Monday, October 18, 2021

ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் உயரிய இஸ்லாமிய வாழ்வு நெறியின் தூதுவர்களே (AMBASSADORS).

உயரிய இஸ்லாமிய குணாதிசயங்களை, பண்பாடுகளை, ஒழுக்க விழுமியங்களை, தயாள குணங்களை, தாராளத் தன்மைகளை, பெரும்தன்மைகளை அழகான இஸ்லாமிய தனிநபர், குடும்ப, சமூக,அரசியல்,பொருளாதார வாழ்வு நெறிகளை செயல்வடிவில் பிரதிபலிக்கின்ற ஒவ்வொரு விசுவாசியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உண்மை பிரதிநிதிகள் கலீபாக்கள் ஆவர்.

ஒவ்வொரு தனி மனிதனும் மிகச் சிறந்த ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மீது கட்டி எழுப்பப் படுகின்ற வெற்றிகரமான தத்தமது வாழ்வு நெறியை செயலுருவில் ஏனைய சமூகங்களுக்கு வியாக்கியானம் செய்கின்ற பொழுது இஸ்லாம் முஸ்லிம் குறித்த காழ்புணர்வு பிரச்சாரங்கள் உடனுக்குடன் பொய்ப்பிக்கப்படுகின்றன.

ummath“மனித மனங்களை வெல்லுதல்” இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடுகளும், ஆன்மீக பயிற்சிகளும், வணக்க வழிபாடுகளும் மனிதனை புனிதனாக மாற்றுகிறது, உயரிய மானுட விழுமியங்களை ஒவ்வொரு தனி மனித வாழ்வினதும் அணிகலன்களாக போதித்து விடுகிறது.

“நான் உயரிய குணாதிசியங்களை பரிபூரணப்படுத்துவதற்காகவே அனுப்பப் பட்டுள்ளேன்” என மனித குல மாணிக்கம் மாநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

“உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் சிறந்த முன்மாதிரிகள் இருக்கின்றன” என அல்-குரான் கூறுகிறது.
பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழுகின்ற நாடுகளிலும் பார்க்க சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற நாடுகளில் உயரிய இஸ்லாமிய விழுமியங்களால் பண்பாட்டு பாரம்பரியங்களால் மனித குலத்திற்கான தெளிவான ஒரு செய்தியை முன்வைக்கின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

இஸ்லாமிய பெறுமானங்கள் அறிவு பூர்வமான,விஞ்ஞான பூர்வமான இயற்கையோடு இயைந்து செல்கின்ற தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியமான மென்பொருட்களாக மாத்திரம் இருக்க துரதிஷ்ட வசமாக முஸ்லிம் உலகு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கோரமான அகோரமான வியாக்கியானங்களை உலகின் முன் வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு விசுவாசியும் தனது சுற்றுச் சூழலில் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களினாலும்,உயரிய மானுட விழுமியங்களினாலும் நேர்மறையான கதிர்வீச்சை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடை முறை வியாக்கியானமாக மாறுவதே இஸ்லாமிய தஃவாவின் முதலாவது படியாகும்.

மனித குல விமோஷனத்திற்காக கருணையின் வடிவாக அனுப்பப்பட்ட ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், மனிதகுலத்திற்கு அருளாகவும் மனித குல பிணிகளுக்கான நிவாரணியாகவும் அல்குரானை அறிமுகம் செய்த மாதம் புனித ரமழான் மாதம்.

“நபியவர்களது வாழ்வு குர்ஆனாகவே இருந்தது” என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிட்டதுபோல் புனிதமிகு ரமழான் மாதத்தில் நாம் பெற்றுக் கொள்கின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களும் உயரிய மனித விழுமியங்களும் எமது வாழ்வில் பிரதிபலிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக..!

 சிறந்த உம்மத்தின் பணி

இறுதி இறை தூதருடன் இஸ்லாமியத் தூது நிறைவடைந்து விட்டது என்றாலும் அதனை முழுமனித குலத்திற்கும் எடுத்துச் சொல்கின்ற மகத்தான பணி இந்த கைர உம்மத்திடம் பாரப்படுத்தப் பட்டுள்ளது.

ummath1“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.” ( ஸுரத் ஆல இம்ரான் 3:110)

அல்-குரானும் ஸுன்னஹ்வும் உலக மொழிகளில் இருப்பதாலும், இஸ்லாலாமிய நூல்கள் உலக மொழிகளில் இருப்பதாலும், உலக மொழிகளில் இஸ்லாமிய ஒலி ஒளி மற்றும் இலத்திரனியல் வடிவங்களில் இஸ்லாமிய வழிகாட்டல்கள் இருப்பதனாலும் மாத்திரம் இஸ்லாமிய தூது மனித குலத்தை அடைந்துவிட்டதாக கருத முடியாது.

பிறந்தது முதல் எதோ ஒரு நம்பிக்கை கோட்பாட்டில் மூழ்கிப் போயுள்ள மக்களுக்கு அவர்களிடமுள்ள மத நம்பிக்கைகளுக்கும் இஸ்லாமிய இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் எடுத்துச் சொல்லப்படல் வேண்டும், வாழ்வு, மரணம், இறைவன், பிரபஞ்சம்,படைப்புக்கள் என அவர்கள் கொண்டுள்ள கொள்கை கோட்பாடுகளில் இருந்து இஸ்லாமிய வாழ்வு நெறி எவ்வாறு வேறுபடுகின்றது என்பது எடுத்துச் சொல்லப்படல் வேண்டும்.

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.” (ஸுரத்துல் பகறா2:159)

தனிமனித,சமூக குடும்ப அரசியல், பொருளாதார வாழ்வில் இஸ்லாமிய வாழ்வியல் ஒழுங்குகளின் முன்மாதிரிகளை முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களிடம் கண்டுகொள்ளல் வேண்டும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் சகலரையும் காஃபிர்களாகவும், முஷ்ரிக்குகளாகவும், முஸ்லிம் உம்மத்தின் எதிரிகளாகவும் கருதுவதும், மரணத்திற்குப் பின் அவர்கள் எல்லோரும் நரகம் செல்வோர்கள் என்று பாமரத்தனமான கருத்துக்களை கொண்டிருப்பதும் அவற்றை ஊடகங்களில், குறிப்பாக சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களிற்கும் இஸ்லாமிய தஃஹவாவிற்கும் செய்கின்ற மிகப் பெரிய கெடுதியாகும்.

அவ்வாறான நிலைப்பாடுகளை நாம் எடுக்கின்ற பொழுதும் அது குறித்து முஸ்லிம் அல்லாதவர்கள் அறிந்து கொள்கின்ற பொழுது மனித குலத்திற்கான விமோசகர்களாக அன்றி மனித குலத்தின் விரோதிகளாக அவர்கள் எம்மை பார்கின்ற மனநிலையை நாம் தோற்றுவித்துவிடுவோம், காபிர்கள், முஷ்ரிக்குகளை பற்றிய அல்-குரானிலும் சுன்னஹ்விலும் வரும் வசனங்களை அவர்கள் மிகச் சரியாக புரிந்து கொள்கின்ற சந்தர்ப்பம் அவர்களுக்கு  கிடைக்காமல் போய்விடும்.

முழு மனித குலத்திற்கும் அருள் கொடை

அல்-குரான் முழு மனித வர்க்கத்திற்கும் அருள் கொடையாக, நிவாரணியாக அருளப்பட்டுள்ளது, எமது இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் முழு மனித குலத்திற்கும் விமோஷகராக அருள் கொடையாகவே அனுப்பப்பட்டார்கள்.

Quraan“இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.( ஸுரத்துல் ஜாதியா 45:20)

“இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.” (ஸுரத் சபஉ :34-28)

“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (அல்- அன்பியா: 21:107)

மனித குலத்தின் மீதான ஒரு விசுவாசியின் பார்வை கருணை நிறைந்ததாகவும், அவர்கள் எல்லோரும் ஈருலக வாழ்விலும் ஈடேற்றம் பெறவேண்டும் என்பதாகவும் இருப்பதே மிகச் உயர்ந்த உச்சக்கட்ட  மனிதாபிமானமாகும், எமது பிழையான,பாமரத்தனமான கருதுகோள்கள் எமது சமூக தேசிய வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏராளம் கொண்டுள்ளன.

தனிமனிதாக,குடும்பமாக,சமூகமாக,தேசமாக,உம்மத்தாக,சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர்.

ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத் ஆயினும் கிலாபாத் ஆயினும் அவை குறித்த பிக்ஹு அல்லது இஜ்திஹாது எல்லாமே மறுமைக்கான விளைநிலமான இன்மை வாழ்வில் மனிதனின் உயிரிலும் மேலான தீன்,உயிர்,அறிவு,உடைமைகள்,பரம்பரை என்ற அடிப்படை அம்சங்களை மையப் படுத்தியதாகவே அமைந்திருக்கின்றன.

காலத்திற்குக் காலம் நபிமார்கள்,தூதுவர்கள், இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் சஹாபாக்கள், தாபிஈன்கள் அவர்கள் பின் வந்த நல்லடியார்கள் மனித வர்க்கத்திற்கு தத்தமது பங்களிப்பை செய்திருக்கின்றார்கள்.

SHOORA2இறைவன்,பிரபஞ்சம், உலகம், வாழ்வு,மரணம், இன்மை மறுமை குறித்த மிகவும் தெளிவான கோட்பாட்டுச் சிந்தனைகளை கொண்டுள்ள சிறந்த ஒரு உம்மத் நவீன உலகிற்கு இஸ்லாம் குறித்த எத்தகைய நடை முறை வியாக்கியானங்களை தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும், உம்மத்தாகவும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே ஒவ்வொரு விசுவாசியினதும் ஆன்மாவை ஆட்டிப் படைக்கின்ற, உள்ளத்தை உறுத்துகின்ற கேள்வியாகும்.

இஸ்லாத்தின் பெயரால், ஷரீஅத்தின் பெயரால், அகீதாவின் பெயரால், கிலாபாத்தின் பெயரால், ஆன்மீகநெறிமுறைகளின் பெயரால் மொத்தத்தில் மதத்தின் பெயரால் வெவ்வேறு முரண்பாட்டு முகாம்களுக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு இன்மை மறுமை வாழ்வின் அத்துணை இலக்குகளையும் தொலைத்துக் கொண்ட ஒரு உம்மத்தாக, இஸ்லாத்தின் எதிரிகளை உள்வீட்டில் வைத்து போஷிக்கும் ஒரு உம்மத்தாக அவர்களின் நலன்களுக்கேற்பவே நகர்த்தப் படும் முகாம்களாக நாம் மாறி வருகின்றோம்.

மறந்துவிடப்பட்ட மானுடப் பொது வெளி..!

“பிரபஞ்ச நியதிகளுடன் இயைந்து செல்கின்ற பகுத்தறிவும், மனச்சாட்சியும், உள்ளுணர்வுகளும் அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளே, அங்கிருந்தே மதங்கள் தாண்டிய மனிதாபிமானம் ஊற்றெடுக்கின்றது, உயரிய மானுட விழுமியங்கள் பேணிப் பாதுகாக்கப் படுவதற்கான உச்ச வரம்புகளையே அருளப்பட்ட சன்மார்க்கங்கள் போதிக்கின்றன.”

Greetingமுதிர்ச்சியடைந்துள்ள மனித பண்பாடுகளில் இருந்து, நாகரீகங்களில் இருந்து, கலாச்சாரங்களில் இருந்து, வரலாறுகளில் இருந்து எவற்றையெல்லாம் நாம்கற்றுக் கொள்வது, பெற்றுக் கொள்வது பகிர்ந்து கொள்வது என்ற பரந்த பரப்பிற்குள் பிரவேசிப்பதனை நாம் தவிர்ந்து வருகின்றோமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இன மத நிற மொழி தேச பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் உன்னதமான மானுட விழுமியங்கள், மனிதாபிமானம் எனும் பொது வெளி குறித்து சித்தாந்த மற்றும் செயற்பாட்டு முகாம்கள் அதிகூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.

ஆன்மாக்களை வெல்லுகின்ற அறப்பணியிற்கு இஸ்லாம் ஆயுதங்களால் மேற்கொள்ளப்படும் அறப்போரினை விட அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்துள்ளது.

அழமான ஆன்மீக நம்பிக்கைகளின் அடித்தளத்தில் உறுதியாக கட்டி எழுப்பபட்ட தனமனித ஆளுமைகள் அணுகுண்டுகளை விடவும், கனரக ஆயுதங்களை விடவும், யுத்த விமானங்களை விடவும், போர்க்கப்பல்களை விடவும் பலமானவை என்பதனாலேயே இந்த உம்மத்து அது சுமந்து நிற்கும் மனித குலத்திற்கான மகத்தான தூது இலக்கு வைக்கப்படுகின்றது.

இஸ்லாமிய பெறுமானங்கள் அறிவு பூர்வமான,விஞ்ஞான பூர்வமான இயற்கையோடு இயைந்து செல்கின்ற தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியமான மென்பொருட்களாக மாத்திரம் இருக்க துரதிஷ்ட வசமாக முஸ்லிம் உலகு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கோரமான அகோரமான வியாக்கியானங்களை உலகின் முன் வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு விசுவாசியும் தனது சுற்றுச் சூழலில் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களினாலும்,உயரிய மானுட விழுமியங்களினாலும் நேர்மறையான கதிர்வீச்சை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடை முறை வியாக்கியானமாக மாறுவதே இஸ்லாமிய தஃவாவின் முதலாவது படியாகும்.

உயரிய இஸ்லாமிய குணாதிசயங்களை, பண்பாடுகளை, ஒழுக்க விழுமியங்களை, தயாள குணங்களை, தாராளத் தன்மைகளை, பெரும்தன்மைகளை அழகான இஸ்லாமிய தனிநபர், குடும்ப, சமூக,அரசியல்,பொருளாதார வாழ்வு நெறிகளை செயல்வடிவில் பிரதிபலிக்கின்ற ஒவ்வொரு விசுவாசியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உண்மை பிரதிநிதிகள் கலீபாக்கள் ஆவர்.

நன்மை செய்தல், செய்ய தூண்டுதல், ஏவுதல் தீமை தவிர்தல் தவிர்த்தல்

நன்மை செய்தல், செய்ய தூண்டுதல், ஏவுதல் தீமை தவிர்தல் தவிர்த்தல் எனும் பொழுது குறிப்பிட்ட சில மர்க்கக் கடமைகளை செய்தல், ஏவுதல், சில பாவங்களை செய்யாதிருத்தல், தடுத்தல் என பொதுவான ஒரு கருத்தோட்டம் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

Warமாறாக, இந்தப் புவியில் மனிதனும் ஏனைய படைப்புக்களும் உரிய முறையில் வாழ்வதற்கும், பணி செய்வதற்கும் சாதகமான எல்லா நல்ல கருமங்களையும் செய்வதனையும், எடுத்துச் செல்வதனையும், பாதகமான அனைத்து கருமங்களையும் தவிர்த்துக் கொள்வதனையும், தடுப்பதனையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

குறிப்பிட்ட ஒரு சமூகம் மாத்திரம் சமூக பொருளாதார, கலை கலாசார, சுகாதார சுற்றுச் சூழல் நாகரிக, பண்பாட்டு சீர்கேடுகளில் இருந்து தமக்குள் பாதுகாப்பு பெறுவது ஒரு கப்பலில் பயணம் செய்யும் ஒரு சிலர் மாத்திரம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணிப்பது போன்றாகும்.

மற்றொரு உதாரணம் சொல்வதாயின் டெங்கு, பன்றிக் காய்ச்சல், மலேரியா, மூளைக் காய்ச்சல் பரவும் ஒரு தேசதத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் மாத்திரம் இனம், மதம், மொழி, நிறம், குலம், இயக்கம், கொள்கை பார்த்து தமக்குள் மாத்திரம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தமது வீடு வளவுகளை மாத்திரம் நுளம்பு பெருகுவதில் இருந்து காத்துக் கொள்வது போன்ற குறுகிய பார்வையாகும்.

ஓரு விசுவாசியின் அழைப்புப் பணி பரந்துபட்ட மனிதாபிமான செயற்பாடாகும். அங்குதான் மனித குலத்திற்கான கருணையின் தூது ஏனைய சமூகங்களை சென்றடைகின்றது, உம்மத்துக்களில் சிறந்த உம்மத்தாக இந்த உம்மத்து பரிணமிக்கின்றது.

இத்தகைய பரந்துபட்ட பார்வையில் ஒரு விசுவாசி சமூக வாழ்வில் மாத்திரமன்றி தேசிய வாழ்வில் முன்னணி செயற்பாட்டாளராக இருத்தல் வேண்டும், அத்தகைய ஆளுமைகள் உருவாக்கப் படல் வேண்டும்.

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles