Sunday, May 5, 2024

வடபுல(முஸ்லிம்கள்) மீள் குடியேற்றம் தொடர்பான அதிமுக்கிய கணிப்பீடு.

இயன்றவரை பகிருங்கள், வடபுல மக்கள் மீள் குடியேற்றத்திற்கு உதவுங்கள், விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கம் செய்து மஸ்ஜிதுகள் ஊடாக வினியோகியுங்கள்.

நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணி.

மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாக உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்பில் பங்குபற்றுவதற்கு பதிவுசெய்தல்

நீங்கள் மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டவரா? அன்றேல்  நீங்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களின் நேரடி சந்ததியா?

நீண்டகாலமாக உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களை உரியவாறு நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் (UNHABITAT) நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 30ஆந் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் வாழும் நபர்கள் தொடர்பான தொகைக்கணிப்பொன்றை மேற்கொள்ள இச்செயலணி தீர்மானித்துள்ளது.

தமது பூர்வீக இடங்களில் மீள்குடியேற விரும்பும் குடும்பங்களின் எண்ணிக்கை,  தற்போது தமது பூர்வீக இடங்களுக்கு மீள விரும்பும் குடும்பங்களின் எண்ணிக்கை, மற்றும் அவர்களின் மீள்குடியேற்றம் சார்ந்த தேவைகள் பற்றிய தெளிவான தரவுகளைத் திரட்டுவது மேற்குறிப்பிட்ட தொகைக்கணிப்பை நடாத்துவதன் நோக்கமாகும்.

மோதலினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ள நிலையில் தமது ப10ர்வீக இடங்களுக்குச் சென்று மீள்குடியேற விரும்பும் குடும்பங்களும், தற்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ள நிலையிலும் நிரந்தரமாக மீள்குடியேறுவதற்கான வசதி வாய்ப்புககளைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் இருக்கின்ற குடும்பங்களும் இத்தொகைக்கணிப்பில் பங்குபற்றுவதன மூலம் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும்  வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இத்தொகைக்கணிப்பில் பங்குபற்றுதல் தொடர்பான விடயங்கள்:-

தேவைப்படும் தகைமை:

மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31  ஆந் திகதிக்கு முன்னர் வடக்கு  கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்த குடும்பங்களும்;  இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களது நேரடி சந்ததியினரும் வடக்கு கிழக்கு மாகாணங்களை அண்டிய மாவட்டங்களில் (புத்தளம், அநுராதபுரம், பொலனறுவை, மொணராகலை அம்பாறை, பதுளை) அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து இடம்பெயர்ந்த குடும்பங்களும் இத்தொகைக்கணிப்பில் பங்குபற்ற முடியும்.

இப்பத்திரிகை அறிவித்தலில் தரப்பட்டுள்ள மாதிரியமைப்பைத் தழுவி தங்கள் விண்ணப்பப்படிவத்தைத் தயாரித்தல் வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய முறையில் ப10ர்த்திசெய்து தற்போது தாங்கள் வசிக்கும்

பிரதேச கிராம சேவை அலுவலரிடம்   2017/08/31 ஆந் திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும்.

2017 செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இத்தொகைக்கணிப்பிற்காக உங்கள் பிரதேசத்திற்கு வருகைதரும் தொகைக்கணிப்பீட்டாளர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.

மேலதிக விபரங்களை கிராம சேவை அலுவலர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது www.taskforcepidp.lk  என்ற இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அன்றேல் கொழும்பு   காலி வீதி  இல 356 B   என்ற முகவரியிலுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள்  அமைச்சு கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணியின் கருத்திட்ட  முகாமைத்துவ அலகின் கருத்திட்ட முகாமையாளரிடமும் அது குறித்து விசாரிக்கமுடியும்.

http://www.taskforcepidp.lk

தொலைபேசி இல.  011 2574567

மின்னஞ்சல முகவரி: pd.tfridp@gmail.com

செயலாளர்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு.

2017.07.23

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles