Monday, April 20, 2026

நளீம் ஹாஜியார்: ஒரு முன்மாதிரி இஸ்லாமிய ஆளுமை

அஷ்-ஷெய்க் யு.எல். எம். நிஷாத் நளீமி ( MA – Al-Azhar)

ஒரு முஸ்லிமின் சமூக பங்களிப்பு ஈமானும் அறிவும் இணையும் போதே முழுமை பெறுகின்றது. ஈமானும் அறிவும் இணைந்ததன் விளைவாக முழுமை பெற்ற ஒரு சமூக பங்களிப்பாக நளீம் ஹாஜியார் அவர்களின் சமூக பங்களிப்பை மிகத்தெளிவாக அடையாளப்படுத்த முடியும்.

நளீம் ஹாஜியார் குறித்து நளீமியாவின் விருந்தினர் பதிவேட்டில் கடந்த நூற்றாண்டின்

Nadviமிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான அபுல் ஹசன் அலி நத்வி அவர்கள் :

“அல்லாஹ்வின் பாதையில் தொடர்ச்சியாக செலவழிக்க கூடிய நளீம் ஹஜீயார் போன்ற மனிதர்கள் இருப்பதும் நலீமியா போன்ற இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் இருப்பதும் இஸ்லாம் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் உயிரோட்டத்துடன் இருப்பதற்கான ஒரு சான்றாகும்.”என தனது கருத்தை பதிந்துள்ளார்.

நளீம் ஹஜியரை பெரும்பாலானவர்கள் படிக்காத ஒரு பணக்காரகவே காண்கின்றனர். சிலவேளை பாரம்பரிய கல்வி ஒழுங்கில் அவர் கல்வி பெறாமையினால் அப்படி நோக்கி இருக்க முடயும். எனினும் உண்மை அதுவல்ல. அன்றிருந்த கல்விமான்கள், இஸ்லாமிய அறிஞர்களின் நெருக்கமான சகவாசத்தை கொண்டிருந்ததன் மூலம் பாரம்பரிய பாடசாலைகளில் பெறமுடியாத தனித்துவமான ஒரு அறிவு ஆளுமையை அவர் தனக்கென வகுத்துக்கொண்டார்.

இன்று இஸ்லாமிய உலகில் ஒரு அறிவாக முன்வைக்கப்படும் “முன்னுரிமையியல்” அல்லது “முன்னுரிமை கோட்பாடு” (فقه الأولويات ) ( priority concept ) சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் நளீம் ஹாஜியார் அவர்களால் கோட்பாட்டு ரீதியாக முன்வைக்கப்படாவிட்டாலும் நடை முறையில் முன்வைக்கப்பட்டது. எனவே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி இருந்த பாரிய சிந்தனை படையெடுப்பை எதிர் கொள்கொள்ளும் முகமாக அறிஞர் அபுல் ஹசன் நத்வி அவர்களால் எழுதப்பட்ட சிந்தனை யுத்தம் தொடர்பான நூல் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னணியில் ஜாமியா நளீமியா உருவாக்கப்பட்டது.

முஸ்லிம் மாணவர்களின் பல்கலைகழக பிரவேசத்தில் பாரிய பின்னடைவு இருப்பதை அவதானித்த நளீம் ஹாஜியார் அதற்கான தீர்வாக அறிஞர்களின் ஆலோசனையோடு இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்தார் . அதனூடாக நாடாளாவிய ரீதியில் உயர்தர மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் நடாத்தி பல்கலைக்கழக பிரவேசத்தை அதிகரிப்பதில் பங்களிப்பு செய்தார்கள்.இப்படி சமூகத்தின் அடிப்படை பிரச்சினையை இனங்கண்டு அதற்கு முன்னுரிமை அளித்து அதனை ஒரு சாதனையாக மாற்றுவது வெறும் attitude மூலம் சாத்தியமற்ற விடயமாகும்.

Qardhawaiஅறிஞர்களின் சகவாசத்தினால் நளீம் ஹாஜ்யார் தனித்துமான அறிவு ஆளுமை ஒன்றை தனக்கென உருவாகிக்கொண்டார். எனவேதான் ஷேக் முகமத் அல் கஸ்ஸாலி . கலாநிதி யூசுப் அல் கரழாவி , ஷேக் அபுல் ஹசன் நதவி ,பேராசியர் குர்ஷித் அஹ்மத் போன்ற இஸ்லாமிய சிந்தனையாளர்களை விளங்கி அவர்களை நலீமியாவுக்கு வரவழைத்து மாணவர்களின் சிந்தனை மாற்றத்துக்கு களம் அமைக்க முடிந்தது.

அடுத்து நளீம் ஹாஜ்யரின் ஈமானிய ஆன்மீக ஆளுமை தனித்துவமானது. இதனை அவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கல்விகற்ற மாணவர்களும் அவரோடு நெருங்கிப்பழகியாவர்களும் நன்கறிவர்.

அவர் பெரும் மேடை பேச்சாளர் அல்ல. பேசினால் 5 அல்லது 10 நிமிடங்கள் தான் பேசுவார். அதில் இறை அச்சமும் அல்லாஹ்வின் அருள் மீதான எல்லையற்ற நம்பிக்கையும் துல்லியமாய் தென்படும். பிரியாவிடை வைபவமொன்றில “ உஹுதை காணாமல் சுவர்க்கம் போகமுடியாது என்பதை மறக்க வேண்டாம் “ என அவர்கூறிய வார்த்தை அவரது ஆழமான ஈமானிய உணர்வுக்கு சிறந்த சான்றாகும்.

தனக்கே உரிய எளிமையான பாணியில் உஹுத் யுத்தத்தில் நபி (ஸல் ) அவர்களும் சஹாபக்களும் அனுபவித்த கஷ்டங்கள் துன்பங்களை அனுபாவிக்காமல் சுவர்க்கம் போக முடியாது. என விளங்கி வைத்துள்ளார். ஆனால் அவர் தபரி, இப்னுகசீர்,தஹ்ரீர் வத்தன்வீர், பீ லிளாளில் குரான் போன்ற தப்ஸீர்களை வாசித்தவரல்ல.

muhammad alghazaliஅடுத்து “பைரஹா “என்ற பெயர் நளீம் ஹாஜ்யாருடன் இணைந்ததொரு பெயராகும். ஆனால் நம்மில் பலர் அப்பெயரின் பின்னணியை அறியாமல் இருக்கலாம்.அப்பெயருக்கு பின்னால் உணர்வுபூர்வமான ஒரு ஈமானிய சம்பவம் உண்டு. “( உங்கள் மனதுக்கு மிக விருப்பமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கும்வரை பெரும் நன்மையை ( சுவனம் )அடைந்து கொள்ள மாட்டீர்கள்).”( ஆல இம்ரான் :92 ). இவ்வல்குறான் வசனம் இறங்கிய உடனே அபூதல்ஹா என்ற நபித்தோழர் நபிகளாரிடம் வந்து தனது சொத்துக்களுள் தனக்கு மிக விருப்பமானது “ பைரஹா “ என்ற தோட்டம் எனக்கூறி அதனை அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தார். இந்த சம்பவத்திலிருந்து நளீம்ஹாஜ்யார் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதற்கான வழிகாட்டலை பெற்றுக்கொண்டார்.

நளீம் ஹாஜியாரின் இஸ்லாமிய பின்னணி அவரை குறிப்பிட்ட இயக்க சமூக எல்லைக்குள் வரையறுக்கவில்லை. மாறாக தேசிய நீரோட்டத்தில் முக்கியமான பங்களிப்புகளை செய்வதற்கும் அவர்களை தூண்டியது.

இந்தப்பின்னையில் எழுபதுகளில் இலங்கை அரசு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்ட போது பாரியதொரு பணத்தொகையை கொடுத்து அரசாங்கத்துக்கு உதவி செய்ததை முக்கியமாக இங்கு குறிப்பிடலாம். அதேநேரம் தன்னை குறுகிய தொரு அரசியல் கட்சிக்குள்ளால் சுறுக்கிக்கொள்ளவுமில்லை.

இஸ்லாமிய பின்னணியில் உருவான தனித்துவமான தொரு சமூக தேசிய ஆளுமையாக நளீம் ஹாஜியார் அவர்களை அடையாளப்படுத்த முடியும்.எனவே இஸ்லாம் எல்லா காலங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் தன் சமூகத்துக்கு மட்டுமன்றி முழு மனித இனத்துக்கும் பயனளிக்கும் ஆளுமைகளை உருவாகக்கூடிய மார்க்கம் என்பதற்கு நளீம் ஹாஜியார் சிறந்ததொரு சமகால உதாரணமாகும்.

“தனது வரலாற்றை அறியாத சமூகத்துக்கு எதிர்காலம் கிடையாது “என்பது எத்துணை உண்மையான கருத்து.

(إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ)) سورة ق : 37 ))

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles