பகுத்தறிவு உள்ளவர்களே படைப்புகளில் உள்ள அத்தாட்சிகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள், அவற்றில் அல்லாஹ்வின் செய்திகள் பொதிந்துள்ளன!
ஒட்டகம், பசு, காகம், எறும்பு, பறவை,தேனி, சிலந்தி, மீன், கழுதை, குரங்கு, பாம்பு, யானை என பல படைப்பினங்கள் அத்தாட்சிகளுக்காக குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.
இறை விசுவாசிகளை சாத்தானிய சக்திகள் எதிர்கொள்வது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான சமர் என எல்லா வேதாகமங்களும் கூறுகின்றன.
அடைவுகளை விட அடையாளங்களுக்கும் ஆரவாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் நாம்! திருந்தணும்!
இடம் பொருள் ஏவலறிந்து தென்னிலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் தேர்தல்களில் பிரதான தேசியக் கட்சிகளுடன் இணைந்தே செயற்பட வேண்டும்!
பொறுப்பாக விழிப்பாக அவதானமாக சமூக ஊடகங்களை, தொடர்பாடல்களை கையாளவும்; எதிர்பாராத சர்சைகளிற்குள் நீங்களும் உள்வாங்கப் படலாம்!
ஒவ்வொரு ஊரிலும் ஒரு மருத்துவ சமூகக் காப்பீட்டு நிதியம் இருப்பது அவசியமாகும்! பங்காளர்கள் பயனாளர்கள் குறித்த தெளிவான வரையறைகளுடன்!
நேற்றைய தவறுகளின் பின்விளைவுகளே இன்றைய சோதனைகள்!
கடந்த மூன்று தசாப்தகால ஆயுட்காலங்கள் அகற்றப்படல் வேண்டும்! தலைமுறை இடைவெளி!
மஸ்ஜிதுகள்,மிம்பர் மேடைகள் யுகத்தின் சவால்களிற்கு முகம்கொடுக்கக் கூடிய வகையில் வலுவூட்டப் படல் காலம் கடந்துவிட்ட கடப்பாடாகும்!
நாளை மறுமையில் சொந்த மீஸான் கணக்கும் எனும் சுயநலத்தில் தான் பொதுநல சேவைகளும்! இஹ்லாஸ் இன்றேல் அனைத்தும் பாழ்!
இனி வரும் காலத்தில் அம்பாறை, மட்டு, திருமலை மாவட்டங்களில் இருந்து இருவராவது அமைச்சரவை செல்ல வேண்டும் இன்ஷா அல்லாஹ் !
கருத்துக்கள் கருத்துக்களாகவே இருக்குமட்டும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும், பிரயோகங்களாக மாறும் பொழுது தான் உடன்பாடுகள் ஏற்படும்!
அநாதரவான எந்தப் பெற்றோரிற்கும்| தேவையுடையோருக்கும் கைகொடுத்து உங்களைப் பெற்றோருக்கு ஈருலகிலும் நன்மைகளை வாரி வழங்குங்கள்!
தமிழ் தேசியக் கூட்டணி பிடியில் ஐ.தே.க இருப்பதை மைத்திரி மஹிந்த விரும்புவதன் நோக்கம் : 2019 இல் பொதுத் தேர்தல்! மு.கா|ம.கா|தே.கா?
ஜனநாயகம் ரணிலைக் காப்பாற்றியதா அல்லது ஜனநாயகத்தை ரணில் காப்பாற்றினாரா? என்றால் ஜே வீ பி யின் நிலைப்பாடு தெளிவானது!
அநீதி, அராஜகம் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இன, மத, மொழி பேதமின்றி மனித குலத்தை வழிநடத்துவது தலையாய அறவழியாகும்!
நாளுபேருக்கு நன்மைகள் செய்யும் அளவுதான் இந்த வாழ்க்கை, தீமைகள் செய்யுமளவு வயது கூடினாலும் வாழ்வு குறைகிறது!
ஆசைகள், பேராசைகள் தேவைகள், அடிப்படைத் தேவைகளை பிரித்தறிந்து கொள்ள முடியாமை எங்களை கடன் கஷ்ட நஷ்டங்களில் தள்ளி விடுகிறது!
அறியாமை சீண்டப்படவோ, தண்டிக்கப் படவோ கூடாது, அன்பு அனுதாபத்துடன் அணுகப்படல் வேண்டும், அதுவே அறவழி!
“கருத்துச் சுதந்திரம்” என்பது எம்மை பிளவு பிணக்குகளுக்கு அன்றி ஒற்றுமை இணைக்கப் பாடுகளுக்கு இட்டுச் செல்ல வேண்டும்!
மற்றொருவரின் சுமையை எவரும் சுமக்கப் போவதில்லை!
மரணத் தருவாயிலிருந்து நிலையான மறுமை வாழ்வு ஆரம்பமாகிறது.
தத்தமது தரப்பு நீதி நியாயங்களை விடவும் நீதி நியாயங்களின் தரப்பு வலிமையானது! தமக்குத் தோதாதன தரப்பின் நியாயங்களை பேசுவோரே அதிகம்!
நேற்றைய வில்லர்கள் இன்றைய கதாநாயகர்கள், இன்றைய கதாநாயகர்கள் நாளைய வில்லர்கள் என மாறி மாறி அரங்கேறும் அரசியல் நாடகங்கள்!
முஷ்ரிக்குகளைக் கூட யுத்தம் திணிக்கப்பட்டாலேயன்றி கொல்ல முடியாது, படுகொலைக் கலாசாரம் இஸ்லாத்தில் இல்லை! ஜாஹிலிய்யத்!
சிறந்த உம்மத் தேசத்திற்கான அதன் பங்களிப்பு பற்றி வினவப்படும்!
நல்லாட்சி விழுமியங்களை கட்சி அரசியலுடன் குறுக்கி விட முடியாது!
வில்லர்களும் கதாநயகர்களும் மீட்கத் துடிப்பது “பணநாயகம்” ஒன்றுதான், தலைவீதக் கடன் ஐந்து இலட்சம்!
மாறிமாறி ஆட்சிக்கு வந்த இரு அணிகளும் கூட்டணிகளும் நாட்டை அழிவின் விழிம்பில் நிறுத்தியுள்ளன. மூன்றாவது அணி தார்மீகக் கடமை!
வடக்கு கிழக்கு இணைந்த அரசியலமைப்பு சபைக்கு வர இருந்த நிலையில் ரணிலின் ஆட்சி கவிழ்க்கப் பட்டதாம், முஸ்லிம் தலைவர் ஒருவரும் ஆதரவாம்!
அரசியல் நெருக்கடிகளின் பொழுது இனமுருகல்களுக்கு தூபமிடப்படலாம். ஜும்மாஹ்விற்கு பின்னும் முன்னும் அவதானமாக நடந்து கொள்வோம்!
நல்லாட்சியின் வீழ்ச்சியிற்கு ஜனாதிபதி பிரதமர் இருவரும் சமமாகவே பங்காற்றினர், முன்னாள் அதிபர் மஹிந்த தந்திரமாக காய் நகர்த்தினார்.
பெறுவதும் கொடுப்பதும் ஹலாலானதா என்பதை மனச்சாட்சி சொல்லும். நியாயப் படுத்தல்களின் உண்மைத் தன்மை அல்லாஹ் அறிவான்!
கோவணங்களும் ஆவணங்களும் சில கட்சிகளின் நிலைப்பாடுகளைத் தீர்மாணிக்கும். கோவைகளும் கோப்புக்களும் கிளரப்படலாம்!
வளர்த்த கடா மார்பில் பாய்வதொன்றும் ஆச்சரியமில்லை! பாய்வதறிந்தும் விழுந்து, விழுந்து எழுந்து நின்று வளர்ப்பது தான் அதிசயம்!
அநீதிகள் அடக்குமுறைகளுக்கு ஆளாகும் ஒரு சமூகமே ஈற்றில் தழைத்தோங்கி நிற்கும் என்பதே இயற்கை நியதி. விடியல் வெகு தூரமில்லை!
இன்டர்நெட் போதை இளம் சந்ததிகளை மனநோயாளிகளாக மாற்றுகிறது, இன்டர்நெட்டை கையாளும் விதம் அறியாதவர் கல்வியும் உழைப்பும் கேள்விக்குறியே!
எந்த சவாலையும் நிலைகுழையாது எதிர்கொள்ள தன்னம்பிக்கை மாத்திரம் போதாது;
ஆழமான இறைநம்பிக்கையும் வேண்டும்! வருவதை எதிர் கொள்ளடா!
உலகில் எங்கேனும் அநீதி அக்கிரமம் அடக்குமுறை துன்ப துயரங்கள் கண்டு கலங்கினாலும் இருக்கின்ற இடத்தில் ஒரு எட்டை முன் வையுங்கள்!
மத வெறியர்களின் பரப்புரைகளை முறியடிக்க அவர்தம் மதம் சார்ந்த அறநெறிகள், அச்சமூட்டல்களை நினைவுறுத்தல் வேண்டும். “கர்மபல விபாகய”
தினமும் இலங்கையில்சுமார் 1000 கருக்கலைப்புக்கள். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள மஹ்ரம் எனும் அரண் எவ்வளவு முக்கியமானது!
இல்லாமையன்று இருந்தும் இரக்காமையாம் குறை!
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், ஆயிரங்கள் மட்டுமல்ல!உழைப்பதற்காக வாழ்கிறோமா ? வாழ்வதற்காக உழைக்கிறோமா?
சந்தர்ப்பங்களுக்காக காத்திருபவன் அல்ல, சவால்களிலும் சந்தர்ப்பங்களைக் காண்பவனே சாதனையாளன்! “தலைவன்”
நீங்கள் கற்பனை கூட செய்திராத விதத்தில் உங்களை உறுத்திக் கொண்டிருக்கும் வேண்டுதலை எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றித் தருவானாக!
நேரம் ஆரோக்கியம் இரண்டிலும் உச்சபயன் பெறாதவர்கள் நஷ்டமடைகின்றனர். இன்டர்நெட்டில் விரயமாகிறதா இளமை. எச்சரிக்கை!
அண்டிப் பிழைப்போர்+ஆளிகள் இன்றேல் அடையாளமே இழந்து நிற்கும் நம் சரணாகதி அரசியல். ஒரு தொன் வீராப்பில் ஒரு கிலோ தானுமில்லை சாதனை!
உலகில் துரிதமாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் குறித்த போதிய கரிசனையற்றவர்களாக நாம் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றோம்!
தனக்குத் தானே விசுவாசமாக இருக்கும் ஒருவரால் அடுத்தவருக்கு துரோகமிழைக்க முடியாது. இறைவிசுவாசம் அதனையே ஆன்மாக்களில் விதைக்கிறது.
“இம்மை வாழ்வு மறுமைக்கான விளை நிலம் மாத்திரமே.” மனிதர்களை திருப்திப் படுத்த முனைவதில் தான் இம்மை மறுமை இரண்டும் தொலைகிறது.
புலமைப் பரிசில் பரீட்சை சிறார்களுக்கும் அவர்தம் பெற்றாருக்கும் ஓரு சித்திரவதை! பிஞ்சு நெஞ்சங்களில் வற்றா வடுக்களைத் தரும் கொடுமை.
செல்வங்களின் பெறுமதியில் நிம்மதி சந்தோஷம் மதிப்பிடப்பட்டால் ஏழைகள் தான் செல்வந்தர்களாக இருப்பார்கள், இல்லாமை குறையன்று.
பயணமென்றால் சேர்த்து சுருக்கி, நிற்க முடியாவிடின் அமர்ந்து, அமர முடியாவிடின் படுத்து தொழுதல் கடமை! தொழாத வாழ்வு வாழ்வன்று!
இஸ்லாம் தனியாள், குடும்ப அந்தரங்கங்களைத் துருவித் துருவி ஆராய்வதை தடுத்துள்ளது. சமூக ஊடகங்கள் அந்தரங்கங்களை அரங்கேற்றுகின்றன.
உங்கள் நேர முகாமை எந்த அளவில் இருக்கிறது? கல்வி, உழைப்பு, ஓய்வு, குடும்பம், ஆன்மீகம், பொழுது போக்கு, இன்டர்நெட், பொதுப்பணிகள்.
16-17 வயது முதல் தனது திறமை ஆற்றல்களுக் கேற்ப பல துறைகளையும் ஆராய்ந்து எதிர்கால ‘தொழில்’ வாழ்வாதாரம் குறித்து சிந்திக்க வேண்டும்.
உன்மீதும் உன் பெற்றார் மீதும் இழைக்கப்பட்ட அநீதிகளும் பாகுபாடுகளும் உங்களை வாழ வைக்கும். திரையில்லாத துஆக்கள்!
மெகா ஷோ விளம்பரங்களால் வீங்கிப்போன சமூகம் நாம்! குத்பா மேடைகளின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது!
புகழோ இகழோ உச்சிகுளிர உச்சம் தொடும் சமூகம் யாம். அளவோடு இருந்தால் ஆரோக்கியம்!
ஆனந்தக் கண்ணீரால் அன்றி தாய் தந்தையைர் கண்கள் கலங்குவதை பிள்ளைகள் காணக் கூடாது! யாஅல்லாஹ், பெற்றார்கள் மீது கருணை காட்டுவாயாக!
கார்பட் போடப்பட்ட உள்ளூர் பாதைகள் சகலவற்றிலும் வேகத் தடுப்பு போடப்படுவதனை உறுதி செய்தி கொள்ளுங்கள். “விபத்துக்கள்”
ஸுபஹு தொழாத பொழுதுகள் விடிவதில்லை! தூக்கம் மறதி இரண்டிற்கும் மன்னிப்பு விழித்தவுடன் நிறைவேற்றுவோருக்கு உண்டு.
உணர்வலைகளைத் தூண்டிவிடும் பலநூறு பேச்சுக்களை விட
உள்ளத்தைத் தொடும் ஒரு மனிதாபிமானச் செயல் சிறிதாயினும் அதிக தாக்கம் கொண்டது.
உன்னதமான சேவையையும் ஹலாலான உழைப்பையும் இலக்காகக் கொண்ட அனைத்துக் கற்கைகளும் இஸ்லாமியக் கற்கைகளே! பணிகளும் அறப் பணிகளே!
அடுத்த கணம் மரணம் என்றெண்ணி ஆகிராவிற்காகவும்,
நெடுநாள் வாழ்வோம் என்றெண்ணி துன்யாவிற்காகவும் உழைப்பதில் இருக்கிறது பிறவிப்பயன்.
குண இயல்புகளில் ஆன்மாக்கள் பல பட்டாளங்களாக இருக்கின்றன, ஒரே இயல்புள்ளவை ஒத்திசைவது போல் மற்றவை ஒவ்வாமை கொள்கின்றன.
(ஈர்ப்பு)
பெரிய பெரிய கனவுகளோடு ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் நாம் அன்றாடம் சின்னச் சின்ன சந்தோஷங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
புகழின் உச்சம் தேடி வானை தொட்டவர்களோ, புவியைப் பிளந்து ஆழம் கண்டவர்களோ எவருமில்லை! அகந்தை வேண்டாம், அடங்கி வாழ்தலே அறிவு!
நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள் அவனிடமே மீளுவோம்! தனித்தனியாகவே அழைக்கப்படுவோம்!