Saturday, April 18, 2026

உழ்ஹிய்யாஹ் தொடர்பான சில வழி காட்டல்கள்..

இன்ஷா அல்லாஹ், ஹஜ் பெருநாள் தினத்திலும் தஷ்ரீக் தினங்களிலும் நாம் கொடுக்கும் உழ்ஹிய்யாஹ் தொடர்பான மார்க்க விளக்கங்களை உலமாக்கள் தெளிவு படுத்துவார்கள், என்றாலும் தேசிய ஷூரா சபை, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் சமூக அமைப்புக்கள் அறிவுறுத்துகின்ற கீழ் காணும் விடயங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும்:

1. ஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(GS) விலங்கின் உரிமை அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.
2. பின்னர் மிருக வைத்தியரிடமிருந்து (Veterinary Surgeon) விலங்கின் உரிமைக்கான சான்றிதழ், கால்நடை விபர சீட்டு (Cattle Voucher), சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
3.விலங்குகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு (100 -800)ரூபா வரை செலுத்த வேண்டும்.
4. மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
5.விலங்குகளை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும். அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:
(இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி விசேஷட) இல. 1629/17 – 2009.11.26)
6. குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
7. குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்வதுடன், தத்தமது மஹல்லாக்களை மையப்படுத்தி பிரதேச சூழலுக்கு ஏற்ப பொது மஷூறாவின் அடிப்படையில் உழ்ஹிய்யா விடயங்களை முன்னெடுப்பது சிறந்தது.
8. ஒரே இடத்தில் அதிகளவிலான விலங்குககளை குர்பான் செய்வதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக பொருத்தமான பல இடங்களைத் தெரிவு செய்து அங்கு குர்பான் நடவடிக்கைகளைச் செய்வது விரும்பத்தக்கதாகும்.
9. பிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர / நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
10. மிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு.
11. குர்பான் செய்யாப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, கால், இரத்தம், சாணம், தோல் என்பவற்றை) மிகவும் பொறுப்புணர்வுடன், உரிய முறையில் பூமியின் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
12. குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
13. போயா தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதையும், பங்கிடுவதையும், வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
14. ஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
15. உழ்ஹிய்யாஹ் கொடுக்கப்படும் இடங்களில் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தல், வீடியோ பண்ணுதல் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுதல் முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles