Thursday, January 16, 2025

ஒவ்வொரு ஊரிலும் ஒரு மருத்துவக் காப்பீட்டு நிதியம் இருப்பது அவசியமாகும்!

  • ஒவ்வொரு ஊரிலும் ஒரு மருத்துவ சமூகக் காப்பீட்டு நிதியம் இருப்பது அவசியமாகும்! பங்காளர்கள் பயனாளர்கள் குறித்த தெளிவான வரையறைகளுடன்!

 

  • நேரடி/மறைமுக வரியிறுப்பாளர்கள் செலுத்தும் ஒவ்வொரு சதமும் அமானிதமாகும்! ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பொறுப்பாளர்களே! வினவப்படுவோம்!!

 

  • ஒரு அரச தொழிலைப் பெற 5,6,7 இலட்சங்கள் வேண்டுமென கிழக்கு இளைஞர்கள் தெரிவிக்கிறார்கள் இவர்களை காட்டிக் கொடுப்பது கடமையல்லவா?

 

  • வடகிழக்கு இணையக் கூடாது என்ற பாடத்தை ஆயுத முனையில் கற்றோம், அதனை இன்றும் இன வெறியர்கள் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

 

  • “இக்தலஃபல் புகஹாஉ” இமாம்கள் கருத்து வேறுபட்டுள்ளனர் என்றே பிக்ஹுக் கலை தோன்றி வளர்ந்துள்ளது; ஒருவரை ஒருவர் தூற்றிக் கொ(ல்லா)ள்ளாதீர்.

 

  • கைதுகள், விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தெல்லாம் அவசரப்பட்டு முடிவுகளுக்கு வரவோ சட்ட அறிவின்றி கருத்துகளை பகிரவோ வேண்டாம்.

 

  • Ancient Buddhist dagoba (stupe) Pabula Vihara. Ancient city of Pollonaruwa, Sri Lanka

    சுற்றுலா செல்லும் இளைஞர்கள், மாணவர்கள் சமய கலாசார பெறுமானமுள்ள புராதன சின்னங்களை மதிக்காவிட்டாலும் அவமதிக்காதீர்!

 

  • குறுக்கு வழிகளில் நீங்கள் அடைய முயற்சிப்பவை இன்னொருவருக்கோ பலருக்கோ உரியவை! பன்றி இறைச்சியும் மதுபானமும் மட்டுமல்ல ஹராம்!

 

  • தலைமைத்துவ பயிற்சிகளென காடு மேடுகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லாது உரிய அனுமதியுடன் பொது இடங்களில் ஒன்று கூடல்களை நடத்துவது அறிவு.

 

  • குறுகிய அரசியல் இலாபங்களிற்காக களநிலவரங்கள் சோடிக்கப்படலாம்!
    அரசியல் அநாதைகள் மட்டுமல்ல நாம் பணயக் கைதிகளும் கூட!

 

  • முஸ்லிம் உம்மத்தின் ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் தான் உம்மத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளனர். இன மத தீவிர வாதமும் அரசியலே!

 

  • அழிவின் விளிம்பில்! தலைமை இல்லை என்பதை விடவும் அதிகரித்துள்ள அரசியல் சிவில் சன்மார்க்க தலைமைகளே நாம் எதிர் கொண்டுள்ள பிரதான சவால்!

 

  • கதாநாயகர்களும் வில்லர்களுமாக போலிகளாலும் பொய்களாலும் ஆளப்படும் தஜ்ஜாலிஸ யுகம் இது. சத்தியமே வெல்லும்!

 

  • போலி ஹீரோக்கள் அவதானம்: அரசியல் மூலதனமாகும் “இஸ்லாமோபோபியா” தேர்தல் காலங்களில் முஸ்லிம்கள் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்!

 

  • தாகத்தில் தவித்த நாய்க்கு நீர் புகட்டி நெறிதவறிய மாதொருவள் சுவனம் சென்றாள், தொழில்தேடும் ஒருவருக்கு கைகொடுத்து ஒரு குடும்பத்தை வாழ்விப்போம்!

 

  • டிப்லோமாகளும் டிக்ரிகளும் மலிந்து விட்ட காலத்தில் உள்நாட்டு பிறநாட்டு தொழில் சந்தையின் தேவை அறிந்து கற்கைகளை தெரிவு செய்யுங்கள்!

 

  • ஐ.தே.க ஜனாதிபதி/பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப் படாவிடின் எதிர்வரும் பிரதான தேர்தல்கள் பெரும் சவாலாக அமையும்! இ.அ

 

  • ஜனாதிபதித் தேர்தல் இப்போது அவசியமில்லை, காலம் கடந்து விட்ட மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்த ஆளும் ஐ.தே.க தடையாக இருக்கக் கூடாது!

 

  • ஐ.தே.க வில் சங்கமமாகியுள்ள முஸ்லிம் கட்சி/கள் வரும் மாகாண, ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களில் பேரம் பேசும் வலிமையை இழந்துள்ளது/ன!

 

  • சில ஆயுட்காலங்களிற்கு கௌரவமாக ஓய்வு வழங்காமல் அவர்கள் தங்கி வாழும் நிறுவனங்களில் யுகத்திற்கேற்ற மாற்றம் காண முடியாது!

 

  • முஸ்லிம் மாதர் கருப்பு நிற ஆடையை தவிர்த்து இஸ்லாமிய வரையரை பேணி தளர்வான வேறு நிறங்களில் -பருத்தி- ஆடைகளை அணிதல் ஆரோக்கியமானது.

 

  • எம்மிடமிருந்து புறப்படும் ஒவ்வொரு சொல்லும் செயலும் பின்விளைவுகளுடன் துன்யாவிலும் ஆகிராவிலும் எம்மையே வந்து சேருகின்றன!

 

  • ரஹஃப் அல் குனூன்: ஒரு வழிதவறிய சவூதி மாதினை தத்தெடுக்க உலகம் முண்டியடிப்பதில் இருந்தே முஸ்லிம் உம்மத்தின் ஈமானிய பலம் புரிகிறது!

 

  • புதிய அரசியலமைப்பு: வடக்கோ தெற்கோ வடகிழக்கு முஸ்லிம்களை பலிக்கடாவாக்க இடமளிக்க மாட்டோம்.. எனது அறிக்கை நாளை இன்ஷா அல்லாஹ்!

 

  • பிரிவேனாக்களுக்கு வழங்கப்படுவது போன்று சீருடை துணி மற்றும் அரச வளங்களை நாம் அரபு மதரசாக்களுக்கும் கேட்டுப் பெற முடியும்!

 

  • அரபு மதரசாக்கள் ஜாமியாக்கள் பொதுவான ஒருமுகப் படுத்தப்பட்ட தேசிய தராதர பாடவிதானங்களையும் சீருடையையும் கொண்டிருத்தல் வேண்டும்!

 

  • அரபு மத்ரஸாஹ்| ஜாமியாஹ்| மக்தப்| அஹதிய்யா மாணவர்களுக்கு அரேபிய, இந்திய, பாகிஸ்தானிய, ஆங்கிலேயர் ஆடைகளை விட தேசிய ஆடை சீருடையாக இருப்பது சிறந்தது!

 

  • செல்வம் செல்வாக்கு ஆட்சி அதிகாரம் சொகுசு செளகரியம் என சுவர்கத்தையே காட்டி நரகத்திற்கு அழைத்துச் செல்வான் தஜ்ஜால்! நஊதுபில்லாஹ்.

 

  • பலரது இல்லாமையிலும் இயலாமையிலும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கும் யுகம் இது. போலிகள் கோலோச்சும் தஜ்ஜாலிஸ யுகம்!

 

  • தேசிய அரசியல் கட்சிகளை அவற்றின் தள்ளாத வயதில் உள்ள தற்போதைய தலைமைகளை மாத்திரம் வைத்து இடைபோட்டு விடமுடியாது! தேர்தல் கூட்டுகள்!!

 

  • பயிற்சி பெறும் தொழிலாளராயினும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுங்கள்!பட்டதாரிகளுக்கும் 15-18,000 வழங்கும் நிறுவனங்கள் கவனத்திற்கு!

 

  • நவீன காலனித்துவ மேலாதிக்க பயங்கரவாத சக்திகள் மூன்றாம் உலகப் -பனிப்- போரினை முஸ்லிம் தேசங்களின் மீது திணித்திருக்கின்றன.

 

  • ஆதாரம் சொல்ல மட்டுமல்லாது ஹலாலான தாரம் வாழ்வாதாரம் பேணவும் மத்ரஸாக்களில் மூலாதாரங்கள் கற்றல் அறிவு; மதகுருபீடம் இஸ்லாத்தில் இல்லை!

 

  • சாதாரண தரம் முடித்து மதரஸாக்களுக்கு செல்வோர் அங்கு உயர்தரம் மற்றும் கற்கின்ற துறைகள் குறித்து பூரண தெளிவுடன் செல்லவும்!

 

  • இன்னொருவரின் பிரதியாக இருக்க முயற்சிப்பதில் சொந்த வாழ்க்கை தொலைந்து போகும்! அஸலான எளிமையான சொந்த ஆளுமையே அபூர்வமான அழகு!

 

  • ஒரு சிற்றூழியர் தொழில் பெறவே 6 – 7 இலட்சமாம், இலஞ்சம் கேட்பவனை கையும் களவுமாக காட்டிக் கொடுப்பது தார்மீக ஆன்மீக கடமையாகும்!

 

  • இலங்கையில் உயர்தரம் முடித்து உயர்கல்வி வாய்ப்பின்றி மத்திய கிழக்கு செல்ல, அங்கே சமவயதில் இந்தியர்கள் MBA முடித்து உயர்பதவிகளில்!

 

  • மன்னித்து மறந்து வாழத் தெரிந்தோரே மனித மனங்களை வெல்லும் மந்திரங்கள் அறிவர். நிறைகண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெலாம் குறைகண்டே சாவர்.

 

  • மோட்டார் சைக்கிளில் ஜும்மாவிற்கு மஸ்ஜிதுக்கு போனாலும் ஊரிலே வளம் வந்தாலும் தலைக்கவசம் அணிதல் நாட்டின் சட்டம்! “பிஃத்னாவின் ஆரம்பம்”

 

  • வடக்கு கிழக்கு (இணைப்பு/பிரிப்பு) விவகாரம் எதிர்வரும் மாகாண, ஜனபதி, பா.ம தேர்தல்களில் தாக்கம் செலுத்தும் என்பதை ஆளுனர் நியமனங்கள்  உணர்த்துகின்றன.

 

  • உள்ளவர்கள் இல்லாதவர்களிடம் காட்டி பெருமை பாராட்டிக் கொள்ளாதீர்கள்! அவர்களுக்கும் ஆசைகளும் தேவைகளும் இருக்கும்!

 

  • அடுத்த கணம் அல்லாஹ்விடம் அழைக்கப் படுவோம் என்றெண்ணி நாவையும் நடத்தைகளையும் கவனமாக கையாள்வோம்! இறக்குமுன் துன்யாவும் சிறக்கும்!

 

  • இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக முடியாது என்பதுபோல் பிரதமர் ஆகவும் முடியாது என்று அரசியலமைப்பில் திருத்தம் வேண்டும்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles