சர்வதேச அழுத்தத்தின் பெயரிலும் இந்தியாவின் அழுத்தத்தின் பெயரிலும் இணைந்த வடகிழக்கில் அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.
கடந்த கால கசப்பான அனுபவங்களையும், நிகழ்கால நிலவரங்களையும் கருத்தில் கொண்டு கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம் சிவில் தலைமைகள் கிழக்கு தனி மாகாணமாக இருப்பதனையே விரும்புகின்றனர்.
வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் அன்று போல் இன்றும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றார், அகிலல இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாதும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றார்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றார் குறிப்பாக தென்கிழக்கை மாத்திரம் மையமாக கொண்ட முஸ்லிம் அதிகார அலகு பற்றி அமைச்சர் அஷ்ரஃப் பேசிய பொழுது அவருடனும் இவர் முரண்பட்டார்.
கிழக்கின் எழுச்சி, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் தேசியப்பட்டியளுக்காக காத்திருப்போர் நிலைப்பாடுகள் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.
முஸ்லிம் சிங்களவருக்கான உள்ளக சுயாதிக்கத்துடன் வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப் பரவலாக்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்படும் என்பதே எனது புரிதல், அவ்வறான ஒரு நிலைப்பாட்டை எடுப்பின் அகச் சுயாதிக்க அதிகார அழகின் எல்லைகள், அதிகார வரம்புகள் தென்கிழக்கை மாத்திரம் மையப்படுத்தி இருக்குமாயின், மட்டு திருமலை முஸ்லிம்கள் எவ்வாறான நிலைபாடுகளை எடுப்பார்கள்..?
இவ்வாறு பல விடயங்கள் தெளிவாக விரிவாக ஆழமாக ஆராயப் படாமலே, ஆவணப் படுத்தப் படாமலே முஸ்லிம் அரசியல் கூறுகள் உள்வீட்டுப் பூசலகளில் சாணக்கியத்தையும் சாமர்த்தியத்தையும் காட்டிக் கொண்டிருக்கின்றன.
உங்கள் நிலைப்பாடு என்ன வென்று முகநூல் மூலம் மேற்கொள்ளப்பட்ட கீழ் காணும் கருத்துக் கணிப்பில் 99.9 % மானோர் கிழக்கு தனி மாகாணமாகவே இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுமா ?
1. இணைக்கப் படல் வேண்டும்
2. இல்லை பிரிந்திருக்கவே வேண்டும்
3. நிபந்தனைகளுடன் இணைக்கப்படலாம்.
இந்த நிலைப்பாடுகளில் உங்கள் நிலைப்பாடு எது ?
ஏன் இணைக்க வேண்டும், ஏன் இணைக்கக் கூடாது, நிபந்தனைகளுடன் இணைவதாயின் எவ்வாறான நிபந்தனைகள்?
முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்கும் ?
http://https://www.facebook.com/inamullahm/posts/10211931606064957
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கிழக்கு தனி மாகாணமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள், என்றாலும் இணைந்த வடகிழக்கில் தீர்வுத்திட்டம் முன்வைக்கப் படுமெனில் அகச் சுயாதிக்க எல்லைகள் அதிகார வரம்புகள் மற்றும் இன்னோரன்ன நிபந்தனைகள் குறித்து சமூகத் தளத்தில் விரிவாக ஆராயப் படுத்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது.
6 அக்டோபர் 2016 வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு பத்து வருடங்கள். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 1989 வடக்குடன் கிழக்கை இணைத்தது ஐக்கிய தேசியக் கட்சி, அந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்களின் முதுகில் எழுதிய அடிமைச் சாசனம் என்று முஸ்லிம் காங்கிரஸ் போர்க் கோடி தூக்கியது.
அதன்பின் 1994 ஆட்சி மாற்றத்தின் பிரதான பங்காளியாக மாறிய முஸ்லிம் காங்கிரஸ் 2000 ஆண்டுவரை சந்திரிக்கா தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணியின் பிரதான பங்காளியாக இருந்தது.
தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மரணத்திற்குப் பின் பொதுசன ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசு அமைய முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கியது.
2002 பெப்ரவரி 24 அன்று அரசு புலிகளுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து வடகிழக்கில் புலிகள் கட்டுப் பாட்டுப் பகுதிகளை அவர்களின் சுயநிர்ணயத்தில் விட்டுவிட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் புலிகளுடன் நேரடியாக பெயரளவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்து கொண்டாலும் பின்னர் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கூட முஸ்லிம்கள் முதுகில் எழுதப்பட்ட மற்றுமொரு அடிமைச் சாசணம் என உணரப்பட்டது.
தனித்தரப்பு, தனி அலகு கோஷங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது. வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்து தனித்திருக்க வேண்டும் என முஸ்லிம் அரசியலில் கோஷங்கள் எழும்பின.
2006 அக்டோபர் 16 இல் உயர் நீதிமன்றம் வடக்கு கிழக்கு மாகாணங்களை தனித்தனி மாகாணங்களாக பிரகடனம் செய்தது.
சரியாக பத்து வருடங்களின் பின் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் வட கிழக்கு இணைப்பு பற்றி பேசப்படுகின்றது , தேசிய ஒருமைப்பாட்டு அரசில் சுதந்திரக் கட்சி வடகிழக்கு இணைப்பிற்கு எதிராக கருத்து வெளியிடுகிறது.
கடந்த கால கசப்பான அனுபவங்களை வரலாற்றுப் பாடங்களை கருத்தில் கொண்டு கிழக்கிலங்கை முஸ்லிம்சிவில் சமூகங்களும் அரசியல் தலைமைகளும் வடகிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் திரைமறைவில் ஏதாவது உடன்பாடுகள், முரண்பாடுகள் எய்தப்பட்டுள்ளனவா மீண்டும் முஸ்லிம்களின் முதுகில் ஒரு அடிமைச் சாசனம் எழுதப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய ஷூரா சபை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமைகளை அழைத்து புதிய அரசியலமைப்பு மற்றும் அதில்உள்ளடங்கப் போகும் தேர்தல் சீர்திருத்த சட்டங்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டங்கள், அதிகாரப் பரவலாக்கம் குறித்து சமூகம் சார்ந்த தெளிவான நன்கு விரிவாக ஆழமாக ஆராயப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்.
எந்தவொரு அரசியல் தலைமையும் முஸ்லிம் சிவில்சமூக தலைமைகளை மற்றும் புத்திஜீவிகளை கலந்து கொள்ளாது எதேச்சாதிகாரமான முடிவுகளை எடுத்துவிடக் கூடாது.

