Monday, October 18, 2021

பாலஸ்தீன் காஸாவின் நிலை கிழக்கு முஸ்லிம்களுக்கு வந்து விடக் கூடாது!

உள்ளூராட்சித் தேர்தல்களில் நாம் வழங்கும் மாக்கள் ஆணை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!

ஆபத்து உள்வீட்டில் காத்திருக்கிறது.

பாலஸ்தீன் மக்கள் தமது தேசத்தைப் பறி கொடுத்திருக்கிறார்கள், சமாதான பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் அவர்களை காஸாவிலும், மேற்குக்க் கரையிலும் சொந்த மண்ணிலேயே கைதிகளாக அகதிகளாக வைத்துக்கொண்டு தினந்தோறும் அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் செய்து வருகிறது உலகின் முதற் தரமான பயங்கரவாத சியோனிஸ பாதாள உலக காட்டு தர்பார் இஸ்ரேலிய அரசு.

வடகிழக்கில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கால் நூற்றாண்டு கடந்த பின்னரும் அவர்களை முறையாக முழுமையாக் மீள் குடியேற்ற முடியாத நிலைமையில், எமது ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக வதிவிடங்கள் காணிகள் என்பவற்றை மீளப் பெற்றுக் கொள்ள முடியாமலும் நாம் தவித்துக் கொண்டிருக்கின்றோம், பிச்சைக் காரன் காலில் உள்ள புண் போல் அதை வைத்து நம்மவர்கள் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை நங்கள் 40% விகிதமாக இருந்தாலும் மொத்த நிலப்பரப்பில் 4% விகிதமே எங்களிடம் இருக்கிறது, புல்மோட்டை முதல் தீகவாபி, பொத்துவில் வரையில் எமது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, எமக்கு உரித்தாக வேண்டிய அரச காணிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள், புதை பொருள் ஆய்வுகள், இராணுவ பாதுகாப்பு வலயங்கள், வர்த்தக பயிர்ச் செய்கைகள், சுற்றுலா அபிவிருத்தி திட்டங்கள் என அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

Eastern Sri Lanka – Early settlement

எமது உரிமைப் போராட்ட அரசியலிற்கு இறுதியாக சாவுமணி அடிக்கின்ற மிகப் பெரிய சமூகத் துரோகத்தை இழைக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் வடகிழக்கு இணைப்பிற்கு ஆதரவளிக்க பிரதான முஸ்லிம் முகவர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். பாலஸ்தீன் காசா மக்களிற்கு நடந்ததை போன்ற ஒரு தீர்வை நோக்கி சமூகம் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த சாரதி இருக்கும் வரைக்கும் அந்த பஸ்ஸில் பயணிக்கக் கூடாது என்று என்று சொன்ன தளபதி காவு கொள்ளப் பட்டதன் பின்னர் அமர்த்தப்பட்ட தலைமை மடடுமல்லாது மாற்று அணிகளும் ஒட்டு மொத்தமாக அதே வண்டியில் அதே சாரதியுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களது அரசியல் சூதாட்டம் இன்று எல்லை தாண்டிச் செல்கிறது.

பதவி மற்றும் பணம் திரட்டல்களிற்கான சூதாட்டமாக சின்னாபின்னப் பட்டுள்ள எமது மூன்று தசாபதகால தனித்துவ அடையாள அரசியலால் எந்த வொரு தீர்வையும் எமக்குப் பெற்றுத் தர முடியவில்லை, மாறாக இன்று முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டுள்ள சவால்களுக்கும் இந்தக் கையாலாகாத அரசியலே காரணம் என்பது பகிரங்க இரகசியமாகும்.

சாதனைகள் படைப்பார்கள் என்று நாம் தோள் மேல் சுமந்தவர்கள் இன்று சோதனை மேல் சோதனைகளையே கொண்டு வந்து சேர்கின்றார்கள். பேரம் பேசல்கள் என்ற பெயரில் சோரம் போன நமது தலைமைகள் தேசியக் கட்சிகளிடம் சராணாகதி அரசியலில் ஈடுபட்டு இன்று பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற கையறு நிலையில் சமூகத்தை நட்டாற்றில் தவிக்க விட்டு எனற வரலாற்றின் இருண்ட பக்கங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அண்மைக்கால அரசியலைப் பாருங்கள், தற்பொழுது இடம் பெற்றுள்ள தேர்தல் சீர்திருத்தங்களைப் பாருங்கள், முஸ்லிம்களது அரசியல் பிரதிநிதித் துவத்தை மூன்றில் இரண்டாக குறைக்கும் தேர்தல் முறை சீர்திருத்தங்களிற்கு பாராளுமன்றத்தில் தமது பூரண ஆதரவை வழங்கிவிட்டுத் தான் உங்கள் மத்தியில் வந்து அரங்குகளில் வீராப்பு பேசுகிறர்கள் மகா நடிகர்கள்.

புதிய தேரதல் சட்டங்களின்படி எமது பிரதிநிதித்துவம் மூன்றில் ஒன்றாக குறைவது மாத்திரமல்லாது, ஏதாவது ஒரு பெரும்தேசிய பேரினக் கட்சியின் தயவில் போனஸ் ஆசனங்களிற்காக தேசியப்பட்டியளிற்காக தங்கி நிற்க வேண்டிய கட்டாய நிலை சிறுபான்மை கட்சிகளுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் சனத்தொகை விஸ்தீரணத்திறக்கும் இடப் பரப்புகளிற்கும் சமூக பொருளாதார காரணிகளுக்கும் மதிப்பளித்து உள்ளோர்ரட்சி எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டு புதிய உள்ளோர்ரட்சி அலகுகளும் ஏற்படுத்தப்பட்டு சுமார் 4000 ஆக இருந்த உறுப்பினர்கள் தொகை சுமார் 8825 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எமது சமூக தலைமைகளின் கையாலாகாத நிலையால் நாம் மாத்திரம் இருப்பதையும் இழந்து தவிக்கின்றோம்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை தேசிய அரசியலாயினும் சரி பிராந்திய அரசியலாயினும் சரி தற்பொழுது இடம் பெற்றுக் கொண்டிருக்கிற உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை, வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை, தேசிய அரசியலிலும் சமூக அரசியலிலும் மாறி மாறி அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு தேசத் துரோகங்களையும் சமூகத்துரோகங்களையும் செய்கின்ற தேசியக் கட்சிகளுக்கும் சமூகம் சார் கட்சிகளிற்கும் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டிய ஒரு தேர்தலாகவே இதனை நாம் கருத வேண்டும்.

உலகெங்கும் நடை பெறுகின்ற அநீதி அக்கிரமங்களை அடக்குமுறைகளை கண்டு  கொதித்து எழும்புகின்ற நாம் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டு மாற்றத்தை நோக்கி ஒரு நகர்வை மேற்கொள்ள முடியாத உணர்வற்ற ஜன்மங்களாக அல்லது சுய விருப்பு வெறுப்புகள் பந்த பாசங்கள் இலாப நஷ்டங்களை மாத்திரம் தலைமேல் கொண்டு செயற்படும் சுயநலமிகளாக அமானிதங்களை பாழ் படுத்திக் கொண்டிருக்கின்றோமா? என்று ஒவ்வொருவரும் தத்தமது மனச் சாட்சியை தொட்டு கேட்டுக் கொள்ள வேண்டும்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles