Tuesday, June 16, 2026

தலைவர்கள் ஒரு பொழுதும் ஆய்வு கூடங்களில் பட்டறைகளில் உருவாகுவதில்லை அவர்கள் சமூகத் தளத்தில் உருவாக்கப் படுகிறார்கள்

அன்பின் தம்பி தங்கைகளே !

“நீங்கள் நாளைய தலைவர்கள்” என்று பலரும் சொல்லக்கேட்டிருப்பீர்கள், தலைமைத்துவ பயிற்சிகள் என்றுபலத்திற்கும் சென்றிருப்பீர்கள்..!

உண்மையில் ஒரு குழந்தை சிறுவனாகி இளைஞனாகிறபருவத்தில் சொந்த பொறுப்புக்கள், திருமணம்,குடும்ப வாழ்வுஎன சொந்த வாழ்வின் இன்னோரன்ன சவால்களுக்கு முகம்கொடுக்குகின்ற திறன்களை வாழ்வாதார தகைமைகளைஇயற்கையாகவே பெற்றுக் கொள்ளும் நியதி இருக்கிறது.

வாழ்வின் அடித்தளங்களை இடுகின்ற இந்த அருமையானபருவத்தில் நாம் ஒரு விலங்கு என்ற வட்டத்திற்கு அப்பால்மானுட சமூக தேசிய தேசிய வாழ்விலும் எமது வகிபாகம்இலட்சியம் எவ்வாறு ஆக்கமும் தாக்கமும் உள்ளதாக இருக்கப்போகின்றது என்பதனை மிகவும் கவனமாக சிந்தித்துஅதற்கான உறுதியான அடித்தளங்களையும் இட்டுக் கொள்ளவேண்டும்.

நாம் துறை ரீதியாக கற்ற கற்கைகளின் கல்விநிறுவனங்களின் மென்பொருட்களாக மாத்திரம் எமதுவாழ்வின் பரப்புக்களை ஒருபொழுதும் வடிவமைத்துக்கொள்ளக் கூடாது, அதேபோல் ஒரு சில வரையறைகளுடன்கூடிய இலக்குகளுடன் ஸ்தாபிக்கப் பட்ட சில தனி அல்லதுகுழுக்களின் நிகழ்ச்சி நிரல்களின் மென்பொருட்களாகவும்எமது சொந்த வாழ்வினை அடகு வைத்து விடக் கூடாது.

நாம் வாழ்கின்ற சூழலில் சிவில் சமூக செயற்பாடுகளுடன்மாத்திரமன்றி சமூக வாழ்வின் இன்னோரன்ன துறைகளிலும்மிகவும் நிதானமாகவும், அறிவு பூர்வமாகவும், உயரிய ஒழுக்கவிழுமியங்களைப் பேணி நம்மை ஈடு படுத்திக் கொள்ளவேண்டும். தலைவர்கள் ஒரு பொழுதும் ஆய்வு கூடங்களில்பட்டறைகளில் உருவாகுவதில்லை அவர்கள் சமூகத் தளத்தில்உருவாக்கப் படுகிறார்கள்.

துரதிஷ்ட வசமாக இன்றைய இளைஞர்கள் இஸ்லாமியகலாபீடங்களில் இருந்தும், உயர்கல்வி இருந்தும் வெளியேறியபின்னரும் அரசியல் சமூக பொருளாதார வாழ்வில் தம்மைபங்காளர்களாக தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளாது வெறும்பார்வையாளர்களாக அல்லது சில அமைப்புக்களின்வெளிவாரி மாணவர்களாக மாத்திரம் சௌகரியமாக இருந்துகொள்கின்றனர்.

நாம் எந்த அமைப்பிலும் இயக்கங்களிலும் இருக்கலாம்,பொதுவான இலாக்குகளுக்காக ஒன்று பட்டு சிந்திக்கலாம்செயற்படலாம் தவறு இல்லவே இல்லை, அனால்ஒவ்வொருவரும் தனது தலை விதியை இன்னும் சிலமனிதர்களிடம் அடகு வைத்து விடாது மிகவும் சுதந்திரமாகசிந்திக்க அதேபோன்று செயற்படவும் கற்றுக்கொள்ளவேண்டும், ஒவ்வொருவரும் தன்னை ஒருநிறுவனமாக கருதி பல்வேறு பரிமாணங்களிலும் தம்மைவளர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் கூட்டாகவும் தனியாகவும் செயற்படுகின்ற பொழுது எமதுஉயரிய விழுமியங்களை பேணியவர்களாக தேசிய வாழ்வில்அடுத்த சமூகங்களுடனான எமது நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், சமூகம் சார்ந்த அமைப்புக்களில் மாத்திரம்எம்மை மட்டுப் படுத்திக் கொள்ளாது இன மதவேறுபாடுகளுக்கப்பால் பொதுவான இலக்குகளைகொண்டுள்ள நிறுவனங்களுடனும் எம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்….

மனிதர்களில் பலர் தானுண்டு தனது பாடுண்டு எனஅமைதியாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள், தமதுகுடும்பத்திற்கான சமூகத்திற்கான பங்களிப்புக்களைஆரவாரமின்றி செய்து கொண்டிருப்பார்கள், அனால் இன்னும்சிலர் அடுத்தவனை மேய்ப்பதற்கென்றே அலைந்துதீர்வார்கள், ஆதிக்க மனப்பான்மை மனிதனிடம் இயல்பாகவேஇருக்கிறது.

அக்கிரமக் காரர்கள்  அடிதடிகளை அடியாட்களை கொண்டும்அடுத்தவரை அடக்கியாள்வதில் ஒரு மிருகத்தனமானதிருப்தியை கொண்டிருப்பார்கள், ஆனால் பசுதோல்போர்த்திய புலிகளாக  சிந்தனா ரீதியாக, கொள்கைரீதியாக கவர்ச்சிகரமான பிரச்சார  உத்திகளோடு தம்மைமுதன்மைப் படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சிநிரல்களுடன் இளைஞர்களையெல்லாம் அணி திரட்டிசமூகத்தில்   இருந்து தனிமைப் படுத்தி களஞ்சியப் படுத்தும்தனி நபர்களும் அமைப்புக்களும் பெரும் சமூகத் தீமையைசெய்து கொண்டிருக்கின்றனர்.

தலைமைத்துவப் பயிற்சி என பல நிகழ்ச்சிகளைநடத்துவோருக்கு கூட அனுபவத்துடன் கூடிய  தலைமைத்துவப்பண்புகள் இருப்பதில்லை, அதேபோல் சில அமைப்புக்களைஇஸ்தாபனங்களை முன்னின்று நடாத்துகின்ற பலர் கூட மிகஉயரிய நோக்கங்களை கொண்டிருந்தாலும் ஆளணியை திரட்டுவதில் ஆர்வம் காட்டுமளவுக்கு அவர்களை சிறந்தசமூகத் தலைமைகளாக மாற்றுவதில் ஆர்வம்காட்டுவதுமில்லை அதற்கான தகைமைகளும் தெளிவானசிந்தனைகளும் கூட அவர்களிடம் இருப்பதில்லை.

யார் கொடுத்த அதிகாரத்தில், எந்த தைரியத்தில், துணிச்சலில்அல்லது நம்பிக்கையில் இவர்கள் இளம் தலைமுறையினரின் தலைவிதியை தம் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற முடிவில்இருக்கின்றார்கள், தங்களைப் பற்றி, தங்களது வரையறைகளை, மட்டுப்படுத்தப் பட்ட அறிவை ஆற்றலைபற்றி ஏன் அதீத கற்பனைகளை வளர்த்துக் கொண்டு சகல கலா வல்லவர்களாக நடிக்க முனைகிறார்கள், கற்பனைஉலகில் தாமும் வாழ்ந்து இளம் தலை தலைமுறையினரையும் கட்டுண்டு கிடக்கச் செய்கிறார்கள் என்பதுபுரியாமல் இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles