காதர் மீரா சாஹிபு அப்பா என்றும் எமது தாயாரின் பூர்வீகம் பற்றி சொல்லப்படுகிறது.

காதர் மீரா சாஹிபு அப்பா ரலிமங்கொடை எனும் கிராமத்தில் வயல்வெளிகளை தேயிலை தோட்டங்களை கொண்டிருந்த ஒரு விவசாயம் சார் கொள்முதல் வர்த்தகராகவும் மிகவும் செல்வாக்குள்ள மனிதராகவும் வாழ்ந்திருக்கிறார்.

அழகிய வனப்புமிகு ஒரு பிரதேசத்தில் அந்தக் காலத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட இல்லத்தை அமைத்திருந்தார், அதற்குரிய சீமை தகடுகளை அந்தக் காலத்தில் தருவித்திருக்கிறார், மிகவும் பெறுமதியான வொக்ஸ் வெகன் வாகனத்தையும் கொள்வனவு செய்திருக்கிறார்.

அவருக்கும் அவரது மனைவி காதர் பீவி (உம்மும்மா) விற்கும் 14 பிள்ளைகள். 7 ஆண் மக்கள், 7 பெண் மகளிர். அப்துல்லாஹ் அபதுர்ரஹ்மான் என இருவர் கிடைத்தவுடன் வபாஃத் ஆகியிருக்கிறார்கள்.

அவர்களது ஒன்பதாவது பிள்ளை தான் எமது அன்பின் தாயார் கடந்த வருடம் டிஸம்பர் மாதம் 16 ஆம் திகதி வபாஃத் ஆகிய ஆமினா; 1960 ஆம் ஆண்டு தந்தை மஸிஹுத்தீன் தெல்தோட்டை எனசல்கொல்ல மகாவித்தியாலத்தில் ஆசிரியராக கடமை புரிகின்ற காலம், தனது சக ஆசிரியர் குழாத்தில் கடமை புரிந்த ரலிமங்கொடையைச் சேர்ந்த அப்துல்கணி ஆசிரியரிடம் தனக்கு பெண் பார்க்கும் கதையை சொல்லியிருக்கிறார்.

ஆமினா

அப்துல்கணி ஆசிரியரும் தனது சொந்த பெரியப்பாவின் மகள் ஆமினாவைப் பற்றி கூறியிருக்கிறார் உம்மாவும் ஆசிரியையாக ரலிமங்கொடை முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்பிக்கின்ற காலத்தில் ஒருநாள் பாடசாலைக்கு செல்லும் ஆமினாவை பார்க்க ரலிமங்கொடைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார், அதன்பின்னர் வாப்பாவின் சகோதரர் ரபீஉதீன் அவர்களை அனுப்பி பேச்சுவார்த்தைகளை நடாத்தி 1961.12.18 அன்று திருமணம் நடை பெற்றிருக்கிறது.

எனது மூத்த சகோதரன் அனஸுல்லாஹ், தற்போதைய கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்.

இளைய சகோதரர் நயீமுல்லாஹ் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர். ஶ்ரீ.ல.மு.கா. தவிசாளர். மு.தே.கூ செயலாளர் நாயகம்.

இளைய சகோதரி ஆயிஷா கண்டி பதியுதீன் பாலிகா ஆசிரியை முன்னாள் கம்பளை சாஹிரா கணிஷ்ட பிரிவுத் தலைவர்.

(நாள்வரினதும் படங்கள் ஆக்கத்தின் இறுதியில் தரப்பட்டிருக்கிறது)

உம்மாவின் இரு சகோதரர்களுடன்

உம்மாவின் பெற்றார்கள் காதர் மீராசாஹிபு மற்றும் காதர்பீவி தம்பதிகளின் புதல்வர் பதல்வியர் விபரங்களை சுருக்கமாக கீழே தருகிறேன்.

முதலாவது பிள்ளை ஜமீலா பீவி அவரது கணவர் யூஸுப் ஆலிம் சாஹிபு, இருவரும் வபாஃத் ஆகி விட்டார்கள். அவர்களுக்கு 14 பிள்ளைகள்:

யஹ்யா (☆ வபாஃத்)
சலீம்☆
நூருல் ஹிதாயா☆
குர்ரதுல் ஐன்☆
சிஹாப்தீன்
அன்வர்
பவ்சுல் இனாயா
சுரையா☆
கலீலுர்ரஹ்மான்
முனவ்வரா
இப்பதுல் கரீம்
கன்சுல் கரீம்
பவ்சுல் கரீம்
அஷ்ரஃப்

இரண்டாவது பிள்ளை மகன் காலிதீன் ஆசிரியர் கண்டி கடுகஸ்தோடையில் திருமணம் முடித்து வாழ்ந்தவர்.

உபைதீன் மாமா

மூன்றாவது பிள்ளை மகள் உம்மு சல்மா அவரது கணவர் ஹஸன் மொஹிதீன் ஹஸரத், இருவரும் வபாஃத் ஆகி விட்டார்கள், அவர்களுக்கு 12 பிள்ளைகள் :
முஹம்மத் ரபீக் (☆ வபாஃத்)
சித்தி அனீஸா☆
சித்தி சகீனா☆
சித்தி சரீபா
முஹம்மத் மிஃலார்☆
சித்தி அசீமா
பவ்சுல் இனாயா
சித்தி கதீஜா
முஹம்மத் ரலி☆
சித்தி நசீமா
முஹம்மத் முர்தலா
முஹம்மத் தமீம்

நான்காவது பிள்ளை ஹலீமா உம்மா அவரது கணவர் மொஹிதீன் இவர்களது மரணத்துடன் பிள்ளைகள் முஹம்மத் நிஸார், மாஜிததுல் குறைஷியா இருவரையும் எமது பெற்றோர் எடுத்துக் கொண்டு வந்து எம்முடன் இணைத்துக் கொண்டனர், அவர்களது இளைய சகோதரி ஸலீமா அவர்களும் பின்னர் எங்களுடன் இணைந்து கொண்டார். அவர்களுக்கு 8 பிள்ளைகள்:
ஹாலிர்☆
அஸீஸுல்லாஹ்
நிஸார்
மன்சூர்
ஹாமீம்
அம்மார்
குரைஷியா
சலீமா

ஐந்தாவது பிள்ளை மகள் மர்யம் பீபி அவரது கணவர் பெயர் யூசுஃப், இருவரும் வபாஃத் ஆகி விட்டார்கள். அவர்களுக்கு 10 பிள்ளைகள்: அப்துல் ஹமீத்
ஹபீலா
தாஹிர்
மனாப்
மஸாஹிரா☆
நஜீம்☆
நூருல் இனாயா
முனவ்வரா
பவ்சுர்ரஹீம்
ரஸானா

ஆறாவது பிள்ளை மகன் உபைதீன் அவருக்கும் எட்டுப் பிள்ளைகள். மாமா மாமி இருவரும் வபாஃத் ஆகி விட்டார்கள். அவர்களது பிள்ளைகள்: நிலாம், நிஸார்☆, உவைஸ், முனவ்வரா, முஜாஹிதா, பாயிஸ், ஜஹ்பர், நஜ்மாஹ்.

ஏழாவது பிள்ளை வபாஃத் ஆகிவிட்ட அஹமத் லெப்பை இந்த வருடம் தான் வபாத் ஆனார். அவருக்கு ஐந்து பிள்ளைகள். பெளஸர், அஸ்ஹர், ஜவ்ஹர், மரீனா, ரிஸ்வானா.

எட்டாவது பிள்ளை மகன் வபாஃத் ஆகிவிட்ட ஸைனுல் ஆபிதீன் ஆசிரியர் அவரது மனைவி கெகிராவ வபாஃத் ஆகிவிட்ட அதிபர் ஜனா எம்.ஏ. அவர்களுக்கு நான்கு பிள்ளைகள்.

ஒன்பதாவது பிள்ளைதான் மகள் வபாஃத் ஆகிவிட்ட எமது அன்பின் தாயார் ஆமினா.

பத்தாவது பிள்ளை மகள் ஜன்னாஹ் ஆசிரியை கண்டி மாவில்மட ரவூஃப் மாஸ்டரை திருமணம் செய்தார் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள்: ரொஷான், ஷாமிலா, சஹ்ரானா, சியானாஹ்.

பதினொரவது பிள்ளை மகன் பிறந்தவுடன் வபாஃத்தானவர் அப்துல்லாஹ்.

பண்ணிரண்டாவது பிள்ளை மகன் ஓய்வு பெற்ற ஆசிரியர் இப்ராஹீம் ஹொரம்பாவையில் திருமணம் செய்து வசிப்பவர் அவருக்கு ஏழு பிள்ளைகள்: மஃரிபா, பர்ஹான், பர்ஸானா, பைஃரோஸா, பஸால், பாஸில், பவ்ஸான்.

பதிமூன்றாவது மகள் வபாஃத் ஆகிவிட்ட கைருன்னிஸா ஆசிரியை அவர் நீர்கொழும்பில் கடற்படை அதிகாரி அஹமத் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள், ஷிராஸ் முஹம்மத், ஷிஹாமா.

பதின்நான்காவது பிள்ள மகன் அப்துர்ரஹ்மான் பிறந்தவுடன் வபாஃத் ஆனவர்.

யா அல்லாஹ்! உன்னிடம் மீண்டுவிட்ட எமது பெற்றோர்கள் அவர்களது பெற்றோர்கள், உடன்பிறப்புக்கள் அனைவரது பாவங்களையும் குற்றம் குறைகளையும் மன்னித்து, அவர்களது நல்ல அமல்களை அங்கீகரித்து உனது மிகப் பெரும் கிருபையால் உயரிய சுவனத்தில் ஒன்று சேர்ப்பாயாக!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles