Thursday, April 18, 2024

தனித்துவ அடையாள அரசியல் மீள் பரிசீலனை செய்யப்படல் காலத்தின் கட்டாயம்.!

கடந்த கால மற்றும் சமகால முஸ்லிம் அரசியல் அனுபவங்களின் பின் புலத்தில் கீழ் காணும் வினாக்களுக்கு விடை தருக. வினாக்களை குறிப்பிட்டு ஒரு பதிவில் ஒரு கேள்விக்கு மாத்திரம் விடை தருக. சேறு பூசும் விடைகள் நீக்கப் படும்.

1) வடக்கு கிழக்கு பிராந்தியத்திற்கு மட்டுப் படுத்தப் பட்ட முஸ்லிம் அரசியல் அணி போதுமா?
2) வட கிழக்கு மைய முஸ்லிம் அரசியலின் தலைமை எங்கு இருத்தல் வேண்டும் ?
3) வட கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களிற்கு தனித்துவ அரசியல் ஆரோக்கியமானதா?
4) தேசிய அரசியல் காட்சிகளில் முஸ்லிம் தலைமைகள் தீர்மானிக்கும் தளங்களில் இருத்தல் வேண்டுமா?
5) இப்பொழுதுள்ள அரசியல் அணிகளில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியுமா ?
6) இல்லையெனில் மாற்றீடுகள் எவை, உங்கள் முன்மொழிவுகள் யாவை?
7) உடனடி கள நிலவரங்களை கருத்தில் கொண்டு இவர்களை ஒரே அணியில் திரட்டுவது சாத்தியமா?
8) அவ்வாறு சாத்தியமெனில் அவர்கள் எல்லோரையும் ஒருமுகப்படுத்தும் பொறி முறை எவ்வாறு அமைத்தல் வேண்டும்?
9) அத்தகைய இடைக்கால முயற்சியை யார் எவர் முன்னின்று வழி நடத்த வேண்டும்..?
10) ஆயுட்கால எதேசாதிகார தலைமைகள் முஸ்லிம் அரசியலுக்கு ஆராக்கியமானதா?
11) எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களிக் புதிய இளைஞர் அணிகள் எவ்வாறு களமிரங்களாம்?
12) கட்சித் தலைமைக்கும், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கும் கால வரையறை வழங்குதல் சிறந்ததா அல்லது ஆயுட்கால அவகாசம் வழங்குதல் சிறந்ததா?
13) கடந்த கால தனித்துவ அரசியலில் நாம் சந்தித்த சாதனைகள் எவை, சோதனைகள் எவை?
14) முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றே நம்மட கட்சி என்போர் விரும்பும் மாற்றங்கள் எவை?
15) இன மத வெறி குழுக்களுக்கு முகம் கொடுப்பதில் தற்போதைய அரசியல் தலைமைகள் தமது பணியை செய்கின்றார்களா?
16) கிடப்பில் உள்ள முஸ்லிம்களது மீள் குடியேற்றம், காணிகளை மீட்டல், கரையோர மாவட்டம், தனியான பிரதேச சபைகள் எல்லைகள் நிர்ணயம், சுனாமி வீடுகள் போன்ற விவகாரங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் காத்திரமான நகர்வுகளை மேற்கொள் கின்றார்களா? நம்பலாமா?
17) மேற்படி வினாக்களிற்கு விடை காண்பது காலத்தின் கட்டாயமா? அவ்வாறெனில் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டு அபிப்பிராயம் கோர முடியுமா?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles