அஸ்ஸலாமு அலைக்கும் வாரஹ்மாதுல்லாஹி வபரகாதுஹு,
சமூக வலை தளங்களில் என்னோடு நட்பை பகிர்ந்து கொண்டுள்ள நூற்றுக்கணக்கான அபிமானிகளுக்கு….!
உங்கள் பரீட்சை பெறுபேறுகள் வெளி வரும் பொழுது..
நீங்கள் பட்டதாரிகாளாக சான்றிதழ்கள் பெறும் பொழுது..
நீங்கள் ஒரு தொழில் பெறும் பொழுது..
நீங்கள் ஒரு தொழில் முயற்சியில் ஈடுபடும் பொழுது..
நீங்கள் ஒரு தொழில் பெற்று வெளிநாடு செல்லும் பொழுது..
நீங்கள் ஹலாலான வழிகளில் உழைக்க அல்லல் படும் பொழுது..
நீங்கள் சன்மார்க்க விடயங்களில் கரிசனையாகவும் பேணுதலாகவும் இருப்பதை காணும் பொழுது..
கடமைகள் பொறுப்புக்கள் மத்தியிலும் ஸ்க்காத்தை கணக்குப் பார்த்து கொடுக்கும் பொழுது..நீங்கள் உங்கள் பெற்றார்களை அரவணைத்து நிற்கும் பொழுது..
நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளின் கல்வியில் கரிசனை காட்டும் பொழுது..
நீங்கள் உங்கள சகோதரிகளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் பொழுது..
நீங்கள் இன்னுமொருவருக்கு கல்வி வாழ்வில், தொழில் தேடுவதில் கை கொடுக்கும் பொழுது…
நீங்கள் முதலாவது ஒரு பைக்கை, காரை என்று ஒரு வாகனத்தை வாங்கும் பொழுது..
நீங்கள் உங்கள் தாய் தந்தையரை ஹஜ் உம்ராவுக்காக அழைத்துச் செல்லும் பொழுது..
நீங்கள் உங்கள் புதிய வீட்டைக் கட்டும் பொழுது..
நீங்கள் இல்லற பந்தத்தில் இணையும் பொழுது..
உங்களது வாரிசுகள் பிறக்கின்ற பொழுது..
உங்கள் வரிசுகளோடு நீங்கள் உள்ளாசமாக பொழுதைக் கழிகின்ற பொழுது..
நீங்கள் பெற்றார் உடன் பிறப்புக்கள் மனைவி மக்களோடு உள்ளாசமாக பயணிக்கின்ற பொழுது..
உங்களை புதிய ஆடைஅலங்காரங்களுடன் காணும் பொழுது..
நீங்கள் நண்பர்களோடு பயனுள்ள வகையில் பொழுதுகளை கழிக்கின்ற பொழுது..
உங்கள் குழந்தைகள் பாடசாலை செல்லும் பொழுது..
உங்கள் பிள்ளைகள் பரீட்சைகளில் சித்தியடையும் பொழுது..

நீங்கள் நல்ல அறப் பணிகளில் ஈடுபடுகின்ற பொழுது..
உங்கள் ஆக்கங்களைக் காணுகின்ற பொழுது..
உங்கள் கருத்து வெளியீடுகளை காணும் பொழுது..
உங்கள் திறமைகளை காணுகின்ற பொழுது…
உங்கள் கலையுணர்வை வெளிக் கொணர்கின்ற பொழுது..
உங்களுக்கு உரிய அங்கீகாரங்கள் கிடைக்கின்ற பொழுது..
ஆயிரம் சோகங்களை அகத்தின் உள்ளே வைத்து முகம் நிறைய புன்னகை பூத்து நிற்கின்ற பொழுது..
பின்னடைவுகளை அவற்றை விட சிறந்த சந்தர்ப்பங்களின் மைல் கற்களாக தன்னம்பிக்கையுடன் நீங்கள் எதிர் கொள்ளும் பொழுது..
நீங்கள் ஊர் திரும்பும் பொழுது..
என எல்லா இனிய சந்தர்ப்பங்களையும் எங்களோடு நேரடியாகவும், புகைப் படங்களூடாகவும் பகிர்ந்து கொள்கின்ற பொழுது..
உங்களில் ஒருவனாக, ஒரு சகோதரனாக சில வேளைகளில் வயதின் அடிப்படயில் ஒரு தந்தையினளவு நானும் மகிழ்ச்சி அடைகின்றேன்..
நீங்கள் எல்லோரும் திறமை சாலிகளே, அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் எதோ ஒரு சிறப்பம்சத்தை தந்தேயுள்ளான்..
உங்களுக்காக நானும் துஆ செய்கின்றேன்…
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்..
அருளும் பொருளும் அறமும் ஆரோக்கியமும் நிறையப் பெற்று ஹலாலான உங்கள் தேவைகள் ஆசைகள் நிறைவாக கிடைக்கப் பெற்று வளமோடு நெடு நாள் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்..!

