மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
இன்று நாடு 70 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது, மேலைத்தேய காலணி ஆட்சிமுறையில் இருந்து விடுதலை பெற்ற நாம் இந்த நாட்டை நாமே ஆள்வதற்கும் வளங்களை முகாமை செய்வதற்கும் ஜனாநாயக ஆட்சிக் கட்டமைப்பினூடாக நாம்மை நாமே இந்த தேசத்தை ஆள்வதற்கும் அதன் இறைமை சுயாதிபத்தியம் ஆள்புல ஒருமைப்பாடு பொருளாதார அபிவிருத்தி என பலதுறை மேம்பாடுகளையும் நாமே தீர்மானிக்க 1948 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4 ஆம் திகதி பிரித்தானிய காலணி ஆட்சியிலிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை இன்று 70 ஆவது முறை நாம் கொண்டாடுகின்றோம்.
இனி கடந்த எழு தசாப்த காலமாக ஒரு தேசத்தவர் என்ற வகையில் நாம் கடந்து வந்த பாதை குறித்து எமது வரலாற்றை மீட்டிப் பாக்கின்ற பொழுது கடந்த நான்கு தசாப்த காலமாக இந்த நாட்டின் சுதந்திரத்தை இறைமையை, ஆள்புல ஒருமைப்பாட்டை, சுயாதிபத்தியத்தை, பொருளாதார மற்றும் சகல துறை அபிவிருத்தியை நாம் அடைந்துள்ளோமா ? என்ற கேள்வியையும் அதற்கான பதிலையும் எம்மால் தெளிவாகவே கண்டு கொள்ள முடியும்.

சுதந்திரத்தின் பொழுது ஐக்கியப்பட்ட நாம் சுதந்திரத்தின் பின்னர் முரண்பட்டு கடந்த ஏழு தசாப்தங்களும் பிரிவினையை வளர்த்து குறிப்பாக கடந்த மூன்று தசாபதங்களாக நாட்டில் இரத்த ஆறை ஓட்டியிருக்கின்றோம், நாட்டின் சகலதுறை பின்னடைவுகளோடு பல ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம், சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை யுத்தத்திற்காக செலவிட்டிருக்கின்றோம்.
எமது உள்வீட்டுப் பிரச்சினையை யுத்தம் என்ற பெயரிலும் சமாதனம் என்ற பெயரிலும் பிராந்திய சர்வதேச சகதிகளிடம் அடகு வைத்து எமது தேசத்தின் நலன்களை வளங்களை அவற்றின் இராணுவ பொருளாதார இராஜதந்திர நலன்களிற்காக நாம் தாரை வார்திருக்கின்றோம்.
மனித வள அபிவிருத்தியில் கரிசனை செலுத்தாத நாம் எமது கல்வி உயர்கல்வி தொழில் தொழில் நுட்ப உயர்தொழில் நுட்பக் கல்வி போன்ற துறைகளிற்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமயினால் சாதாரண தரப் பரீட்சைக்கு வருடா வருடம் தோற்றும் சுமார் 350,000 மாணவர்களில் 25,000 மாணவர்களுக்கே எமது பலகளைக் கழகங்களில் கற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன, இன்னும் சிறு தொகயினருக்கே ஏனையே தொழில் துறைகளில் கற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன, அதன் காரணமாக வருடா வருடம் சுமார் 250,000 இலட்சம் இளைஞர் யுவதிகள் நிபுணத்துவமற்ற தொழிலாளர்களாக மத்திய கிழக்கிற்கு படை எடுக்கின்றார்கள், அவர்கள் உழைக்கின்ற வைப்பீடு செய்கின்ற சுமார் எழு பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த நாட்டின் வெளிநாட்டு நாணய உழைப்பில் முதலிடம் வகிக்கிறது.
இயற்கை வளங்கள் நிறைந்த இந்த தேசத்தில் விவசாயம், மீன்பிடி, பெருந்தோட்டத் துறைகள், கால்நடை வளர்ப்பு, உள்நாட்டு உற்பத்திகள்,கைத்தொழில் சிறு கைத்தொழில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் என எல்லாத் துறைகளிலும் நாம் பின்னடைவையே சந்தித்துக் கொண்டிருக்கின்றோம், அவற்றில் இளைய தலைமுறையினர் நம்பிக்கை கொள்ளுமளவிறுக் எத்தகைய கொல்கி திட்டமிடல் அமுலாக்கல் அடைவுகள் எதனையும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களால் முன்வைக்க முடியாமல் போயிருக்கின்றது என்பதுவே உண்மை.
கடந்த பத்து வருடங்களில் இலங்கை பெற்ற பத்து இலட்சம் கோடி ரூபாய்கள் கடன்தொகையில் சுமார் ஒரு இலட்சம் கோடியிற்கே வளங்களாகவும் முதலீடுகளாகவும் அபிவிருத்திகளாளவும் கணக்கு வழக்குகள் மத்திய வங்கியிடம் இருப்பதாக அண்மையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுமளவிற்கு இந்த நாட்டில் ஊழல் மோசடி நிறைந்த அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரையிலான ஆட்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புக்கள் இருந்திருக்கின்றன.
இந்த நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் எண்பது 80% விகிதத்தை எட்டிப் பிடித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுமார் 65,000 கோடி அமெரிக்க டாலர்கள், இனி வரும் ஒவ்வொரு வருடமும் வட்டியும் முதலுமாக நாமது தேசம் சுமார் 500 கோடி அமெரிக்க டாலர்களை வட்டியாகவும் முதலின் பகுதியாகவும் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு பிரஜையும் சுமார் 400,000 தலைவீத கடனை சுமந்த வண்ணமே இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பிரதான அரச நிறுவனங்கள் யாவும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன, கடந்த பத்து வருடங்களாக நாட்டின் உயிர் நாடி மத்திய வங்கியில் பிணை முறி மோசடி இடம் பெற்றிருக்கிறது, ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன முதலீட்டு நிதித் தேவைகளிற்காகவென பிணை முறிகளூடாக பெறப்பட்டு பாரிய ஊழல் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசு 2015 இல பதவியேற்று இரண்டொரு மாதங்களில் இடம் பெற்ற பின முறி மோசடியில் சுமார் 1500 கோடி ரூபாய்கள் வரையில் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை, இலங்கை விமான சேவை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனம், இலங்கை என எல்லா நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குகின்றன, ஸ்ரீவிமான சேவை நிறுவனம் சுமார் 10,000 கோடி கடனில் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் அதனை விற்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது, அதற்கு கடனை வழங்கிய இஅலங்கை வங்கி மக்கள் வங்கி, சர்வதேச சந்தைகளில் இருந்து கடன்களைப் பெற்றுக் கொடுத்த மத்திய வங்கி ஆகியன பாரிய நெருக்கடியிகுள் சிக்கியுள்ளன.
குறிப்பிட்ட வங்கிகள் ஏனைய பல துறைகளிற்கும் நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும், உதாரணமாக இலங்கை மின்சார சபை மாத்திரம் அரச வங்கிகளிற்கு 3200 கோடி ரூபாய்களை அரச வங்ககிகளிற்கு செலுத்த வேண்டி இருக்கிறது, இலங்கை மின்சார சபை அவற்றிற்கு சுமார் 30,000 கோடி ரூபாய்கள் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கை நீர் வழங்கல் சபை புதிய திட்டங்களிற்காக 6700 கோடி உள்நாட்டுக் கடன்களையும், சுமார் 15,000 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெறுவதற்கும் அந்த சுமையை பாவனையாளர் கட்டண அதிகரிப்பாக விதிப்பதற்கும் முடிவை 2016 ஆம் ஆண்டு எடுத்தது.
பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் கடந்த அரசில் பெறப்பட்ட பெரும் தெருக்கள் துறை முகங்கள் விமான நிலையம், நகர அபிவிருத்திகள் ஹோட்டல் நிர்மாணங்கள் என இன்னோரன்ன திட்டங்களிற்காக பெறப்பட்ட ஊழல் மோசடிகள் நிறைந்த வெளிநாட்டு முதலீடுகளிற்காக அரச தனியார் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் அவற்றை அந்த நாடுகளிற்கே மறைமுகமாக அரசு கொடுக்கும் கட்டாய நிலையில் உள்ளது.
இவ்வளவு அரசியல் பொருளாதார பின்னடைவுகள் நடிபெற்ற பின்னரும் கூட நாட்டின் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலைக்கு இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வினை எய்த முடியாத நிலையிலேயே இந்த தேசத்தின் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். மாறாக போருக்குப் பின்னரான இலங்கையில் இனவாத சக்திகள் உரமூட்டி வளர்க்கப்படுகின்றமை நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகும் நிலையிலேயே இருக்கின்றது.
அண்மையில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றங்கள் இடம் பெற்று வரும் எல்லை நிர்ணயங்கள் யாவுமே இன்னுமின்னும் சிறுபான்மை சமூகங்களை பேரின சக்திகளின் காலடியில் விலங்கிட்டு வைப்பதற்கான முச்தீபுகலாகவும் இருக்கின்ற எச்ச சொச்ச அதிகாரங்களை பறிப்பதற்குமான நடவடிக்கைகளாகவும் பார்க்கப் படுகின்றன.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்காக குரல்கொடுக்க ஒரு சர்வதேச சமூகமோ, இந்தியா போன்ற ஒரு பிராந்திய சக்தியோ இலாத நிலையில் வடக்கில இருந்து கடந்த கால் ணோஓட்றேஆஂஊஆளீறூ முன்னர் பலவந்தமாக விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியமர்த்த எந்த வித அரத்தமுள்ள நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் இதுவரை முறையாக மேற்கொள்ள வில்லை மாறாக அவர்களது காணி நிலங்கள் பறிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம்களது பறிக்கப்பட்ட காணிகள் தவிர்த்து அவர்களிற்கு உரித்தாக வேண்டிய நிலங்கள் கூட இப்பொழுதும் பறிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
தேசிய அரசியலிற்கு எவ்விதத்திலும் குறைவில்லாது முஸ்லிம் சமூக அரசியலும் வங்குரோத்து நிலையினை அடைந்து விட்டிருக்கின்றமை யாவரும் அறிந்த உண்மையாகும், போராட்ட அரசியலாக ஆரம்பித்த அடியாள அரசியல் இன்று சூதாட்ட அரசியலாக மாறி சின்னாபின்னப்பட்டு மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளுடன் சரணாகதி அரசியல் செய்யுமளவிற்குச் சென்று இன்று பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிர்க்கதி நிலைக்கு சமூகத்தை இட்டுச் சென்றுள்ளது.
இந்த நிலையில் தான் நாம் 70 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொடிருக்கின்றோம், தேசிய அரசியலில் ஒரு யுகப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான முற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து இந்த நாட்டு மக்களிற்கு அரசியல் பொருளாதார விமோசனத்தை பெற்றுக் கொடுக்க உழைப்பது ஒவ்வொரு பிரஜைகள் மீதும் சுமத்தப் பட்டுள்ள பாரிய பொறுப்பாகும். அதே போன்றே சமூக அரசியலையும் தேசிய அரசியலில் சரியான பரிமாணங்களில் உள்வாங்கச் செய்வதும் நல்லாட்சி விழுமியங்களை நோக்கிய அரசியலை முன்னெடுப்பதும் புதிய தலைமுறை இளம் தலைமைகளின் பாரிய கடமையாகும்.
இந்த நாட்டில் நீதியான நேர்மையான நல்லாட்சி அமைவதற்கும், ஜனநாயக கட்டமைப்புக்கள் மேலும் பலப் படுத்தப் படுவதற்கும், இனங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வு மேலோங்குவதற்கும், அமைதி பாதுகாப்பு ஸ்திரத்தன்மையுடன் கூடிய நிலயான பொருளாதார சுபீட்சம் ஏற்படுவதற்கும், மனித உரிமைகள் மதிக்கப் படுவதற்கும், இனப்பிரச்சினைக்கான சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையான அரசியல் தீர்வு எய்தப் படுவதற்கும் ina மத மொழி பிரதேச வேறுபாடுகளிற்கு அப்பால் உழைப்பது அனைவர் மீதுமுள்ள ஆன்மீக தார்மீக கடமையுமாகும்.
இதுவே இந்த சுதந்திர தினத்தில் நாம் விடுக்கும் செய்தியாகும்.