வருடம் ஒவ்வொன்றாய் கழியும் பொழுதே நினைவலைகள் மீட்கப்படுகின்றன, அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் பல அள்ளி வரும் அழிவுப்பேரலையாய் எம்மைக் கடந்து சென்ற ஆழிப் பேரலைக்கு இன்று வயது 13.
2004 டிசம்பர் மாதம் 26 அன்று இந்தோனேசியாவின் சுமாத்திராவில் ஏற்பட்ட பூக ம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலை, இந்தோனேசியாவை மாத்திரமல்லாது இல ங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுக ளின் கரையோரப் பகுதிகளை அழித்தது. சுமார் 1,74,000 உயிர்களை இந்தச் சுனாமி பேரலைகள் காவுகொண்டன.
சர்வதேச புள்ளிவிபரங்களின்படி சுனாமியினால் அதிகளவு உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தோனேசியாவே முதலிடத்தில் உள்ளது. இந்தோனேசியாவில் 1,26,473 பேரையும், இந்தியாவில் 10,749 பேரையும் தாய்லாந் தில் 5,595 உயிர்களையும் சுனாமிப் பேரலைகள் காவுகொண்டன. இலங்கையில் சுனாமியினால் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்ணி க்கை 36,594 ஆகும்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு தென், மேல், வடமேல் மாகாணங்களின் கரையோ ரப் பிரதேசங்கள் சுனாமியினால் பலமா கத் தாக்கப்பட்டன. யாழ்ப்பாணம், கிளிநொ ச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்கள ப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம், கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்க ளின் கரையோரப் பிரதேசங்கள் சுனாமிப் பேரலைகளினால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டன.
புள்ளிவிபரங்களின்படி மாவட்ட மட்ட த்தில் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கையைப் பார்க்கின்றபோது தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 1785 பேரும், அம்பாந் தோட்டை மாவட்டத்தில் 1102 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 1153 பேரும், வட மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் 901 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2652 பேரும் பதிவாகியுள்ளனர்.
சுனாமி பேரலையினால் கிழக்கு மாகா ணம் பாரிய அழிவைச் சந்தித்தது. புள்ளி விபரத்திணைக்களத்தின் தரவுகளின்படி, கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர், காணாமல்போனோர் எண்ணிக்கையானது அம்பாறை மாவட்டத்தில் 4,216 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,756 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 761 பேருமாகும்
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாகாண ங்களில் அதிகளவிலான இழப்பைச் எதிர் கொண்டவை வடக்கு, கிழக்கு மாகணங்களாகும். வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களும் கிழக்கின் அம்பாறை, மட்டக்களப்பு, திரு கோணமலை மாவட்டங்களும் சுனாமியி னால் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டங்க ளில் அதிகளவு உயிர் மற்றும் சொத்தழி வை எதிர்கொண்ட மாவட்டம் என்றால் அது அம்பாறை மாவட்டமாகும்.

அதிலும் கல்முனைத் தேர்தல் தொகுதி யின் கரையோரத் தமிழ், முஸ்லிம் மக்களே அதிகளவு பாதிக்கப்பட்டனர். தொகை மதி ப்பீட்டுப் புள்ளிவிபரத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி அம்பாறை மாவட்டத்தில் சுனாமிப்பேரலையினால் 21,201 வீடுகள் முற்றாகவும் பகுதியாகவும் சேதமடைந்தன. இதில் அதிகளவு பாதிக்கப்பட்ட வீடுகளைக் கொண்ட பிரதேசமும் கல்மு னைப் பிரதேசம்தான்.
இக்கல்முனைப் பிரதேசத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் கிராமங்களில் சுனாமியி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உதாரணத் திற்கு, சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி மீள்குடியேற்ற வீட்டுத்தொகுதி, கல்முனைக்குடி கிறீன்பீல்ட் சுனாமி மீள் குடியேற்ற வீட்டுத் தொகுதி மற்றும் பாண்டிருப்பு சுனாமி மீள்குடியேற்ற வீட்டுத் தொகுதி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இந்த வீட்டுத்தொகுதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டன. இருப்பினும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமையினால் இம்மீள் குடியேற்றத்தில் வாழும் மக்கள் சொல்லொ ண்ணாத் துயரங்களை கடந்த 10 வருடங் களாக எதிர்நோக்குகின்றனர். இக்குடியேற்றத்திட்டங்களில் குடியிருக்கும் சிறார்களு க்கு நிரந்தர பாடசாலையோ, நூலகமோ, விளையாட்டு மைதானமோ முறையாக அமைக்கப்படவில்லை.
சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில் 200 குடும்பங்கள் வாழ்வதற்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வீட்டுத்திட்டத்தில் அடி ப்படை வசதிகள் சரியாக வழங்கப்படவி ல்லை. கல்முனைக்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்தொகுதி மக்கள் குடியிருப்பதற்குரிய வசதிகளுடன் கொண்டதாக அமைக்கப்படவில்லை என இம்மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வீட்டுத்தொகுதியிலுள்ள சில வீடுகளுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அவற்றில் சில வீடுகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாது அல்லது மக்கள் அதில் வசிக்காது இருட்டறைகளாகக் காட்சியளிப்பதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது.
இவ்வாறே மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் காரைதீவு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்தொகுதிகளின் நிலைமைகளும் உள்ளன. இவ்வாறான நிலைதான் வடக்கு மற்றும் கிழக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் தொகுதிகளின் நிலைமை காணப்படுகிறது. அதுமாத்திரமின்றி, வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதே
சங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நிரந்தர வீடுகள் இல்லாமல் தகரக்கொட்டில்களில் வாழ்வதையும் காணமுடிகிறது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக அக்கரைப்பற்று பிரதேசத்துக்குரிய நுரைச்சோலையில் சவூதி அரசாங்கத்தினால் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
“மாறி மாறி வரும் எல்லா அரசிலும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருந்த பொழுதும் இன்று வரை, சவூதி அறேபிய அரசு ஆழிப்பேரலையினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கிய 1500 வீடுகளில் முஸ்லிம்களுக்காக நுரைச்சோழையில் கட்டப்பட்ட 500 வீடுகளும் இன்னும் உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.”
இருப்பினும் இவ்வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் உள்ளூர் அரசியல் அதிகாரத் தரப்பினரிடையே போட்டிகள் நிலவின. இப்போட்டிகளின் காரணமாக ஏற்பட்ட இழு பறி நிலையினையடுத்து, பேரினவாதம் பாதிக்கப்படாத மக்களுக்கும் வீடுகளை வழங்க வேண்டுமென்று கோஷங்களை எழும்பி அதில் வெற்றியும் கண்டது. இந்த வீட்டுத்தொகுதியை பகிர்ந்தளிப்பது தொடர்பில் நீதிமன்றம் வரை சென்ற பேரினவாதம் நீதிமன்றத் தீர்ப்பையும் பெற்றுக் கொண்டது.

